"சின்ன மாமியே
உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ
படிக்க சென்றாளோ..."
இந்த தமிழ் பொப்பிசை பாடலை யாரும் மறக்கமாட்டார்கள்.
அதனை உருவாக்கியவர் இலங்கையின் மூத்த கலைஞரான நித்தி கனகரத்தினம்!!
அவரின் உருவாக்கலில் அமைந்த இன்னொரு பாடலை அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் பார்க்ககூடியதாக இருந்தது அவரின் சொந்த குரலிலேயே..
இப்பாடல் 1960 'களில் எழுதப்பட்டது..தமிழ் பொப் என்று இலங்கைக்கு அறிமுகம் செய்தவர் திரு நித்தி அவர்களே..
லண்டன் மாப்பிள்ளை பற்றி அந்த பாடலில் நகைச்சுவையாக கூறப்பட்டிருந்தது..முதல் முறையாக அந்த பாடலை கேட்டேன்.கேட்கும் போதே சிரிப்பு தாங்க முடியவில்லை.
.அப்போதே உள்ளூர் மணமகன்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க போல..அதே நிலைமை இப்பவும் தொடரத்தானே செய்கிறது..என்ன சீதனம் அப்போது ஆயிரங்களில்..இப்போ லட்சங்கள் கோடிகளில்..அந்த பாடல் உங்களுக்காக...
லண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!
அன்றொரு நாள் நடந்தது
அவசரக்கலியாணம்
பிளேன் இலே தான் பறந்து வந்தார்
மாப்பிள்ளை சிவஞானம்
மாப்பிளையும் பெண்ணுமாக
வெளியூர் பிரயாணம்
போன பிளேன் இல் திரும்பி வந்தாள்
போச்சுது அவள் மானம்..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்..!!
என்ஜினீயர் எண்டு சொல்லி
புளுகித் தள்ளினாராம்
லண்டன் இல் ஓர் ஹோட்டலில்
வெயிட்டர் வேலை தானாம்!
கொண்டு போன காசிலே தான்
காரும் வாங்கினாராம்
என்று அந்த பெண்ணும் வந்து
சொல்லி அழுதாராம்!
லண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!
இப்பவும் உள்ளூர் அழகிகளை வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு வழி(வலி) அனுப்பி வைக்கும் உள்ளூர் மாப்பிளைகளுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
இத பாக்குற லண்டன் மாப்பிளைகள் தயவு செய்து அடுத்த பிளேன் பிடிச்சு வந்திடாதீங்க எனக்கு "ஆபீஸ் ரூம்"போட..
காரணம் என்னுடைய நண்பர்கள் பலரும் லண்டன் மாப்பிளைகளே!!
பாத்து துள்ளல் போட்டது போக உங்கள் பின்னூட்டல்களையும் வோட்டினையும் விட்டு செல்லுங்கள்.
15 comments:
உங்களுக்கு அடி உதை உறுதி நண்பா !
எமது மண்ணுக்கு புகழ் சேர்த்தவர் நித்தி அவர்கள்..அவரின் புகழ் பெற்ற பாடல்கள் ஏராளம் அந்தக்காலத்தில்!!
Anonymous said...
உங்களுக்கு அடி உதை உறுதி நண்பா !//
கடவுளே காப்பாத்து..........!!
rasigan said...
எமது மண்ணுக்கு புகழ் சேர்த்தவர் நித்தி அவர்கள்..அவரின் புகழ் பெற்ற பாடல்கள் ஏராளம் அந்தக்காலத்தில்!!//
ஆமாம் 6o வதுகளில் பாடத்தொடங்கிவிட்டார்!!
நம் நாட்டு பாடல்...பதிவு அருமை..!
அப்ப சின்ன மாமியே மனோகரன் பாடவில்லையா?
ம்ம்ம்...... என்னத்த சொல்ல?
பதிவு சிறப்!!!
jorge said...
நம் நாட்டு பாடல்...பதிவு அருமை..//
நன்றி jorge
jorge said...
அப்ப சின்ன மாமியே மனோகரன் பாடவில்லையா?//
பலருக்கு இந்த குழப்பம் உள்ளது...நித்தி தான் உரிமையாளர்!!
AnushangR said...
ம்ம்ம்...... என்னத்த சொல்ல?
பதிவு சிறப்!!//
நன்றி அனுஷ்
//அப்ப சின்ன மாமியே மனோகரன் பாடவில்லையா?//
பலருக்கு இந்த குழப்பம் உள்ளது...நித்தி தான் உரிமையாளர்!!//
வசந்தம் டிவி இல எல்லாம் விளக்கமா சொன்னார் நித்தி
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்
நல்ல தகவல் சகோதரா... என்ன செய்வது நம்ம மாதிரி பசங்க சிறீலங்கன் எயாலைன்சை அண்ணாந்த பார்க்க வேண்டியது தான்...
யாதவன் said...
//அப்ப சின்ன மாமியே மனோகரன் பாடவில்லையா?//
பலருக்கு இந்த குழப்பம் உள்ளது...நித்தி தான் உரிமையாளர்!!//
வசந்தம் டிவி இல எல்லாம் விளக்கமா சொன்னார் நித்தி
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்//
ஆமா..நன்றி
ம.தி.சுதா said...
நல்ல தகவல் சகோதரா... என்ன செய்வது நம்ம மாதிரி பசங்க சிறீலங்கன் எயாலைன்சை அண்ணாந்த பார்க்க வேண்டியது தான்.//
ஹஹா எங்க போயிடப்போறாங்க!!
பெருசா ஒண்டுமில்லைங்க.. கவிதை எண்ட போர்வையில உலகத்தில மாறு வேஷத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற பய..! பொழுதுபோக்கா ஆரம்பிச்சது..இப்ப எனக்கு
.. like this :)
Post a Comment