Friday, January 7, 2011

தென்னாபிரிக்க -இந்திய டெஸ்ட் தொடர்(மூன்றாவது போட்டி)!




பல காரணங்களால் இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் பிரபலம்,விறுவிறுப்பு பெற்றது..
  • இந்தியா தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றியொன்றை பதிய எதிர்பார்த்தமை.
  • டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளுக்கிடையிலான போட்டி..
  • துடுப்பாட்ட பிதாமகனுக்கும் தென்னாபிரிக்கப் புயல் ஸ்டேயினுக்குமிடையிலான போட்டி..
  • ஸ்மித்'க்கும் சாகிர் கானுக்கும் இடையிலான போட்டி..
  • துடுப்பாட்ட தரவரிசையில் முதல் பதினைந்து வீரர்களில் எழு பேர் பங்குபெற்றிய போட்டி
  • பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் பதினாறு வீரர்களில் ஆறு பேர் பங்குபெற்றிய போட்டி

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெல்ல,இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெல்ல,தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஜனவரி இரண்டாம் திகதி நியுலண்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது .நியுலண்ட்ஸ் மைதானம்(cape town ) தான் தென்னாபிரிக்காவில் 338 .2 என்னும் அதிக துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருக்கும் மைதானம்!நாணயச் சுழற்ச்சியில் கொஞ்சம் கூட ராசியில்லாத தோனி ஒரு மாதிரியாக மூன்றாவது போட்டியின் போது சரியாக கூறி களத்தடுப்பை தேர்வு செய்தார்.!!(கடந்த பதினைந்து டெஸ்ட்'டுகளில் இரண்டாவது தடவை நாணய சுழற்ச்சியில் வெல்லும் சந்தர்ப்பம்!)

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா,அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றது.ஒரு கட்டத்தில் எட்டு விக்கட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் என்று இருந்த தென்னாபிரிக்காவை கலீஸ் இறுதி நிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து 79 ஓட்டங்களை பகிர்ந்தார்!
ஸ்டெயின் எட்டாவது வீரராக ஆட்டமிழக்கும் போது 99 ஓட்டங்களுடன் இருந்த கலீஸ்,இறுதி 79 ஓட்டங்களில் 62 ஓட்டங்களை பெற்றார்!

பூரண உடல்தகுதி இல்லாமல் விளையாடிய கலீசின் அபார துடுப்பாட்டம் அவரை அதிக சதம் பெற்றோர் வரிசையில் பாண்டிங்'கோடு இரண்டாமிடத்துக்கு உயர்த்தி விட்டது.ஒரு காலத்தில் சச்சின்'னின் சத்தங்கள் சாதனையை பாண்டிங் தான் உடைப்பார் என நம்பப்பட்ட போதிலும் இப்பொழுது அது கலீஸ் பக்கம் திரும்பியுள்ளது!
பந்துவீச்சில் ஸ்ரீசாந்த் ஐந்து,சாகிர் மூன்று,ஷர்மா இரண்டு என்று கைப்பற்றினர்.ஸ்ரீசாந்த் தற்போது இந்தியாவின் பந்துவீச்சு நட்சத்திரமாக மாறி வருகிறார்.கொஞ்சம் ஆக்ரோஷத்தை குறைத்தால் இன்னும் பெயர் வாங்கலாம்.
ஸ்மித் சஹீரின் பந்துக்கு ரொம்பவே பயப்பிடுகிறார்.பதினோராவது தடவை சஹீரின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.(முன்னர் வாஸ் ஸ்டீபன் பிளெம்மிங் போல).
தொடர் ஆரம்பிக்கும் முன்னர் ஸ்மித் கூறியது போல அம்லாவை ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் இந்தியாவால் வெற்றி பெறமுடியாது என்பது ஓரளவு உண்மைதான்.ஒவ்வொரு இன்னிங்க்ஸ்'இலும் தலையிடி கொடுத்திருந்தார்.அதை விட பெரிய தலையிடி கலீஸ்!!


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடரில் பிரகாசிக்காத ஷேவாக் ஸ்டேயினின் பந்துக்கு ஆட்டமிழக்கவும் , திராவிட் ரன் அவுட் முறையி வெளியேற 28 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட் பறி போயிருந்தது.அடுத்து களமிறங்கிய சச்சினோடு கம்பீர் மெல்ல மெல்ல கட்டிய இணைப்பாட்டம் 176 ஓட்டங்கள் இந்தியாவை கொஞ்சம் நல்ல நிலைக்கு கொண்டு வந்தது.(முன்னர் 2000 'இல் ஜெயவர்த்தனா,சங்ககாரா அடித்த 168 ஓட்டங்கள் தான் சாதனையாக இருந்தது.)

நூறு அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 93ஓட்டங்களுடன் ஹரிஸ்'ஸின் பந்துக்கு ஆட்டமிழக்க,பின்னர் வந்த லக்ஸ்மன்,புஜாரா,தோனி என மூவரும் சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப போட்டி தென்னாபிரிக்க வசம் மாறியது.லக்ச்மனின் ஆட்டமிழப்பு துரதிஷ்டவசமானது.ஹரிசின் பந்துக்கு சச்சின் ஹரிசை நோக்கி அடிக்க அது ஹரிசின் கையில் பட்டு விக்கட்டில் பட,லக்ஸ்மன் கிரீஸ்'ஐ விட்டு வெளியே நின்றமையால் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.வேகமாக அடிக்கப்பட்ட பந்து ஹரிஸ்'ஸின் விரலில் இரத்தம் வரவைத்து அடங்கியது.

பின்னர் வந்த ஹர்பஜன்,சாகிர்'ரோடு சச்சின் இணைப்பாட்டம் புரிந்து இறுதியில் இந்தியா தென்னாபிரிக்காவை விட இரு ஓட்டங்கள் அதிகம் பெற்று ஆட்டமிழந்தது.சச்சின் 146 ஓட்டங்களையும்(51 ஆவது சதம்),ஹர்பஜன் 40 ,சாகிர் 23 ஓட்டங்களையும் பெற்றனர்!
ஸ்டெயின் ஐந்து விக்கட்டுகளையும் மோர்கல் இரண்டு விக்கட்டுகளையும் பெற்றனர்.
ஸ்டேயினின் பந்துவீச்சு அனைவராலும் புகழப்பட்டது.துடுப்பாட்ட பிதாமகன் சச்சினே தடுமாறி தடுமாறி விளையாடியதை அவதானிக்க முடிந்தது!
என்னைக் கேட்டால் டெஸ்ட்'டில் மக்ராவை விட ஸ்டெயின் சிறந்த பந்துவீச்சாளர் என்பேன்!(hatsoff டு ஸ்டெயின்!)

அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு எதிர்பார்த்ததை போலவே ஹர்பஜன் தலையிடி கொடுத்தார்.சர சரவென அவர் ஸ்மித்,பீட்டர்சன்,ஹரிஸ்,அமலா விக்கட்டுகளை சாய்க்க,ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்கா தடுமாறி 130 'க்கு ஆறு விக்கட்டுகளை இழந்து தவித்தது.போட்டி அந்தக் கணம் இந்தியாவின் பக்கம் செல்ல அடுத்து வந்த பௌச்சர்(அநேகமாக இறுதி டெஸ்ட் இன்னிங்க்ஸ்) கலீசுடன் இணைந்து மிகவும் இன்றியமையாத இணைப்பாட்டம் ஒன்றை புரிந்து தென்னாபிரிக்காவை காத்திரமான நிலைக்கு கொண்டு சென்றார்.

என்றாலும் பவுச்சர் தனது பாணியில் ஐம்பதுகளிலே ஆட்டமிழக்க..(விக்கட் எடுத்தது டெண்டுல்கர்!!அதிக காலத்துக்கு பிறகு!ஜனவரி 2009 'இக்கு பிறகு!)பின்னால் வந்த ஸ்டேயினும் மோர்க்கலும் கலீசுக்கு பக்கத்துணையாக நின்று கொடுக்க கலீஸ் தனது நாற்பதாவது சதத்தைக் கடந்தார்!இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை!ஹர்பஜனின் பந்துக்கு ரிவேர்ஸ் ஸ்வீப் அடித்தார் பாருங்கள்..அத்தனையும் பிரம்மாதம்.என்னதான் களத்தடுப்பாளர்கள்;ஐ மாற்றினாலும் மறு திசையில் கலீஸ் ஓட்டங்களை பெற்றார்!

ஒரே போட்டியில் இரண்டு அபார சத்தங்கள்..இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் தென்னாபிரிக்காவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய சத்தங்கள்!!போட்டித்தொடரில் மூன்றாவது சதம்!!ஸ்ரீசாந்த் பந்தினால் முதல் இன்னிங்க்சில் அடிவாங்கிய கலீஸ் ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட கலீஸ்,களத்தடுப்பிட்கு வராத கலீஸ்..வந்து நின்று தனது நாற்பதாவது சதத்தை அடித்தார் என்றால் அதை விபரிக்க வார்த்தைகள் இல்லை!தென்னாபிரிக்க மண்ணில் ஒரே டெஸ்ட்'டில் இரு சத்தங்கள் அடித்த முதலாவது தென்னாபிரிக்க வீரராக கலீஸ் பதிவானார்.

டெண்டுல்கர் மட்டும் பிறந்திடாவிடில் கலீஸ் தான் கிரிக்கட்டின் பிதாமகன்!!ஏன் இப்போதும் கூட என்னைப் பொருத்தமட்டில் அவர் தான் கிரிக்கட்டின் பிதாமகன்..!!
ப்ரட்மனோ,சச்சினோ இல்லை.சச்சின் துடுப்பாட்டத்தில் பிதாமகனாக இருக்கலாம்.ஒரு திறமையான முழு நேர பந்துவீச்சாளர் பெற்றிருக்கக்கூடிய விக்கட்டுகள்..ஒரு தலை சிறந்த துடுப்பாட்டவீரரின் ஓட்டக்குவிப்புகள்,சராசரிகள் என சகலதுறை வீரராக வலம்வரும் கலீசே கிரிக்கட்டின் பிதாமகன் என பிரகடனம் செய்யுங்கள்!

ஹர்பஜன் சிங் எழு விக்கட்டுகளை பதம் பார்த்தார்.ஆரம்பத்தில் மைதானம் அவருக்கு மிகவும் சாதகமாக இருந்தது.பிட்ச்'இன் வெடிப்புகளால் பந்து நன்றாக டேர்ன் ஆனது.சாகிர்,ஸ்ரீசாந்த்,சர்மாவினால் ஹர்பஜனுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்க முடியவில்லை.120 ஓட்டங்களுக்கு எழு விக்கட்டுகள் தான் பாஜியின் வெளிநாட்டு மைதானமொன்றில் பெறப்பட்ட சிறந்த விக்கட் பெறுதியாகும்!
அதே நேரம் ஸ்ரீசாந்த் அபராதம் விதிக்கப்பட்டார்.அடிக்கடி ஆட்டமிழப்புகளை நடுவரிடம் கேட்டதால் போட்டி ஊதியத்தில் பத்து வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

340 ௦ ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு இறுதிநாள் களமிறங்கியது இந்தியா.மிகக் கடினமான இலக்குத் தான்.
இந்த மைதானத்தில் நான்காம் இன்னிங்க்ஸ்'இல் அதிகப்படியாக பெற்று வெற்றியீட்டிய ஓட்டங்கள் 334 ஆகத்தான் இருந்தது(அவுச்திறேலியாவால்).அதனை விட ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தான் இருநூறுக்கு மேற்பட்ட ஓட்டம் பெற்று வெற்றிஈட்டப்பட்டிருந்தது.
அந்தப் பயமோ என்னமோ இந்தியாவின் இன்னிங்க்சில் அது நன்றாகவே தெரிந்தது.வழமையாக அடித்தாடும் சேவாக்'கே பொறுமை காத்தார்.விளைவு?மோர்க்களின் பந்தில் ஆட்டமிழந்தார்.40 பந்துகளில் வெறுமனே 11 ஓட்டங்களே பெற்றிருந்தார் ஷேவாக்.அடுத்துவந்த திராவிட்'தோடு கம்பீர் இணைப்பாட்டம் புரிந்து கொஞ்சம் ஆறுதல் அளித்தார்.

ஆனால்,போட்டியின் இரண்டாவது அரைச்சதமடித்தபின் அறுபதுகளில் கம்பீரும்,திராவிட் 31 'இலும் ஆட்டமிழந்து செல்ல,பின்னர் வந்த சச்சினும்,லச்மனும் ஆட்டமிழக்காமல் முறையே 14 ,32 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை போட்டி முடிவுக்கு வந்தது.
சச்சின் 91 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற்றிருந்தார்.!!
போல் ஹரிஸ் முப்பது ஓவர்களில் வெறுமனே 29 ஓட்டங்களை மட்டுமே வழங்கி இருந்தார்.அதற்குள் 19 ஓட்டமற்ற ஓவர்கள் என்றால் பாருங்கள் இந்தியா போட்டியை சமநிலை செய்ய எவ்வளவு முயட்சித்திருக்கின்றது என்று!

தொடர் நாயகனாகவும் போட்டி நாயகனாகவும் ஜாக்ஸ் கலீஸ் தெரிவானார்!
போட்டித்தொடர் சமநிலை அடைந்தமைக்கு தோனி மகிழ்ச்சியும்,ஸ்மித் கவலையையும் வெளியிட்டிருந்தனர்.
இந்தியா ஒரு அறிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டதேன்றே கூறமுடியும்.
இரு அணிகளுமே போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழக்கக்கூடாது என்று விளையாடியமையை அவதானிக்க முடிந்தது.ஸ்மித் உள்ளூர சந்தோசப்பட்டிருந்தாலும் வெளியே கவலையடைந்திருப்பார்..கலீஸ் இருந்திருக்காவிடில் தோல்வி தான்.ம்ம்

ஆஷஸ் ஆரவாரத்தில் பெரும்பாலானோர் இந்த முக்கியத்துவம் மிக்க தொடரை மறந்தே விட்டிருந்தனர்.
என்ன செய்ய..

தொடரில் சிறந்த பெறுபேறு
கலீஸ் மூன்று சதங்கள் அடங்கலாக 498 ஓட்டங்களை 166 என்னும் சராசரியில் பெற்றிருக்கிறார் ஐந்து இன்னிங்க்ஸ்'களில்.பின்னால் சச்சின்..ஆனால் நெருங்கமுடியாத தூரத்தில்(326)!

அதிக விக்கட்டுகள் எடுத்தோர் வரிசையில் ஸ்டெயின்(21),மோர்க்கல்(15) முதலிரண்டு இடங்களிலும் அணிவகுத்து நிக்கின்றனர்.
ஹர்பஜன்(15),ஜாகிர்(10) பின்னால்!


சோகம்
  • இது சச்சினின் தென்னாபிரிக்க மண்ணிலமைந்த இறுதிப் போட்டியாக இருக்கலாம்...(எப்போது ஓய்வோ தெரியாது).அதே போன்றே திராவிட்,லச்மனுக்கும்!
  • கரி கேர்ச்டனின் பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்..
  • மார்க் பவுச்சரின் இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்..

பாராட்டு
வரலாறு மிக்க ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து இங்கிலாந்து 3 -1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சாதனை,வரலாறு
படைத்திருக்கும் இங்கிலாந்து அணிக்கும்,தலைவர் ஸ்ட்ராஸ்,பயிற்றுவிப்பாளர் அண்டி ப்ளவர் மற்றும் என் சக இங்கிலாந்து ரசிகப்பெருமக்களுக்கும்!!
ஆரம்பத்திலேயே கூறினோம் படித்து படித்து நாங்க தான் வெற்றி பெறுவோம் என்று..இல்லை அவுஸ் தான் என்றீர்கள்..என்ன நடந்தது??
ஹஸ்ஸி மட்டும் இருந்திருக்காவிடில்..ஐந்தையும் தந்திருப்போம் முறையாக..
யாருக்கிட்ட!!
(நம்ம அனலிஸ்ட் இப்ப ஒரு காரசாரமான பதிவோட வெய்டிங் எண்டு நினைக்கிறன்.பார்ப்போம்!!)
சச்சின்,கலீஸ் தொடர்பில் ஒரு பூரண ஆராச்சி,அலசல் பதிவொன்றை நான் அனலிஸ்ட் கைகளால் எதிர்பார்க்கிறேன்..நேரமிருந்தால் அனலிஸ்ட்...??


ஆமா இதே உட்சாகத்த,முயற்சிய உலகக்கின்னத்தொடர் பக்கம் திருப்பினால் எப்பவோ உலகக்கிண்ணத்தை வென்றிருப்பார்கள் இங்கிலாந்து அணியினர்!!

குறிப்பு;அவசர அவசரமாக எழுதியது..பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்..ஆனால் மன்னிக்கவும்.


Post Comment

28 comments:

Subankan said...

தென்னாபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிக்கமுன்னர் 3-0 வெற்றியை தென்னாபிரிக்காவிற்கு எதிர்பார்த்தேன். ஆனால் அனலிஸ்ட் வேலை எனக்குச் சரிவராது எனக் காட்டிவிட்டார்கள் இந்தியர்கள் :(

ஆஷஸ் - :)

Anonymous said...

Kirsten will continue as a coach for India

நிரூஜா said...

//அதே நேரம் ஸ்ரீசாந்த் அபராதம் விதிக்கப்பட்டார்.அடிக்கடி ஆட்டமிழப்புகளை நடுவரிடம் கேட்டதால் போட்டி ஊதியத்தில் பத்து வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது//

அப்படியா?பவுன்ரி கயிற்றை காலால் உதைத்ததற்காகத் தான் அபராதம் விதிக்கப்பட்டதாகச் சொன்னார்களே?

அருமையான அலசல்

suthan t said...

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு
இந்தியா டாப்பு............

அருமை அருமை தோழரே .............................
நல்ல அலசல்...............

Unknown said...

இந்தியா ஏமாற்றம் அளித்து விட்டது...
//ஆஷஸ் ஆரவாரத்தில் பெரும்பாலானோர் இந்த முக்கியத்துவம் மிக்க தொடரை மறந்தே விட்டிருந்தனர்.
என்ன செய்ய..//
//
ஆமா இதே உட்சாகத்த,முயற்சிய உலகக்கின்னத்தொடர் பக்கம் திருப்பினால் எப்பவோ உலகக்கிண்ணத்தை வென்றிருப்பார்கள் இங்கிலாந்து அணியினர்!//

ஆமாம் உண்மை!!
நல்ல அலசல் !!

கன்கொன் || Kangon said...

:-))))) #EscapingWithSmiley

மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார்.

கன்கொன் || Kangon said...

// சச்சின்,கலீஸ் தொடர்பில் ஒரு பூரண ஆராச்சி,அலசல் பதிவொன்றை நான் அனலிஸ்ட் கைகளால் எதிர்பார்க்கிறேன்.. //

ஆவ்வ்வ்வ்வ்....

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள் நல்ல இருக்கு

lavan said...

gud!!!!!!

ARV Loshan said...

ம்ம்.. அவசரம் என்று தெரியுது. ஆனால் முக்கியமான விஷயங்களை சொல்லி உள்ளீர்கள்.
நானும் தென் ஆபிரிக்கா தொடரை வெல்லும் என்று எதிர்பார்த்தேன்.
இந்தியா ஒரு டெஸ்ட்டை வெல்வதே பெரிய விஷயம் என நினைத்தேன்.

சாகிர், சச்சின், லக்ஸ்மன், ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் கலக்கி இருந்தார்கள்.

கலிஸ் - சொல்ல வார்த்தைகள் இல்லை.


அனலிஸ்ட் - இனி உங்கள் பணி ;)

ARV Loshan said...

மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார்//

yes yes yes..

//நிரூஜா அக்கா//
avvvvv ;)

தர்ஷன் said...

சுபாங்கனை போலத்தான் நானும் நினைத்தேன். ம்ம் நினைத்ததெல்லாம் எங்கே நடக்குது எனிவே இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

நிரூஜா said...

//மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார். //
இன்னா...! இல்ல சும்மா தாங்கேக்கிறன். இன்னா....!

Bavan said...

தெ.ஆ vs இந்தி -நான் இந்தப் போட்டியில் எதையும் எதிர்பார்க்கவே இல்லை, ஆனால் சிறீசாந்தி்ன் பந்துவீச்சை இரசித்தேன்..;)
ஆஷஸ் - நம்ம அணி வெற்றி வெற்றி வெற்றி..:D:D:D

Unknown said...

Subankan said...
தென்னாபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிக்கமுன்னர் 3-0 வெற்றியை தென்னாபிரிக்காவிற்கு எதிர்பார்த்தேன். ஆனால் அனலிஸ்ட் வேலை எனக்குச் சரிவராது எனக் காட்டிவிட்டார்கள் இந்தியர்கள் :(

ஆஷஸ் - :)//
இதுக்கு பேர் அனலிஸ்ட் எல்லா பாஸ் ஹிஹி

Unknown said...

Anonymous said...
Kirsten will continue as a coach for India//
hope so...!

Unknown said...

நிரூஜா said...
//அதே நேரம் ஸ்ரீசாந்த் அபராதம் விதிக்கப்பட்டார்.அடிக்கடி ஆட்டமிழப்புகளை நடுவரிடம் கேட்டதால் போட்டி ஊதியத்தில் பத்து வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது//

அப்படியா?பவுன்ரி கயிற்றை காலால் உதைத்ததற்காகத் தான் அபராதம் விதிக்கப்பட்டதாகச் சொன்னார்களே?

அருமையான அலசல்//

ஆமா மன்னிச்சூ...

Unknown said...

jorge said...
இந்தியா ஏமாற்றம் அளித்து விட்டது...
//ஆஷஸ் ஆரவாரத்தில் பெரும்பாலானோர் இந்த முக்கியத்துவம் மிக்க தொடரை மறந்தே விட்டிருந்தனர்.
என்ன செய்ய..//
//
ஆமா இதே உட்சாகத்த,முயற்சிய உலகக்கின்னத்தொடர் பக்கம் திருப்பினால் எப்பவோ உலகக்கிண்ணத்தை வென்றிருப்பார்கள் இங்கிலாந்து அணியினர்!//

ஆமாம் உண்மை!!
நல்ல அலசல் !//

ம்ம்ம்ம்

Unknown said...

கன்கொன் || Kangon said...
:-))))) #EscapingWithSmiley

மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார்.//

அக்காவ விட்டிடுன்கப்பா..
அதோட பதிவ போடுங்க..பாஸ்

Unknown said...

கன்கொன் || Kangon said...
// சச்சின்,கலீஸ் தொடர்பில் ஒரு பூரண ஆராச்சி,அலசல் பதிவொன்றை நான் அனலிஸ்ட் கைகளால் எதிர்பார்க்கிறேன்.. //

ஆவ்வ்வ்வ்வ்...//

அவ்வ்வ்வவ்

Unknown said...

யாதவன் said...
சுவாரசியமா எழுதியுள்ளீர்கள் நல்ல இருக்கு//

நன்றி யாதவன்

Unknown said...

lavan said...
gud!!!!//
thnkz

Unknown said...

LOSHAN said...
ம்ம்.. அவசரம் என்று தெரியுது. ஆனால் முக்கியமான விஷயங்களை சொல்லி உள்ளீர்கள்.
நானும் தென் ஆபிரிக்கா தொடரை வெல்லும் என்று எதிர்பார்த்தேன்.
இந்தியா ஒரு டெஸ்ட்டை வெல்வதே பெரிய விஷயம் என நினைத்தேன்.

சாகிர், சச்சின், லக்ஸ்மன், ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் கலக்கி இருந்தார்கள்.

கலிஸ் - சொல்ல வார்த்தைகள் இல்லை.


அனலிஸ்ட் - இனி உங்கள் பணி ;)//
ஏனப்பா எல்லாரும் அப்பிடியே நினைச்சிருக்கிறீங்க??

Unknown said...

LOSHAN said...
மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார்//

yes yes yes..

//நிரூஜா அக்கா//
avvvvv ;)//

அவ்வ்வ்வவ்

Unknown said...

தர்ஷன் said...
சுபாங்கனை போலத்தான் நானும் நினைத்தேன். ம்ம் நினைத்ததெல்லாம் எங்கே நடக்குது எனிவே இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்//
நீங்களுமா

Unknown said...

நிரூஜா said...
//மற்றும்படி நிரூஜா அக்கா சொன்னது போல ஸ்ரீசாந்த் எல்லைக்கோட்டிலுள்ள அந்த விளம்பர முக்கோணங்களை/கயிறை உதைந்தமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டார். //
இன்னா...! இல்ல சும்மா தாங்கேக்கிறன். இன்னா....//
அதானே என்ன பழக்கம் நீருஜாவோட??அடி பின்னி...அவ்வ்வ்வ்

Unknown said...

Bavan said...
தெ.ஆ vs இந்தி -நான் இந்தப் போட்டியில் எதையும் எதிர்பார்க்கவே இல்லை, ஆனால் சிறீசாந்தி்ன் பந்துவீச்சை இரசித்தேன்..;)
ஆஷஸ் - நம்ம அணி வெற்றி வெற்றி வெற்றி..:D:D://
ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றாக போட்டார்...பந்தை!!

ம.தி.சுதா said...

நல்லதொரு அலசல் அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...