அந்நியர் ஆட்சியில் எமது பண்டைய மருத்துவம் மறுக்கப்பட்டதாலும்,இடையூறுகள்,தடைகள் ஏற்படுத்தப்பட்டமையாலும் ஆசுர மருத்துவம் வழக்கிழந்தும் சிறப்பிழந்தும் வருகிறது.
அறுவை மருத்துவத்தில் பெயரும் புகழும் பெற்றிருந்த சிங்கை அரசர்கள் இருபதாம் நூற்றாண்டு வரை மேன்னாட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்களைக் கூட வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்குக!
அரசர்கள் அறுவைச்சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்ய பயன்படுத்திய கத்தி,கருவிகள்,உடலை விறைக்கச் செய்ய பயன்படுத்திய மருந்துகள்,அறுவைக்குரிய நேரங்கள்,உணவு பத்தியங்களை,இத்துறையில் ஆழ்ந்த புலமையும் அறிவும் கொண்ட சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் வழிவந்தவருமாகிய இளவரசர் இராஜசேகரம் மனித சமுதாய நன்மைக்காகவும்,மேன்மைக்காகவும் இந்த நூலை வெளியிடவுள்ளார்.
தமிழ் அறுவை மருத்துவம் மீண்டும் உயிர் பெறவும்,தமிழர் நன்மையடையவும் இந்த நூல் பெரும் உதவி புரியுமென்பது திண்ணம்.
இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு சி.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்து நூலை வெளியிட்டுவைக்கவுள்ளார் .
எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளோர்,ஆர்வலர்கள் வந்து பங்குபெற்ற அழைக்கப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment