Saturday, January 22, 2011

பிரபல பிரபலங்களின் வீடியோக்கள்-(1)!!


பிரபலங்களின் பிரபல நிகழ்வுகளின் வீடியோக்கள் மற்றும் நெஞ்சை விட்டகலாத பிரபல நிகழ்வுகள் சிலவற்றின் நினைவுகள் போன்றனவற்றை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

1.ஐஸ்வர்யா ராய்..
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதியில் கர்நாடகாவில் பிறந்த அழகு தேவதை!
உலக அழகிப் பட்டம் சூடி 1994 இல் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.அன்று இருந்ததைப் போலவே இன்றும்..அழகு குறையாமல்!!
பதினாறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது!பதினாறு வருடங்களின் முன்னர் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்..சிலர் பிறந்து கூட இருந்திருக்கமாட்டார்கள்!!




2.1996 கிரிக்கட் உலகக்கிண்ணம் இலங்கை அணி வென்ற போது..!
நேற்று நடந்தது போல் உள்ளது இன்னமும் கண்களுக்குள்.இம்முறை மீண்டும் நடக்குமா?
இந்திய துணைக் கண்ட நாடுகள் போட்டிகளை நடத்துவதால் அவற்றிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.பார்க்கலாம்!
இந்தியாவுக்கு கிடைத்து இருபத்தேழு வருடங்களுக்கு மேலாகிவிட்டன!!..



3.இளவரசர் சார்ல்ஸ்,டயானா திருமணம் (1981)
அப்பவே ஆடம்பரத்தை பாருங்கள் திருமணத்தில்!டயானா எனும் தேவதை...இப்போது இல்லை!பிரிட்டிஷ் அரச குடும்பமே அவரால் அழகுபெற்றிருந்தது!துரதிர்ஷ்டவசமாகவோ திட்டமிடப்பட்டோ அவரின் மரணம் கார் விபத்தொன்றில் 1997 ஆகஸ்ட் 31 இல் பாரிஸில் முடிவடைந்துவிட்டது.அந்தக் காரில் அவருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட டோடி பயிட்'டும்,கார் ஓட்டுனர் ஹென்றி போல்'லும் இருந்திருந்தனர்.!


4.புரூஸ் லீ'யின் மரணச்சடங்கு ..
இப்போதும் கவலை அடையச் செய்யும் அவரின் மரணத்தை நினைத்தால்.பல மர்மங்கள் அந்த மரணத்துள்.
அதிக காலம் வாழ்ந்திருந்தால் எத்தனை கராத்தே படங்களை ரசித்திருக்க முடியும்!
"எண்டு ஒப் த டிராகன்"..எனக்கு மிகவும் பிடித்த அவரின் படம்!

5.ஆர்னோல்ட் ச்வாஷ்னேகரின் உடல் கட்டு Mr.olympia 1975
1975 இல்!!எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!அவர் படங்கள் நடிக்கும் காலத்தில் நாங்கள் ரசிகர்களாக இருந்ததில் பெருமை!
இவரின் அரசியல் பிரவேசம் அவரது படங்களுக்கு மூடுவிழாவாய் அமைந்துவிட்டது!
வரும் காலத்தில் அமெரிக்க சனாதிபதியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!கலிபோர்னியாவின் ஆளுநர்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில் அமெரிக்காவின் சனாதிபதியாகிய வரலாறுகள் அதிகம்!!


6.கடலினுள் அமிழ்ந்த டைட்டானிக் கப்பலின் இன்றைய நிலை !!
சோகம்..
பிரித்தானியாவின் ஆடம்பர கப்பலான டைடானிக் தனது முதல் பயணத்தை சவுத்தம்ப்டனிலிருந்து நியு யார்க் சிட்டிக்கு பயணிக்கும் வேளையில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ,13 ஆம் தேதிகளில் கடலினுள் மூழ்கியது.1517 பேர் மரணித்திருந்தனர்!
பல ஆஸ்கார் விருதுகள் பெற காரணமான மிகப் பெரிய மரணம்!!
இப்போது இரும்பு தின்னும் பக்டீரியாக்களினால் உணவாக உன்னப்படுகிரதாம்.இன்னமும் சில வருடங்களில் காணாமல் போய்விடுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்!!


பதிவு பிடித்திருக்குமென நினைக்கிறேன்..இவ்வாறு ஒவ்வொரு வாரமும் பிரபலங்களின் பிரபல்ய வீடியோ காட்சிகள் உங்களுக்காக தரலாமென இருக்கிறேன்.காரணம் பல பிரபலங்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத்தொடங்கிவிடுகிறனர்.அத்துடன் சம்பவங்களும் கூட!
அதனால் அதனை மீளவும் ஞாபகப்படுத்தினால் மீள சப்பைகொட்ட உதவியாக இருக்குமே என்று தான் ஹிஹி !!

Post Comment

8 comments:

சக்தி கல்வி மையம் said...

Good Collections..
Thanks..

http://sakthistudycentre.blogspot.com/

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கலக்சன்...

விடாக்கள் பார்க்க முடியவில்லை.. வீட்டிக்கு போய் தான் பார்க்கணும்..

KANA VARO said...

நல்ல காட்சிகள். ரசிக்க வைக்கிறது

niraj said...

அருமை அருமை.......அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு பதிவு.

Unknown said...

அருமையான தொகுப்பு.

கவி அழகன் said...

பதிவு பிடிச்சிருக்கு காணொளி ரொம்ப பிடிச்சிருக்கு

ஷஹன்ஷா said...

அருமையான பதிவு... தொடரட்டும் தங்கள் பதிவு....

பல காணொளிகள் இன்றுதான் பார்க்க கிடைத்தது...நன்றி

SRN said...

"பல பிரபலங்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக
மறக்கத்தொடங்கிவிடுகிறனர்"..............OK OK
அருமையான பதிவு..............

Related Posts Plugin for WordPress, Blogger...