Monday, January 10, 2011

பதிவர் "கௌ-பாய்" ஆன மொக்கை வரலாறு!!
மாட்டுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தங்க!
சிறுவனா இருந்ததில இருந்து இன்று மட்டும் பசுப்பால் குடிக்கிறேனுங்க..
இதில இருந்தே தெரியனும் மாட்டுக்கும் எனக்கும் எவ்வளவு நீடிய தொடர்பு இருக்குன்னு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்'இண்ட மாட்டுக்கார வேலன் படத்த எப்ப பாத்தேனோ அண்டேல இருந்து மாடு மேல எனக்கொரு அது'ங்க!
அடிக்கடி எங்கம்மா திட்டுவாங்க உன்ன பெத்ததுக்கு ஒரு மாட்டை வளத்திருந்தாலாவது பிரியோசனமாய் இருந்திருக்கும்னு!அப்பிடி இல்லாட்டி நான் எங்காச்சும் ஊர் சுத்திட்டு வந்தா பேசுவாங்க எங்கடா மாடு மாதிரி ஊர் சுத்திட்டு வாராய் எண்டு!எங்கம்மாவுக்கு எப்பயோ தெரிஞ்சு போச்சுங்க எனக்கும் மாட்டுக்கும் அப்பிடி ஒரு லிங்க்'குன்னு!

எனக்கு ரொம்ப நாளா ஆசை..ஒரு தடவை ஆச்சும் மாட்டிண்ட கொம்ப பிடிச்சு விளாடனும்ன்னு!ஆனா ஒவ்வொரு முறையும் மாடு சிக்கிறப்போ கொம்ப பிடிக்க ட்ரை பண்ணி மண்ணைக் கவ்வுறது தான் வேலையாப் போச்சுங்க..
நாலு கழுதை வயசாச்சு இன்னும் மாட்டிண்ட கொம்ப கூட பிடிக்க முடியல நீ எல்லாம்...அப்டீன்னு திட்டிக்கொண்டே இழுப்பாங்க பாருங்க எண்ட உயிர் தோழன்'க..ஏன்டா ஆம்பிளையா பிறந்தோம்னு எனக்கே கவலையா போய்டும் எனக்கு!!

எப்பிடியாச்சும் மாட்டிண்ட கொம்ப பிடிச்சு "கௌ பாய்" ஆகிடனும்னு எனக்குள்ள ஒரு வெறி வந்திடிச்சு!!இப்பிடி மாட்டிண்ட கொம்ப பிடிக்கிறவங்களுக்கு தானாம் ஊர் மக்களெல்லாம் சேர்ந்து "கௌ பாய்" பட்டம் கொடுப்பாங்களாம்ன்னு எண்ட வடை சுட்ட பாட்டி சாகுறதுக்கு முன்னாடி சொல்லிட்டு செத்திருச்சு!!
சும்மா செத்தாலாவது பரவால,கௌ பாய் பட்டம் வாங்கினாத்தான் எண்ட ஆத்மா சாந்தியடையும்னு சத்தியம் வேற வாங்கிட்டு கண்ண மூடிருச்சு!

பாட்டி மேல போனப்புறம் அத காரணம் காட்டி நான் ஸ்கூல்'ல நாலஞ்சு தடவ லீவ் போட்டதோ என்னமோ எனக்கு இப்ப கொஞ்ச நாளாவே தொட்ட காரியமெல்லாம் நாசமா போய்க்கிட்டிருந்திச்சு!
அதால பாட்டிட கடைசி ஆசைய நிறைவேத்தி வைச்சாலாச்சும் கொஞ்சம் பிரச்சனை தீரும்ன்னு எண்ட மனசுக்கு தோணிச்சு..அதால கௌ பாய் பட்டம் தான் எண்ட வாழ்க்கைண்ட இலக்குன்னு எண்ட நெஞ்சில கஜனி மாதிரி பச்சை குத்திட்டு அலைஞ்சிட்டிருந்தன்..
களவெல்லாம் கற்று மற எண்டு சொல்லித்தராம,"மாடெல்லாம் பிடிச்சு மற" அப்பிடீன்னு தான் எண்ட தாத்தா சின்ன வயசில பக்கத்தி வீட்டு பாட்டிய காட்டி காட்டியே சொல்லித்தந்தாரு..

நான் ஊர்ல வேற கொஞ்சம் பவுசான ஆளு..இப்பிடி ஏதாச்சும் பெயர் வாங்கினாத்தானே நம்ம பயலுக மிரளுவாங்க!
அப்ப தான் எண்ட நண்பன் ஒருத்தன் ஒரு சைக்கில் ஒண்ட எனக்கு தந்து கௌ பாய் ஆகுறதுக்கு பிள்ளையார் சுழி போட்டான்..நல்ல நாள் பெரிய நாள் எண்டு ஒரு நாளில எண்ட பயணத்த ஆரம்பித்தேன்!

இடைவேளை (இனி கொசுக்களெல்லாம் பசுக்களாகும்!)

அப்பத்தான் எண்ட பாட்டிண்ட ஒன்னு விட்ட அக்காண்ட புருஷண்ட தம்பிண்ட காதலி படிச்ச ஸ்கூல்'ல படிப்பிச்ச ஹெட் மாஸ்டர்'ட மாமனார் நம்ம ஏரியால நடமாடிக்கிட்டிருந்தப்போ நானா போய் அவர்கிட்ட கேட்டேன் எப்பிடி நான் எண்ட வேலைய முடிக்கலாம் எண்டு..அதுக்கு அவர் என்ன சொன்னார்ன்னா..
"தம்பி,பொதுவா எந்த மாடுமே தண்ட கொம்ப மனுஷன் பிடிக்கிறத விரும்புறேல..மொதல்'ல நீ கொம்பு பிடிக்கிறதா இருந்தா மாடு பிடிக்கணும்..மாட்டு கூட்டம் ஒண்டோட ஒண்டா கலந்தாத் தான் அதில ஏதாச்சும் ஒரு மாடு பாவம்னு மனமிரங்கி தன்ட கொம்ப பிடிக்க விடும் அதனால மாப்பு இன்னில இருந்து உனக்கு ஆப்பு "அப்டீன்னாரு!

சரீன்னு மாட்டுக் கூட்டத்த தேடினா எங்க பாத்தாலும் நம்ம பயலுக தான் கூட்டம் கூட்டமா திரியுறாங்க!
அப்ப தான் சக பதிவர் அஸ்வின்,தான் ஒவ்வொரு சனியும் விளையாடப் போறவராம்,(கிரிகெட்டு!) அங்க தனக்கு ரொம்ப மாடுகள் கிடைச்சிருக்கு வந்தா தாறதா சொன்னாரு.
அது ஒரு மைதானம்!அங்க தானாம் வழமையா இலங்கையின் பிரபல பதிவர்கள் கிரிகெட் விளையாடுறவங்களாம் !

பாருங்க நண்பன் என்ன மாடு மேய்க்க விட்டிட்டு பின்னால விளையாடுறாரு பதிவர் அஸ்வின்!

அங்க போயி பாத்தா ஒரு மாட்டுக் கூட்டமே நின்னிச்சு!அதில "தல" மாட்ட கண்டு பிடிச்சு ஏன்டா விசயத்த சொல்லி,கெஞ்சி,(சாணி அள்ளிவிட்டதெல்லாம் சும்மா ப்ரெண்ட்ஷிப்'க்காக!) கேக்க,தல மாடு சொல்லிச்சு தங்கள எல்லாம் மேச்சு விட்டாத்தான் அது சாத்தியப்ப்படும்ன்னு!


கருவாச்சிய கட்டினா காடு வெட்டித்தானே ஆகணும்!மேய்ச்சன் !!அப்ப தான் ஒரு பசு மாட்ட பாத்தன்..ஒரே வெள்ளை வெளேர்ன்னு கலரு!அதுண்ட லவ்வர் மாடு பக்கத்தில நிண்டு ரொமான்ஸ் பண்ணிச்சு எப்பிடி தெரியுமா?

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தான்களா
இல்ல
வெயிலுக்கு காட்டாம வளத்தான்களா.."

நா அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்!!
நம்ம பாட்டு மாடுங்க வரைக்கும் ரீச்சாயி இருக்குன்னா,மாடுகளுக்கும் நம்ம மனுசப் பயலுங்க யாருக்கும் லிங்க் இருக்கோணும்னு தானே அர்த்தம்?நாம கௌ பாய் ஆனப்புறம் அந்த களவாணிப் பயலுக யார்ன்னு கண்டுபிடிக்கணும்னு மனசுக்க ப்ளான் பண்ணிக்கிட்டன்!
................
.........................
..................................
.............................................
.......................................................என்னடா கௌபாய் இன்னும் முடியலேன்னு பாக்கிறீங்களா?
மிகுதிக் கதை பல எதிர்பாராத திருப்பங்களுடன் வெளிவரும்!!

குறிப்பு:இது மொக்கை கதை இல்ல நண்பெர்ஸ்..உண்மையான ஆதாரபூர்வமான கதை..அதற்காகத்தான் படங்களை இணைத்திருக்கேன்..மொக்கை கதைன்னு சொல்லிடக்கூடாது பாருங்க..!!

Post Comment

17 comments:

கன்கொன் || Kangon said...

:-))))))

நல்லா புகுந்து விளையாடியிருக்கிறியள். :D

Anonymous said...

மொக்க போடுராராம்!!

yathu said...

இந்த அநியாயத்தை கேட்க்க யாருமே இல்லையா ???????????

யாதவன் said...

சூப்பர கலக்குது மாடு

SRN said...

உம்பே உம்பே ......................கொன்னி மாடா .................
சூப்பர் ..............

Niraj said...

பீஸ் புல்லா இருக்கலாம்னு இங்க வந்தா, கத்தி கத்தியே நம்ம பீஸ், ஃபுல்லா இறங்கிடும் போலிருக்கே

suthan said...

எப்ப்ப்ப்ப்பூடி....!

S.T.R said...

பரிதாபநிலை..............?

Branavan said...

சூப்பர் கொன்னி மாடா நா அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்....

Fazhan said...

எங்கிருந்தெல்லாம் வருகிறார்கள் தினந்தோறும்

Gajan said...

இது உறுதிதானா?“இதென்ன புதுக்கதை? ” ...

no name said...

மொக்க போடுராராம்! என்ன நடக்குது நாட்டுல ......

aigan said...

உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தான்களா
இல்ல
வெயிலுக்கு காட்டாம வளத்தான்களா.." சூப்பர கலக்குது மாடு.................

Samudra said...

:)

jana said...

சூப்பர கலக்குது மாடு.................

aaaaaaaaa said...

இது மொக்கை கதை இல்ல நண்பெர்ஸ்..உண்மையான ஆதாரபூர்வமான கதை..அதற்காகத்தான் படங்களை இணைத்திருக்கேன்..மொக்கை கதைன்னு சொல்லிடக்கூடாது

“நிலவின்” ஜனகன் said...

சூப்பர் மாடு....உங்கள இல்லப்பா...மாட்டைத்தான் சொன்னேன்..நம்புங்க சார்...


அருமை அருமை......

Related Posts Plugin for WordPress, Blogger...