Monday, April 1, 2013

அம்மா பகவானும்,ஊடுருவல் தாக்குதலும்..!

        

முடிவு செய்தாகிவிட்டது.எப்படியும் இன்று பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்து உட்சென்று,தலைமையகத்தை இரவுக்குள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதில் நாம் அனைவரும் உறுதியாய் இருந்தோம்.சற்றே நடுக்கமாய் தானிருந்தது என்றாலும் யாரும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் ஆறு பேர் என்பதும்,தலைமையக எல்லைக்குள் 'பெரிய தலைகளும்' எமது வயதை ஒத்த பருவத்தினருமாய் எப்படியும் ஐம்பது பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பதும் தான் நடுக்கத்துக்கு காரணம்.

உள்ளே ஆட்கள் நடமாட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் இருந்தது.சிலர் வெளியே போவதும்,புதிதாய் சிலர் உள்ளே வருவதுமென்று வாகனங்களும் முழுவீச்சில் ஓடித்திரிந்தன.ஒரு சமயம் எங்களின் தாக்குதல் நடைபெறும் என்பதை முற்கூட்டியே உளவுத்துறையினர் அறிந்துகொண்டுவிட்டார்களா என்ன?சாத்தியம் மிக குறைவு என்று மனசு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டது.மிக குறுகிய காலகட்டத்தில் போடப்பட்ட திட்டம் இது.பெரிதாக வெளியாட்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை.

வாசலின் ஒரு பக்கமாய் நானும் இன்னொருவனுமாய் பொசிசன் எடுத்துக்கொண்டோம்.மூவர் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக பதுங்கி இருந்தனர்.ஒருத்தன் கொஞ்சம் தூரம் தள்ளி 'தலைமையிடம்'இருந்து வந்த அழைப்பில் பிசியாய் இருந்தான்.வாகனத்தின் பின்னால் பதுங்கி இருந்தவங்களில் ஒருத்தன் 'டைம் ஆகுதுடா சீக்கிரம் தொடங்குவம்' அப்பிடின்னு கத்திக்கிட்டிருந்தான்.அந்த சத்தம் உள்ளே இருந்தவங்களுக்கு கேட்டிருக்க வேணும்.இதுக்கு மேல தாமதிச்சால் எங்களுக்கு தான் ஆபத்து.அவங்கள் உசாராகி வெளியில வருவதற்கு முதல் முதல் அடியை நாங்கள் வைத்தாக வேண்டும்!

இப்படி தான் முதல் ஒருதடவை 'அட்டாக்' பற்றி எவ்வித திட்டமிடலும் இல்லாமல்,கிட்ட நெருங்கி சென்று வெளியிலிருந்து மெல்லிய தாக்குதல் நடாத்திவிட்டு இழப்புகளின்றி ஓடித்தப்பியிருந்தோம்.அப்போது இருந்ததை விட இம்முறை எத்தகைய தாக்குதல் வந்தாலும் திருப்பித்தாக்கும் வல்லமை கொண்டவர்கள் எமது அணியில் இருந்தார்கள்.அது போதாதென்று 'சம்பவ இடத்துக்கு'வர இயலுமானால் வருமாறு தலைமையகத்துக்கு அண்மையில் இருந்த ஓரிரு நண்பர்களிடம் உதவியும் கோரப்பட்டு,அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் அணியுடன் சேர்ந்துகொள்ளகூடும் என்று வந்த செய்தி சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாய் பட்டது அந்த சமயத்தில்!

'அட்டாக்க்க்க்க்.....' 'தலைமையுடன்' கதைத்துக்கொண்டிருந்தவன் உத்தரவிட்டதுதான் தெரியும்.திறந்திருந்த வாசலை நோக்கி ஆறு பேரும் ஒரே சமயத்தில் பாய்ந்தோம்.
சட் சட் சட் சட்சட் சட்சட் சட்சட் சட் ...... கட் கட் கட் கட்....

பாய்ந்த வேகத்தில் ஐந்து பேர் அப்படியே விறைத்து போய் நின்றனர் என்னை தவிர!அட்டாக்குக்கு வந்த இடத்தில் என்னடா சோதனைன்னு பாத்தால்,யாரோ அவிங்க ஸ்கூல் பழையமாணவர் சங்கத்திண்ட முக்கிய உறுப்பினராம்.'என்ன தம்பி இந்தப்பக்கம்' அப்பிடின்னு அவரு கேக்க,'என்னண்ணே இந்த பக்கம்'னு அட்டாக் பாண்டிகள் விறைக்க.. ஒரு அரைமணி நேர 'விளக்க உரையுடன்' அட்டாக் பெயிலியர் ஆனது தான் மிச்சம்!!

           

நம்ம பையன்களுக்கு அம்மா பகவான்-கல்கி பகவானை கண்ணில காட்டக்கூடாது.அப்பிடி தான் போன வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை ராஜசிங்க ரோட்டாலை இரவு எழு மணி போல போகேக்க அம்மா பகவான் 'க்ருப்'போட பஜனைகள் நடக்கும் இடம் நம்ம கண்ணுக்கு உறுத்திச்சு. ஏற்கனவே ஒருக்கா இப்பிடி தான் உறுத்தேக்க,ரோட்டில நிண்டு கத்திட்டு போனனாங்கள்..'இவனுகள் கள்ளர் நம்பாதீங்கோ வெங்காயங்களே'எண்டு. இந்தமுறை உள்ளுக்கு போய் ஒரு கலவரம் பண்ணலாம்னு மொக்கையா ப்ளான் பண்ணி ட்ரை பண்ணினோம்(நாங்களும் ரவுடியாம்லே).

என்கூட வந்த பசங்க அஞ்சு பேரும் ஒரே பாடசாலை எண்டதால(யாழின் படிப்புக்கு பெயர் போன பாடசாலை ;) ),அந்த OBA புள்ளிகிட்ட சிக்கிட்டாங்க.அந்தாளும் நிக்கவைச்சு அறுவை விளக்கம் குடுத்துட்டு தான் போங்கடான்னு விட்டிச்சு.பெரும்பாலும் படிச்சவங்க தான் இந்தமாதிரி கேவலம்கெட்ட வேலைகளில் ஈடுபடுறாங்க எண்டத அங்க வந்து போற ஆக்களை வைச்சு தெரிஞ்சுகொள்ள கூடியதா இருந்திச்சு.

என்னதான் இவனுக கள்ளனுக,எமாத்துறாணுக எண்டு விளங்க வைச்சாலும்,ஆதார பூர்வமாய் நிரூபிச்சாலும் கூட,சனம் போகத்தான் போகுது.இளசுகள் பின்னேரத்தில கிளம்பி ரோட்டு சுத்துறது போல, கிழடுகளுக்கு இது ஒரு 'என்டர்டெய்ன்மென்ட்'. பின்னேரங்களில போனோமா,அரட்டை அடிச்சோமா,தாறதுகள சாப்பிட்டோமா,மன நிம்மதிக்கு ஒரு சில பஜனை,பிரார்த்தனையில் ஈடுபட்டோமானு இருக்காங்க.அது சரி ஏன் இளவட்டாரம் இப்பிடி சுத்துதுகள்னு தான் தெரியலை.

அம்மா பகவான் பாடல்கள் தமிழ் சங்கத்தில வெளியிடுறோம் அப்பிடின்னு அழைப்பிதழ் வேறு தந்தார்கள்.பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடவே பணரீதியான பிரச்சனையில் தளர்ந்து போய் இருக்கையில்,இவர்கள் இத்தனை வேலை செய்கிறார்கள் என்றால் நிச்சயம் இந்தியாவிலிருந்து பண உதவி கிடைக்காமல் இல்லை.அல்லது உள்ளூர் விளக்கம் கெட்ட பணம் கொழித்தொர் கொடுப்பார்கள் போலும்!இவங்களுக்கு போட்டியா எதிர்ல நான் நித்தியானந்தா மடம் தொடங்கலாம்னு இருக்கேன்.நித்தி உதவாமலா போயிடுவார்!எனக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்க சில பொண்ணுகள் வராமலா போயிடுவார்கள்!!

        

அரும்பத விளக்கம்:
தலைமை- குறிப்பிட்ட நபரின் காதலி 
அணி- நம்ம வெட்டி பசங்க கூட்டம் 
அட்டாக்- மொக்கை போட்டு கலாய்த்தல் 
ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்டி பாக்கிறது. 

***************************************************************************

இது இவர்களின் திருகுதாளம் பற்றி வெளிவந்த செய்திகளில் ஒன்று.   

ல்கி பகவான் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் விஜயகுமார் நாயுடுவும், அம்மா பகவான் எனப்படும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் பெண்களுக்கு போதை லேகியம் கொடுத்து வருவது உண்மைதான் என்று, அங்கு போய் வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் வரதய்யபாளையம் மற்றும் திருவள்ளூருக்கு அருகில் உள்ள நேமம் போன்ற இடங்களில் இந்த விஜயகுமார் நாயுடு – புஜ்ஜம்மாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன.
இங்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு இந்த ஆசாமிகளைப் பார்க்க குறைந்தபட்சம் ரூ 25000 வரை வாங்குவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பேரின் பாதங்களையும் கழுவி பூஜை செய்ய ரூ 5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏராளமான பணக்காரர்கள் இப்படி பணம் செலுத்தி பாதங்களைக் கழுவியுள்ளனர்.
ஒரு முறை இந்த ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டால், மீண்டும் ஊர் திரும்ப முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் பலரும். இதற்குக் காரணம் கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை மருந்து கலந்து பிரசாதம் வழங்கப்படுவதுதான் என்று ஏற்கெனவே டிவி சேனல்கள் வெட்டவெளிச்சமாக்கின.
போதை மருந்து சாப்பிட்ட பெண்கள் மயங்கிச் சரிவதையும், சில நேரத்தில் சுயநிலை மறந்து ஆட்டம் போடுவதையும் ஆந்திராவின் ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த இரு தினங்களிலேயே மக்கள் அதை மறந்து, நித்யானந்தன் – ரஞ்சிதை கதைக்குத் திரும்பிவிட்டார்கள்.
கல்கி ஆசிரம மோசடி குறித்து ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையே நடத்தவில்லை!
இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி கல்கி ஆசிரமத்துக்குப் போய், போதை அனுபவம் பெற்று இப்போது தெளிந்துவிட்ட பக்தர் சுதாராணி என்பவர் இப்படிக் கூறியுள்ளார்:
நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனக்கும் இந்த அனுபவம் நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. தங்களை கடவுள் என்று கூறி எங்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி பணம் பறித்துவிட்டனர்.
எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுக்கு சொந்தமாக்கவேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம், தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர். கடவுளை எப்படி நோய் தாக்கும்? கடவுளே நோயாளியாக இருந்தால் பக்தர்களின் நோய்களை எப்படித் தீர்ப்பார்?” என்கிறார்.
இந்த சுதாராணியைப் போன்ற பலரும் இப்போது ஒன்றிணைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.

*************************************************************************

இதை இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட அம்மா பகவான் பக்தராக இருக்கலாம்.இல்லை, உங்கள் வீட்டில் அம்மாவோ சகோதரிகளோ அப்பாவோ இவர்கள் பின்னால் திரியலாம்..ஏன் உங்கள்  சாமியறையிலும் ஹாலிலும் கூட இந்த கேடுகேட்டவங்களின் படங்கள் கம்பீரமாய் வீற்றிருக்கலாம்!ஏன்,எங்களின் 'அட்டாக்'இல் எங்கள் அணியில் இருந்த ஒருவன் கூட,தனது நிறுவனத்தில் அம்மா பகவான் படம் வைத்து பூஜிப்பதை கண்டிருக்கிறேன்.அதனால் தான்,தாக்குதல் சமயம்,போனிற்கு அழைப்பு வந்ததாக பாசாங்கு காட்டி சற்றே விலத்தி நின்றிருந்தான்.என்ன செய்வது உங்களை,இவர்களை போன்றோர் இருக்கும் வரையில் போலிச்சாமியார்களுக்கு தொல்லை ஏது!நாளை நான் சாமியார் ஆனால்,என்னையும் வைத்து பூஜிக்கத்தான் போகிறீர்கள்.என்னை பற்றி பாடல் இயற்றி இசையமைத்து பாடத்தான் போகிறீர்கள்!என்ன,மடம் ஒன்று கட்டலாம்னா,கைவசம் காசுபணம் தான் இடிக்கிறது.பக்தர்கள் தயை கூர்ந்து உதவினால்,நாளை நானும் சாமியார் தான்!!

இவர்கள் மீதான 'அட்டாக்' காலத்தின் தேவை என்பதை உணர்ந்தால், இவர்களை ஒழிப்பது என்பதும்,எமது கைகளில் தான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.வேலை வெட்டி இல்லாத சில 'கம்னாட்டிகள்' மேலிடத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் ஒவ்வொரு பாகத்திலும் இது வேரூன்றி திறம்பட நடந்துவருகிறது.படித்த முட்டாள்கள் தொடக்கம் சமய முட்டாள்கள் வரை அனைவரையும் இங்கு காணலாம். இவங்களுக்காகவேனும் நாங்கள் 'பொதுபலசேனா' ஒன்றை உருவாக்கவேண்டும்!

மதப்பற்று கொண்டவனை விட்டுவிடலாம்.ஆனால் இந்த மதமாற்று வேலைகளிலும், களவாணி பயலுகளை ஆன்மீக தலைவர்னு சொல்லி ஆட்கள் சேர்ப்பிலும் டுபடும் so called 'கம்னாட்டிகளை' மன்னிக்கவே முடியாது.ஜேசு சீக்கிரம் வந்தாலாவது மன்னிப்பார்னு பார்த்தால்,அவர் தான் போன நூற்றாண்டிலிருந்து இந்தா வாறன் அந்தா வாறேன்னு தண்ணி காட்டிக்கிட்டிருக்காரே..!!

Post Comment

6 comments:

Anonymous said...

வெட்டி பயலே, உனக்கு வேலை இல்லையா? நீ தானா அது? பொலிசில கம்ப்ளையின் குடுத்திட்டாங்க. அடுத்த தடவை போ, அவர் ஹை கோட் வக்கீல். புடிச்சு உள்ள போட வசதியா இருக்கும்

Yoga.S. said...

வணக்கம்,மைந்தரே!நலமா?///அந்த ஆசிரமம் தொடங்குற விசயம்,இடம் ஒண்டு எடுக்கிறதுக்கு தோராயமா எவளவு தேவைப்படும் எண்டு தனி மெயில்ல சொல்லுங்கோ!மற்றது,முக்கியமான விசயம்:நான் தான் ரெண்டாம் நம்பரா இருக்கோணும்.இந்தக் கண்டிசனுக்கு ஒத்து வருவியள் எண்டா மேற்கொண்டு பேசுவம்.மறந்திடாம மெயில் போடுங்கோ.வேற ஆக்கள சேக்க வேணாம்!!!

Siva Mynthan said...

@anoni:

எது ஹை கோர்ட் வக்கீலா? ஹஹா கூப்பிடுங்க..பைசல் பண்ணிடுவோம்!

joylin steffi said...

மத மாற்றம் செய்கிறார்கள் என்று கிறிஸ்தவர்களை கரித்து கொட்டுவது தான் வழக்கம். ஆனால் உண்மையில் மத மாற்றம் செய்பவர்கள் இது போன்ற போலி சாமியார்கள் தான். அதை யாரும் புரிந்து கொள்வதில்லை. அப்படியே மத மாற்றம் செய்தால் கூட போதை மருந்து கொடுத்து பெண்களை சீரழிப்பதை, நரபலி கொடுப்பதை எந்த கிறிஸ்தவரும் செய்வதில்லை. அழகாக எழுதிஇருக்கிறீர்கள்.

T.Thenmathuran said...

///ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்டி பாக்கிறது./// இந்த ஊடறுப்புத் தாக்குதலுக்கே போலீஸ் கேஸா....? ஹி...ஹி... நீங்க சாமியார் ஆகிறீங்களோ இல்லையோ... கூடிய விரைவில் மேர்வின் படையணிக்குத் தலைவராக வாழ்த்துக்கள்... ;)

Tamil Kalanchiyam said...

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

Related Posts Plugin for WordPress, Blogger...