Monday, October 29, 2012

சின்மயிக்கு ஒரு கடிதம்...!

உள்ளே போக முன்பதாக: இது ஒரு மிக மிக சீரியஸ் பதிவு.இக்கட்டில் இருக்கும் என் அருமை பாடகி சின்மயி அக்காக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் பதிவு.வாசித்து எவராவது சிரித்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.


     


அன்புள்ள சின்மயிக்கு,
(குறிப்பு:"அன்புள்ள" என்பது ஆபாசம் கிடையாது,என் ஸ்கூல் டீச்சருக்கு கூட அன்புள்ள'ன்னு தான் எழுதுவேன் மேடம்)

நான் எட்டாவது படிக்கிறப்போ,என்கூட படிக்கிற பையன் என் மேல தக்காளி வீசினான்..என்னோட வெள்ளை சேர்ட் அப்பிடியே சிவப்பாயிரிச்சு..வந்த கோபத்தில எழும்பி எட்டி ஒரு உதைவிட்டேன்..அதுவரைக்கும் கரும்பலகையில கிறுக்கிக்கொண்டிருந்த வாத்தியார் என்னோட கால் மேல போகும்போது மட்டும் கரெக்டா திரும்பி பாத்து என்னைய அடி பின்னிட்டார்.தக்காளி அடிச்சவன் தப்பிட்டான் தக்காளி...இதனால தான் இப்ப கூட நீங்க ஜெயிலுக்கு போகக்கூடாதின்னு நாஸ்திகனான நான் வேண்டாத சாமி கிடையாது..கால் முடி கூட மழிக்க ரெடின்னு உச்சி பிள்ளையாருக்கு வேண்டியிருக்கேன்..(தலை முடி மழிச்சா பர்சனாலிட்டி டேமேஜ் ஆகிடும் மேடம்...அப்புறம் "மயிர்" பத்தி எல்லாம் பேசினான்னு கேஸ் பைல் பண்ணிடக்கூடாது பாருங்க..)

இதிகாச காலத்தில கூட(உங்க ஆக்களுக்கு தான் இதுகன்னா ரொம்ப பிடிக்குமாமே..!) ராவணன் சீதைய கடத்தினா கடத்திட்டு போகட்டும்னு சும்மா இருக்காம ராவணன் மீது போர் தொடுத்த ராமன் மீது எனக்கு எப்போதுமே ஒரு கேவலமான பார்வை தான் இருக்கு..அவன் தான் சின்ன பையன் தெரியாத்தனமா சீதைய தூக்கிட்டு போனா இவரு பெரிய புடுங்கி மாதிரி கூட இருந்த வானரங்களை கூட்டிட்டு போயி போர் தொடுக்கிராராம்...சரி சீதைய கடத்தினதுக்கு தான் போர்னு வால்மீகி சொல்லியிருக்கலாம்..அவன் அடுத்தவன்,ராவணன் செய்த பழைய தப்புக்கள் எல்லாம்,அதாங்க அவனோட ஹிஸ்த்ரி பூரா தன்னோட சப்போர்ட்டுக்கு இழுத்து ராவணன் தப்புன்னு ப்ரூவ் பண்ணி இருக்கார்..

நம்ம ஊர்ல வழமையா சொறி நாய் எங்கயாச்சும் அசிங்கம் பண்ணிக்கிட்டே திரியும்.ஊரே திரண்டு அடிச்சு கலைக்கும்..ஆனா அதே சொறி நாய் இன்னொரு சொறி நாயை கண்டா அதுக ஒன்னு சேர்ந்து அடிக்க வர்றவன விரட்டி கடிக்க பாக்கும்..ஷோபா சக்தி,சாரு நிவேதிதா போன்ற இழவுவாதிக எல்லாம் உங்க பிரச்சனையில ராஜனுக்கு எதிரா பேசுறதுத பாத்தா இந்த சொறிநாய் ஸ்டோரி அடிக்கடி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது மேடம்..

இவன் ராஜன் பயலுக்கு சுத்தி போடணும் அம்மணி..நிச்சயமா கிறுக்கு தான் பிடிச்சு போச்சு..எந்த காத்து கருப்பு அடிச்சுதோ...ஆயிரங்களில் ட்விட்டர் போலோவேர்ஸ்,ரசிகர்கள் இருக்க உங்கள போயி பெருசா தூக்கி பிடிச்சு ஆடி இருக்கான் பயபுள்ள..அவனுக்கு இது தேவை தான்...சும்மா இருந்த பய ஜெயிலுக்கு போயி கழி தின்னா என்ன கக்கூஸ் கழுவினா நமக்கென்னங்க...ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க..இந்த தருதல பயலுக்கு பின்னாடி எப்பிடிங்க இவ்ளோ பெரிய பட்டாளம் நிக்குது சப்போர்ட்டுக்கு?சொல்லமுடியாது பய நல்ல பணக்காரவீட்டு புள்ளையா இருக்கணும்..ஆளுக்கு அம்போது ரூவாயும் கோழிப்புரியாணியும் டெய்லி குடுக்கிறான் போல..வெளக்கெண்ண பய..நம்மள மாதிரி ஊர ஏமாத்தி கூட்டம் சேர்க்க தெரியுமா என்ன அவனுக்கு!

நாமெல்லாம் சினிமா பிரபல புள்ளிங்க,புள்ளி ராஜாக்கள் தானே...நாம கேனைத்தனமாவும் பேசுவோம்..பைத்தியக்காரத்தனமா கூட நடந்துப்போம்..ஆகா ஓஹோன்னு புகழுவீங்களா..தூக்கிவைச்சு கொண்டாடுவீங்களா அதவிட்டிட்டு குத்தம் கண்டுபிடிக்க இவன் யாரு மேடம் நமக்கு?நம்மள மாதிரி பெரிய பின்"அணி" பாடகியா?இல்ல பின் அணியில ஒரு அல்லக்கையா?நீங்க தான் ஒசாமா பின்லாடன சுட்டு கொன்னீங்கன்னு சொன்னா,அத கூட நம்பிறதுக்கு லட்ச்சக்கணக்கான பகுத்தறிவாதிக நம்ம பின்னாடி இருக்கிறாங்க மேடம்..யூ டோன்ட் வொர்ரி!!

ஆனாலும் இந்த உலக மகா இலக்கியவாதிக கூட மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திடுங்க மேடம்..இப்போ ராஜன் கேவலம்னு எழுதுவாணுக..அப்புறம் அவனுகளோட இலக்கிய படைப்புகள வெளியிடவோ,புகழ்ந்து பேசவோ மறந்திட்டீங்கன்னு வையுங்களேன்..ராஜனாச்சும் பரவாயில்ல..இவனுக உங்க அம்மா,அம்மம்மா,பூட்டம்மா,பூட்டியம்மா,ஊட்டு வேலைக்காரி தொடக்கம் வீட்டில் இருக்கிற கேரட்,கத்தரிக்காய் பயன்பாடு கூட சொல்லி பேசுவானுக... ஆனா நீங்க நெனைச்சாலும் அவனுக மேல கேஸ் போடமுடியாது பாருங்க..நீங்க எப்பிடி பிரபலமோ அப்பிடி அவனுகளும் பிரபலம் மேடம்...உங்களுக்கு இருக்கிறமாதிரியே அவனுகளுக்கும் என்ன சொன்னாலும் தலையாட்ட ஆயிரக்கணக்கில தலையாட்டி பொம்மைக இருக்குதுக!

நான் உங்க தீவிர விசிறி மேடம்..உங்க பாட்டுக்கு மட்டுமில்ல உங்க உங்க..... வேணாம்..பாருங்க இதகூட சொல்ல இணையவெளியில பயப்பிடுற அளவுக்கு பண்ணிட்டீங்க மேடம்..பின்னீட்டீங்க!இந்த சமந்தா காஜல் கூட உங்கள மாதிரிதானா மேடம்??இனி அவங்களையும் ஜொள்ள முடியாதா?அவிங்களும் உங்கள மாதிரி சின்ன புள்ள விளையாட்டு விளையாடுவாங்களா மேடம்??

இதொண்ணும் மேட்டரே கிடையாது சின்னுமயி,முந்தனாத்து கூட அம்மா பக்கம் ரெண்டு பேரு போயிட்டாங்கன்னு கடுப்பில அவசரமா போன நம்ம கேப்டன விமானநிலயத்தில மறிச்சு தொந்தரவு பண்ணி இம்சை பண்ணி பேட்டி எடுக்கிறன் பேர்வழின்னு பேய்த்தனமா நடந்துகிட்டாங்க ரிப்போர்ட்டர்ஸ்..ஆனா பாருங்க,விஜயகாந்த் அவங்கள நாயின்னு பேசினது தான் பெருசா பேசப்படுது..அவங்க பண்ணினது தப்பில்லையாம்..கேப்டன் பண்ணினது மட்டும் தப்பாம்..அதாவது மேடம்,நாம மத்தவங்கள எவ்வளவு வேணுமோ அவ்வளவுக்கு சூடாக்கலாம்...ஆனா அவிங்க சூடாகும்போது படார்னு பிடிச்சு போலீஸ்கிட்ட குடுத்திடனும்..இதனால நீங்க உள்ள போயிடுவீங்களோன்னு பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல அம்மணி!

முதலில வைரமுத்து மேல ஐஸ் மேடத்த கேஸ் போட சொல்லுங்க "சினம்"யி"..அவரு தான் "பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்"ன்னு ஆபாசமா எழுதினவரு...ஆமா மேடம் அப்பிடி ஒரு பாட்டு உங்களுக்கு பாட சான்ஸ் வந்தா அந்த கணமே கவிஞர் மேல கேஸ் பைல் பண்ணிட்டுதான் மிச்ச வேலை பாப்பீங்களா??தொழிலு போயிருமே..செலிபிரெட்டி இமேஜ் டேமேஜ் ஆயிராது?அதனால அவிங்க மேல எல்லாம் உங்க ஆபாச கேஸ் பாயாதுன்னு தெரியும் மேடம்..இதுகூட தெரியாத பகுத்தறிவாதியா நானு! அடடே...கண்ணதாசன் வேற மேல போயிட்டாரே...ஆனா இந்த வாலிபக்கவிஞர் வாலி'ய புடிங்க மேடம் புடிச்சு ஜெயிலில போடுங்க..!

என்னைய உங்க "பர்சனல்"அட்வைசரா வைச்சுக்கிட்டீங்கன்னா..இத மாதிரி பல பல பலான அட்வைஸ் தரலாம் மேடம்..நீங்களும் புடிச்சு புடிச்சு ஜெயிலில போடலாம்..இலக்கியவாதிக ஆளுக்காள் அடிச்சுக்குவாங்க...சும்மா இருந்த பதிவுலகம் பரபரப்பாகும்..ட்விட்டர் சோர்ந்து போயி கிடக்கும்..பேஸ்புக் பிச்சிக்கும் மேடம்...உங்க சேவை நாட்டுக்கு தேவை...!!
நானெல்லாம் பெண்ணியத்துக்கு எதிரானவர்கள்னு அடிக்கடி திட்டுற என் நண்பி இன்று மாலை அழைப்பெடுத்து கூறினாள்,"ஆனந்தவிகடன் ஜூவி'ல எல்லாம் சின்மயிக்கு சப்போர்ட்டா தான் எழுதி இருக்கு..உங்களுக்கு தான் லூசுடா"..அவளும் கடந்த சில நாட்களாக சின்மயி பிரச்சனை என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள்;இன்னமும் விளக்கம் கொடுத்தபாடில்லை.இப்படியான பிரபலங்களுக்கு வரிந்துகட்டும் ஊடகங்களும்,ஒண்ணும்தெரியா பொண்ணுங்களும்,அவர்களின் பெண்ணியமும் இருக்கும்வரையில் ஒன்ன அசைச்சுக்கமுடியாது அம்மணி Dont Worry..!

குறிப்பு:என்னைய புடிச்சு ஜெயிலில போட போறீங்கன்னா முதல்லே ஒரு நோட்டீஸ் அனுப்புங்க மேடம்..இன்னும் கொஞ்சம் உங்க புகழ் பாடித்தான் ஜெயிலுக்கு போகணும்கிறது என்னோட கடைசி ஆசை கண்ணு..(அட என்னோட கண்ணை சொன்னேங்க)

இது சம்பந்தமாக என்னோட முதல் பதிவு:சின்மயி விவகாரம் என்னாச்சு..??

இப்படிக்கு 
உங்க ரசிகன்,அல்லக்கை,அடிப்பொடி,

Post Comment

15 comments:

சக்கர கட்டி said...

ஒ இதுக்கு பேரு தான் உள்குத்து பதிவா கத்துக்குறேன் அதையும் கத்துக்குறேன்

K.s.s.Rajh said...

ரைட்டு......
இந்தியாவை பார்க்கனும் என்று மைந்துவுக்கு ஆசை வந்திட்டு போல

காட்டான் said...

எப்பிடியோ கரட் பயன்பாடு பற்றி சின்மையிக்கு சாரு வகையறா வகுப்பெடுக்கும் காலம் வெகு விரைவில்..!

Anonymous said...

ரைட்டு தல. ராஜனுக்கும் பேச்சு துணைக்கு ஆளு வேணும்ல.

துஷ்யந்தன் said...

மைந்தன் நீங்க சின்மயின் ஆலோசகராக ஏன் ட்ரை பண்ணப்படாது :)))

துஷ்யந்தன் said...

சின்மயியை வைச்சு ரெம்ப சிரிப்பு காட்டிங்க பாஸ் :))) பார்த்து அந்த புள்ள போலிஸ் மாமாட்ட புடிச்சுக்கொடுக்கப்போவுது...... எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தலைமறைவாய் இருங்கோ .... அவ்வவ்....

பழனி.கந்தசாமி said...

பழிப்பது போல் புகழ்வது "நிந்தாஸ்துதி" என்று நினைக்கிறேன்.

Anonymous said...

Your this article is the byproduct of your male chauvinism.

M.Baraneetharan,,
Toronto, Canada.

Anonymous said...

சரியான நெத்தியடி பதிவு.:)))

Ethicalist E said...

இதையும் படித்து பாருங்கள்

http://vovalpaarvai.blogspot.in/2012/10/blog-post_24.html

Anonymous said...

பெண்மையை மதிக்காத எல்லா நாய்களுக்கும் ராஜனின் கைது நல்ல பாடம்.

Anonymous said...

TO M.Baraneetharan,,
Toronto, Canada.

Do you even know what the hell is going on? this guy here wrote the truth!

Anonymous said...

//பெண்மையை மதிக்காத எல்லா நாய்களுக்கும் ராஜனின் கைது நல்ல பாடம்.//

really? then Chinmayi mom should be in jail for trash talking girls. i am sure you listened her audio clip! Get a life!

Ashwin-WIN said...

மைந்தா இப்போதான் மாட்டரை பாத்தேன்.. ஆனா நான் சிரிக்கவே இல்லடா... பாவம் அக்கோய நெனச்சு அழுதான்.. உன்ன மாதிரி ஒரு பயபுல்லைய கூடவே வேச்சுகிட்டா அக்கா எங்கயோ போயிடுவா... பேஸ் பேஸ் ரொம்ப நன்னாருக்கு...

நம்பள்கி said...

நாயர் கடையிலே வேலை செஞ்வன் கூட உங்க கிட்ட தொழில் கத்துக்கணும்: இப்படி கழுவி கழுவி ஊத்தறிங்களே...!

Related Posts Plugin for WordPress, Blogger...