Tuesday, October 11, 2011

பவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு!

கொஞ்ச நேரம் சிரிக்கணுமா?அதுவும் மனம் விட்டு??அப்போ மேல படிங்க..


தமிழ் நாட்டுக்கு ஒரு சூப்பர் காமெடியன் கிடைச்சுட்டன் எல்லாம் காமெடியனும் சிரிக்க வைபங்க இவரு அழ வைப்பாறு,...என்ஜாய் தமிழ் மக்களே.........

என்ன பண்றது பணம் இருந்தா பண்ணியும் ஹீரோதான்

உங்க வளர்ச்சி மக்களுக்கு பிடிக்கலைனா அதனால நீங்க.........எனக்கு அழுகையா வருது ன்ன.

"படத்துக்குகே இப்படி செலவு பண்ணி இருக்காரே.. அப்பா DR பட்டத்துக்கு எவளவு பண்ணி இருப்பாரு!....பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான்........"

"என்ன கொடுமை சார்"

"அல்டிமேட் ஸ்டார்க்கு போட்டியா பவர் ஸ்டார் இது தான் ஈக்குவலான போட்டி"

"இவங்களுக்கு எல்லாம் அப்பா பணத்தை என்ன பண்றதுன்னு தெரியல ....அவங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச கஷ்டம் தெரியும் . இந்த மாத்ரி வேஸ்ட் செலவு பண்றதுக்கு நாலு ஏழை க்கு சாப்பாடு போட்ட நல்ல இருபங்க........"

"வருங்கால முதல்வர் ! வருங்கால பிரதம மந்திரி ! வருங்கால ஜனாதி பதி ! அப்புறம் ..... ..............( தெரியலையே !)"

"மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க! இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா?"

"சினிமா யார் வேணும் வரலாம் பப்ளிக் முடிவு எடுக்கணுஎம் ஹீரோவா காமெடியன் வில்லன நல்லவேளை அரசியல் குடும்பா சப்போர்ட் எல்லை ஈவர் ஒரு ஹீரோவா நம்பா பார்க்க வேண்டி ஏற்றுக்கும் ஆட்சி மாற்றம் எல்லனிய என்றைய ப்ரோடுசெர் நேர்த்ரிய ஹீரோ ஆயி இருப்பாரு ஒரு கல் ஒரு கண்ணாடி"

"இதே போலா "அந்தகாலம் " தொட்டு பண்ரைங்க !!!! 'தமக்கு தாமே ..வள்ளல் , செம்மல், தர்மத்தின் ..தலைவன் என்னனமோ ....பினாத்தி கிறங்க ....அப்புறம் "விசில் குஞ்சுகள் பூரா சேர்ந்து "இதய தெய்வம் " என்று தமிழ் நாட்டையே ......... அறிவு வளர்ச்சில் "பின்னோக்கி இழுத்திடு போய்டாங்க ...

"பக்கத்துக்கு கேரளா காரனுக சிரியாய்....சிரிக்கிறங்கி .....'

"who is that dog?"

"வீட்டில இருந்தா தன் மனைவி மட்டும்தான். சினிமாவில், தினம் ஒரு பெண்ண தொடலாமலா...பணத்தை வேசிகிட்டு என்ன பண்றது.'"

"இது எல்லாம் ஒரு கொடுமையா சார் டிவில இந்தியத்தொலைகட்சிகளில் முதல் முரயாகனு படம் போடுறதுதான் கொடுமைலயும் கொடுமை'

"ஐயோ!!! என்னால சிரிப்பு தாங்க முடியலே...எங்க தலைவர் சாம் அன்டர்சன் அவர்களை இவர் மிஞ்சிடுவார் போல."

"பவர் ஸ்டார் படத்துக்கு உன்னமையான வெற்றி தான் சார்.உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு?."

"இவங்கள எல்லாம் ஆள வெச்சு அடிக்கணும்.'

'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் !!!!!!!'

இதெல்லாம் என்னத்துக்குன்னு ஜோசிக்கிரீங்களா மக்களே?இத கொஞ்சம் பாருங்க,

இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?


மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?

ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.

இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.

பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.

இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.

இதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்!


சில விசயங்கள பகிர்ந்துக்கனும்னு தோணும் பாருங்க..அதே மாதிரி இத நக்கீரன்ல பார்த்தோன எனக்கும் அது தான் தோணிச்சு..என்ன பவர் ஸ்டார் ரசிகர் ஐடியா மணி தான் கடுப்பாக போறார்..ஹிஹி

Post Comment

45 comments:

K.s.s.Rajh said...

முதல் பவர்

K.s.s.Rajh said...

இது பவர்ஸ்ராருக்கு நையாண்டி பதிவா இல்லை பவுடர் ஸ்டார் ஜடியாமணிக்கு நையாண்டியா?

Unknown said...

:)

K.s.s.Rajh said...

விட்டா பவர் ஸ்டார் படம் ரஜினிகாந்த படங்களுடன் போட்டி போடும் போல

Unknown said...

மறுபடி கோர்த்து விடாதீங்கப்பா..அந்தாளோட போட்டி போடேலாது..:)

K.s.s.Rajh said...

படத்தின் இயக்குனரும் அவர்தானா என்ன கொடுமை சிவா(சரவணன் என்று சொல்லி சொல்லி அலுத்துப்போச்சி)

சென்னை பித்தன் said...

பவர்(ஸ்டார்)ஃபுல்லான பதிவு!
த.ம.2

K.s.s.Rajh said...

யோய் மாப்ள இப்படி பத்தா நீங்களும் சூப்பர் ஹீரோதான்யா பதிவுலகில் அதிகம் பதிவுகளில் முக்கிய இடம் பிடிப்பது நீங்கதான் பாஸ்...நீங்களும்
டாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் என்று டைட்டில போடுங்க ஏன்னா?
பவர் ஸ்டார்,பவுடர் ஸ்டார் இருக்கும் போது பதிவுஸ்டார் மைந்தன் என்று இருந்தா என்ன?

K.s.s.Rajh said...

சரி பாஸ் மற்ற கடைகளுக்கும் போகனும் அப்பறம் வந்து கும்மி அடிக்கின்றேன்

இன்று முதல் மைந்தன் பதிவுலகில் டாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் என்று அன்போடு அழைக்கப்படுவார்

டாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் சிவா வாழ்க்க...வாழ்க...வாழ்க.............

Unknown said...

:-)

கோகுல் said...

அட ரீலு அந்து போச்சுடா சாமி!

யாராவது எழுப்பி விடுங்கப்பா!

எனக்கு பேச்சு மூச்சு வரல.இந்த ஸ்டில்லு எல்லாம் பாத்து!

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் மச்சி,

இம்புட்டு நாளா ரூம் போட்டு எழுதின பதிவா இது...

படங்கள் தான் பதிவுக்கு செம டாப்பு...

பவர் ஸ்டாரை வைச்சே ஒரு மரண மொக்கை போட்டிருக்கிறீங்களே.

காட்டான் said...

அட நம்ம ஐடியா மணிக்கே ஐடியா கொடுத்தவராச்சே கலங்குங்க சார் நீங்க இவங்க பொறாமையில பதிவு போடுறாங்க..!!!! ஹி ஹி

Unknown said...

:)

Unknown said...

அருமையான மொக்கைய போட்டுருக்கீங்க

தனிமரம் said...

இப்படி எல்லாம் சிலருக்கு இம்சை கொடுக்களாம் என்று கொள்கையோடு வந்திருக்கும் பவர்ஸ்டார் இருக்கத்தான் வேனும் சிலரின் ஓவர் அலுப்பரைக்கும் பில்டாப்புக்கும் திரையுலகம் ஒரு பொதுவானது யாரும் வரலாம் என்று நம்பிக்கை பிறக்கனும் என்றாள் அண்ணா தேவதைதான் பாஸ்!

தனிமரம் said...

மைந்தனின் தொடர் ஒன்று கிடப்பில் இருக்குது இவரைக்கொண்டு வெளியீடு செய்யலாமே! ஹீ ஹீ

தனிமரம் said...

பவர் அவர்களின் புதுப்படம் வரனுமே காசே என்று தொடங்கும் இன்னும் முருகனில் வரலாயா பாஸ்!ஹீ ஹீ

M.R said...

வார்த்தையே வர்ல போங்க


தமிழ்மணம் 9

Yoga.s.FR said...

நல்ல சிந்தனையூட்டும்,கருத்தாழமிக்க,பெரியோர் முதல்,சிறியோர் வரை படித்துப் பயன் பெற வேண்டிய பதிவு!கலக்குறீங்க சிவா!இது,இது தான் எனக்கு உங்களிடம் பிடித்தது!ஆடிக்கொரு தடவை என்றாலும் இப்படி ஆக்கபூர்வமான பதிவுகளை(காப்பி பேஸ்ட் இன்றி)எதிர் பார்க்கிறோம்,இது போல் இன்னுமின்னும்!!!!!!!!!!!!!!!

Mathuran said...

அடடா மைந்தன் ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவோட வந்திருக்கிறார்

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

நான் எங்கேயாவது ஒரு மலையில இருந்து குதிக்கப்போறேன் விடுங்கைய்யா என்னை...

சக்தி கல்வி மையம் said...

சிரிக்கவா? அழவா? ஒண்ணுமே புரியல..

Unknown said...

சூப்பர்! பவர் ஸ்டார் சீனி வாழ்க!

யூர்கன் க்ருகியர் said...

நாடி, நரம்பு, மனசு, உடம்பு, உச்சி முதல் உள்ளங்கால் வரை ரிலாக்ஸ் ஆக இருக்கணுமா?

பவர் ஸ்டார் படம் பாருங்க...... !!

கவி அழகன் said...

இரவு பத்து மணி. அந்த பெரிய பங்களாவின் போன் அலறியது. வீட்டில் வேலைக்காரியும், நோயாளியான அவ்வீட்டுப் பெண்ணையும் தவிர யாருமில்லை. வேலைக்காரி ஓடிவந்து போனை எடுத்தாள்.
""நான் வீட்டு முதலாளி பேசுறேன். நான் சொல்றதை நீ செஞ்சேனா ஒனக்குப் பத்துலட்சம் தருவேன்''
""ஐயா, சொல்லுங்க ஐயா...நீங்க சொல்றதைச் செய்யத்தான் ஐயா நானிருக்கேன்.''
""ரூம்ல என் வொய்ஃப் படுத்திருப்பா. ஒரு டின் கெரசினை அவள் படுக்கையில் ஊற்றி தீ பற்ற வை. நான் வெயிட் பண்றேன்.''
""ஐயா....''
""பத்துலட்சம் வேணுமின்னா செய். நான் போன்ல வெயிட் பண்றேன்''
""அய்யா நீங்க சொன்னபடியே செஞ்சுட்டேன்''
""வெரி குட். இப்ப நீ வீட்டின் முன்கதவைப் பூட்டிட்டு பின் வாசல் வழியாக வெளியேறு.''
""ஐயா, நம்ம வீட்டுக்கு ஒரு வாசல்தான இருக்கு?'
""அடடா... ஸாரி... ராங் நம்பர்''

கூடல் பாலா said...

செம நக்கல் மாப்ள .......

rajamelaiyur said...

கலக்கல் ...

Unknown said...

படத்தை பார்க்கும் போதே கண்ணை கட்டுதே யாருமே இல்லையா இவர் கிட்ட இருந்து எங்களை காப்பாத்த

Anonymous said...

இந்திய சினிமாவின் எதிர்கால சூப்பர் ஸ்டாரை இப்படி கிண்டல் பண்ணலாமா சார்

கடம்பவன குயில் said...

வெரிகுட். ரொம்பநாள் சென்று வந்தாலும் என்ன ஒரு அலப்பறையான உபயோகமான பதிவோட வற்றீங்க...

வருக...வருக...

Prem S said...

கடந்த வாரம் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பவர் ஸ்டாரை பேட்டி எடுத்தார்கள் சினிமா 360 நிகழ்ச்சியில் ..ரானா படம் வரும் பொது இவரின் படமும் வெளியிடுவாராம் பேட்டி சிரிக்க வைத்தது பார்க்காதவர்கள் youtube இல் பார்க்கவும் வயிறு குலுங்க சிரிக்கலாம் ..

SURYAJEEVA said...

//'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் !!!!!!!'//உள்குத்து
வெளிகுத்து
ஊமை குத்து

செங்கோவி said...

இத்தனை நாளா பவர் ஸ்டார் பத்தித் தான் ஆராய்ச்சி நடந்துச்சா?

Anonymous said...

செம நக்கல்...WELCOME BACK SIVA..

சுதா SJ said...

யோவ்.... எங்க பவர் ஸ்டார் மேலேயே கைய வைச்சுட்டியா..???? இதே இந்தியாவா இருந்தா தமிழ் நாடே அதிரும் தெரியும் இல்ல .....

KANA VARO said...

அடே யாருடா இது, எங்க வீட்டு சின்ன குழந்தை பார்த்து பயன்திட்டுது

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

என்னமோ போங்க...

sarujan said...

கலக்கல்

அம்பலத்தார் said...

கானமயில் ஆடக் கண்ட வான்கோழி தானும் ஆடியதாம். என்ன கொடுமையடா இது.

அம்பலத்தார் said...

கானமயில் ஆடக் கண்ட வான்கோழி தானும் ஆடியதாம். என்ன கொடுமையடா இது.

பி.அமல்ராஜ் said...

மைந்தன் கலக்கல்.. படங்கள் பலே பலே.. எப்பிடி பாஸ் உங்களால இப்பிடி செமையா மொக்கை...... சூப்பர் பாஸ்..

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...