Sunday, November 11, 2012

"திருத்தணி"-"பேரரசுக்குஆஸ்கார் நிச்சயம்.!"


                      
தியேட்டர்ல திருத்தணி படம் ஓடுது என்றாலும்,பேரரசுவின் கடைசி படமான "பழனி",விஜயகாந்தின் "விருதகிரி" பார்த்த அனுபவத்தில் வீட்டிலேயே டிவிடி வாங்கி பார்த்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். விருதகிரி ஓசில பார்க்கப்போய் கூட,அரைவாசியில் எழும்பி ஓட முயற்சித்த காரணத்தால் வீட்டிலேயே இருந்து பார்க்கலாமென்ற முடிவு;எழும்பி ஓடிட முடியாது பாருங்க.

வாங்க,நேரடியாவே விமர்சனத்துக்கு(?!!) போயிரலாம் பாஸ்.படம் தொடங்கி முதல் பத்து பதினஞ்சு நிமிஷம் ஒப்பினிங் பைட் பாஸ்.ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது.சிவகாசி "பல்லாக்கு பாண்டி" மாதிரி இதிலும் ஒரு பாண்டி;அண்ணன் செத்துபோயிட்டாரு கடைய மூடுங்கடா பஸ்ஸ கொளுத்துங்கடா ஸீன் தான்..அதை மீறினவன அடிக்க கை ஓங்கும்போது தான் ஹீரோ என்ரி என தெரியாததா என்ன.சாதாரணமா பேரரசு பட ஒபினிங்  பைட் லெந்தா இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சதால  அந்த காப்'ல நான் போயி டின்னர் முடிச்சிட்டு வந்தேன்..பைட்டுக்கு  அப்புறம் என்ன வரும்னு சுனாமிக்கு பின்னாடி பிறந்த குழந்தைக்கே தெரிஞ்சது தானே.

"நீ வான வேடிக்கை வெடிடா
அந்த வானம் உனக்கு புடிடா.."னு "டா"ல முடியுற மாதிரி பேரரசுவின் அற்புத வரிகளில் ஒரு ஒபினிங் சாங்..பாட்டு முழுவதுமா வாழ்க்கைக்கான தத்துவங்கள் நிறைய பரவி கிடக்குது பாஸ்.பொறுக்கி எடுத்து வாழ்க்கையை நெறிப்படுத்தி கொண்டால் வாழ்க்கை "ஜோய் அலுக்காஸ்" தங்க நகை மாதிரி ஜொலியா ஜொலிக்கும்..!(தியேட்டர்ல படம் பார்க்க போனவன் இந்த கணத்திலேயே எழும்பி ஓடியிருந்தான்னா புத்திசாலி..ஓடாதவன் திறமைசாலி..பொறுமைசாலி..பலசாலி etc !)

                     
சிவகாசி'ல அசின் தன் "பாடிய" காட்டுற ஜிம் வரும்லே..அதே ஜிம்ல தான் சுனைனா ஹீரோயினா இன்ரோ ஆகிறாங்க.அசின் எப்பிடி தனக்கு தன்னைய மாதிரியே ஒரு "சிஸ்டர்"இருக்குன்னு விஜய் காதில பூ சுத்தினாங்களோ,அதே மாதிரி இதில சுனையா தன் அப்பா ஒரு போலீஸ் கமிசனர்,அம்மா கிரிமினல் கோர்ட் ஜட்ஜ்'னு பரத்துக்கு பெரிய பூவா சுத்துறாங்க...வழமையான பேரரசு முட்டாள் ஹீரோ மாதிரி பரத்தும் இத நம்பிடுறாரு..ஹீரோயின் தட்டுற தாளத்துக்கு எல்லாம் ஆடுறார்.

சிவகாசி சீன்கள் படத்தில் ஏகப்பட்டது வந்து தொலைத்தது.ஆரம்பத்தில் விஜய் வந்து பைட் பண்ணினார்...இல்லங்க விஜய் பைட் பண்றமாதிரி ஒரு ஜீவன் கனவுகண்டிச்சு. அப்போ தான் ராஜ்கிரண் வந்து சொல்லுவாரு.."எல்லா இடத்திலையும் விஜய் வருவாரு..ரஜனி வருவார்னு எதிர்பார்க்க முடியாது..நம்ம பிரச்சனைய நாம தான் பாத்துக்கணும்..!"அப்பிடின்னு(நோட் பண்ணிக்கோங்க பன்ச்  டயலாக் பாஸ்)."என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ."பாடல் கூட ஒரு மேடை நிகழ்ச்சியில் வந்து தொலைத்தது.விஜய்  கூட ஒரு படம் பண்ணனும்னு "பேரரசு வெயிட்டிங் போல"... வேட்டைக்காரன் பாடல்களை கூட விட்டுவைக்கலைப்பா..இது பரத் படமா விஜய் படமான்னு பார்ப்பவர்களுக்கு கட்டாயம் டவுட் வந்தேதீரும்.ஒருதடவை மங்காத்தா கூட வந்து விளையாடிட்டு போனார்னா பாத்துக்கோங்க.பக்கா மசாலா விரும்பிகளை மீண்டும் தன்னோட அதரப்பழசான மசாலாவை வைத்து தேய்த்துவிட பார்த்திருக்கிறார் பேரரசு.



சுனைனா அப்பா அம்மா இல்லாத அனாதை எண்டு தெரிஞ்சவுடன அவங்க மேல லவ்வாகிறார் பரத்து..அப்பாவோட இறந்துபோன தங்கச்சின்னு சொல்லி பத்து நாளு சுனையா,பரத் வீட்டிலையே தங்கிறமாதிரி ஒரு சீன்.வீட்டில இருக்கிற அவ்ளோ பேரும் அப்பிடியே நம்பி நம்ம உசிரவாங்கிறாங்க..அப்பவே டிவிடிய நிறுத்திட்டு வேற ஏதாச்சும் "இங்கிலீசு"படத்தில மனச ஆசுவாசப்படுத்தி இருக்கணும்..ஆனாலும் கேப்டனின் விருத்தகிரி கொடுத்த தைரியம்.. முழுவதுமாய் இருந்து பார்க்க முடிவுபண்ணினேன்.

சமூகத்தில நடக்கிற கொடுமைகளை பரத் தட்டி கேட்பார்னு எதிர்பார்க்கிற ராஜ்கிரண்(அவர் ஒரு மிலிட்டரி) ஏமாந்து போறார்.சுயநல சமூகம்னு காரணம் காட்டுறார் பரத்.அம்மா இப்படி ஒரு காரணத்தால தான் செத்து போனாங்கன்னு அதற்க்கு ஒரு ப்ளாஷ் பாக்.எங்கடா ரொம்ப பெருசா போகபோகுதோ,இரவுக்கடன்களை முடிச்சிரலாம்னு பாத்தா சின்ன ப்ளாஷ் பேக் வைச்சு ஏமாத்திட்டார் பாஸ்.அது முடிஞ்சவுடன ஒரு டூயட் சாங்.அது முடிஞ்ச கையோட பரத் ஒரு பெரிய ஆக்சிடெண்ட்ல சிக்கிறார் பாருங்க.. ஐயோ பாவம்,பிழைக்கவேமாட்டார்னு எதிர்பார்த்திருக்க எந்திரிச்சு நடக்கிறார் பரத்.டாக்டர் பரத்கிட்ட "இனி நீங்க ஒரு ஆறு மாசம் தான் உசிரோட இருப்பீங்க"னு  குண்டை தூக்கி போடுறார்.
                          

அதைக்கேட்டு வீட்டாருடன் வேண்டுமென்றே பகைத்துக்கொள்ளும் பரத்தை "சின்ன வயசில சாதிச்சிட்டு செத்தவங்க தான் மனுசங்க மனசில என்னைக்கும் வாழ்வாங்க'னு உசுப்பேத்தி விடுறார் மிலிட்டரி .அதாச்சும் அதற்க்கு பிறகு வருவது எல்லாமே"சரவெடி...இல்ல தாண்டவம்...இல்ல அகோரம்...இல்ல எப்படியாச்சும் நீங்களாவே நெனைச்சுக்கொள்ளனும்.அப்படி நினைவு வந்திராவிட்டால் இந்தப்படம் உங்களுக்கு மெகா ஹிட்டு படம் தான் போங்க.!
உசுப்பேற்றிய அடுத்தகணமே ஒரு அநியாயம் கண்ணெதிரே நடக்குது.அடித்தாடுகிறார் பரத்.ஆடி முடிந்தவுடன அவராவே போலீசுக்கு கால் பண்ணி ஆம்பளைனா அரெஸ்ட் பண்ணுடான்னு ஏசி'க்கு தன்னோட டீடெயில்ஸ் கொடுப்பார் பாருங்க.அத நீங்களும் அனுபவிக்கனும்க.
பெயர்:திருத்தணி 
வயசு:இருபத்தா"று" 
ஹைட்டு :அஞ்சு புள்ளி ஆ"று" 
வெயிட்டு :அறுபத்தா"று" 
நிறம்:சிவப்பு 
குணம்:நெருப்பு 
பிடிச்சது:பருப்பு 
---------------------------------
என்னடா கோடு  போட்டிருக்கேன்னு ஜோசிக்கிறீங்களா??திருத்தணி கமெர்சியல் ப்ரேக்னு போடுறாங்க.அதுக்கு அப்புறமா ரோட்டில குப்பை போடுறவன்ல  இருந்து தலையில ஆயி போற காக்கா வரைக்கும் விடாம சுட்டு தள்ளிக்கிட்டே இருக்காரு பரத்.இந்த டீட்டெயில் எல்லாம் தேவையா பாஸ்?  

எல்லாம் ஓகே நான் எதிர்பார்த்த சீன்  இன்னும் காணலையேன்னு வழிமேல விழி வைச்சு காத்திருக்க ஒரு கருப்பு பஜரோ'ல வந்து இறங்கிறார் நம்ம தலை பேரரசு..அண்ணனோட என்ரி  ஒவ்வொரு படத்தில ஒவ்வொரு மாதிரி மாசா கிளாசா இருக்கும்லே.ஹீரோ இன்ட்ரோவ விட அண்ணனோட இன்ட்ரோ தான் இப்பெல்லாம் அவரோட படத்தில ஹைலைட்டு ..! வந்தார்...வசனம் பேசினார்...டி  ஆர் சிம்புக்கு அப்பன்,தான் வம்புக்கு அப்பன்னு சொல்லி படத்தில தன்னோட வேலைகள் என்ன என்னன்னு பட்டியல் போட்டாரு பாருங்க...எனக்கு தூக்கமே வரலைன்னு சொல்லமாட்டேன்..இது தலைவர் காலம் காலமா பண்ற மேட்டராச்சே..இதுக்கெல்லாம் பயந்தா தலைவர் பேரரசு பான்(Fan) ஆக முடியுமா பாஸ்! 


அப்புறம் என்ன க்ளைமாக்ஸ் அப்பிடின்னு கேக்கிற சினிமா ரசனையே இல்லாத பக்கி பன்னாடைகளுக்கு..
பரத் எல்லாம் செய்துவிட்டு சரண்டர் ஆகிறார்.ஆனால் பரத்தை அரெஸ்ட் பண்ணாமல் "ஏசி"பைட் பண்றார்.அதில இடையில் வந்த ராஜ்கிரண் உசிர கொடுக்கிறார்.பைனல் ட்விஸ்ட்டு என்னன்னா,ஆறுமாசம் தான் உசிரோட இருப்பாய்ன்னு டாக்டர் சொன்னது பொய்.ராஜ்கிரண் தான் தப்புகளை தட்டிகேட்க அவ்வாறு  சொல்லச்சொன்னார் என்று டாக்டர் சொல்றாரு.

ஆனா பாருங்க படம் பார்த்தவுடன உங்க உசிரு போயிடும்னு எந்த டுவிஸ்ட்டும் படத்தில வைக்காமலே வஞ்சகம் பண்ணிட்டாருங்க தலீவர் பேரரசு..!
பாடல்கள் சுமார் ரகம்.ஒரே ஒரு மெலொடி  பாடல் நல்லா இருந்திச்சு..ஆனால் பலபாடல்கள் சாயல் இருந்ததால அதுகூட ஞாபகம் இருக்கல.ஆஷிஷ் வித்தியார்த்தி ஒன்னு இரண்டு ஸீன்ல மட்டும் வாறார்.அருமையான வில்லனை வீணாக்கிவிட்டார் பேரரசு.அட நம்ம பாண்டியராஜன் கூட இருக்காருங்க.மொத்தத்தில,என்னைய மாதிரி "என்ஜாய்" பண்ணி பார்க்க பிடிச்சவங்க படத்த பாருங்க பாஸ்..நிச்சயம் ரசிப்பீங்க..!
விருதகிரி விமர்சனம் படிக்காதவர்களுக்காக:"விருதகிரி வெற்றிக்கொடி"

பேரரசுவோட  அடுத்த படத்துக்காக "Im Waiting...!!!"


Post Comment

9 comments:

Unknown said...

ஏனுங்கண்ணா இவரு பழனியில பஞ்சாமிர்தத்தையும், திருப்பதில லட்டையும் காட்டி கவுத்த ஆளுல.
நீங்க அடுத்த படத்த ''பாண்டிச்சேரி'' சரக்குன்னு எதிர் பாருங்கண்ணா// மப்பில பதிவு எழுதாம விட்டுடாதீங்க/// :P

JR Benedict II said...

(வடிவேலு ஸ்லாங்கில் படிக்க)

இருந்தாலும் உங்களுக்கு

இவ்வளவு

இவ்வளவு

இவ்வளவு

இவ்வளவு

கல்லு மனசு கூடாதுங்க..

விமர்சனம் சூப்பரு உங்க புண்ணியத்துல பேரரசு ஒரு பத்தாயிரம் ஓவா சம்பாதிச்சிட போறாரு பாருங்க.. (நீங்க எதிர் பார்த்தது போலவே நீங்க எந்த பகுதியிலும் பேரரசுவை கலாய்க்கவில்லை என்பதை உணர்ந்தே கருத்திடுகிறேன்.)

ஆனா விருதகிரி இயக்கினது பேரரசுவா? விஜயகாந்தா?
பாவம் இவரே கன்பியுஸ் ஆயிட்டாரு

//புத்திசாலி..ஓடாதவன் திறமைசாலி..பொறுமைசாலி..பலசாலி etc !)//

அட இப்படி எல்லாம் நம்மளை பற்றி நாமே பெருமையா சொல்லிகிறதா?

:))))))))))))))))))))))))))))))))

Prem S said...

செம விமர்சனம் பாஸ் ஒவ்வொரு வரியிலும் நக்கல் தெறிக்கிறது ,,.

செங்கோவி said...

ஹா..ஹா..பேரரசு படம் பார்க்கற அனுபவமே தனி தான்..கலக்கல் பதிவு.

CS. Mohan Kumar said...

:))

தலைப்பாலயே உள்ளே வர வச்சிட்டீங்க

மதி said...

டோரன்ட் ல வந்தா தான் படம் பாபிங்க போல....

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...