Monday, January 24, 2011

பதான் அதிரடி!தென்னாபிரிக்கா தொடர் வெற்றி!!

தென்னாபிரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.ஏற்கனவே 2-2என்று சமப்பட்டிருந்த தொடரில் இறுதிப் போட்டியை வென்றால் தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றிய சாதனையை படைக்கலாம் என்ற முனைப்போடு இந்திய அணி நேற்றைய போட்டியில் களமிறங்கியது.

டாஸ்'இல் வென்ற தோனி கலைத்து அடிப்பது இலகு என்று நினைத்து
களத்தடுப்பை தேர்வுசெய்ய துடுப்பாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கட்டாக தலைவர் ஸ்மித் ஜாகிர் கானின் பந்தில் எழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வான் வயிக்'குடன்(என்ன பெயருகளோ!)ஜோடி சேர்ந்த அம்லா 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றார்.அந்த ஜோடியை விழுத்த வேகப்பந்துவேச்சாளர்களுக்கு முடியாமல் போக யுவராஜ் சிங் வான் வயிக்'கை 56 ஓட்டங்களுடனும்,பின்னர் வந்த டீ வில்லியர்ஸ்'ஐயும் பவிலியன் திருப்பினார்.அடுத்து வந்த டுமினியும் அம்லாவும் நான்காம் விக்கட்டுக்காக சத இணைப்பாட்டம் புரிய,42 ஆவது ஓவரில் மழை வந்து குழப்பியது.
46 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு மழை முடிய மீண்டும் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி தான்!!
இறுதி நான்கு ஓவர்களில் ஆறு விக்கட்டுகள் பறிபோய் இருந்தன!சஹீரும் பட்டேலும் தலா 2 ,3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.அம்லா இறுதிவரை ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களை குவித்திருந்தார்!!
இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பண்ணி இருந்தார் மனிதர் இந்த தொடரில்!

பாய்ந்து பாய்ந்து அடிப்பதென்பது இது தானோ??

46 ஓவரில் 268 என்னும் இலக்கு டக் வேர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.அடுத்து களமிறங்கியது இந்திய அணி.
ரோகித்,க்ஹோலி,டோனி,ரெய்னா.யுவராஜ் என இந்தியாவின் முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி ஒரு கட்டத்தில் 74 /6 எனவும்,ஹர்பஜன்,சாவ்லா ஆட்டமிழக்க 119 ஓட்டங்களுக்கு 8 விக்கட் என்று பரிதாபமாக காணப்பட்டது.
களத்தில் அதிரடி யூசுப் பதானும்,சாகிர் கானும்!
தொடங்கினார் பாருங்கள் யூசுப்,தென்னாபிரிக்க அணியினர் மட்டுமன்றி பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் கலக்கமோ கலக்கம்.
சிக்ஸ் சிக்ஸ் என ஆறு ஓட்டங்கள் பறந்தன.உடம்பில் என்ன ஒரு சக்தி!!முரட்டு உடம்பு,நம்ம மத்தியூஸ் மாதிரி..
அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்கியது.தென்னாபிரிக்காவின் புதிய புயல் சொத்சொபெயின் ஓவர் ஒன்றுக்கு இரண்டு ஆறு ஓட்டம்,இரண்டு நான்கு ஓட்டமென 21 ஓட்டங்களை பெற்றபோது இந்திய அணி ரசிகர்களை பார்க்கவேண்டும்!!
அந்த ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார் வெறுமனே 68 பந்துகளில்!!

முரட்டு மனிதன்!

யூசுப் நிற்கும் மட்டும் வெற்றி நிச்சயமில்லை என்ற நிலையில்,௦ 50 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் பந்து வீச மோர்க்கலை ஸ்மித் அழைத்தார்.
அப்புறமென்ன அந்த ஓவரில் மோர்க்கல் தனது நான்காவது விக்கட்டாக யூசுப்'ஐ பெற்றார்!ஒன்பதாவது விக்கட்டுக்காக யூசுப்'பும்,சஹீரும் 100 ௦௦ ஓட்டங்களை பெற்றனர்!!
அம்மாடி என்று பெருமூச்சு விட்டனர் தென்னாபிரிக்க வீரர்கள்!பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிக்குள்ளாலே அந்த மூச்சு சத்தம் கேட்டதென்றால் பாருங்கள் எப்படி என்று!
இறுதியாக நாற்பதாவது ஓவரில் 35 ஓட்டங்கள் தேவையான நிலையில் தோல்வியைத் தழுவியது இந்தியா!
தோனி,யுவராஜ்,ரோகித்,ரெய்னா,விஜய் என ஒருவர் கூட சோபிக்கவில்லை இந்தத் தொடரில்.துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்!
ஹோலியும்,பதானும் ஓகே.
ஷேவாக்,கம்பீர்,சச்சின் வந்த பின்னர் உருப்படுமா?பார்ப்போம் பொறுத்திருந்து.

போட்டி நாயகனாக அம்லாவும்,தொடர் நாயகனாக மோர்க்கலும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடர் 3 -2 என்று தென்னாபிரிக்கவசமானது.இந்தியாவின் கனவு கலைந்தது.இந்தியா வென்ற இரண்டு போட்டிகளுமே மிகச் சொற்ப வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.இரண்டு அணியினதும் பலம்,பலவீனங்களை அறிய இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

ஒன்றிணைந்த வெற்றி!!

கவலை:
-உலகக்கிண்ணம் நெருங்கும் வேளையில் அவுஸ்திரேலியா
பூஸ்ட்,போன்விட்டா,ஹோர்லிக்ஸ் என்று உற்சாகம் வழங்கிவிட்டு வந்திருக்கிறது இங்கிலாந்து..இனி என்ன ஆகப் போகுதோ...மீண்டும் மஞ்சள் சட்டை இறுதிப் போட்டிகளில் தென்படப் போகிறதோ?

-உலகக்கிண்ண முப்பது பேர் குழாமில் இணைத்து பின்னர் இறுதி குழாமில் இணைக்கப்படாத சமிந்த வாஸ்,அண்மையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விக்கட்டுகளை சாய்த்துள்ளார்.
சும்மாவேனும் எடுத்திருக்கலாமோ இறுதி அணியில்..உதவியிருக்கக் கூடும்!


Post Comment

3 comments:

கன்கொன் || Kangon said...

பாவம் இந்தியா. ;-)
என்றாலும் நேற்று பதான் விளாசத் தொடடங்கியபோது தெனன்னாபிரிக்கா வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தபோதும் பயமிருந்தது உண்மை. :-(

// தோனி,யுவராஜ்,ரோகித்,ரெய்னா,விஜய் //

Technically no so sound players. :-)



// மீண்டும் மஞ்சள் சட்டை இறுதிப் போட்டிகளில் தென்படப் போகிறதோ? //

இப்ப மஞ்சள் கொஞ்சம் பச்சையா வந்திட்டுது. ;-)


வாஸ்:
நான் அப்பவே சொன்னன்.... :P

கன்கொன் || Kangon said...

*Technically not so sound players. :-)

கவி அழகன் said...

இம்முறை அவுஸ்திரேலிய வெல்வது கடினம் தம்பி

Related Posts Plugin for WordPress, Blogger...