Sunday, September 5, 2010

என்ன இது ஒரு நாள் தானா?ஆசிரியர் தினம் அக்டோபர் 5 கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும்.இன்னும் ஒரு மாதம் இருக்கிறது சரியாக!..ஆண்டில் ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களை வாழ்த்தாமல் காலம் முழுவதும் நாம் அனைவரும் கற்பித்த ஆசான்களை மறக்காமல் இதயத்தில் ஆலயம் கட்டி வழிபட வேண்டும்..அதுவே ஆசான்களுக்கு நாம் வழங்கும் மரியாதை மதிப்பு எல்லாமே..

நான் யாழ்ப்பாணம்(இலங்கை)சென் ஜோன்ஸ் கல்லூரியில் படித்து வெளியேறியவன்.அவர்கள் ஞாபகார்த்தமாக,என் நண்பர் ஒருவரின்(அடிக்கடி பின்னூட்டமிடும் வள்ளல் "அனுஷாங்" தான்)வேண்டுகோளுக்கமையவும் எழுத்தப்பட்ட கவிதையை எனது பதிவுலகில் பதிவோம் அதற்கு இன்று தான் நல்ல சூழ்நிலை என்பதால் பதிவிடுகிறேன்..பார் போற்றும்
பரியோவானில்
நாம் போற்றும்
கனவான்களே..
ஆசிரியர்களே!
பரியோவான் ஆலயத்தில்
எம்மை ஆட்கொண்ட
பெருந்தகைகளே!

கல்விச் சூரியன்களே
உங்கள் கதிர் பட்டு
உயிர்ப்புற்ற தாவரங்கள் நாம்!

சொல்லுக்கு அரிச்சந்திரன்
வரலாற்றிலே!
வில்லுக்கு அர்ச்சுனன்
பாரதத்திலே!
அன்புக்கு அன்னை எமக்கு
ஆரம்பத்திலே
பண்புக்கு பரியோவான்
பார்புலத்திலே!!

பற்றுத்தான் நம்
பரியோவான் மேல்
அன்பு எங்கள்
ஆசிரியர் மேல்!!

கற்று நாம்
ஆளாக
தானாக நாம்
பாராள

ஏதாக எமக்கமைந்த
படிக்கற்கள் நீங்கள்!

எமக்கு அறிவு புகட்டிய
அறிவாலயத்தின் முத்துக்களே!
விதையாய் வீழ்ந்தோம்
முதலாம் ஆண்டில்.
விருட்சமாய் மாற்றினீர்கள் எம்மை
பதின்மூன்று ஆண்டுகளில்!

பள்ளி சேரும் முன்னே
இருவர் தானே உலகம்
பள்ளி சேர்ந்த பின்னே
நீங்கள் தான் எங்கள் உலகம்!

கண் மூடிப் போற்றுகின்றோம்
இக்கணம்
கண் எதிரே நீங்கள்!
மனம் திறந்து வாழ்த்துகிறோம்
திறந்த பொஸ்தகம் நீங்கள்!

நும் செயலால்
அறிவால்
நடத்தையால்
நாகரீகத்தால்
முன் மாதிரியாய்
திகழ்ந்தீர்..
எம்மை செதுக்கினீர்!

துவண்டு போன போது
தட்டிக் கொடுத்தீர்
தோல்விகள் சூழ்ந்த போது
தட்டிக் கொடுத்தீர்
தோளோடு தோள் நின்ற
தோழனானீர்!

கற்பித்த காலங்களில்
கல்வியா கற்பித்தீர்?
அனைவரும் கூடி இருப்பதால்
வெளிப்படட்டும் உங்கள் ரகசியம்!
கல்வியோ கலைகளோ
பண்போ பணிவோ
பழக்கவழக்கமோ
எது விட்டீர்??
நேரம் தவறாமை
நன் நெறி பிறழாமை
தீயோர் சொல் கேளாமை
அப்பப்பா எதனை நான் அடுக்க!!

நீங்கள் சிற்பிகள்!
எங்களை செதுக்கினீர்கள் !
நீங்கள் தலைவர்கள்!
எங்களை வழி நடத்தினீர்கள்!
நீங்கள் "குரு"க்கள்!
எமக்கு ஞானம் தந்தீர்!
நீவிர் ஒவ்வொருவரும் அகராதிகள்!
விளக்கங்கள் தந்தீர்!
வாழ்த்துக்கள் கூற
நான் பெரும் கவிஞனுமல்ல!
வாழ்க்கையில் மைல்கற்கள்
தொட்டவனுமல்ல!
உங்களின் மாணவன்
சீடர்களில் ஒருவன்
நன்றிகள் சொல்ல நினைக்கும்
அந்த
ஆயிரம் உள்ளங்களில் ஒருவன்
இத்தனை தகுதிகள் போதும்
என் ஆசானை வாழ்த்துரைக்க
வாழ்க என மனமுவக்க
நெஞ்சங்கள் கூடி
உங்கள்
பெருமைகளை எடுத்துரைக்க!

நும் புகழ் தான் பேச
என்ன இது
ஒரு நாள் தானா?
அத்தனை தானா
பந்தம்?
வாழ்க்கையோடு இணைந்த
சொந்தம் ஆசான்கள்
!
டிஸ்கி:இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது ஆசிரியர் தினம் ....!அத காலை செய்திகளில் பார்த்து இலங்கையிலும் இன்றைக்கும் என்று எண்ணி பதிவிடப்போய் இத்தோடு 3 வாட்டி எடிட் பண்ணிட்டன் பதிவை!மன்னித்தருளுக!!

Post Comment

9 comments:

சத்ரியன் said...

”ஆசிரியர்கள் தினக் கவிதை” மிகச்சிறப்பாக இருக்கிறது.

(பாராழ - என்பதை “பாராள” என மாற்றுங்கள்.

வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

ரொம்ப சிறப்பாக இருக்கிறது கவிதை...

மைந்தன் சிவா said...

சத்ரியன் said...

”ஆசிரியர்கள் தினக் கவிதை” மிகச்சிறப்பாக இருக்கிறது.

(பாராழ - என்பதை “பாராள” என மாற்றுங்கள்.

வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பர் சத்ரியனே..திருத்தப்பட்டது.

மைந்தன் சிவா said...

வெறும்பய said...

ரொம்ப சிறப்பாக இருக்கிறது கவிதை...//

நன்றி தல

Anonymous said...

நல்ல இருக்கு தலைவா!

jorge said...

அருமை..வருடுகிறது மைந்தன் சிவா

மைந்தன் சிவா said...

Anonymous said...

நல்ல இருக்கு தலைவா!//
நன்றி வருக..

மைந்தன் சிவா said...

jorge said...

அருமை..வருடுகிறது மைந்தன் சிவா//

நன்றிகள் நண்பரே!

Raventhiraraja said...

மைந்தா!இந்த கவிதை உங்களுடைய கவித்திறமையை மீண்டும் பறைசாற்றும் இன்னொரு படைப்பு என்பதற்கு மேலாக இது எமது கல்லூரிக்கும் எமக்கு கற்பித்த ஆசான்களுக்கும் ஒரு நெகிழ்ச்சியான நன்றி நவிலல்(TRIBUTE) என்பதாகவே இதை கருத வேண்டும் என்பதை இவ்விடத்தில் பெருமையுடன் இயம்ப விளைகிறேன்...
தொடரட்டும் உம் கவிப்பயணம்
தொடர்ந்து தருவோம் நல்லாதரவு
தரமான உம் கவிதனிட்கு...
நண்பா! நன்றி உமது பெருந்தன்மைக்கு
வாழ்த்துக்கள் உமது கவித்திறமைக்கு...

Related Posts Plugin for WordPress, Blogger...