Wednesday, August 8, 2012

வெள்ளவத்தை ரவுடிகள் சாம்ராஜ்யம்!பக்கத்தி வீட்டு சின்ன பையனோட சண்டைக்கு போயி ஜெயிச்ச வீர வரலாற்றை நண்பர்களிடம் பகிர்ந்துக்க வெள்ளவத்த பீச் ஓரமாய் ஒதுங்கி இருக்கிறார் டான் "பொடி மல்லி".சின்னப்பிள்ளைகள் மட்டுமன்றி ஏரியா'ல கிழவிகளோட கூட அண்ணனுக்கு வாய்க்கா தகராறு இருந்திருக்கு.இதெல்லாம் தன்னோட இஸ்திரின்னு தன்னோட அல்லைக்கைஸ் கிட்டே சொல்லிக்கிரதில தல'க்கு அப்பிடி ஒரு பெருமை! இச்சமயம் தாத்தாவோட அல்லக்கைஸ் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.இவரை போலவே ஏரியா தாதா/டான் ஆகணும்கிறது தான் நம்ம தாதாவோட எப்பவும் கூடவே இருக்கும் பயலுகளோட ஆசை கனவு எல்லாமே!இதனாலேயே தான் அறிஞ்சோ அறியாமலோ சில பல வீர தீர செயல்களை செய்ய தூண்டப்பட்டு அசிங்கப்பட்ட வரலாறுகளும் தாதாவின் கைவசம் நிறைய!

பீச் பக்கம் ஒதுங்கினாலே வாயில தம் இருக்குதோ இல்லையோ நம்ம தல கையில பீர் பாட்டில் இல்லாமல் இருந்ததில்லை.தண்ணி அடிக்காமல்,தம் அடிக்காமல் தாதா இருக்க முடியாதுங்கிற ரவுடீஸ் கலாச்சாரத்தில் நம்ம தாதா மட்டும் விதிவிலக்கா என்ன!மாலை மங்கும் வேளையில் கடலோரமாய் பதுங்கி இருந்து பீர் அடிப்பதில் தலைக்கு நிகர் தலையே!அந்த வகையில் தான் அன்றும் தன் வீரப்பிரதாபங்களை "பிதற்றிக்கொண்டிருந்த" சமயம் வழமைக்கு மாறாக நம்ம தாதாவை கடலோரமாய் காத்து வாங்க வந்த ஒரு போலீஸ்கார் தாதாவின் போத்திலும் கையுமான அழகால் கவரப்பட்டு என்னடா இங்க இப்பிடி நிக்கிறாய்'னு கேட்டிருக்கார்..நம்ம தல தான் டான்'ங்கிற விஷயம் அந்த போலீஸ்க்கு தெரியாது போலும்.தெரிஞ்சிருந்தா நின்னு பேசிட்டிருந்திருப்பாரா!தன்னோட அல்லக்கைஸ் முன்னாடி ஒரு போலீஸ்காரன் அதுவும் தன்னை பத்தி ஒண்ணுமே தெரியாத போலீஸ்கார் கேள்வி கேட்டது டான்'க்கு தலைகால் புரியாத கோபத்தை ஏற்படுத்திவிட்டது-என்று தான் நானும் ஜோசிசேன்..ஆனால் தலைகால் புரியாத சந்தோசத்தை தான் தந்திருந்தது;காரணம் தானே டான்'னு நம்பிக்கிட்டிருந்த அல்லக்கைஸ் முன்னாடி தன்னோட அல்டிமேட் பவரை காட்ட ஒரு ஸீன்'ஐ அந்த எல்லாம்வல்ல ஸ்டண்ட் மாஸ்டர் "ஜாக்குவார் தங்கம்" தான் வழங்கியிருக்கிரார்னு மனசுக்க நினைச்சுகிட்ட நம்ம தாதா விஜய் ஸ்டைலில் 
"பீச்'ல இருந்து பீர் அடிச்சா தான் தப்பு..கைல வைச்சிருந்தா தப்புன்னு எந்த கேனப்பய சொல்லியிருக்கான்?" அப்பிடீன்னு நங்கூரம் மாதிரி கேள்விய இறக்கியிருக்கிறார்.எல்லாரும் போலீஸ்னா பயப்பிடுவானுக..இவன் என்னடான்னா கேள்விகேக்கிறான் என்று பயந்து போயிருக்குது அந்த போலீசு.புதுசா வேலைக்கு சேர்ந்திருக்குது போல.

போலீஸ்கார் மூஞ்சில மரண பீதிய கவனிச்ச டான் கண்ணு மண்ணு தெரியாம நாலஞ்சு கேள்வியை அள்ளி வீசி இருக்கிறார்.ஹஹா நம்ம தல டான் தான்யான்னு சுத்தி இருந்த ஆல் அல்லக்கைஸ் மூஞ்சிலயும் ஒரு சந்தோசம்."ஒண்ணுமில்ல சும்மா உங்க ID கார்ட் பாக்கணும் ஒருக்கா தாங்கோன்னு போலீஸ்கார் கேட்டதுக்கு போனா போகுதின்னு எடுத்து நீட்டிட்டு திரும்ப வாங்கி தன்னோட டைட்டான ஜீன்ஸ்'இன் பாக்கட்டுக்குள்ள வைச்சிக்கிட்டு போடா போடான்னு வந்த போலீஸ்காரை கலைச்சு வெற்றிக்கொடி நாட்டினார் நம்ம டான்!


அசிங்கப்பட்ட போலீஸ்கார் அடிபட்ட புலிக்கு சமம்..எப்பவாச்சும் பழிவாங்கியே தீரும்!இப்படியான ராஜதந்திர விஷயங்கள்'ல டான்'க்கு மேல்மாடி கொஞ்சம் கம்மி.அப்பிடி இப்பிடி எப்பவாச்சும் ஞானோதயம் உதிச்சாலும் கூட இருக்கிற அல்லக்கைஸ் உடனேயே அத ஆப் பண்ணிடுங்க.அதனால ரவுடீஸ் ராஜதந்திரம் ஏதும் அறியாமலேயே டான் ஆயிருந்தார் நம்ம தல!

ஒருதடவை இப்படித்தான் டான்'க்கு ஒரு பொண்ணோட லவ்ஸ் வந்து செட் ஆகி,கூட இருந்த எவனோ அண்ணியோட வீட்டுக்கு போய் ஒருநாள் ஜல்சா பண்ணுங்கன்னு ஐடியா குடுக்க,அத நம்பி லவ்வரோட அப்பா,அண்ணன் எல்லாம் வீட்டில இருக்கிற சமயமா வீட்டுக்க புகுந்து பேந்த பேந்த முழிக்க,அவனுக விரட்ட-டான் ஓட...அவனுக விரட்ட-டான் ஓட'ன்னு ஒரு நாள் வீதியே அல்லோலகல்லோலப்பட்டது.டான்'னோட இந்த பர்போமான்ஸ்'ஐ பார்ததால இப்போ அண்ணி வேறொருத்தனோட செட் ஆயிட்டாங்க.அதுக்கப்புறம் இப்பெல்லாம் டான் "அமைச்சுக்கிறது" ஏரியா'ல கண்ணம்மா பொன்னம்மா'க்களை தான்!

அதே மாதிரி டான் எப்பவுமே தனியா சுத்தும் போது சண்டைக்கோ,பலப்பரீட்சைக்கோ போறது கிடையாது.அல்லக்கைஸ் கூட இருக்கும் போது தான் டான்'கே ஒரு கெத்து வரும்!தனியா இருக்கும் போது இந்த பூனையும் பால் குடிக்குமான்னு தோணும்.ஆனா பீச்'ல பீர் அடிச்சிருக்கே!அடிபட்ட போலீஸ்கார் டான்'னோட அடையாள அட்டைய பாத்து டீட்டெயில் எடுத்தது டான்'க்கு க்ளிக் ஆகல.எதோ நேர்ல நம்மள பாத்தது பத்தல போல போட்டோல பாத்து ரசிக்கிறாரு பாவம்னு தான் பயபுள்ள நெனைச்சிக்கிட்டிருந்திச்சு!

அடுத்தநாள் ஆபீஸ்'ல இருக்கும்போது ஒரு போலீஸ்கார் போன் பண்ணி மேட்டர போட்டு உடைச்சிருக்கார்.(டான் ரவுடி சாம்ராஜ்யம் வைச்சு நடத்திறதால போலீச்க்குள்ளையும் இன்போமர் வைச்சிருக்கார்!).அது என்னென்னா டான் "பொடி மல்லி"ய போலீஸ் தேடுது எதுக்கும் கொஞ்ச நாள் மறைந்சிருக்கிறது நல்லது". அவ்ளோ தான்.தன்னோட அரசியல் ஓரமாய் எங்கயோ பிழைச்சிரிச்சின்னு மர மண்டையில ஓரமா உறைக்க இரவோட இரவா யாழ்ப்பாணத்துக்கு தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டார் டான்!


 கொழும்பை சல்லடை போட்டு போலீஸ் தேடிக்கொண்டிருந்த சமயம் கொழும்பிலிருந்து ஓடித்தப்பி யாழ்ப்பாணத்தில் பதுங்கி இருந்த தாதா "பொடி மல்லி"ஐ எவ்வளவு முயற்சி செய்தும் போலீசாரால் அவர் இருக்கும் இடைத்தை முகர்ந்தேனும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.ஸ்காட்லான்ட் யார்ட் போலீசே வந்தாலும் நம்ம தல'ய பிடிக்க முடியாதிங்க்றது இவனுகளுக்கு தெரியாமல் போனதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை! போலீஸ் வேட்டை ஓய,சாவகாசமாய் "உற்றார் உறவினர் நண்பர்களை பாக்க சென்றேன்" என்ற வழமையாய் கூறும் அதே காரணத்துடன் மீண்டும்  கொழும்புக்கு வந்தார் தாதா!

சாதாரணமா டான் ஆக தமிழர்களை பொறுத்த வரையில் இருக்கவேண்டியது ரெண்டே விஷயம் தான்.ஒன்னு கோர்ட் சூட் போடணும்.மற்றது நட நடன்னு நடக்கணும்..இப்பெல்லாம் டான் ஆப்பம் சாப்பிட போறதின்னா கூட கோர்ட் போட்டுக்கிட்டு தான் போவார்னா பாத்துகிங்க!வெள்ளவத்த பூரா நடந்து நடந்தே சுத்துவார்!நடப்பதின்னா இவருக்கு அவ்ளோ இஷ்டம்! 

அடுத்த சனி கிழமை கூட எதோ "செய்யணும் செய்யணும்","முடிக்கணும்".."அவனுக்கு இப்போ வர வர கொழுப்பு".."நான் யார்னு தெரியல அவனுக்கு"அப்பிடீன்னு மத்தவங்களுக்கு புரியாம வழமை போல தன்னோட அல்லக்கைஸ் கூட கதைச்சிக்கிட்டிருக்கும் போது ஒட்டு கேட்டேன்..இந்த வாட்டி எத்தின பேரோட தலை உருளப்போகுதோ'ன்னு என்னோட மனசு என்னையறியாமலே படபடத்துக்கொண்டது.

Every Don have a Past.......Every "டண்டணக்கா டான்" having a History!!

யாவும் கற்பனை!!

Post Comment

7 comments:

கிஷோகர் said...

டான், டான்ன்னு உங்களை நீங்களே பெருமையா பேசிகிறது நல்ல இல்லண்ணே! ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே! அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , "அதுக்கு" வீட்டுக்கு போவீங்க! ஏதோ தல தீபவளிக்கு பொண்ணு வீட்டுக்கு போற நினைப்பு!

மைந்தன் சிவா said...

/கிஷோகர் said...
டான், டான்ன்னு உங்களை நீங்களே பெருமையா பேசிகிறது நல்ல இல்லண்ணே! ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே! அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , "அதுக்கு" வீட்டுக்கு போவீங்க! ஏதோ தல தீபவளிக்கு பொண்ணு வீட்டுக்கு போற நினைப்பு!/ம்ம்ஹும் இவனுகள வைச்சிக்கிட்டு சீரியஸா கூட பேசமுடியாது :P

K.s.s.Rajh said...

போங்க பாஸ் உங்களுக்கு பிஞ்சு மூஞ்சி
சிரிப்பு டான்மாதிரியே இருப்பீங்க

வரலாற்று சுவடுகள் said...

///Every Don have a Past.......Every "டண்டணக்கா டான்" having a History!! ///

செம செம :D

MANO நாஞ்சில் மனோ said...

சீக்கிரமா ஆளை ஜெயிலுக்கு அனுப்புங்கப்பா...டன் டன் டண்டனக்கா....

நிரூபன் said...

மச்சி....சூப்பர் பதிவு..அதுவும் கடைசி வரை அல்லக்கைகளின் தலைவனை உச்சத்தில் வைத்து இறுதியில் கவிழ்த்திருப்பது பதிவின் ஹைலைட்

Yoga.S. said...

காலை வணக்கம்,மைந்தரே!நலமா?இது சும்மா ஒரு கற்பனை தானே?ஒரு பன்னிரண்டு மணி நேரம் வியாழனன்று செலவிட்டேன்,அப்படி ஒருவரையும் காணவில்லையே,ஹ!ஹ!ஹா!!!(யாரிடமும் சொல்ல மாட்டேன்)

Related Posts Plugin for WordPress, Blogger...