குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து
இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)
ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?
என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?
10 comments:
கிளைமாக்ஸ் நேரத்தில் வரும் சோக பாடலையும் இணைத்துள்ளீர்கள்..எனக்கு பிடித்த அருமையான பாடல்...thankz
ஆமா என்ன கொஞ்ச நாளா பதிவ காணேல?
இனிமையான பாடல்..பதிவிட்டமைக்கு நன்றி
jorge said...
கிளைமாக்ஸ் நேரத்தில் வரும் சோக பாடலையும் இணைத்துள்ளீர்கள்..எனக்கு பிடித்த அருமையான பாடல்...thankz//
வருகைக்கு நன்றி
jorge said...
ஆமா என்ன கொஞ்ச நாளா பதிவ காணேல?//
ஆமா..தவிர்க்க முயல்கிறேன் நண்பரே
ரொம்ப நல்ல பாட்டு... எப்போதும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்று...
வெறும்பய said...
ரொம்ப நல்ல பாட்டு... எப்போதும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்று..//
ஆமாம்..
அருமையான பாடல்...முக்கியமாக சோகப்பாடல் நெஞ்சை தொட்டது..!
இத்திரைப்படத்தில் பாடிய பாலு,சித்திரா ஆகியோருக்கும் தேசிய விருதுகள் கிடைத்ததையும் மறக்ககூடாது நண்பரே!
கட்டாயமாக!
(புரியாவிட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)
Post a Comment