சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்றேன் பேரூந்தில்.
செல்லும் வழியில் தான் எத்தனை மாற்றங்கள் என் கண் முன்னே!!
மனதை ஈரமாக்கிய சம்பவங்களை உங்களுடன் பகிரலாமென்று..
கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில்
கால அரக்கனின்
நினைவுச் சின்னங்கள்..
துகிலுரியப்பட்ட
வீடுகள்
கட்டடங்கள் எச்சங்களாய்...!!
களி மண் சகதியால்
குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..!
சேவைக்கால மூப்பு காரணமாக
ஓய்வு வழங்கப்பட்ட
பெரிய நீர்த்தாங்கி
மல்லாக்காய் படுத்து
மீளாத்துயில் கொள்கிறது..!
எல்லையற்ற காணிகள்..
பிடிப்பற்ற வாழ்க்கை..
துளிகளாக சிலர் கண்களில்..!
தூக்கத்தை
கெடுப்பதற்கென்றே
உருவாக்கப்பட்டது போல்
யாழ்-கொழும்பு நெடுஞ்சாலை..
இனிய பாடல்கள் தாலாட்டிய போதும்
தூக்கம் கைக்கெட்டவில்லை..!!
ஒரு அரச மரம்
விட்டு வைக்காமல்
புத்தரின் அனுக்கிரகம்
அருகில்,
பாழடைந்த காளி கோவிலுக்கு
முத்தாய்ப்பாய் ஒரு
மின் வெளிச்சம் மட்டும்!
தனிமையில் வேதனை
அனுபவிக்கின்றன
மின்சார கம்பங்கள்
வீதி நெடுகிலும்..
அதனை எண்ணுவதில்
என் தனிமை
சலனப்பட்டது!
வா வா என
வரவழைத்த பனைகள் எங்கே?
தென்றல் வீசிய
தென்னந்தோப்புகள்எங்கே?
"நெல்லாடிய நிலமெங்கே"
பாடல் மனதை வருடியது..!!
வேதனைகளும் ரணங்களும்
மனதில்..
இயற்கை ரசிகனுக்கு
ஏமாற்றமே மிச்சம்!
நானொன்றும் செயற்கை அழிவுகளின்
ரசிகன் இல்லையே!
பக்தி பரசவத்தில்
பயணத்தை 30 நிமிடம்
தாமதிக்க வைத்த கனவான்களும்
மாற்றான் இடத்தினுள்
தங்கள் தலையை புகுத்தி
படுத்த நண்பர்களுமாய்
பயணம்!!
எண்ணக்கிடக்கைகள்
ஏராளம்..
முடிந்தால் வந்து
என் மனதை படியுங்கள்
அரவமற்ற இராப்பொழுதில்!!
பதிவு மற்றவர்களையும் சென்றடைய இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் உங்கள் வாக்குகளை அளித்துச்செல்லுங்கள்..ஏதும் சொல்ல விரும்பின் பின்னூட்டங்களாய்..!
12 comments:
ம்ம்ம் உண்மையின் உளறல்கள்..(பெயர் சொல்ல விருப்பமில்லை)
அத்தனையும் உண்மை,,,, நினைக்கும் போதே மிகவும் வேதைனயாக உள்ளது...
nice
அருமை... அருமை...எதிர்பார்த்த ஒன்று தான், ஆனாலும் வெளிப்பாடும் பிரதிபலிப்பும் சிறப்போ!சிறப்பு!!
கல்லிதயத்தையும் கலங்க வைக்கும் வெளிப்படை உண்மைகள்.
வாழ்த்துக்கள் நண்பரே...
Anonymous said...
ம்ம்ம் உண்மையின் உளறல்கள்..(பெயர் சொல்ல விருப்பமில்லை)//
நன்றி
வெறும்பய said...
அத்தனையும் உண்மை,,,, நினைக்கும் போதே மிகவும் வேதைனயாக உள்ளது...//
உண்மைதான் நண்பா
lavan said...
nice//
நன்றி லவன்
AnushangR said...
அருமை... அருமை...எதிர்பார்த்த ஒன்று தான், ஆனாலும் வெளிப்பாடும் பிரதிபலிப்பும் சிறப்போ!சிறப்பு!!
கல்லிதயத்தையும் கலங்க வைக்கும் வெளிப்படை உண்மைகள்.//
வாழ்த்துக்கள் நண்பரே...
ம்ம்ம் கவலைதான்..
// சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்றேன் பேரூந்தில்.
ஏன் இவ்வளவு காலத்தின் பின். சொந்த ஊர் யாழ்தானே?
பதிவு நன்று
கார்த்தி said...
// சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்றேன் பேரூந்தில்.
ஏன் இவ்வளவு காலத்தின் பின். சொந்த ஊர் யாழ்தானே?
பதிவு நன்று//
ஏதாச்சும் சாதிச்சுட்டு போவமெண்டு பாத்தா...முடியல..அதான் போய்..!ஹிஹி
அருமை !!
மொக்கைப் பதிவு இட்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
மொண்ணைப் பின்னூட்டம் இட்ட நபருக்கு
என்று சொல்கிறீர்கள் :-)
Post a Comment