கல்தோன்றி மண் தோன்றா
காலத்தில்
முன் தோன்றிய
முதலுணர்வு
காதலென்பேன்!
காலத்தால் மூத்து
ஆதாம் ஏவாள்
மனங்களில் பூத்து
பிரபஞ்ச இயக்கத்தின்
மூத்த சக்தி
காதலென்பேன்!
எழு கடல் போதாதென்று
கண்ணீர் கடல்
தோற்றுவித்த
இயற்கையில் நுழைந்த
செயற்கை
காதல் என்பேன்!
எழுதாத விரல்களையும்
இறைவன் தலைஎழுத்தை
மீறி
எழுதவைக்கும் கவி
அது காதலென்பேன்!!
தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!
நினைவு பளிங்கு கல்லை
காதல் சின்னமாக்கி
சாஜகான் பேர் பெற்றதும்
சிறை வாழ்க்கை
அடையப்பெற்றதும் காரணம்
காதலென்பேன்
கடவுள் படைத்தது
இருவராயினும்
இன்றுவரை உலக சனத்தொகை
காமம் முதல்கொண்டு
சாதல் கொலை வரை
தீர்மானிக்கும் கடவுள்
காதலென்பேன்!!
காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...வாழ்க்கை...வாழ்வோம்
காதலுடன்!!
டிஸ்கி:இதனால் சகலருக்கும் அறியத்தருவது என்னவெனில் பாலகுமாரனின் தலைப்பு போல் "ஆதலினால் காதல் செய்வீர்"!!
நாம சொல்லித்தான் நீங்க எல்லாம் பண்ணுவீங்க எண்டு தெரியும்...ஆல்ரெடி எத்தினைக்கு ஆட்டைய போட்டீங்களோ!!கடவுளே காப்பாத்து!!
காதலிக்கும் காதலிக்க போகும் காதல் பிடிக்காமலிருக்கும் யாராயினும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை ஓட்டாக பின்னூட்டமாக விட்டுச்செல்லுங்கள்!
10 comments:
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...//
உண்மைதான் அருமை!
உண்மைதான் அருமை!//
நன்றி நண்பரே!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பன்ச் தல!!அருமையாக உள்ளது !ஆனா ஆட்டைய போடுறதுக்கு இப்டி கடிக்கறீங்களே பாஸ் !
jorge said...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பன்ச் தல!!அருமையாக உள்ளது !ஆனா ஆட்டைய போடுறதுக்கு இப்டி கடிக்கறீங்களே பாஸ் //
உண்மைய சொன்னேன்..ஹிஹி சும்மா ச்சும்மா!!
//காதலிக்க போகும் காதல் பிடிக்காமலிருக்கும் யாராயினும்//
ஏனப்பு! எங்கள்ள அவ்வளவு கடுப்பா?
எப்பிடியாயினும் நான் பின்னூட்டு(வதை!) தொடர்வேன்... ஹி ஹி ஹி...
எப்படி மாப்பு எங்கிருந்தாலும் கடமையில கண்ணும் கருத்துமா இருக்கிறீங்க!?
நண்பரே! இது ஒன்றும் பழைய(!) பரவசத்தினால் ஏற்பட்ட பாதிப்பு மன்னிக்கவும் பதிவு இல்லையே?
அப்படியாயின் அதற்கான ஒன்றை விரைவில் எதிர்பார்க்கிறோம் கவி மைந்தா!!! முடிந்தால் போடும் கட்டாய பின்னூட்டம் , ஓட்டு நிச்சயம் உண்டு என உறுதிபடக் கூறுகிறேன்...ஷப்பா இண்டைக்கு நல்லா தூக்கம் வரும்.ஹி ஹி ஹி எல்லாம் ஒரு கிக்குக்கு தான் உள்குத்து ஒன்றும் இல்லை...
நண்பா... ரொம்ப கஷ்டபட்டிருப்ப போலிருக்கே.. இந்த காதலால...
AnushangR said...
//காதலிக்க போகும் காதல் பிடிக்காமலிருக்கும் யாராயினும்//
ஏனப்பு! எங்கள்ள அவ்வளவு கடுப்பா?
எப்பிடியாயினும் நான் பின்னூட்டு(வதை!) தொடர்வேன்... ஹி ஹி ஹி...
எப்படி மாப்பு எங்கிருந்தாலும் கடமையில கண்ணும் கருத்துமா இருக்கிறீங்க!?
நண்பரே! இது ஒன்றும் பழைய(!) பரவசத்தினால் ஏற்பட்ட பாதிப்பு மன்னிக்கவும் பதிவு இல்லையே?
அப்படியாயின் அதற்கான ஒன்றை விரைவில் எதிர்பார்க்கிறோம் கவி மைந்தா!!! முடிந்தால் போடும் கட்டாய பின்னூட்டம் , ஓட்டு நிச்சயம் உண்டு என உறுதிபடக் கூறுகிறேன்...ஷப்பா இண்டைக்கு நல்லா தூக்கம் வரும்.ஹி ஹி ஹி எல்லாம் ஒரு கிக்குக்கு தான் உள்குத்து ஒன்றும் இல்லை...//
ஹஹா இல்ல இல்ல பொதுவா சொன்னேன்!!
வெறும்பய said...
நண்பா... ரொம்ப கஷ்டபட்டிருப்ப போலிருக்கே.. இந்த காதலால...//
ஏன் அண்ணே??அவ்வளவு எபெக்டு குடுக்குதா?
அருமை… வாழ்த்துக்கள்..
ம.தி.சுதா said...
அருமை… வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பரே.
Post a Comment