எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!!

ஆணுரிமை!!
நடப்பு தெரியாமல்
பெண்ணுரிமை பற்றிப்
பேசிப் பேசியே
ஆணுரிமையை தொலைத்துவிட்டு..
தொலைத்துக்கொண்டு இருக்கும்
ஆண்களின்
எதிர்காலத்துக்கு
ஒரு அலாரம்!!
உரிமைக்காக ஏங்கியவர்களிடம்
தம்முரிமைக்காக
கையேந்த வேண்டிய கையாலாகாத்தனம்..
முதலாளிகள் முதலாளித்துவத்தை
இழந்து போகும் தருணம்..
எந்த சம்பாத்தியத்தை காட்டி
கட்டி ஆண்டானோ
அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!
அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!
ஆண் மகனே..
உனக்கு
அணி சேர்த்த அத்தனையும்
இன்று அவள் கையில்!
உன்னிடம் எதிர்பார்த்த
பெண்ணிடம்
இனி நீ எதிர்பார்ப்பாய்..
அன்பை
ஆதரவை
பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!
நடப்பு தெரியாமல்
நடமாடும்
ஆண் வர்க்கமே
விழித்தெழு!!
ஆணுரிமைக்கு
குரல்கொடு!!
ஆரம்பத்திலே அறிந்து கொள்
அல்லாவிடில்
அடுத்த நூற்றாண்டு
பெண்நூற்றாண்டாக
மாறும்
நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது மனிதா!!
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!
டிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்கள் மற்றும் வாக்குகளை விட்டுச்செல்லுங்கள் மற்றவர்கள் தொடர்வதற்காக!

12 comments:
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!//
உண்மை தான் ...யாருக்கும் முன்னுரிமை வேண்டாமே!அருமை
நண்பா அருமை விழித்து கொள்வோம்
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!//
ஆல்ரெடி அது தானே நடக்குது பாஸ்!!
பின்னீட்டீங்க போங்க!!
Anonymous said...
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!//
உண்மை தான் ...யாருக்கும் முன்னுரிமை வேண்டாமே!அருமை//
நன்றிகள்..
சசிகுமார் said...
நண்பா அருமை விழித்து கொள்வோம்//
வாங்க நண்பர் சசிகுமார்..விழித்து விடுங்கள்...அல்லாவிடில் விடியலே இல்லை!
jorge said...
ஆல்ரெடி அது தானே நடக்குது பாஸ்!!
பின்னீட்டீங்க போங்க!!//
என்ன ஜோர்ஜ் உங்க வீட்டயுமா?
Its a new concept 2 this world.As u said,we(boys) must take attention on this matter!!
good.congrats
நண்பா என்ன இப்படி திடீர்ன்னு... பாத்துக்கோ... ஒரு வேளை இதற்காக அடுத்த பலிகடா நீயாகக்கூட இருக்கலாம்...(பதிவுலகில்)
//நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது //
என்னப்பு! லோஷன் அண்ணாக்கு நாளைக்கான தலைப்பு எடுத்து கொடுக்கிறீங்க போல??? விடியலை சொன்னேன் ...சிந்திக்க வேண்டிய விடயம் தான் தோழரே!!!
Anonymous said...
Its a new concept 2 this world.As u said,we(boys) must take attention on this matter!!
good.congrats//
thankz budy
வெறும்பய said...
நண்பா என்ன இப்படி திடீர்ன்னு... பாத்துக்கோ... ஒரு வேளை இதற்காக அடுத்த பலிகடா நீயாகக்கூட இருக்கலாம்...(பதிவுலகில்)//
ஆஹா கிளம்பீட்டான்களா??ஆள விடுங்கப்பா..எஸ்'உ...!!
AnushangR said...
//நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது //
என்னப்பு! லோஷன் அண்ணாக்கு நாளைக்கான தலைப்பு எடுத்து கொடுக்கிறீங்க போல??? விடியலை சொன்னேன் ...சிந்திக்க வேண்டிய விடயம் தான் தோழரே!!!//
ஹஹா சும்மா சும்மா
Post a Comment