Monday, August 27, 2012

சமந்தா-கொள்ளையடிக்கும் பேரழகி..!

                                   


 தேவயாணி சிம்ரன் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளாக சில வருடங்களுக்கு போட்டி போட்டு வலம்வந்தனர்.இவர்களை தவிர சில நாயகிகள் வருவதும் செல்வதுமாய் இருப்பார்கள்.ஒரு சில படங்களில் நடிப்பதும் அப்புறம் மார்கெட்டை இழந்து வெளியே செல்வதுமாக இருப்பதனால் சில வருடங்களுக்கு தொடர்ச்சியாக முன்னணி நாயகியாக இருப்பது என்பது பலருக்கும் வாய்ப்பதில்லை.அவர்கள் குறுங்காலத்துக்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டு மறைந்துவிடுவார்கள்.அந்த வகையறாவில் சேர்வது ஹன்சிகா,அமலா பால் போன்றோர்.இதே போல சமந்தாவும் நீண்ட காலத்துக்கான நாயகியா இல்லை குறுங்கால கனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பொதுவாக பார்த்தால் சிலசமயங்களில் கொள்ளையடிக்கும் அழகியாகவும்,வேறு சில சமயங்களில் "இவளையா இவ்வளவுக்கு தூக்கிவைத்து கொண்டாடினோம்?" என்கின்ற அளவுக்கும் மாறி மாறி இப்போதைய இளசுகளை ஆட்டிப்படைக்கும் நாயகி தான் சமந்தா என்கின்ற "சமந்தா ருத் பிரபு"(இவரது உண்மையான பெயர் "யசோதா "என்கின்ற விடயம் பலருக்கு தெரியாதது).சினேகா,காஜல்'க்கு கண்கள் மற்றும் சிரிப்பு அழகென்று கூறுவோரால் சமந்தாக்கு எது அழகு என்று தனித்தனியாக கூறமுடியாது போகும்.தேவையான அனைத்து "அம்சங்களும்" ஒன்று சேர பொருந்திய ஒரு பொருத்தமான கலவை தான் இந்த சமந்தா!

இருபத்தி ஐந்து வயதாகும்(பிறப்பு:ஏப்பிரல் 28 ,1987) சமந்தாவின் பெற்றோர் மலையாள மற்றும் தெலுங்கு கலப்பாகும்.ஆனால் சின்ன வயதிலிருந்து வளர்ந்தது என்னமோ சிங்கார சென்னையில்தான்.சென்னை தியாகராஜ  நகரில்(தி நகர்) உள்ள ஹோலி ஏஞ்செல்ஸ்(Holly Anjels) மேல்நிலை பள்ளியில் பாடசாலை கல்வியையும் பின்னர் ஸ்டெல்லா மேரிஸில் உயர்கல்வியும் கற்ற சமந்தா ஒரு வணிகவியல் இளங்கலை பட்டதாரியாவார். பின்-பதின்ம வயதுகளில் மொடலிங் துறையில் நுழைந்ததன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான அடித்தளத்தை தானாகவே அமைத்துக்கொண்டார். 

                              

இவரது திரைவாழ்க்கை ஆரம்பித்தது ரவிவர்மனின் "மாஸ்கோவின் காவேரி" என்கின்ற ஒரு அட்டு மொக்கை படத்தின் மூலமாய்.படத்தை பார்த்துவந்தவர்கள் கூறியதும்,திரைவிமர்சனம் எழுதிய பதிவர்கள் கிறுக்கியதும் ஒரே விஷயம் தான்.படத்தை பார்க்க கொடுத்த காசுக்கு பயனுள்ள விஷயம்னா படத்தோட ஹீரோயின் என்பது தான்.படம் சொதப்பினாலும்,படம் பார்த்தவர்கள் மனதில் இடம் பிடித்தார் சமந்தா.

தெலுங்கில் இவரது முதலாவது படம் "ஏ மாயா சேஸாவே" என்கின்ற கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு வெர்சன்.விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்புவின் நண்பியாக சில இடங்களில் வந்திருந்தாலும் அதன் தெலுங்கு வெர்சனில் தெலுங்கு மக்களை கொள்ளையடித்த "ஜெஸ்சி" சமந்தா தான்.தமிழை போலவே தெலுங்கிலும் படம் தாறு மாறு ஹிட் அடித்தது(இந்தியில் சொதப்பியது வேறுகதை).தெலுங்கில் அந்த வருடத்துக்கான பிலிம் பேரின்(Film Fare) சிறந்த அறிமுக நாயகி விருதை இப்படம் சமந்தாக்கு பெற்று தந்தது.

அதற்க்கு பின்னர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்'இன்  "பிருந்தாவனம்" படத்தில் நடித்தார்.இதில் காஜல் கூட நடித்திருந்தார்.இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்.படம் ஹிட்டு.அதற்க்கு பின்னர் மகேஷ் பாபுவுடன் இணைந்து "தூக்குடு" என்கின்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தார் சமந்தா.தெலுங்கில் நூறு கோடி வசூலை தாண்டிய முதல் படம் இது தான்.பிலிம் பேர் விருதுகளில் அந்த வருடத்துக்கான(2011)சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர்,சிறந்த படம்,சிறந்த இசையமைப்பாளர் என்று மொத்தமாக ஆறு விருதுகளை அள்ளியது.சமந்தா சிறந்த நாயகிக்கான போட்டியில் இருந்தாலும் கிடைக்கவில்லை. இந்த படம் பெரிய அளவிலான பெயரையும் மார்கெட்டையும் சமந்தாக்கு பெற்று தந்தது.தனது சம்பளத்தையும் கோடியாக உயர்த்திக்கொண்டார்.

                       

தமிழில் சமந்தா கதாநாயகியாக நடித்த இரண்டாவது படம் பானா காத்தாடி.முரளியின் மகன் அதர்வாவோடு நடித்த சமந்தா 2010 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்காக(VIjai Awards) பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.அண்மையில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் "நான் ஈ"படத்தின் நாயகியும் சமந்தாவே தான்.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் "கடல்"படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்,ஷங்கரின் அடுத்த படமான "ஐ"படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று சமந்தா காட்டில் ஒரே அடை மழை அடிக்கும் சமயம் பார்த்து கடல் பட ஷூட்டிங்கின் உப்பு நீர் ஒத்துக்கொள்ளாது போது சரும நோய் வந்தது சமந்தாக்கு.எங்கே அழகு கெட்டுவிடும் என்கின்ற பயத்தில்(எங்களுக்கே திக்கு திக்கின்னு இருக்கு) ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் இருந்து விலகிக்கொண்டார் சமந்தா.எந்த ஒரு நடிகையும் எதிர்பார்த்து எங்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் இரண்டையும் தனது சரும நோய் காரணமாக இழக்கவேண்டி ஏற்பட்டது சமந்தாக்கு.இவை இரண்டும் நடந்திருந்தால் சமந்தா அடுத்த சிலவருடங்களின் தமிழின் தவிர்க்க முடியாத கதாநாயகியாய் மாறி இருந்திருப்பார்.

அடுத்ததாக கவுதம் மேனனின் "நீ தானே என் பொன்வசந்தம்"படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.தெலுங்கு தமிழ் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்தப்படத்துக்கு ஹீரோக்கள் வேறு வேறு என்றாலும் நாயகி கவுதமின் ஆஸ்தான நாயகி சமந்தா தான்!!கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகிகள் அழகாக தெரிவார்கள்.அது மின்னலே ரீமா சென்னோ,வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியோ,வி.தா.வ ஜெஸ்சியாக  இருந்தாலும் சரி படத்தில் நாயகிகள் எப்போதுமே கொள்ளையடிப்பார்கள்.தமிழில் முன்னணியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சமந்தா தெலுங்கிலும் வெற்றிகளை நோக்கி தான்!"ராம் சரண் தேஜா"வின் அடுத்த மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் படமான "யேவடு"(Yevadu) படத்தில் காஜல் அகர்வால்,எமி ஜாக்சனோடு சமந்தாவும் நடிக்கிறார்.அத்துடன் மகேஷ் பாபுவின் "சீதம்மா வகிட்லோ சிரிமல்லே சேட்டு"(Seethamma vakitlo sirimalle chettu)(என்ன இழவு பெயரோ!)படத்திலும் ஹீரோயின் நம்ம சமந்து குட்டி தான்!மேலும் சித்தார்த்துடன் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ரசிகர்களின் ஏகப்பட்ட ஆவலை தூண்டியிருக்கும் இந்த படங்கள் வெளிவந்தால் சமந்தா இன்னமும் சில காலத்துக்கு ரசிகர்களால் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே சிலர் இரவு குட் நயிட் சொல்லும் போது சமந்தாவின் படத்தை அனுப்பி அப்புறமாக குட் நயிட் சொல்லிவிட்டு நிம்மதியாக தூங்கிவிடுகின்றனர்.ஆளுக்காள் சமந்தாவுக்காக அடிபவதையும்,ஒவ்வொரு குறுக்கு சந்திலும் சமந்தாவுக்கான ரசிகர் மன்றம் உருவாக்குவதிலும் மக்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து வருகின்றனர்.அவர்களுள் நானும் ஒருவன் என்று தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. :)திரிஷாவுக்கும் கல்யாணம் என்று பேச்சுக்கள் பரவலாக அடிபடுவதால் அடுத்து தமிழின் முதன்மை நாயகியாக காஜலை பின் தள்ளி "நம்ம"சமந்தா வலம்வர வாய்ப்புகள் பிரகாசமாய் தென்படுகின்றன!!

டிஸ்கி:ஹன்சிகா-அமலா பால்'னு காலம் காலமாக இந்த சமூகத்துக்கு "ஜொள்ளு"சேவை நடத்தி வரும் ஒரே காரணத்தால் தான் இந்த பதிவு எழுதப்பட்டது.அதைவிடுத்து இவன் சமந்தா பின் அலைகிறான் என்று சமூகம் கூறிவிடக்கூடாது பாருங்கள்.Post Comment

13 comments:

கோவி said...

சம்சு..(காபிரைட் பெறப்பட்டது). சமந்தாவிர்க்கு நான் வைத்த பெயர்..

மைந்தன் சிவா said...

/கோவி said...
சம்சு..(காபிரைட் பெறப்பட்டது). சமந்தாவிர்க்கு நான் வைத்த பெயர்..//

இப்பிடியே ஆளுக்காள் ஒவ்வொரு பெயரை வையுங்கப்பா..
சம்மு
சம்சு
ஜம்மு
சம்மி குட்டி
பொம்மி குட்டி
சமந்து குட்டின்னு... :)

மயிலன் said...

தம்பி போங்க தம்பீ.... நாங்கெல்லாம் அப்பவே அப்புடி...
http://cmayilan.blogspot.com/2012/07/blog-post_22.html

கோவி said...

பெயரை வைத்துக்கொள்வதில் தவறில்லை..( யார் யாரோ யார் யாரையோ வைத்துக்கொள்கிறார்கள்)

Rizi said...

அண்ணே சமந்தா அழகைப்பத்தி நாங்க எப்பவோ புகழ்ந்துட்டம்..நீங்க லேட்!!

http://funnyworld-star.blogspot.com/2012/05/blog-post_23.html

Yoga.S. said...

வணக்கம் மைந்தரே!இளைஞர்களுக்கு உபயோகப்படும் அருமையான ஒரு பகிர்வு(தகவல் களஞ்சியம்?).இவரது உண்மையான பெயர் "யசோதா "என்கின்ற விடயம் பலருக்கு தெரியாதது.////!!!!!!!!!!!!!!

வரலாற்று சுவடுகள் said...

சமோசான்னு கூட பேர் வைக்கலாமே? நல்லாத்தானே இருக்கு :)

Prem Kumar.s said...

சமந்தாக்கு சரும நோயாமே நீங்க treatment பாக்க கூடாதா

கிஷோகர் said...

அண்ணிக்கு செலீனா கொளையடிகும் பேரழகி இன்னிக்கு சமந்தாவா? நடத்துங்கடா!

ஹேமா said...

இப்பத்தானே விளங்கிச்சு சமந்தா & சமந்தா....மைந்து !

Kiruththikan Yogaraja said...

அட பாவிகளா போகிறபோக்கைப்பார்த்தால் சமந்தாவுக்கு சமபோஸ என்று பெயர்வைத்தாலும் வைப்பீர்கள்போல இருக்கே...

மாத்தியோசி - மணி said...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சமந்தாவை நன்கு அலசி விட்டீர்கள்! - ஐ மீன் பதிவில்....!

பி.அமல்ராஜ் said...

ஹன்சிகா-அமலா பால்'னு காலம் காலமாக இந்த சமூகத்துக்கு "ஜொள்ளு"சேவை நடத்தி வரும் ஒரே காரணத்தால் தான் இந்த பதிவு எழுதப்பட்டது.அதைவிடுத்து இவன் சமந்தா பின் அலைகிறான் என்று சமூகம் கூறிவிடக்கூடாது பாருங்கள்.//

அவ்வ்வ்வவ்...

Related Posts Plugin for WordPress, Blogger...