
நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..
"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!
மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!
மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!
சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!
மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"
சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!
பிடித்திருந்தால் பதிவு உங்களுக்கு ,பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் எனக்கு..!!
8 comments:
உண்மையான கவலை அனைவருக்கும்,மனங்கள் மாறாத வரைக்கும் ஒழியப் போவதில்லை!!
வெறி பிடித்த கவிதை சாதியை ஒழிப்பதில் வாழ்த்துக்கள்
CLICK AND READ THE LINK
1.
இந்து மதம் எங்கே போகிறது?
2. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.
...
ஃஃஃஃஃஃமனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!ஃஃஃஃ
அருமை சகோதரா...
jorge said...
உண்மையான கவலை அனைவருக்கும்,மனங்கள் மாறாத வரைக்கும் ஒழியப் போவதில்லை!//
உண்மைதான்!
யாதவன் said...
வெறி பிடித்த கவிதை சாதியை ஒழிப்பதில் வாழ்த்துக்கள்//
நன்றி யாதவன்
ம.தி.சுதா said...
ஃஃஃஃஃஃமனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!ஃஃஃஃ
அருமை சகோதரா...//
நன்றி மதி
அருமை நண்பா... நேரம் கிடைத்தால் என் வலை பதிவு குறித்து உங்க கருத்து சொல்லுங்க.... kirankavithaigal.blogspot.com
Post a Comment