Friday, April 12, 2013

இலங்கையின் முதல் "Gay"ஆர்தர் சி கிளார்க்??


      

'Sir ஆர்தர் சி கிளார்க்' பற்றி இலங்கையில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும், இலங்கைக்கு குடிபெயர்ந்து,ஐம்பது வருடங்களுக்கு மேல் தங்கியிருந்து ஏராளமான விஞ்ஞான ஆராய்ச்சிகள்,விண்வெளி சம்பந்தமான எதிர்வுகூறல்கள்,விஞ்ஞான கட்டுரைகள் எழுதுதல்,விஞ்ஞான புனைகதை எழுத்தாளர் என்று பல விஷயங்களில் புகழ்பெற்றவர்.கிட்டத்தட்ட இலங்கையில் 'விஞ்ஞானி' என்று பலராலும் அறியப்பட்ட வெகுசிலரில் முதல்வர்.விஞ்ஞானத்துக்கான இவரின் சேவையை பாராட்டி 1998 இல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இவருக்கு 'நயிட்' பட்டம் வழங்கி கௌரவித்தார்.

'மர்லின் மேபீல்ட்' என்கின்ற அமெரிக்க பெண்ணை மணந்து சிறிது காலத்திலேயே விவாகரத்து பெற்ற ஆர்தர் சி கிளார்க்,அதன் பின் இறக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆரம்பத்திலிருந்தே திருமணம் எனக்கு ஒத்துவராமல் தான் இருந்தது என்று கிளார்க் கூறியிருந்தார்.அந்த திருமணத்தின் காரணமாக ஒரு மகனும் பிறந்திருந்தான்.'மர்லின் மேபீல்ட்' ஒரு சுழியோடும் வல்லுநர்.

கிளார்க் மறுமணம் செய்துகொள்ளவில்லை ஆயினும்,இன்னொருவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார்.அவர் தான் 'லெஸ்லி ஏகனாயக்கே',ஒரு ஆண்!!!!இவர் கூட ஒரு சுழியோடும் வல்லுநர் தான்.ஆரம்ப வயதுகளிலிருந்தே ஆர்தர் சி கிளார்க்குக்கு சுளியோடுவதில் அலாதி பிரியம்.லெஸ்லி ஏகனாயக்கே இவரின் சுழியோடுதலில் 'பார்ட்னராக' இருந்து பின்னர் வாழ்க்கை துணை ஆகியிருக்கிறார்!

       

||ஆர்தர் சி கிளார்க்,மற்றும் லெஸ்லி ஏக்கனாயகே ||

'எனது வாழ்வில் கிடைத்த ஒரே ஒரு மிக பொருத்தமான நண்பன் லெஸ்லி' என்று பல விருதுகளை பெற்ற புனைகதை நாவலான 'The Fountains of Paradise' என்கின்ற நாவலினை லெஸ்லி ஏகனாயக்கவுக்கு அர்ப்பணம் செய்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஆர்தர் சி கிளார்க்.இப்புத்தகம் வெளிவந்த ஆண்டு 1979.அந்த ஆண்டே லெஸ்லிக்கு சமர்ப்பணம் செய்யவேண்டிய காரணம்,லெஸ்லி 1977 லேயே ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்துவிட்டார்.அப்போதிலிருந்து அவர் இறக்கும் வரையிலான காலம் வரை,லெஸ்லியின் சகோதரரான 'ஹெக்டர் லெஸ்லி' மற்றும் அவர் மனைவி வலேரி(Valeri), மூன்று பெண்பிள்ளைகளுடனேயே, கொழும்பு பார்ன்ஸ் பிளேசில் வசித்திருந்தார். 

ஆர்தர் சி கிளார்க்கின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆண்களாகவும்,அவர்களுள் பெரும்பாலானோர் ஆர்தர் சி கிளார்க்குடன் உடல்ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தமைக்கு இலங்கை அப்போது ஓரினச்சேர்க்கையாளர் சம்பந்தமாக தளர்வான சட்டங்களை கொண்டிருந்தமை தான் காரணம் என கூறுகின்றனர்.உண்மையில் 1950 களில் இலங்கையில் அப்படி ஒரு விசயமே இருக்கின்றது என்று தெரிந்திருக்காது,அதனால் பிரச்சனை இருந்திருக்காது என்று நினைக்கின்றேன்.சுழியோட்ட ஆர்வத்தாலும் இலங்கை வந்தார் என்று மறுபக்கம் கூறப்படுகிறது.திருகோணமலை சிவன் கோயிலுக்கு கீழே ஆழ்கடலில் இருக்கும் நீரோட்டங்களை இவர் கண்டுபிடித்திருந்தார். 

ஆனால் சட்டத்துறை சம்பந்தமான நண்பி ஒருவருடன் கதைக்கையில்,இலங்கையில் இப்போதும் 'Lesbians, Gays, Bisexuals and transgenders'' சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றம் என்றும்,இதற்க்கு இரண்டு தொடக்கம்  பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறினார். அத்துடன் ஓரினசெயர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் எண்ணத்துடன் ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றார்.இதனால் தான் பலர் வெளியே கூறாது 'அண்டர்ப்ளே ' பண்றார்களோ தெரியவில்லை ;). 
""Homosexuality is illegal in Sri Lanka (AI July 2006; Freedom House 2006; WSG n.d.a). Under Section 365A of the country's penal code, homosexual acts are punishable by a jail term of up to ten years (Gay Times n.d.; see also AI July 2006).""

ஆர்தருடன் வேலை செய்த விஞ்ஞானிகள்,நண்பர்கள் என பலருக்கும் இவர் ஒரு ஓரினசெயர்க்கையாளர் என்கின்ற விடயம் தெரிந்தே இருக்கிறது.இது 1950களில் கூட!ஆர்தர் சி கிளார்க்கின் இரங்கல் செய்திகளில் கூட பலரும் இவர் ஒரு கே(Gay) என்றே குறிப்பிட்டிருக்கின்றனர்.ஆனால்,விஞ்ஞானத்தில் தனது முழுக் கவனத்தையும் கொண்டிருந்த ஆர்தர் சி கிளார்க்,இவ்விடயத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கவில்லை உயிருடன் இருந்த போது!

இது பற்றி பலர் பலவிதமாக கூறியிருக்கின்றனர்:

'Everyone knew he was gay. In the 1950s I'd go out drinking with his boyfriend. We met his proteges, western and eastern, and their families, people who had only the most generous praise for his kindness. Self-absorbed he might be, and a teetotaller, but an impeccable gent through and through.''- Michael Moorcock,Journalist.

"It was the general opinion in the country that he was gay, but a paedophile... it's beyond my comprehension. He is one of the people that nobody could touch. A highly reputed figure, very influential." -Sri Lanka's most energetic campaigner against paedophilia, Maureen Seneviratne.

"Yes, Arthur was gay ... As Isaac Asimov once told me, "I think he simply found he preferred men." Arthur didn't publicize his sexuality -that wasn't the focus of his life- but if asked, he was open and honest." -Aurthurs Friend,Kerry O'Quinn.

'Clarke said that some of his private diaries will not be published until 30 years after his death. When asked why they were sealed up, he answered "'Well, there might be all sorts of embarrassing things in them."-his brother Fred Clarke.

'On Sunday the newspaper declared Clarke to be a self-confessed paedophile. He was quoted admitting as much, and a Sri Lankan "friend" - head of current affairs at the Sri Lankan Broadcasting Company - alleged that Clarke was still having sex with boys "a few months ago".-Peter Popham

இதில் '
paedophilia' என்பது, 'செக்ஸ்'நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களை குறிக்கும்.இப்படியான நோக்கத்துடன் பல வெளிநாட்டவர் இலங்கையின் பீச் கரையோரங்களில் வீடுகளை வாங்கி போட்டு,சில காலம் நிரந்தரமாக தங்கியிருந்து உள்நாட்டு இளம்பெண்கள்,சிறுவர்களை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இவர்களுக்கு பெண்கள்,சிறுவர்களை பிடித்து கொடுக்க ஒரு பெரிய வலையமைப்பே இயங்குவதாக கூறப்படுகிறது!

மேலதிகமாக 1998'இல் இளவரசர் சார்ல்ஸ் இலங்கைக்கு வந்தபோது தான் 'நயிட்'(சார்)பட்டத்தை வழங்குவதாக இருந்தது.ஆனால் அச்சமயம் ஆர்தர் சி கிளார்க் பல சிறுவர்களுடன் உறவு வைத்திருந்ததாக கதை வெளிவந்ததால்,இச்சமயம் அப்பட்டத்தைஉ வழங்குவது தகுந்ததல்ல என்று,அச்சமயம் வழங்கப்படவில்லை.ஆனால்,அப்போதே இதனை ஆர்தர் சி கிளார்க் மறுத்து,'நான் கடந்த இருபது வருடங்களாக 'sexually Not active' என்று கூறியிருந்தார்.

இதை விட சுவாரசிய சம்பவம்,1976 இல் லெஸ்லி எக்கனாயக்கே இறந்த போது அடக்கம் செய்யப்பட்ட  கல்லறைக்கு அண்மையிலேயே தான் ஆர்தர் சி கிளார்க்கும் அடக்கம் செய்யப்பட்டார்.இது இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமான முதல் சம்பவமாகவும், இவர்கள் இருவரும் தான் முதல் உத்தியோகபூர்வ ஓரினசெயர்க்கையாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எது எப்படியோ,அது ஆர்தர் சி கிளார்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது.அதனை தப்பு என்று கூறி வாதிட இதனை எழுதவில்லை.ஆர்தர் சி கிளார்க்கின் விஞ்ஞான புனை கதைகளினை சிறுவயது முதல்கொண்டு வாசித்து வளர்ந்தவன் நான்.அப்படி ஒரு விறுவிறுப்பு,சுவாரசியம் இருக்கும் புனை கதைகளில்.கடந்த வாரம் இவரை பற்றி தேட வெளிக்கிடுகையில் தான் இப்படியான ஒரு ஆச்சரியகரமான செய்தி வாசிக்க கிடைத்தது.இது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினேன்.அதன் விளைவாக தான் இந்த பகிரல். 

நன்றி:விக்கிபீடியா மற்றும் இணையம் 


Post Comment

3 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி,மைந்தரே!இப்போது உலகெங்கும் இதற்காகப் பெரும் போரே?!நடக்கிறது,ஹ!ஹ!ஹா!!!!

ஜேகே said...

Child sexual abuse is obviously a big crime and like u said, that was the major reason for not honouring the knighthood to him. But his homo sexuality is well known and most of us knew by then. The law never get enforced unless its shown in public in SL I guess. SL still not amended the old roman Dutch laws. But it's inevitable with time I guess.

Anonymous said...

ஆதர் சீ கிளார்க் பற்றிய இந்த விடயங்கள் 90 களின் ஆரம்பத்திலேயே கொழும்பில் மாணவர்கள் மத்தியில் பிரபல்யம்.

paedophilia என்றால், நீங்கள் சொல்லும் விளக்கம் கிடயாது, paedophilia என்றால் சிறுவயதினருடன் பாலியல் உறவு வைத்திருப்பவர்களைக் குறிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...