Wednesday, August 1, 2012

பின்நவீனத்துவம்-விளங்காதோருக்கான ஒரு விளக்கம்!




 

இப்போதுள்ள இணையச் சூழ்நிலையில் எல்லா வாசகர்களையும் பயமுறுத்தும் வார்த்தை பின்னவீனத்துவம் என்னும் Post modernism தான்.
பின்னவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் சற்றேரக்குறைய ஒரு நடுக்கத்துடனேயே பலர் அந்தச் சொல்லை பார்க்கிறார்கள்.இதைப்பற்றி "லீனா ரோய்" எழுதி இருக்கும் குறிப்பை பகிர்ந்துகொள்கிறேன்.பின்நவீனத்துவம் பற்றி மண்டையை போட்டு குழம்பிக்கொண்டு இருப்போருக்கு இது சிறிதேனும் விளக்கத்தை கொடுக்குமென நம்பலாம்.

பின்னவீனத்துவம் என்ன என்று அதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கூட, எங்கே எனக்கு இது தெரியவில்லையே எனச் சொன்னால் என்னை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை. அப்படீன்னா என்னவென்று கேட்பதுமில்லை.
இதில் உள்ள இன்னுமொரு சோகம் என்னவென்றால் பின்னவீனத்துவ எழுத்தாளர்கள் மற்றும் பின்னவீனத்துவவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் பலர் லத்தீன், ஆபிரிக்க, பிரெஞ்சு நூல் ஆசிரியர்களின் பெயர்களை சொல்லி வாசகர்களை பின்னிப் பெடலெடுத்துவிடுவார்கள்.

தமிழ் நூல்கள் வாசிப்பதற்கே அல்லப்படும் வாசகன் ஆங்கிலத்தில் யாரோ சில எழுத்தாளர்களை தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் போய் பூக்கோ, உம்பர்த்தோ எக்கோ என்றால், உம்பாட்டைப் பார் என்றுவிட்டு ஆளே காணாமப் போய்விடுவான்.
இதில ஆங்கிலமே அரிச்சுவடு என்னான்னு தெரியாத என்னைப் போல உள்ளவர்கள் பாடு அதைவிட மோசமாக போய்விடும். எதையுமே தமிழிலேயே படித்து வஞ்தோமா.....

தமிழில் தன்னை ஒரு பின்னவீனத்துவவாதி அல்லது எழுத்தாளன் என்று சொல்லும் பலர் இப்படி பயமுறுத்துவதை இண்டலக்சுவல் டெர்ரரிசம் Intellectual Terrorism என்றே சொல்லலாம். எனக்கு எவ்ளோ தெரியுது பார் உனக்கு தெரியாதில்ல.... என்ற ஒரு ஏளனப் பாவனையுடன் பயமுறுத்துவது.



அதிகபட்சம் என்போன்ற சாதாரண வாசகன் நாலு தமிழ்நூலைப் படித்திருப்பான். அவன் கிட்டப்போய், ஆங்கில நூலைப் படித்த சிலர் அடிக்கும் ஜல்லியால் அடங்கிப் போய் அவனிருக்க, தென்னமெரிக்காவின் வாயில் நுழையாத நூல்களின், அதை எழுதிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லும் போது பொறியே கலங்கிடாதா....?

இந்த இண்டலக்சுவல் டெர்ரரிசமானது பலருக்கு படியளக்க, தமிழில் இந்த பின்னவீனத்துவம் என்ற சொல்லே இப்போ புரியாமல் போய்விட்டது.
பலர் இது கறிக்குதவாது என்று அந்தப் பக்கம் தலைகாட்டவே தயங்குகிறார்கள்.

இப்போ இதை யாராவது தீர்க்கனும் இல்லையா.....? குறைந்த பட்சம் இக்களத்திலாவது இதுபற்றி தெரியப்படுத்தனும் அல்லவா....??
அப்படீன்னா...! அட...!! ஆமாய்யா.....!!! இப்போ நான் உங்களுக்கு இந்த பின்னவீனத்துவம் என்றா என்ன என்று புரிய வைக்கப் போகிறேன்.

இதை நகைச்சுவையாக எடுக்காம சீரியசா படியுங்கள். அதாவது பின்னவீனத்துவன் என்றா என்னவென்றே தெரியாதவர்கள் மட்டும்.
தெரிஞ்சவங்க தங்களுக்கு தெரிஞ்சத சேர்ந்து இங்கே அதை பகிர்ந்துக்கலாம்.

இத நான் ஏன் இங்க எழுத வந்தேன்னா......! நான் பல பின்னவீனத்துவ நூல்களைப் படிச்சிருக்கேன். ஆனால் சமீபத்தில வெளியான சாரு நிவேதிதாவுடைய மிக அருமையான "ஸீரோ டிகிரி" வாசித்தேன். தமிழில் வந்ததில் தமிழராலேயே எழுதப்பட்ட மிக அருமையான நூல் இது.
ஆனால் பல நண்பர்கள் இந்த நூலைப் பற்றி என்னிடம் சொல்லி மருகியது இதுதான் .... "அடப் போங்க லீனா ஒன்னுமே புரியல" என்பதுதான்.
"தலையும் புரியல வாலும் புரியல. அதிகப்படியாக 5 பக்கமே தாண்ட முடியல" என்று தலையால் அடித்துக் கொண்டு அதை நன்றாக இருக்கிரது என்று சொன்ன என்னை ஒரு மாதிரியாகவே பார்த்தார்கள்.
இவனும் சாரு மாதிரி ஆகிட்டானோ என்பது போல.....
சாருவில் எனக்கு தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் உண்டு. இப்படி எழுதி விட்டேன் என்பதால் அவற்றுடன் சமரசம் செய்து விட்டேன் என்பதல்ல அர்த்தம்.
அந்த விமர்சனங்களுக்கு அப்பால் சாருவின் எழுத்தை ரசிப்பவன் நான். 

 

இதை டாம் அண்ட் ஜெர்ரி பிலாசபி என்று கூட சொல்லலாம். அதாவது வெறுப்பும் விருப்பும் ஒரே இடத்திலேயே இருக்கும்.
காட்டூனில் எல்லாம் பிலாசபியா என்று நீங்க கேப்பீங்க....
ஆமா.....!
"அலைஸ் இன் வொண்டெர்லாண்ட்" என்னும் கார்ட்டூன் மற்றும் சிறுவருக்கான கதையில வரும் சிரிக்கிற பூனையே ஒரு பின்னவீனத்துவ குறியீடுதான் என்று சொல்வார்கள்.
அட...! இவனும் புரியாம பேச ஆர்ம்பிச்சிட்டானா என்று நெனைக்கிறீங்கதானே...! ஒன்னும் பயப்பட வேணாம் உங்களுக்கு புரியிற மாதிரியே எல்லாத்தையும் பார்க்கலாம்.

என்ன ஆரம்பிக்கலாமா.....??? 


பழமைவாதம் பற்றியும் நவீனத்துவம் பற்றியும் நான் சொன்னது ஓரளவுக்காவது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்போ நாம நேரடியாகவே இதுவரை எமக்கு மாயமானாக காட்சிதந்த பின்னவீனத்துவத்த பற்றிப் பார்க்கலாம்.....

பழமைவாதத்திலும், நவீனத்துவத்திலும் சொல்லப்பட்ட கோட்பாடுகளை ஆராய்ந்து பாத்துச்சு இந்தப் பின்னவீனத்துவம்.
இவற்றில் எப்பவுமே உண்மையான ஒன்று நிலையாக இல்லை. எல்லாமே சில காலத்துக்கு அப்புறம் மறுக்கப்படுது.
இன்னைக்கு உண்மையென்றது நாளைக்கு மறுக்கப்படுகிற போது, அத நாம் ஏன் ஒரு தத்துவமா ஏத்துக்கனும் என்று சிந்தனை இருந்திச்சா.....
இதுவே சாக்காகிப் போச்சு பின்னவீனத்துவத்துக்கு.

 

இந்த காலகட்டத்தில இரண்டாம் உலக்ப்போர் நடந்து முடிஞ்சு உலகமே ஒரு வழியா அலங்கோலப்பட்டுப் கிடந்திச்சு.
ஒருபக்கம் மார்க்ச்சியம் தந்த நாடுகள் வல்லரசாகவும், மறுபக்கம் முதலாளித்துவம் தந்த நாடுகள் வல்லரசாகவும் இருந்து,
ஐரோப்பாவை குறிப்பா உலகை இரண்டாப் பிச்சு எடுத்துச்சு.
இதோட தொடர்ச்சியா யார் வல்லவன், யார் நல்லவன் என்ற "பனிப்போர்" முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் நடக்க ஆரம்பிச்சுது.

பனிப்போர் என்றால் என்னான்னு உங்களுக்கு தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட சொல்லாடல்களை வைத்துத்தான் சிலர் எம்மைப் பயமுறுத்துவதால் இதையும் புரிய வைக்கலாம்.
அதாவது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமக்குள் யார் பெரியவன் என்பதை ஒரு நேரடி யுத்தம் ஒன்றால் முடிவு செய்யாமல், கத்தியின்றி இரத்தமின்றி மறைமுகமாக பலவிதங்களில் ஒருவரை ஒருவர் அழிக்க முயற்சித்ததை பனிப்போர் என்பார்கள்.

 

அதாவது சூடான யுத்தம் இல்லாமல் குளிரான யுத்தம் (Cold war).

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது 1950 தொடக்கம் 1960 வரைக்குமான காலகட்டத்தில்....
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிஷேல் பூக்கோ (Michel Foucalt), ஜாக் டெரிடா (Jaques Derrida), ஷோன் லியோடார்ட் (Jean Francois Lyotard) என்னும் மூவர் ஒரு சிந்தனையை முன்வச்சாங்க.

அந்தச் சிந்தனையின் பெயர்தான்......
 பின்னவீனத்துவம்.


பூக்கோ, டெரிடா, லியோடார்ட் ஆகியோர் சொன்ன இந்த பின்னவீனத்துவம் அப்படி என்னத்ததான் சொல்லுது என்று பார்ப்போமா.....?

மார்க்சியம் போன்ற நவீனத்துவங்களையும், கிரேக்க கதைகள் போன்ற பழமைவாதங்களையும், தத்துவங்களையும் பெரிய கதைவிடும் செயல் என்று பின்னவீனத்துவம் சொன்னது.
அதைப் "பெருங் கதையாடல்" என்னும் சொல்லைப் பாவித்துபின்னவீனத்துவம் நிராகரித்தது.
அப்போதய கட்டங்களில் மார்க்சீயம் மிகப் பெரிய வலுவுடன் இருந்த தத்துவமாக காணப்பட்டது. அதையே பின்னவீனத்துவம் எதிர்த்தது.

அதுமட்டுமல்ல, நான் மேலே சொன்ன பூக்கோ, டெரிடா, லியோடார்ட் என்பவர்கள் பிரான்சில் இருந்த சோஷலிச இயக்கங்களில் அங்கத்தவர்களாக இருந்து, அதிலிருந்து மாறுபட்டு இந்த பின்னவீனத்துவத்தை முன்வைத்தனர்.

இப்போது உங்களுக்கு சில விசயங்கள் புரிய ஆரம்பிக்கலாம்.
ஆம்....! இந்தப் பின்னவீனத்துவம், சோசலிசத்தை எதிர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கைக்குழந்தையாக மறைமுகமாக மாறியது.
அதாவது, ரஷ்ய சார்பான கொள்கையை விலக்கிவிடுவதால் தானாகவே அமெரிக்க சார்பான கொள்கையை ஆதரிப்பதாக அது அமைந்தது.

இதை மேலும் விளக்க வேண்டும்....!
ஒரு சமுதாயம், தனது விடுதலைக்காக புரட்சியை மேற்கொண்டால், பின்னவீனத்துவமோ ஒரு சமுதாயம் விடுதலை அடைய வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் சிறு சிறு குழுக்களுக்கு மட்டும் விடுதலை போதுமானது என்றது பின்னவீனத்துவம்.


இதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.........
பெரும்பாண்மையான சிங்களவரிடமிருந்து விடுதலையடைய தமிழினம் புரட்சி செய்ய வேண்டும் என்று புறப்பட்டால்,
அப்படி ஒன்றும் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுதலையே தேவையில்லை. தமிழர்களுக்குள் இருக்கும் தலித்துகளுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், தனித்தனியே விடுதலை அளித்தால் மட்டும் போதும் என்றது..

இதை மேலோட்டமாக பார்க்கும் போது அட....! இவர்கள் சொல்வது சரிதானோ என்ற மயக்கமே நமக்கு ஏற்படும். குறைந்த பட்சம் அந்த தலித்களுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குமாவது இது சரிதானே என யோசிக்கத் தோன்றும்.

ஆனால் இதை சரியாக உற்று நோக்கினால், இதனால் பயனடையப் போவது சிறுகுழுக்களான தலித்களை விட பெரும்பாண்மை சிங்கள அரசாகத்தான் இருக்கும்.
மொத்த தமிழினத்துக்கும் விடுதலை கிடைக்கும் போது அதன் கூறுகளாக இந்தச் சிறு குழுக்களுக்கும் சேர்த்து விடுதலை கிடைக்க சந்தர்ப்பம் இருகலாம்.
ஆனால் அதை விடுத்து ஒட்டு மொத்தச் தமிழர்களையும் ஒன்றாக சேர விடாமல் தனித்தனியாக குழு குழுவாக பிரிக்கும் முயற்சியை இந்தப் பின்னவீனத்துவம் செய்கிறது.

இந்தக் கொள்கை எப்போதும் முதலாளித்துவ மேம்போக்கான சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவை கொடுக்கிறது.
ஆனால் இவர்களைக் கேட்டால், இதோ பார்! தலித்தியம் என்பது எவ்வளவு முக்கியமானது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை நாம்தான் அது பற்றிப் பேசுகிறோம். ஹோமோ செக்சுவல் ஈடுபாட்டினரும் மனிதர்கள்தானே அவர்களை எங்களைத் தவிர யாரும் கண்டுகொள்வததில்லை என்பார்கள்.
 

இதில் இன்னுமொரு விசயத்தையும் நான் சொல்ல வேண்டும்.
மாக்சியம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. எனவே இந்த பின்னவீனத்துவம் பகுத்தறிவுவாதம் என்பதே நடைமுறைக்கு உதவாது என்று மறைமுகமாக ஆன்மீகத்தைத் தாங்கிப் பிடித்தது.

இப்போது இதுவரை நான் சொன்னவற்றில் இருந்து சரியாக சிந்தித்தீர்களென்றால் ஏன் இந்தப் பின்னவீனத்துவவாதிகள் என்று சொல்லும் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.
அவர்கள் யார் யார் சிந்தித்தால் இதற்கு விடைகள் பளிச்சென உங்களுக்கு புரிந்து போகும்.

அட..! பின்னவீனத்துவம் என்பது இவ்வளவுதானா என்று நீங்கள் நினைத்தால்.....
இல்லை. இன்னும் உண்டு என்பதுதான் அதற்குப் பதில்.

அப்படின்னா அவை என்ன என்ன....?

அதை அடுத்துப் பார்ப்போம்..........
 

மேலோட்டமாக பின்னவீனத்துவத்தில் ஒரு கொள்கையை மேலே நான் சொல்லியிருந்தேன்.
அதுதவிர்ந்த அடுத்தவற்றை உங்களுக்கு புரியவைப்பதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது.

அது என்னவென்றால்........
"பின்னவீனத்துவவாதிகள் எழுதும் நாவல்கள் எதுவுமே தலைகால் புரியவில்லையே!
ஆனாலும் பலர் அவற்றை நல்லாயிருக்கிறது என்று சொல்வது மட்டுமல்லாமல் பல நாவல்கள் படித்ததாகவும் சொல்கிறார்களே!
ஒரு நாவலே விளங்காவிட்டால் எப்படி அடுத்த நாவல் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.? இவர்களுக்கு விளங்குவதால்தானே தொடர்ந்து படிக்கிறார்கள்.
இவர்களுக்கு விளங்குகிறது, எனக்கு ஏன் விளங்கவில்லை? அப்படி என்றால் நான் முட்டாளா.....?"
அப்படி என்று நிறைய இளைஞர்கள் மறுகிப் போகிறார்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இப்போ உடன் அளிக்க வேண்டும். அதை சொல்லிவிட்டுத்தான் நான் அடுத்த கட்ட்டத்துக்கு நகர வேண்டும்.

இதைச் சொல்வதற்கு நான் உங்களுக்கு, முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்

பிக்காசோ என்னும் ஓவியரை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவர் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவியத்தின் ஜாம்பவான் ஆவார்.
இவரது வீட்டில் ஒரு நாள் திருடன் ஒருவன் புகுந்து திருடிச் சென்றுவிட்டான்.

அதிர்ஷ்டவசமாக திருடன் தப்பிச் செல்லும் போது, பிக்காசோ அவனைப் பார்த்துவிட்டார்.
காலையில் வந்து திருட்டு சம்மந்தமாக விசாரித்த காவல்துறையினருக்கு, பிக்காசோ திருடனைப் பார்த்தது பெரிய ஆறுதலையளித்தது.
அதுமட்டுமல்லாமல் பிக்காசோ மிகப்பெரிய ஓவியரென்பதும் வாய்ப்பாகப் போனது.
காவல்துறையினர் பிக்காசோவிடம் அந்த திருடனை அப்படியே உங்களால் வரைந்து தரமுடியுமா எனக் கேட்டனர்.
அதற்கு பிக்காசோ, உடனே முடியும் எ னப் பதிலளித்து அடுத்த தினம் திருடனின் ஓவியத்தை தருவதாக சொன்னார்.

ஓவியமும் காவல்துறையினர் கைகளுக்கு கிடைத்தது.
ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால்.......
அந்த ஓவியத்தின்படி, காவல்துறையினர் ஒரு கோழி, ஒரு நாய், ஒரு தபால் பெட்டி மற்றும் விளக்குக் கம்பம் ஒன்று என்பவற்றையே கைது செய்ய வேண்டி இருந்தது.

காரணம் நிச்சயமாக உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம்....! பிக்காசோ திருடனின் சித்திரத்தையும் மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன ஓவியமாக வரைந்து கொடுத்ததுதான்.

இனி எனது கடமை மிகச் சுலபமாகிவிடும் என நினைக்கிறேன்.......
அதாவது, வழமையான ஓவியங்கள் ஒரு காட்சியையோ, நபரையோ தத்ரூபமாக அப்படியே வரைவது.
ஆனால் மாடர்ன் ஆர்ட் என்பது ஒரு ஓவியனுக்கு மனதில் ஓடும் விம்பங்கள், நினைவுகள் ஏன் சங்க்கீதங்களைக் கூட வரைய அனுமதிக்கிறவு. அதுவும் அவர் மனதில் அவை பற்றி என்ன தோன்றுகிறதோ அந்த வடிவத்திலேயே வரைவது.
அதற்கென்று எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. எதையும் எப்படியும் அவருக்கு அந்த காட்சியை வெளிக்கொண்டு வர தோன்றுகிறதோ அப்படியே வரையலாம்.
 

ஆனாலும்..........
ஒரு ஓவியர் அதை எப்படி வரைகிறாரோ அதை அப்படியேதான் அந்த ஓவியத்தைப் பார்ப்பவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பார்ப்பவரும் தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் அந்த ஓவியத்தில் உள்ளது என எடுத்துக் கொள்லலாம்.

உதாரணமாக சூரிய உதயம் என்று, ஓவியம் ஒன்றை மாடன்ர்ன் ஆர்ட்டிஸ்ட் வரைந்தால், அதில் நிச்சயமாக சூரிய உதயம்தான் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் தோற்றுப் போவீர்கள்.
அதைப் பார்க்கும் போது அங்கே சூரியனை தேடுவதும் தப்பு.
பார்ப்பவருக்கு அது குதிரைகள் ஓடுவது போலத் தெரிந்தால், அதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

ஓவியத்தைப் படைத்தவர் அதை வரைந்ததோடு மறைந்து விடுகிறார். அதைப் பார்ப்பவர் எப்படி பார்க்கிறாரோ அதுதான் அந்த ஓவியத்தில் இருப்பதன் அர்த்தமாகிவிடும்.

புரிகிறதா.......?

அது போலத்தான் இந்த பின்னவீனத்துவ நாவல்களும்.
ஒருவர் ஒரு நாவலை எழுதுவதும் போது மனதில் என்ன படுகிறதோ, அதையே எழுதுவார். அத்துடன் அவர் கடமை முடிகிறது. பின்னர் அதை வாசிப்பவர் என்னவிதமாக புரிந்து கொள்கிறாரோ அதுதான் அந்த நாவலின் கருவே.

அந்த நாவலை எழுதியவர் அத்துடன் மறைந்து விடுகிறார்.
இதையே பின்னவீனத்துவம் "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்னும் ஒரு சொல்லை உபயோகப்பட்டுத்தி விளக்குகிறது.

இந்த "ஆசிரியன் இறந்து விட்டான்" என்பது பின்னவீனத்தின் மிக முக்கிய சொல்லாடல் ஆகும்.

ஒரு மாடர்ன் ஆர்ட் எப்படி வரையப்படுகிறதோ அப்படியேதான் பின்னவீனத்துவம் எழுதப்படுகிறது.
எழுதும் போது எந்த ஒரு விதிகளும் வரையறையும் இல்லாமல் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது.
அதை வாசிப்பவர் தனக்கேற்றால் போல அதை விளங்கிக் கொள்வது. இதுதான் இங்கு விதி.

இதை மேலும் சில உதாரணங்களுடன் தொடர்ந்து விளக்குகிறேன்..

மாடன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியம் பின்னவீனத்துவம் என்னும் ரீதியில் எல்லாராலும் வரையப்படுவதில்லை.
பலர் அதை பின்னவீனத்துவ சிந்தனை இல்லாமலேயே முயற்சி செய்திருக்கிறார்கள். புதுக்கவிதை போல....

புதுக்கவிதையை பின்னவீனத்துவம் என்னும் சிந்தனைக்குள் அடக்காமல் பலர் அதைப் புனைந்துள்ளனர். ஆனால் பின்னவீனத்துவ கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வட்டிவிலேல்யே அமைந்திருக்கும்.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.


பாப்லோ பிக்காசோ கியூபிசம் (Cubism) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் தனது மாடர்ன் ஆர்ட்டை வரைந்தார். இந்த கியூபிசம் பின்னவீனத்தின் ஒரு அம்சம்தான்.
சித்திர வகைகளில் ஆன்டி ஆர்ட், மற்றும் ஆன்டி ஆன்டி ஆர்ட் என்னும் வகைகளும் இவையுள் அடங்கும்.
அத்துடன் கொலாஜ் ஓவியம் என்று உருவாக்கப்படும் ஓவியங்கள் பின்னவீனத்துவத்தின் சரியான அமைப்பாக இருக்கும்.


இது பற்றி ரொம்ப இப்போ பார்த்தால் குழப்பமே மிஞ்சும். ஆனாலும் பிக்காசோவின் கியூபிச சித்திரங்களை கூகிளில் பார்த்தீர்களானால் இது புரிந்து போகும்.

நன்றி-லீனா  ரோய்


Post Comment

11 comments:

Unknown said...

//இப்போது இதுவரை நான் சொன்னவற்றில் இருந்து சரியாக சிந்தித்தீர்களென்றால் ஏன் இந்தப் பின்னவீனத்துவவாதிகள் என்று சொல்லும் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.//

***பின்னவீனத்துவவாதிகள் என்று சொல்லும் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்**** அப்படியா???? இது புதிய தகவல்! நன்றி!!

ஆனா பாருங்க புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லாரும் தமிழீழ விடுதலையை எதிர்க்கிறார்கள் என்ற ஆழ்ந்த அறிவார்ந்த கருத்து ஒன்று நம்மவரிடையே உள்ளது. இது எல்லாவற்றையும் இணைக்கும்போது,

புலிகளை எதிர்ப்பவர்கள் = தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள் = பின்னவீனத்துவவாதிகள்

இக்கட்டுரையின் அடிப்படையில் புலிகளை எதிர்ப்போர் பின்நவீனத்துவவாதிகள். ஆக, நம்நாட்டில் பெரும்பான்மையே பின்நவீனத்துவ வாதிகள்தான். அதிலும் மகிந்த ராஜபக்சேதான் தற்போதைக்கு இலங்கையின் தலைசிறந்த பின்நவீனத்துவவாதி!!!

ஆவ்வ்வ்வ்! என்னால முடியல! :-)

உலக சினிமா ரசிகன் said...

இத்தொடரை... வெகு எளிதாக விளக்க
முற்படுவதே மிகப்பெரிய சாதனை.
நண்பரே!வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

வணக்கம் நண்பா...

”தளிர் சுரேஷ்” said...

முடியலை நண்பா! என் முடி ஒண்னு ரெண்டும் கொட்டிடும் போல! பட் இதை படிச்சு புரிஞ்சிகிட்டவங்க கிரேட்!

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

கிஷோகர் said...

எனக்கு பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று முழுதாக புரிந்ததொ இல்லையோ தெரியாது. உங்களது இந்த பதிவை படித்தவுடன் நாளைக்கு யாராவது வந்து பின்நவீனத்துவம் என்று ஆரம்பித்தால் மிரள மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம்! ரொம்ப நன்றிண்ணே!

ஹாலிவுட்ரசிகன் said...

புரிந்தும் புரியாத மாதிரி இருக்கு. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன். :)

Unknown said...

சித்தார்ந்த கோட்பாடுகளை இப்படி எல்லாம் விளக்க முடியுமா? நான் வியந்து பார்த்த பதிவு. எளிமையாக சொன்ன விதம் சூப்பர். again இது மைந்தன் ஸ்டைல். மிகச்சிறந்த புகைப்படவியலாளர்கள் கூட தங்கள் படங்களுக்குள் சொற்தொடர்கள் எதையும் புகுத்துவதில்லை. பின் நவீனத்துவ எழுத்துக்கள் பெரும்பாலும் முகமூடிகள் இல்லாதவை. அதாவது வாசிப்பவருக்கு என்ன பிடிக்கும் என்று பார்க்காமல், உள்ளதை உள்ளபடியே சொல்பவை. ஒரு வகையில் ஆய்வுக்கட்டுரைகளை சார்ந்தவை. பல ரஷ்ய எழுத்துக்கள் பின் நவீனத்துவத்தை தழுவியதாக கேள்விபட்டேன். உங்களால் முடிந்தால் அடியேனுக்கு ஏதேனும் புத்தக பரிந்துரை செய்யலாம். உங்கள் பணி தொடர, வாழ்த்துக்கள் மைந்தன்.

சிவா said...

உங்க திறமையே திறமை அண்ணே...என்ன சொல்ல வரீங்க னு நேரிடையா சொல்லி இருக்கலாம்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் பின்னவீனத்துவம் பற்றிய இந்த விளக்கம் படித்தபோது, அன்றைய "சிரித்திரன்", ஈழத்திலிருந்து வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையில் ஈழத்துப்பாடல்கள் (அன்றைய இலங்கை வானொலியில் பிரபலம்) எப்படி எழுதுவதென ஒரு குறிப்பு வந்தது. அதாவது கொஞ்ச தமிழ்ச் சொற்களைத் எழுதி ஒரு சீமேந்துக் கலவை குழைக்கும் இயந்திரத்திலிட்டு சுழல விட்டு சொற்களை எடுத்து ஒன்றின் பின் ஒன்றாக எழுத வேண்டும். ஒரே சொல் மீண்டும் வந்தால் இன்னுமொரு சொல்லை எடுத்து சேர்க்கவேண்டும்.
இப்படி 8 வரி எழுதினால் அது ஒரு ஈழத்துப்பாடல்.
பிக்காசோ வரைந்தது ஓவியமென உலகம் கொண்டாடுது, அது எனக்கோ மூளை சரியில்லாதவரின் கிறுக்கல் போல் உள்ளது. காரணம் நான் ஒரு ஞானசூனியம்.
பிக்காசோவிடம், அவரது ஓவியங்களை சேகரிக்குமொருவர், ஒரு ஓவியத்தைக் காட்டி இது நீங்கள் வரைந்ததா? எனக் கேட்டாராம். அதற்கு அவர் அதை என்ன விலை கொடுத்து வாங்கியதாகக் கேட்டுள்ளார். ஓவியம் சேகரிப்பவர் அந்த நாளிலே அசரவைக்கும் ஒரு விலை சொன்ன போது,
பிக்காசோ- அவ்வளவு விலையா? அப்போ நான் வரைந்ததே ! என்றாராம்.

இப்போதும் சில சமயம், இங்கே சில ஓவிய கண்காட்சிகள் சில தெருவோரம் இருக்கும் அரங்குகளில் நடங்கும், அரங்கின் பிரமாண்டமான கண்ணாடியூடு தெருவில் நின்றே ஓவியங்களைப் பார்க்கலாம். சிலர் அரங்கில் மேலேயும் கீழேயும் பூந்து ,பூந்து பார்ப்பார்கள், நாமளும் என்ன? தான் பார்கிறார்கள், எனப் பார்த்தால் "பிக்காசோ" பாணி...புரியாக் கிறுக்கலே!
என்ன , ஆதிமனிதன் பல லட்சம் வருசங்களுக்கு முன் கிறுக்கிவைத்த ஓவியங்கள், பல குகைகளில் கண்டுபிடிக்கிறார்கள், அவை கூடப் புரிகிறது.
ஆனால் இந்தப் "பிக்காசோ" க்களைப் புரியமுடியவில்லை. ஆனால் கூட்டம் இன்னும் கூடுது..
ஒன்று தெளிவானது... இப்போ (ஆ)சாமியார்கள்; பாடகர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், ஓவியர்கள் ஒரு அடிமைகூட்டத்தைச் சேர்த்து விடுகிறார்கள்... அவர்களை வைத்தே "ஆகா,ஓகோ"....எனக் காலத்தை ஓட்டுகிறார்கள்.
நாம் வாயைப் பிளக்கிறோம்.
இப்போ பின்நவீனத்துவக்காரர் (தமிழ்) ஒரு புதிய கூத்து ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள், காட்டுக்குள்ளோ, கடற்கரைக்கோ போய் ஆட்டுத் தொடையை வாட்டி, பட்டைச் சாராயத்தில் தொட்டுச் சாப்பிட்டு - பிதற்றுவதற்கு -இலக்கிய ஆய்வு என்று பெயர் வைத்து மாதாமாதம் அரங்கேற்றுகிறார்கள்.
இப்போதும் நாம் வாயைப் பிளக்கிறோம்.
உள்ளதை உள்ளபடி எழுதுகிறோமென "தூசணத்தையும்" எழுதுவாங்களாம். அது பின்னவீனத்துவமாம்.
விளங்காமல் எழுதவேண்டும் - அதை வாசிப்போர் விளங்கியது போல் நடிக்கவேண்டும் - அது பின்னவீனத்துவம்.
விளங்குதுங்கோ!!!!
பின்னவீனத்துவம் - சாரு...மங்கோலியாவுக்குப் போகத் துணை தேடுகிறார்...நீங்கள் உடன் போகலாம்.

தனிமரம் said...

பின் நவீனத்துவம் புரிந்தும் புரியாமலும்!ம்ம் சாரு புரியாத புதிர்!

Athisaya said...

பின் நவீனத்துவம்.இச்சொற்பிரயோகத்திற்கு அஞ்சும் ஆள்தான் நானும்..ப்போது ஓரளவிறடகு புரிகிறது.மற்றொரு தரம் முழுதாக புரிய முயற்சிக்கிறேன்.மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...