Sunday, November 25, 2012

நயிட்டியில் அலையும் மாதவிகள்..! |16+|




நேரம் மாலை ஆறு முப்பது.


இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் முன்னாடி அமர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது.இன்றும் ஒரு அரைமணி நேரம் நின்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்துடன் இடுப்பழவே உயரமான பால்கனி  சுவற்றின்மீது சாய்ந்துகொண்டு அவனின் அறையினை அடிக்கடி நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தாள் மாதவி.

இன்று நேற்றல்ல,அவன் அந்த வீட்டுக்கு குடிவந்த காலத்திலிருந்து தினசரி காலை மாலை என்றும் பார்க்காமல் அவன் அறை கதவு திறந்திருக்கும் பொழுதெல்லாம் மாதவி,பால்கனியில் உலவ மறப்பதில்லை! "அவன்"தான்; "பெயர் எல்லாம் தெரிந்துகொண்டு தான் சைட் அடிக்க வேண்டும் என்று சட்டம் மட்டும் இருந்தால் உலகத்தில 95 வீதமானோர் பாடு ரொம்பவே கஷ்டமாயிடும்" என்று ஜோசித்துக்கொண்டாள்.

ஒரு அரை மணிநேரம் மீனுக்காய் காத்திருக்கும் கொக்கு மாதிரி பால்கனியில் நின்றால்,மீன் ஓரிரு தடவையாச்சும் வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்லும் என்பது மாதவியின் காத்திருப்பு கற்றுக்கொடுத்த பாடம்.நயிட்டியில் இருக்கும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஒரு கிரேஸ் இருப்பது மாதவி பலர் கண்களை அவதானித்ததில் இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு பாடம்.கற்றுக்கொண்ட பாடங்களை எல்லாம் ஒன்றுசேர பிரயோகிப்பதில் மாதவி படு கில்லாடி.

எத்தனை வேலைகள் இருந்தாலும், தினசரி கடமைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது;காரணங்கள் என்ன என்பது பற்றி இவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவுமில்லை.அவனை பார்க்காத நாள் ஏனோ அவளுக்கு முழுமையடைவதில்லை.அவளது நண்பிகளில் பலர் தாங்களும் இந்தமாதிரி அடிக்கடி இப்போது நடந்துகொள்வதாக சொல்வதை கேட்கையில்,இதுவொரு பொதுவான விஷயம் தான்;தப்பில்லை என்கின்ற தைரியம் மாதிவிக்கு ஒரு மேலதிக தூண்டுதலை கொடுத்திருந்தது.அளவான மாவு நிறமும்,நயிட்டி தவிர்ந்த எந்த ஆடையாய் இருந்தாலும் திமிறி நிற்கும் அவள் அழகுகளும் நயிட்டியோடு கூட்டணி அமைத்து பால்கனி சுவரில் மெதுவாய் சாய்ந்து நிற்கையில்,வீதியால் செல்லும் எந்த ஆணும் திரும்பிப்பார்க்காமல் சென்றதில்லை.

பால்கனியில் நிற்கையில் வீட்டு ஹாலில் இருந்த மஞ்சள் வெளிச்சம் நயிட்டியில் இருந்த மாதவியின் அழகை வர்ணித்து காட்டியதோ என்னமோ,அவளை காத்திருக்க வைக்க பிடிக்காமல் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பது போல வெளியில் வந்தான் அவன்.இலவசமாய் கிடைக்கும் கில்மாவை எந்த இளைஞன் தான் வேண்டாமென்பான்!என்னதான் இவள் வலிந்து போய் பால்கனியில் நின்றாலும்,"அவன்"வெளியில் வந்ததை உடனேயே கண்ணெடுத்து பார்க்க திராணியற்று தன்பார்வையை கீழே வீட்டு படலைபக்கம் திருப்பிய மாதவி,என்ன ஜோசித்தாளோ  என்னமோ கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே சென்றுவிட்டாள். 

ஒன்றுமே புரியாமல்,என்னவாய் இருக்குமென்று ஜோசித்துக்கொண்டு அவன் சாவகாசமாய் கீழே பார்க்கவும்,வேலைமுடிந்து வந்த அவளின் கணவன் படலையை திறக்கவும் சரியாகவிருந்தது..!மாதவி ஹாலில்,குழந்தைக்கு இரவு உணவை அவசரமாய் குழைத்து வாயில் தள்ளுவது மெதுவாக சாத்தப்பட்ட கதவிடுக்கில் தெரிந்து மறைந்தது.

-{யாவும் கற்பனை} 


Post Comment

7 comments:

Yoga.S. said...

இரவு வணக்கம்(உங்களுக்கு)மைந்தரே!நல்ல கதை,நீளமில்லை!(எங்க அம்மாஅப்பப்ப சொல்வது,இப்ப இல்லை).////கற்றுக்கொடுத்த பாடம்.////?????ஹி!ஹி!ஹி!!!

Unknown said...

சூடான இடுகைகளை தருவதில் ஐயா வல்லவர் தான்...மீண்டுமொரு நிருபிப்பு.
ஹ்ம்ம், நடந்தவுடனே எப்பிடி BOSS உங்களால மட்டும்?? ஆனால் என்ன "போடா போடி" படம் மாதிரி பட்டென்று கதவுகள் மூடிமுடிந்துவிட்டது...(ஏக்கம் பாஸ்)& எதிர் பார்த்து வரவேண்டாம் என்று சொன்ன பிறகும் எதிர் பார்த்து வந்தது எங்க பிழை தான்) இது - பினிஷிங்ல புலம்பியது அவ்வ் :P

Riyas said...

//அளவான மாவு நிறமும்//

கோதுமை மாவா பாஸ்.

கிஷோகர் said...

அப்புறம் இங்க அவன்'", "அவன்"ங்கிறது நீங்க தானே? ஒரு தடவ உங்க அப்பார்ட்மென்ட் வந்து நானும் அந்த பக்கத்து வீட்டு மாதவிய பாத்தே ஆகணும். # நம்மாளுக கற்பனைன்னு போட்டாலே உள்ளாற விவகாரம் இருக்குன்னு அர்த்தம்.

கிஷோகர் said...

உங்கள் கதையில் சொற்குற்றம் உண்டு.. நயிட்டி என்பதற்கு பதில் "நைட்டி" என்று வருவதை தான் தொல்காப்பியம் அனுமதிக்கின்றது.

நம்பள்கி said...

ஆம், அதே மாதிரி நான் மாதவிகளை மாமிகள் என்று படித்து இங்கு வந்த்விட்டேன் (மாமி என்றால் aunties!).

S. Arul Selva Perarasan said...

கதைசொல்லும் பாங்கு நேர்த்தியாக இருந்தாலும்.... கதையின் நோக்கம்... தவறு என்றே நினைக்கிறேன். இது போன்ற கதைகள்... இளைஞர்களை முன்னேற்றுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...