படத்துக்கும் பின் வருவதுக்கும் சம்பந்தமே இல்லைங்க..
கவிதையே தெரியுமா..
உன் பிறப்பிடம் எதுவோ?
நீ பிறந்த காலம் தான் எதுவோ?
அன்று..
கவிஞர்கள் பிறந்தனர்..
அன்று..அவர்கள்
படைத்தது
காப்பியமாச்சு ..
காவியமாச்சு!!
கம்பரால்
கம்பராமாயணமாயிற்று!!
பாமரர்
விளக்கமற்று
நின்றார்..
படித்தோர் கூட
விளக்கலுரை பார்த்து
விளங்கலுற்றார்!!
இன்று..
கவிஞர்கள் உருவாகின்றனர்
உருவாக்கப்படுகின்றனர்..
ஒவ்வொரு பதிவரும்
கவிஞனாவான் என்று
சிந்த்தித்திருப்பாயா
கவிதையே..??
உன்னைச் சுருக்கி
ஹை-கூ என்றார்..
சற்றே பெரிதானால்
பாடல் என்றார்..
என்டர் தட்டி
என்டர் கவிதை என்றார்கள்!!
கவிதையே இது உந்தன்
கலிகாலமா...?
இல்லை
கவிதையின் விடிகாலமா?
காலத்தின் கரங்களில்
பாரத்தை தருகிறேன்!!
ஒரு சின்ன காமெடி தாங்க..சத்தியமா எந்த உள்குத்தும் இல்லைங்கோ!!
பிடிச்சா உங்க ஒட்டு,பின்னூட்டங்களை மறக்காமல் விட்டு செல்லுங்கள்!!
10 comments:
உள்குத்து இல்லையோ???நல்லா குத்துறீங்கப்பா!
அட..சத்தியமா இல்லைங்கோ!!
நல்ல தகவல்
உண்மையான கவலை அண்ணே...
ஆனா கேபிள் அண்ணைக்கு தெரிஞ்சா ரூம் போட்டு அடிப்பார்!!
nis (Ravana) said...
நல்ல தகவல்//
நன்றி பாஸ்.
rasigan said...
உண்மையான கவலை அண்ணே...
ஆனா கேபிள் அண்ணைக்கு தெரிஞ்சா ரூம் போட்டு அடிப்பார்!!//
அதான் முதல்லையே சொன்னானுங்கோ இது ஜஸ்ட் காமேடீங்கோ!!
நல்லா இருக்கு அண்ணே
ஒவ்வொரு பதிவரும்
கவிஞனாவான் என்று
சிந்த்தித்திருப்பாயா
கவிதையே..//
உண்மைதான் நண்பா!!
Anonymous said...
நல்லா இருக்கு அண்ணே//
நன்றி நண்பா
jorge said...
ஒவ்வொரு பதிவரும்
கவிஞனாவான் என்று
சிந்த்தித்திருப்பாயா
கவிதையே..//
உண்மைதான் நண்பா!//
நன்றி பாஸ்
Post a Comment