Sunday, January 2, 2011

கவியுலகம் பெயர் மாற்றமும் விருதுகளும்!

அனைவருக்கும் பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..
எனது வலைத்தளத்தின் பெயர் கவியுலகம்'ஆக கடந்த வருடம் இருந்தது..
ஆரம்பத்தில் நான் கவிதைகள் மட்டும் எழுதிவரும் போது அந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது.
ஆனால் டிசம்பர் மாதம் முதல் நான் கவிதை,விளையாட்டு,சினிமா,மொக்கை என அனைத்து விடயங்களையும் எழுதத்தொடங்கிவிட்ட பின்பு,வலைத்தளத்தின் பெயர் பெரிதாகப் பொருத்தமில்லை என எனது நண்பர்கள் பலரும்
வழங்கிய ஆலோசனைக்கமைய பெயரை மாற்றத் தீர்மானித்தேன்..
ஆனா பாருங்க நானா ரூம் போட்டு ஒரு கிழமையா ஜோசிச்சுப் பார்த்தும் எந்தப் பெயரும் உருப்படியா வரவில்லை..(எப்படித்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்கப் போறனோ தெரியல..ம்ம்)
ஆக,பேஸ்புக்'ல டிசெம்பர் 31 ஸ்டேடஸ் ஒண்டு போட்டேன் இவ்வாறு.,
"எண்ட ப்ளாக்'ட பெயர மாத்தலாம்ன்னு இருக்கேன்..நல்ல பெயர் சொல்றவங்களுக்கு ஒரு புரியாணி பார்சல் வழங்கப்படும்!"
உடன உசாரான நம்ம பயலுக,மாறி மாறி பெயர் சொன்னாங்க..
அந்தப் பெயருகளை தாறன்,பாருங்க..எப்பிடி கொலை வெறியோட இருக்காங்க
எண்டு!
அதில அரைவாசிப் பேருங்க சாப்பாட்டுக் கடைக்கு பெயர் கேட்ட மாதிரியே பெயர் சொன்னானுங்க..
அதிலயும் நம்ம அனலிஸ்ட் கன்கோன் இருக்காரே..எவளவு பசில இருந்திருக்கார் பாருங்க..யாராச்சும் பார்ட்டி வைக்கிற எண்டு சொல்லி ஏமாத்திட்டாங்க போல..(வதீஸ்'ஓ?பவனோ?)ஒரே கொத்துரொட்டி,பணியாரம் எண்டு தான்...
மிகுதிப் பேர்கள் அலறல்கள்,ஓலங்கள்,முனகல்கள் எண்டு!!எவளவு காண்டா இருக்காங்க பாருங்க..
எனக்கும் பெயர் வரேல..வந்தபெயருக்குள்ள ஒண்ட தெரிவுசெய்வமெண்டு பார்த்து அண்ணல் வள்ளல் பெருந்தகை சுபாங்கன் அவர்கள் முன்மொழிந்த "மைந்தன் மனதில்"என்ற பெயரை தெரிவுசெய்துள்ளேன்..
அதனால ஒரு புரியாணி பார்சல் அவருக்கே வழங்கப்படுகிறது..
ஆறுதல் பரிசாக நண்பர் ஜெய்லானிக்கு ஒரு ஆப்பம்'மும்(ஆப்பக்கடை பெயர் தந்ததற்காக),கன்கொன்'ற்கு ஒரு பணியாரமும்,சம்பந்தமே இல்லாமல் சுடுசோறு போட்டதற்காக மதி சுதாவிட்கு ஒரு பானை சுடாத சோறும் வழங்கப்படும் என இத்தால் அறிவிக்கிறேன்..வாங்க பழகலாம் எண்டு பிரியமுடன் அழைத்த "பிரியமுடன் தேவ்' அவர்களுடன் ஒரு நாள் பழகவும் தீர்மானித்துள்ளேன்..ஹிஹி எனி ஒப்ஜெச்சன்??
மதி சுதாவுக்கான சுடு சோறு..வித் கறி
அனலிஸ்ட் கோபிக்கு பணியாரம்
ஜெய்லானிக்கு ஆப்பம்!
சுப்பர் ஹிட் பரிசு சுபாங்கனுக்கு!!புரியாணி!!!
எனவே புதிய பெயருடனான எனது வலைத்தளத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்..
நன்றி நண்பெர்ஸ்...

Post Comment

22 comments:

நிரூஜா said...

ஐ சுடு சோறு

ம.தி.சுதா said...

ஐஐஐஐஐ எனக்குத் தான் கறியோட சோறு...

உண்மையில் பெயர் நல்லாயிருக்கு... புதுவருட வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

Subankan said...

இந்த படத்ததைப்போட்டு ஏமாத்தற வேலையெல்லாம் வேணாம், மரியாதையாக புரியாணிப்பார்சலை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டும் போகவும் :)

நிரூஜா said...

//இந்த படத்ததைப்போட்டு ஏமாத்தற வேலையெல்லாம் வேணாம், மரியாதையாக புரியாணிப்பார்சலை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டும் போகவும் //

அதுவும் சுபாங்கனுக்கு சிக்கன் புரியாணி தான் வேணுமாம்

Subankan said...

// நிரூஜா said...

அதுவும் சுபாங்கனுக்கு சிக்கன் புரியாணி தான் வேணுமாம்

//

எதுக்கு? நான் சாப்பிடாம விட அதை எடுத்து நீங்கள் சாபிடவோ? நோ நோ, ஐம் ப்யூர் வெஜிடேரியன். வெஜிடபிள் புரியாணி பார்சல் :P

நிரூஜா said...

//எதுக்கு? நான் சாப்பிடாம விட அதை எடுத்து நீங்கள் சாபிடவோ? நோ நோ, ஐம் ப்யூர் வெஜிடேரியன். வெஜிடபிள் புரியாணி பார்சல் ://

க.க.க.போ

Harini Nathan said...
This comment has been removed by the author.
Harini Nathan said...

விருதுகளும் Blogger பெயரும் supper மைந்தன் :)
But
//வாங்க பழகலாம் எண்டு பிரியமுடன் அழைத்த "பிரியமுடன் தேவ்' அவர்களுடன் ஒரு நாள் பழகவும் தீர்மானித்துள்ளேன்//
என ஆப்ப தேடி போறீங்க நீண்ட ரொம்ப நல்லவரோ?lol

Anuthinan S said...

பெயர் கலக்கல் அண்ணா!!!

நீங்கள் பெயர் கேட்ட நேரத்தில் நான் முகபுத்தகத்தில் இல்லாமல் போய் விட்டேனே!!!

Bavan said...

"மைந்தனின் மனதில்" - நல்ல ரைமிங்கா இருக்கு அண்ணே..:P

மைந்தனின் மொக்கைகள்,
மைந்தனின் மங்காத்தா,
மைந்தனும் கொலைவெறிகளும் இப்பிடிப்பல பெயர்கள் இன்னும் கைவசம் இருந்தது, பட் அண்டைக்கு நான் ஒன்லைன் வராததால பிரியாணி மிஸ் ஆகிட்டு..:P

அடுத்த முறை பெயர் மாத்தும் போது சொல்லியனுப்புங்கண்ணே..:P
வர்ட்டா..:)

S.Nirujan said...

மைந்தா!! எதோ பெயர் நல்லாத்தான் இருக்கு அனா அதில இருக்கிற போட்டோவை பாத்தா FB கமெண்ட் அடிச்சவங்களது எதிர் பார்ப்பை நிறை வேற்றினது மாதிரி இருக்கு!

மைந்தன் சிவா said...

நிரூஜா said...
ஐ சுடு சோறு//
நீங்களுமா பாஸ்??

நிரூஜா said...

என்ன தல பண்ண...!

மைந்தன் சிவா said...

ம.தி.சுதா said...
ஐஐஐஐஐ எனக்குத் தான் கறியோட சோறு...

உண்மையில் பெயர் நல்லாயிருக்கு... புதுவருட வாழ்த்துக்கள் சகோதரம்...
//

உங்களுக்கு கறியோட சோறு போட்டது நான் தான் ஓகே?

மைந்தன் சிவா said...

Subankan said...
இந்த படத்ததைப்போட்டு ஏமாத்தற வேலையெல்லாம் வேணாம், மரியாதையாக புரியாணிப்பார்சலை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டும் போகவும் ://வீட்டு அட்ரெஸ்'எ அனுப்புங்கப்பா!!

மைந்தன் சிவா said...

நிரூஜா said...
//இந்த படத்ததைப்போட்டு ஏமாத்தற வேலையெல்லாம் வேணாம், மரியாதையாக புரியாணிப்பார்சலை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டும் போகவும் //

அதுவும் சுபாங்கனுக்கு சிக்கன் புரியாணி தான் வேணுமாம்//

குடுத்திடுவோம்..

மைந்தன் சிவா said...

Subankan said...
// நிரூஜா said...

அதுவும் சுபாங்கனுக்கு சிக்கன் புரியாணி தான் வேணுமாம்

//

எதுக்கு? நான் சாப்பிடாம விட அதை எடுத்து நீங்கள் சாபிடவோ? நோ நோ, ஐம் ப்யூர் வெஜிடேரியன். வெஜிடபிள் புரியாணி பார்சல் //

வெரி சாரி..நாம சிக்கின் மட்டும் தான் கொடுப்போம்!

மைந்தன் சிவா said...

Harini Nathan said...
விருதுகளும் Blogger பெயரும் supper மைந்தன் :)
But
//வாங்க பழகலாம் எண்டு பிரியமுடன் அழைத்த "பிரியமுடன் தேவ்' அவர்களுடன் ஒரு நாள் பழகவும் தீர்மானித்துள்ளேன்//
என ஆப்ப தேடி போறீங்க நீண்ட ரொம்ப நல்லவரோ?லொள்//

எனக்கு மேட்டர் தெரியாமப் போச்சே!!!

மைந்தன் சிவா said...

Anuthinan S said...
பெயர் கலக்கல் அண்ணா!!!

நீங்கள் பெயர் கேட்ட நேரத்தில் நான் முகபுத்தகத்தில் இல்லாமல் போய் விட்டேனே!!//
என்னப்பா பண்ணுறது..
எல்லாரும் இத தான் சொல்றாங்க..

மைந்தன் சிவா said...

Bavan said...
"மைந்தனின் மனதில்" - நல்ல ரைமிங்கா இருக்கு அண்ணே..:P

மைந்தனின் மொக்கைகள்,
மைந்தனின் மங்காத்தா,
மைந்தனும் கொலைவெறிகளும் இப்பிடிப்பல பெயர்கள் இன்னும் கைவசம் இருந்தது, பட் அண்டைக்கு நான் ஒன்லைன் வராததால பிரியாணி மிஸ் ஆகிட்டு..:P

அடுத்த முறை பெயர் மாத்தும் போது சொல்லியனுப்புங்கண்ணே..:P
வர்ட்டா..://

நீங்க ஒரு களஞ்சியம்ன்னு தெரியும் பவன் ஹிஹி

மைந்தன் சிவா said...

S.Nirujan said...
மைந்தா!! எதோ பெயர் நல்லாத்தான் இருக்கு அனா அதில இருக்கிற போட்டோவை பாத்தா FB கமெண்ட் அடிச்சவங்களது எதிர் பார்ப்பை நிறை வேற்றினது மாதிரி இருக்கு!//

அதுக்கு தானே போட்டனான் ஹிஹி

வதீஸ்-Vathees said...

அட சே! புரியாணி போச்சே...
நஅடுத்தமுறை பெயர் வைக்கும்போது சொல்லியனுப்புங்க...நாங்களும் நல்லா பெயர் வைம்போமல... அற்லீஸ்ட் உங்கட புள்ளைக்காவது பெயர் வைச்சே தீருவோம்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...