காவலன்...
எத்தனை எதிர்ப்புகள் எத்தனை வஞ்சனைகள்..எத்தனை தடைகள்..
அத்தனையையும் தாண்டி உலகெங்கும் திரையில் வெற்றிநடை போடுகிறது.(லண்டனில் வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ்)!
பிரபல எழுத்தாளரும் "துக்ளக்"பத்திரிகை ஆசிரியருமான "சோ"ராமசாமி காவலன் பற்றி குறிப்பிடுகையில்,
"எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜனி,கமல் போன்ற எந்தவொரு நடிகருக்கும் இந்தளவு எதிர்ப்பு இருந்ததில்லை.ஆளும் கட்சியே எதிர்க்கட்சியாக இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை.ஒரு குடும்பம் தனி ஒரு மனிதனுக்கு தந்த இடையூறுகளுக்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்..இனியும் கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சோ" யார் ஆதரவாளன் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அவர் கூறியது முற்றிலும் உண்மை.பொங்கல் ரிலீஸ் என்று இருந்த படம்(அதற்கு முன்னரேயே வர வேண்டியது)பொங்கல் தாண்டி தான் வெளியாகி இருக்குமளவுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன!
ஒன்று இரண்டு அல்ல,அனைத்துப் பக்கத்தாலும் எதிர்ப்புகள்.
உண்மையில் விஜய் இப்போது அரசியல் வருவது விஜய் ரசிகனான எனக்கு முற்றிலும் பிடித்திருக்கவில்லை.சினிமாவில் ஒரு தளம்பாத இடத்தை பிடித்துவிட்டு வேண்டுமானால் அதன் பின்னர் அரசியல் போகட்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.ஆனால் காவலன் படத்திற்கு கிடைத்த எதிர்ப்புகளைப் பார்த்துவிட்டு விஜய் அரசியலில் தீவிரம் காட்டினால் எனக்கு மௌனமே பதில்.முடிவை ஆட்சேபிக்க முடியாது.
விஜய்க்கு எதிரான இந்த சதிகள் யாவற்றிற்கும் காரணம் பின்னணியில் அரசியலே ஆகும்.விஜய்யே நேரில் தலையிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுமளவுக்கு முயற்ச்சிகள் நடந்தேறியுள்ளன.
விஜய்யின் ரசிகர்கள் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி ஆறாம் தேதி திருச்சியில் கூடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நிச்சயமாக அனைத்து ரசிகர்களும் திரள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்த தினத்தில் வெளியாகாததால் கடுப்பான ரசிகர்கள் பேரூந்துகளை உடைத்தும் சன் போஸ்டர்களை கிழித்தும் ஆவேசமடைந்துள்ளனர்.
ஆட்சி ஆட்டம் பிடிக்கும் இந்தத் தருணத்தில் தி மு க அரசு இன்னமும் எதிர்ப்புகளை சந்திக்கப் போகிறது என்பதே உண்மை.
காவலன் திரையிடுவதற்கு திரையரங்குகள் தர மறுத்த உரிமையாளர்கள் வீட்டிலே ரூம் போட்டுத் தான் அழவேண்டிய நிலை.
அடுத்த படமான வேலாயுதம் படமும் அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் பெருத்த இலாபத்தை அரசியலுக்காக இழந்த பெருமை அவர்களையே சாரப்போகிறது.
திரையரங்குகளே கிடைக்காது என்ற நிலையிலிருந்த காவலன் தான் இறுதியில் 350௦-400௦௦ திரையரங்குகளில் வெளியாகிஉள்ளது.மற்றைய பொங்கல் வெளியீடுகளான ஆடுகளம்,சிறுத்தை போன்றன அதை விட குறைந்த தியேட்டர்களிலேயே வெளியாகியுள்ளது.இத்தனைக்கும் ஆடுகளம் சன் பிக்செர்ஸ்'ஆல் வெளியிடப்பட்டிருந்தும் கூட.....என்னத்தை சொல்ல?வேலாயுதத்துக்கு வருவீங்க இல்லே!!அப்ப பார்த்துக் கொள்கிறோம்!
இதைப்பற்றி எழுதினால் பல அரசியல் பதிவுகள் போடக்கூடிய அளவுக்கு எழுதலாம்.அத்தனை விடயங்கள் நடந்தேறியுள்ளன.
தி மு க,அ தி மு க சாராத புதிய கூட்டணி ஒன்று தமிழ் நாட்டில் எதிர்பார்க்கிறேன்..ஆனால் இலவசங்களை நம்பியே ஓட்டுப் போடும் மக்கள் இருக்கும் மட்டும் அது நிச்சயமாக சாத்தியமாகப் போவதில்லை.ஏனெனில் எம் ஜி ஆர் திரும்பவும் பிறக்கப்போவதில்லையே!!
எல்லாம் சரி காவலன் படம் எப்படி??
மாபெரும் வெற்றி!!சூப்பர் ஹிட் படம்!!மெகா ஹிட் படம்!!
விஜய் ரசிகன் என்பதனால் அப்படி என்று சொல்லமாட்டேன்..வெற்றி கிடைக்கும் படம் தான் காவலன்!
நிச்சயமாக தோல்வி இல்லை.அது மாபெரும் வெற்றியா சாதாரண வெற்றியா என்பதை முதல் இரண்டு மூன்று நாட்களில் கூறிவிட முடியாது.ஒரு இரண்டு மூன்று கிழமை போன பின்னர் கூறுவோம் அதன் வெற்றி பற்றி!
தொடர் தோல்விகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி.அது போதும் இப்போது விஜய்க்கு,ரசிகர்களுக்கும் தான்..
அடுத்து வரும் படங்கள் மேல் குறிப்பிட்ட வெற்றி பெறுவதற்கான ஆரம்பம் இது என என்னால் கூற முடியும்.
அடிமட்ட விஜய் ரசிகனாக அடிதடிகள் ஆர்ப்பாட்டங்கள் தான் விஜய் என்று நம்பும் ரசிகர்களுக்கு காவலன் பிடித்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாக உண்மையான சினிமா ரசிகன் மற்றும் லவ் ஸ்டோரி படங்கள் பார்க்கப் பிடிக்கும் ரசிகர்களுக்கு,அவர்கள் விஜய்க்கு எதிரானவர்கள் என்றாலும் கூட கட்டாயமாக படம் பிடித்திருக்கும்.
வழமையாக விஜய் படங்களுக்கு வரும் பெண்கள்,குழந்தைகள் கூட்டம் இம்முறை சற்று அதிகமாகவே கண்ணுக்குப் படுகின்றது.
குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய நகைச்சுவை,காதல்,செண்டிமெண்ட் கலந்த அழகிய தமிழ் சினிமா படம் காவலன்!!
கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் விடாதவர்கள் குறைவு!விஜய்யை முழுமையாக மாற்றியிருந்தார் சித்திக்!!
அழகாகவும் தெரிகிறார் விஜய்.நடித்திருக்கிறார்.அசின்,ராஜ்கிரணும் நடிப்பில் பிரகாசித்திருக்கிறனர்.வடிவேலு வரும் காட்சிகள் கலகல.
சித்திக் படம் என்பதால் படம் முழுவதுமாய் காமெடி பரவிக்கிடக்கிறது.அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம்.
போட்டிக்கு சிறுத்தை,ஆடுகளம் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அனைத்தையும் தாண்டி காவலன் வெற்றி பெறும் என்பது திண்ணம்.
கேபிள் அண்ணன் கூட தனது விமர்சனத்தில் காவலன் அவரேஜ்(விஜய் ரசிகர்களுக்காக) அப்படி குறிப்பிட்டிருந்தார்.பெரும்பாலானோர் சந்தேகக் கண்ணோடு படம் பார்க்கச் சென்று குறைகள் பெரும்பாலும் இல்லை(குறைவு)என்றபோதிலும் தங்கள் திறமையால் கண்டுபிடித்து விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.விமர்சனம் எழுதுபவர்கள் நடிகர்கள் மீதுள்ள வெறுப்பை பட விமர்சனங்களில் காட்டாதீர்கள்.உண்மையான சினிமா ரசிகனாக விமர்சனங்களை வெளியிடுங்கள்.உங்களை போன்ற பிரபலங்களின் எழுத்தை வாசித்து விட்டுத்தான் பலர் படம் பார்ப்பதா இல்லையா என்று கூட முடிவு செய்கின்றனர்.உங்களுக்கென்று ஒரு பொறுப்பு உள்ளதென்பதை மறந்துவிடாதீர்கள்.
காவலன்-தளபதிக்கு பல விஷயங்களுக்கு உண்மையை வெளிச்சம் போட்டும் சில விஷயங்களுக்கு நல்ல வழியும் காட்டியுள்ளது!!
ஸ்டேப் ஸ்டேப் பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜனி நடித்திருந்தால்...??
அருமையாக பொருத்தி உள்ளார் நண்பர் ஒருவர்..அருமையாக உள்ளது..நிச்சயம் ரசிப்பீர்கள்!!
18 comments:
நல்ல விமர்சனம்
எல்லாவற்றிலும் குறைகண்டு பிடிக்கலாம் இவர்கள் கூறும் புதக்கண்ணாடியால் பார்த்த குறையெல்லாம் வெறும் சில்லறைத் தனமானது காவலன் உண்மையில் உணர்வு பூர்வமான படம்......... கட்டாயம் மெஹா ஹிட்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான படத்தில் விஜய்
நடித்துள்ளார் . இதற்கும் குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் அனைத்து தடைகளை தாண்டி இப்படத்தை வெற்றிகரமாக
வெளியிட்டு வெற்றி கண்ட தளபதிக்கு வாழ்த்துக்கள்..........
அருமையான பதிவு நன்றி நண்பரே ...................
நீ என் ரத்தமடா தம்பி...
ம் காவலன உயர்த்தி விட்டுருக்கீங்க
நல்ல பதிவு
விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் இந்த படம் புதுசா, வித்தியாசமா இருக்கலாம்... ஆனா.. உண்மையில் படம் சூப்பர் குப்பை...
உண்மையிலேயே அவ்வளவு நல்லாவா இருக்கு? என்னைப் பெருசா இம்ப்ரெஸ் பண்ணல சிறுத்தையோடு ஒப்பிடும் போது உயர்வு என்றாலும் ஆடுகளத்தோடு ஒப்பிடவே உடியாது. ஆடுகளம் பார்த்து அசந்து போய் இருக்கிறேன்.
காவலன் பற்றி கன பதிவு வாசித்து விட்டேன் யாரும் இப்படி எழுதவில்லை ஒரு வித்தியாசமான பாணியில் தெளிவான அலசல், மற்றவர்கள் மத்தியில் விதியாசமாக தெரிகிறாய் தம்பி
மச்சான் முந்தி பஞ்சடிச்சு அழவசாரு டாகுதறு இப்ப நடிச்சு அளவகிறாரு
this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்
//கேபிள் அண்ணன் கூட தனது விமர்சனத்தில் காவலன் அவரேஜ்(விஜய் ரசிகர்களுக்காக) அப்படி குறிப்பிட்டிருந்தார்.//
ஐயோ! பாவம் கேபிள் ஜி கன்பியூஸ் ஆகிட்டாரு!
கால்வன் என்னும் பார்க்கவில்லை அண்ணா பார்த்த பயபு சொல்லுகிறேன். ஆனாலும், சிறுத்தையை வெல்லும் அளவுக்கு காவலனில் மசாலா இல்லை என்றே படுகிறது
அருமை அருமை...
ஓவர் பில்டப், தொண்டைக்கிழிய பேசும் பஞ்ச் வசனங்கள். இது எதுவுமே இல்லாத விஜய் படம். ( வேற வழி செய்துதானே ஆகணும் ). நாம செய்யுறது தப்பா கரெக்டா என தெரியாமல் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் என்றே சொல்லலாம்{நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய் ஒரு நல்லப் படத்தில் நடிச்சிருக்காருப்பா...அப்பன்னா இதுக்கு முன்னாடி நடிச்சதெல்லாம் மொக்கை என்று ஒத்துக்கொண்டுள்ளார்கள்.எது எப்படியோ விஜய்க்கு ஒரு நல்ல படம் இந்த படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
( அட யாருமே நம்ப மாட்றாங்களே! ) ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.........
அமைதியான விஜய் படம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்///
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
திரையரங்குகளே கிடைக்காது என்ற நிலையிலிருந்த காவலன் தான் இறுதியில் 350௦-400௦௦ திரையரங்குகளில் வெளியாகிஉள்ளது.மற்றைய பொங்கல் வெளியீடுகளான ஆடுகளம்,சிறுத்தை போன்றன அதை விட குறைந்த தியேட்டர்களிலேயே வெளியாகியுள்ளது. 4. இளைஞன்
நொடிக்கொரு விளம்பரம் செய்தாலும் பார்வையாளர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இப்படம் சாட்சி. கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான இந்தப் படம் வெளியான முதலிரண்டு தினங்களில் 9.12 லட்சங்களை மட்டுமே வசூல் செய்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
3. காவலன்
தடைகளை கடந்து வெளியாகியிருக்கும் காவலனுக்கு விஜய்யின் முந்தையப் படங்களைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முதலிரண்டு தினங்களில் காவலன் சென்னையில் சம்பாதித்தது 51.15 லட்சங்கள்.
2. சிறுத்தை
இந்த கமர்ஷியல் புளிப்பு மிட்டாய்க்கு எல்லா சென்டர்களிலும் ஆரவார வரவேற்பு. இந்தப் பொங்கலின் கலெக்சன் மாஸ்டராக இதுவே இருக்கும் என்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்தது 68.72 லட்சங்கள்.
1. ஆடுகளம்
இயக்குனரைப் பார்த்து ரசிகர்கள் திரையரங்குக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஆடுகளத்தின் ஓபனிங் கலெக்சனே சாட்சி. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 69.97 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
.
வாவ் வாவ் வாவ்.....சூப்பர்...காவலன் காக்கும் விஜய்!
சூப்பர் அண்ணா .நல்ல விமர்சனம்
Post a Comment