Wednesday, September 22, 2010

விடியல் இன்னும் விடியவில்லை!!



தொலைந்து போன
பசுமைகள்..நினைவில்
இல்லை
கனவுகள் கூட


அன்பே..
அருகில் தள்ளிப்பார்..
சம்பவத்தின் போது
நம் பிள்ளை
அங்கு தான்
நின்றுகொண்டிருந்தது..!!



வாழ்வில் ஒரே
இலட்சியம்..
கல்வி சினிமா கிரிக்கெட்'டா..??
அமைதியான வாழ்வில்
அத்தியாவசிய
உணவு
உடை
உறையுள்!!


உங்ககிட்ட என்ன
உலகத்திட்டயே
புலம்பி ஒண்ணுமாகல..
காயப்பட்ட மனச
புகை போட்டாச்சும்
தேத்துவம்..

இதையெல்லாம் கவிதைஎண்டு நம்பி பாக்க வந்தீங்க பாருங்க..
உங்களையெல்லாம் பாக்க பாவமா இருக்கு...!!
இவற்றைப்பற்றி ஒரு தனிப் பதிவு போடலாம் என்டிருக்கன்..பாப்பம்..என்னுடைய அம்பதாவது பதிவில சொல்லுறேனுங்கோ !

Post Comment

5 comments:

Jana said...

நல்லா இருக்கு :{

AnushangR said...

சிறிசா இருந்தாலும் சிறப்பா இருக்கு...
இது தான் ஹைக்கூ கவிதை என்றதோ!
ஏன் சார் நல்ல ஒரு விடயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போது புகையை கொண்டுவாறீங்க?நண்பர் ஞாபகமோ...

Unknown said...

Jana said...
நல்லா இருக்கு ://
நன்றி அண்ணே

Unknown said...

AnushangR said...
சிறிசா இருந்தாலும் சிறப்பா இருக்கு...
இது தான் ஹைக்கூ கவிதை என்றதோ!
ஏன் சார் நல்ல ஒரு விடயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போது புகையை கொண்டுவாறீங்க?நண்பர் ஞாபகமோ..//
ஹஹா ஓஹோ அவரோ??

தமிழ்பாலா said...

அன்புத் தோழர்,மைந்தன் சிவா அவர்களுக்கு
தோழமையோடு,
தமிழ்பாலா--
தோழரே !
உங்கள் படைப்பு
இப்படி இருந்தால்
இன்னும்
நன்றாய் இருக்கும்! ----------

விடியல் இன்னும் விடியவில்லையே!
ஈழத்து மண்ணில் இனவெறித் தாக்குதலாலே!
தொலைந்து போன பசுமைகள்
நினைவில் இல்லை
கனவுகள் கூட
கருப்பு வெள்ளையாகவே!
பசுமைதனைக் காணாமலே
மண்ணோடு மண்ணாகவே
எத்தனை ஆயிரம் பேரோ?--தங்களின்
சுற்றங்களை சொந்தங்களை
சந்திப்போம் என்ற
நினைவுகளோடே!

விடியல் இன்னும் விடியவில்லையே!எங்கள் ஈழ
விருட்சம் இன்னும் வளரவில்லையே!
அன்புடன் தமிழ்பாலா---

Related Posts Plugin for WordPress, Blogger...