Monday, September 27, 2010

எனது ஐம்பதாவது பதிவு!!


தட்டுத் தடுமாறி,சில அவமானங்கள் மற்றும் பல ஆசீர்வாதங்களுடன் ஐம்பதாவது பதிவில் நான்...

ஆனி மாதம் பதினாறாம் தேதி ப்ளாக் ஒண்டு தொடங்கலாமே எண்ட ஆசைல விளையாட்டுத்தனமா ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கவியுலகம் என்ற எனது வலையுலகம்..

அதை தான் என் அறிமுகத்தில்(profile இல்)கூட கூறி இருக்கிறேன்.இப்படி ப்ளாக் ஒன்று ஆரம்பித்து எனக்கு நானே பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,தேவை எனக்கு இருந்திருக்கவில்லை.

நான் முக்கியமாக ப்ளாக் தொடங்க நினைத்ததன் உண்மையான நோக்கங்கள் பல..
1 .அங்காங்கே பாடசாலை காலத்திலிருந்து என்னால் கிறுக்கப்பட்ட பல கவிதைகளை சேமித்து வைக்காமல் போனதால் ஒண்டுமே கையில் மிஞ்சவில்லை..அதை எங்கயாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆசை!!

2 .எனது வெட்டித்தனமான நேரத்தை எப்படி போக்காட்டலாம் என்று சிந்தித்து இருந்த போது ப்ளாக் தான் கண்ணுக்கு பட்டது..!!

3 .பிரபல பதிவர்கள் பலரின் ப்ளாக்'களை வாசித்து பார்த்து எனக்கும் ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்ற ஆவல்..

போன்றன தான் முக்கியமான காரணங்கள்.

ப்ளாக் தொடங்குவதற்கு முதல் facebook 'இல் ஒரு குழு(group )ஒன்றை கவிதைகளுக்காக நடத்தி வந்தேன்..
அது 1000 fans 'ஐ தாண்டியதுடன் அதற்கு மேலே ஒரு இலக்கும் இல்லாமல் போனது..ஆதலால் ப்ளாக் ஆரம்பித்த அன்றே அந்த க்ரூப்பில் இருந்து ஒரு சில கவிதைகளை கொண்டு வந்து என் ப்ளாக்'இல் போட்டேன்..

ஆரம்பத்தில் எனக்கு ப்ளாக் பெரிதாக பழக்கமில்லாத காரணத்தால் நான் பார்த்து ரசித்த விடையங்களை அப்பிடியே பிரதி பண்ணி பதிவிட்டேன்..அப்போது அவ்வாறு பண்ணக்கூடாது என்பது தெரிந்திருக்கவில்லை.
அப்போது பனித்துளி ஷங்கர் அண்ணன் தான் அப்படி இடக்கூடாது என்று எடுத்துரைத்தார்.

அதன் பின்பு எனது சொந்த ஆக்கங்களியே பதிவாக இட்டு வந்து கொண்டிருக்கிறேன்.

சிறிது சிறிதாக பார்ப்பவர்கள் எண்ணிக்கை கூடியது.தமிழ்மணம்,இன்ட்லியில் பதிவுகளை இணைத்ததால் என் ப்ளாக்'இற்கு வருபவர்கள் எண்ணிக்கை வளர்ந்தது...பின்னூட்டங்கள் இட்டார்கள் எனக்கு உந்துதலாக இருந்தது.
விளையாட்டாக ஆரம்பித்தது பின்னர் எனக்கு போக்கு காட்ட ஆரம்பித்தது..
அடிக்கடி பதிவிடத்தூண்டியது.அதன் விளைவாக ஐம்பது பதிவுகள் ஆகிவிட்டன நாலுக்கு குறைவான மாதங்களில்!

தினசரி பல தடவைகள் எனது ப்ளாக்'ஐ பார்க்கத்தலைப்படுகிறேன்.பார்க்காமல் விட்டால் இருப்புக்கொள்ளுதில்லை.
நல்ல பல நண்பர்களை பதிவுலகம் சம்பாதித்து தந்திருக்கிறது..இன்னும் தரும் என்ற நம்பிக்கை தான் உந்துதல்.

பல்வேறு பல்சுவை அம்சங்களை அடக்கிய ப்ளாக்'இற்கு பலர் சென்றாலும் கவிதைக்கு மட்டுமென தொடங்கிய என் ப்ளாக்'இற்கும் சிலர் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி..

தொடர்ச்சியாக உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் தான் என் போன்ற பதிவர்களும் வாழ முடியும்.
முடிந்தவரை நல்ல ஆக்கங்களை தர முயற்ச்சிக்கிறேன்..
என்றும் அன்புடன்
மைந்தன் சிவா

Post Comment

7 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்
தொடருங்கள் உங்கள் பயணத்தை
தொடர்ந்து வர நாங்கள் இருக்கிறோம்

ம.தி.சுதா said...

தங்கள் பதிவுலகம் சிறப்புற என் வாழ்த்துக்கள்....

Anonymous said...

best of luck by gajan

பனித்துளி சங்கர் said...

தங்களின் ஐம்பதாவது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து இன்னும் இந்த ஐம்பது , ஆயிரமாக வளர்வதற்கு வாழ்த்துக்கள் . மிகவும் எளிமையாக ,எதார்த்தத்துடன் தங்களின் அனுபவங்களை பகிர்ந்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது .!

AnushangR said...

தாமத்திற்கு மன்னிக்கவும்...
கடைசியாக வாழ்த்தினாலும் கடைசிவரை அவ்வாழ்துக்கள் உங்களுக்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.
வாழ்க நும் கலைப்பணி!!! வளர்க உம் கவிவளம்!!!
ஐம்பது ஆயிரமாக பல்கிப்பெருக பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்...
கலக்குங்க மைந்தன் இது உங்க ஏரியா...

Unknown said...

அனைவருக்கும் நன்றிகள்..!!

Related Posts Plugin for WordPress, Blogger...