Wednesday, July 31, 2013

'தல'அஜித் சென்றுகொண்டிருக்கும் பாதை சரி தானா?



அஜித்தினதோ,விஜய்யினதோ,சூர்யாவினதோ சரி,தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறதென்றால்,முக்கிய காரணம் குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் தான். ஆனால் ஒரு படம் அதிக விலை கொடுத்து தொலைக்காட்சிகளினால் வாங்கப்படுகிறதாயின் அதற்கு மிக முக்கிய காரணம் 'பேமிலி ஆடியன்ஸ்'தான்.சனி ஞாயிறுகளில் குடும்பமாக இருந்து பார்த்து மகிழ்பவர்களை டார்கட் பண்ணி,எந்தப்படத்தை,யார்படத்தை போட்டால் வேறு சேனல்களுக்கு மாற்றாமல் மக்கள் பார்ப்பார்கள் என்று அறிந்து, தெரிந்து தான் சில படங்களின் தொலைக்காட்சி உரிமங்களுக்காக சேனல்கள் அதிக விலை தருகின்றன.அந்த உரிமங்களுக்கு செலுத்தப்பட்ட விலையை விளம்பரங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும்.கூடவே தொலைக்காட்சி ரேட்டிங்கும் கருத்தில் கொள்ளப்படும்.

சனி ஞாயிறு தினங்களாக இருக்கட்டும்,அல்லது முக்கிய பண்டிகை தினங்களாக இருக்கட்டும், குறைந்தது ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக விஜய் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்.விஜய் படங்களின் உரிமங்களை வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்தே, ரசிகர்களை தாண்டி விஜய் மீதான மக்கள் விருப்பு எத்தகையது என்பது தெரிந்துவிடும். சிறுவயது குழந்தைகள் தொடக்கம் வயதானவர்கள் வரை 'எண்டர்டெய்னர்' என்கின்ற ரீதியில் விஜய் கவர்ந்திருக்கின்ற காரணத்தினால் தான் தொலைக்காட்சி உரிமங்கள் இந்தளவு விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.

விஜய்யின் நண்பன் 12கோடிக்கும்,துப்பாக்கி 14கோடிக்கும்,தலைவா 15 கோடிக்கும், ஜில்லா 18 கோடிக்கும்(சன் டிவி)டிவிக்களால் வாங்கப்பட்டிருக்கிறது (மாற்றான் &பில்லா2 போன்றவை 10கோடிக்கும் குறைவான தொகைக்கு தான் விலை போனது இங்கு குறிப்பிடத்தக்கது.) முருகதாஸுடன் விஜய் இணையும் அடுத்த படம் (எஸ்.ஏ.சியின் வாய் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில்) 20கோடிக்கு விலை போனாலும் வியப்பேதுமில்லை..!பில்லாவை விட மாற்றான் சற்று அதிக தொகைக்கு விலை போயிருக்கிறது.அஜித்தை விட தன் ரசிகர்களை தாண்டி பிறராலும் சூர்யா ரசிக்கப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை தான்.சூர்யாவின் அண்மைக்கால பேச்சுக்களை கேட்டிருந்தால் புரிந்திருக்கும்,'குழந்தைகள் விரும்பி என்னை ரசிக்கிறார்கள்" என்பதை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.விஜய்க்கு எஸ்.ஏ.சி விளம்பரதாரர் என்றால் சூர்யாவுக்கு சூர்யாவே தான் விளம்பரதாரர்.என்னதான் வெறுக்கப்பட்ட ஹீரோவாக காட்டிக்கொள்ளப்பட்டாலும்,வயது வேறுபாடின்றி,ரசிகர்களையும் தாண்டி, பலராலும் விரும்பப்படுகின்ற ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவு.அப்படி பலருக்கு பிடித்தமானதாக இருப்பதனாலேயே விஜய் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கின்றார்.

அஜித்தின் கடந்த பதினைந்து படங்களிளான வில்லன்,ஆஞ்சனேயா, ஜனா,அட்டகாசம்,ஜீ, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார்,கிரீடம்,பில்லா,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா2 ஆகிய படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் எஞ்சுவது என்னமோ பில்லா, மங்காத்தா,வரலாறு என்று வெறும் மூன்று-நாங்கு படங்கள் தான்.நண்பனில் விஜய் எந்தளவு அண்டர்ப்ளே பண்ணினாரோ,அது போல கிரீடத்தில் அஜித் பண்ணியிருந்தார்.அஜித் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அது பிடிக்கவில்லை.(அழகிய தமிழ் மகனில் விஜய் நெகட்டிவ் ரோல் பண்ணியிருந்தது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை,ஆனால் மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது!)அதற்கு பிறகு வந்த படங்களை பார்த்தால்,பில்லா கொடுத்த பிரமாண்ட வெற்றியால் ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா 2 என கடந்த ஐந்து படங்களுமே அஜித்தை ஒரே போர்முலாவுக்குள் சிக்க வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான்.அடுத்து வரும் 'ஆரம்பம்'கூட அதே மாதிரியான போர்முலா என்று தான் ஸ்டில்களை பார்க்கையில் தெரிய வருகிறது.

எத்தனை தோல்வி என்றாலும்,அது ஒரே போர்முலா என்றாலும் கூட நாங்கள் 'தல'யை ரசிப்போம் என்பது அஜித் ரசிகர்களின் குரலாக இருந்தாலும்,அதே நீலம்,கறுப்பு,வெள்ளை படங்களையும்,அதே கோர்ட்,பைக், க்ளாஸ்,நரைத்த முடி கதாபாத்திரங்காளையும் அவர் ரசிகர் தாண்டி எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்று கேட்டால் மிக மிக குறைந்த அளவினராக தான் இருப்பார்கள்.அஜித் படங்களுக்கான தொலைக்காட்சி உரிமங்கள் விலை போகின்ற அளவை வைத்தே அதனை கணித்துவிடலாம்.அஜித் இயல்பாக இருக்கிறேன் பேர்வழி என்று தன்னுடைய கேரியரை பாழாக்கிக்கொள்கிறார்.42 வயது ஆனால் பார்த்தால் 50 வயது மதிக்கலாம்.நான்கு ஐந்து வயது குறைந்த விஜய்-சூர்யாவை பாருங்கள் என்ன மாதிரி உடம்பை மெயிண்டெய்ன் செய்கிறார்கள் என்பதை!இன்னமும் அவர்கள் இருவரும் 30 வருடங்கள் கூட இண்டஸ்ரியில் இருந்துவிட முடியும்.ஆனால் அஜித்தின் உடம்புக்கும்,அவரின் அக்கறை யீன்மைக்கும் இன்னமும் எத்தனை வருடங்கள் அவரால் தாக்குப்பிடிக்க முடியும்?

விஜய்-அஜித் என்று இருந்த போட்டி இப்போது மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது விஜய்-சூர்யா என்பதாக.காரணம்?சூர்யா அடுத்தடுத்து கொடுத்து வரும் வெற்றிப்படங்கள். ஹாரி,கவுதம் மேனன்,முருகதாஸ் என்று திறமையான இயக்குனர்களுடன் சேர்ந்து இயங்குவது மட்டுமல்லாமல்,சிறந்த படங்களையே தெரிவு செய்து நடிக்கிறார் சூர்யா.இது அஜித் விஜய் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.பேரழகன் தொடக்கம் சிங்கம்2 வரையிலான 15 படங்களில் வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம்,கஜினி என்று ஒன்பது-பத்து படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய் நடித்த கடந்த 16 படங்களில் (கில்லி தொடக்கம் துப்பாக்கி வரை),திருப்பாச்சி, போக்கிரி,நண்பன்,கில்லி,துப்பாக்கி என்று எட்டு-ஒன்பது படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய்யும் சூர்யாவும் 8 தொடக்கம் 10 படங்கள் வெற்றியை கொடுக்க குறித்த காலப்பகுதியில் வெறும் 4 ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் அஜித்தை சூர்யா மெல்ல மெல்ல ஓவர்டேக் செய்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அஜித் ரசிகர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அஜித் மெல்ல மெல்ல தமிழ் இண்டஸ்ரியை விட்டு ஓரம்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.!

நரைத்த முடிக்கும்,தாடிக்கும் டை அடிக்காமல்,இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி என்று அஜித் இப்போது நடிப்பதை அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் விரும்பலாம்..அஜித் ரசிகைகள் விரும்பலாம்.திரைத்துறையில் நிலைத்திருக்க வேண்டுமானால்(ஹீரோவாக!)அந்த இயல்பை மறைத்துத்தான் ஆகவேண்டும்.ரஜனிக்காந்த்க்கு கூட அது பொருந்தித்தான் ஆகிறது! கூடவே உடம்பிலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.கமல்-ரஜனிக்கு பின்னாடி இருக்கும் அஜித்-விஜய் என்ற இருக்கும் போட்டியை உடைப்பதன் மூலம்தான் தானும் முன்ணனி நாயகனாகலாம் என்பது சூர்யா எப்போதோ போட்டுவிட்ட கணக்கு.அதற்கு பலியாகிக் கொண்டிருப்பது அஜித் தான்! ஒரு கால கட்டத்தில் அது விஜய்யாக இருந்தது.ஆதி-குருவி-வில்லு-சுறா என்று தொடர்ச்சியான காவியங்கள் விஜய் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜய் தான் ஓரம்கட்டப்படுவார் என்று நினைத்திருந்தேன்.காரணம் இணைய எதிர்ப்பும் விஜய்க்கே எப்போதும் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் காவலன்'னில் தன்னை மாற்றிக்கொண்ட விஜய் வேலாயுதம்-நண்பன்-துப்பாக்கி என்று வேறுபட்ட ஹிட் படங்களை கொடுத்து அந்த ஆபத்திலிருந்து வெளியேறிக்கொண்டார்.தலைவா-ஜில்லா சொதப்பினாலும் அதற்கடுத்து முருகதாஸ் கூட படம் பண்ணுகிறார் விஜய்.அது நிச்சயம் ஹிட் அடிக்கும்.

2008-2013 வரையிலான ஆறு வருட காலப்பகுதியில் (ஆரம்பம் அடுத்த பொங்கல் தான்)வெறும் நான்கு படங்களில் மட்டுமே அஜித்தினால் நடிக்க முடிந்திருக்கிறது!இத்தனைக்கும் வருடக் கணக்கில் படம் பண்ணும் ஷங்கர்,பாலாவுடன் கூட இணைந்திருக்கவில்லை!அதில் ஒரு ஹிட் மூன்று தோல்வி!இதே காலப்பகுதியில் சூர்யா ஏழு படங்களில் நடித்திருக்கிறார்,அதில் ஆதவன் மட்டும் தான் சரியாக கல்லா கட்டவில்லை.மாற்றான் தோல்வி கிடையாது.இதே ஆறு வருட காலப் பகுதியில் விஜய் 8 படங்களில் நடித்திருக்கிறார்,அதில் வில்லு&சுறா தோல்விப்படம். காவலனில் இருந்து துப்பாக்கி வரை தொடர்ச்சியான ஹிட் படங்கள்.எட்டாவது படம் தலைவா அடுத்த 9 ஆம்தேதி ரிலீஸ் ஆகிறது.ஆக கடந்த ஆறு வருடங்களில் வெறும் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்திருக்கும் அஜித் ஏதோ ஒரு தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை சிற்றறிவு உள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியும்!இல்லை தல எப்படி இருந்தாலும் ரசிப்போம் என்கிறீர்களா?நீங்கள் தான் 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!

பாஸ் என்கின்ற பாஸ்கரனில் 'அந்த கூலிங் க்ளாசை கழற்றி எறியடா"என்று ஆர்யாவுக்கு சந்தானம் சொல்வதை போல அஜித்க்கு இப்போது யாராவது அந்தவேலையை செய்தாகவேண்டும்.ஏகன்-பில்லா டைப் படங்களிலிருந்தும் அந்த காஸ்டியூம்களில் இருந்தும் வெளியே வந்து வேறுபட்ட படங்கள் பண்ண வேண்டும்.முதலில் விஷ்ணுவரதனுடன் எனிமேல் எந்த படங்களிலும் அஜித் ஒப்பந்தம் ஆகிவிடாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்ணனியில் இருப்பது விஜய் தான்.அஜித் கூட அங்காங்கே கொடுத்து வருகிறார்.ஆனால் சூர்யா எந்த புது இயக்குனர்களுக்குமே வாய்ப்பு கொடுக்காது தங்களை வெற்றிகரமான இயக்குனர்கள் என்று நிரூபித்த இயக்குனர்களிடம் மட்டுமே படம் பண்ணுகிறார்.இத்தனை ஹிட் கொடுத்த பின்பும் ஒரு Safe Zone'இல் இருந்துகொண்டு படம் பண்ணும் சூர்யாவை அஜித் சிறிது காலம் பொலோ செய்யலாம். முன்ணனி இயக்குனர்களுடன் கை கோர்க்கலாம்.அது வித்தியாசமான படங்களை அஜித் தருவதற்கும்,மீண்டு வருவதற்கும் வழிவகுக்கும்.

இன்னமும் டீப்பாக சொல்வதானால்,அஜித் தொப்பையை குறைக்கலாம்.உப்பிப்போயிருக்கும் முகத்தை சரி பண்ணலாம்,ஊதிப் போயிருக்கும் உடம்பை நினைத்தால் குறைக்கலாம்.பாடல்களிலும் சரி,படத்திலும் சரி தேவை இல்லாமல் நடப்பதை விடுத்து,பாடல்களில் ஹீரோயினையும்,க்ரூப் டான்சர்களையுமே எப்போதும் ஆடவிடாது,தலை கொஞ்சமாவது மூமெண்ட்ஸ் போடலாம்.ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடிக்கிறார் ,ஹெலிகாப்டரில் பறக்கிறார் என்றெல்லாம் செய்தி வரும்போது இது ஒரு மேட்டரே கிடையாது.நினைத்தால் அதை கூட செய்யலாம்.அக்கறை எடுத்து ஒரு வருடத்தில் ஒரு படமேனும் ரிலீஸ் பண்ணலாம். வித்தியாசமான படங்களை தெரிவு செய்யலாம்.'தல' கேட்டால் எந்த முன்ணனி இயக்குனர் தான் முடியாது என்று சொல்லப்போகிறார்கள்?

ஒரு முன்ணனி நாயகனான அஜித்,கடந்த ஆறு வருடங்களில் ஒரே ஒரு வெற்றி படம் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பதை கேட்கும்போது, அஜித்துக்கு 'Something is wrong Some where" என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?அந்த 'சம்திங்' என்பதற்குள் பில்லா டைப் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களாகளோ அல்லது அத்தகைய கதைகளையே அஜித்திடம் கொண்டு செல்லும் இயக்குனர்களோ இல்லை அத்தகைய கதைகளினையே தேர்ந்தெடுத்து நடிக்கும் அஜித் கூட உள்ளடங்கி இருக்கலாம்!ஏன் இவர்கள் அனைவருமாக கூட இருக்கலாம். எது எப்படியோ,தன் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதனை எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் அது அஜித் மீண்டுவர வழிசமைக்கும்.அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!


Post Comment

28 comments:

Unknown said...

Sariya sonninga....but Maatran thoalvi illaya?

Anonymous said...

இந்த மாதிரி ஒரு பதிவைத்தான் நான் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தேன். நன்றி.
நீங்கள் சொல்வது உண்மைதான். இடை இடையே சூரியாவை வாரி விட்டுருக்கிரீர்.
அது நீங்கள் விஜய் ரசிகர் என்பதை தெளிவு படுத்துகிறது. அஜித் விஜய்க்கு சரியான ஒரு போட்டியாளர் அல்ல. அவர் எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்ட பட்டுகொண்டிருக்கும் ஒரு நடிகர் . அவர் வேகமான rope கட்டி பறந்து அடிக்கும் சண்டை காட்சிகளை தவிர்த்து கொண்டு வருகிறார். இந்த காட்சிகள் அபத்தமானதாக இருந்தாலும் , குழந்தைகளையும் வெறி கொண்ட சினிமா ரசிகர்களையும் சந்தோசபடுத்த கூடியது. அதனால் அந்த மாதிரி ரசனையுள்ள ரசிகர்களை கவர முடியவில்லை. dance இதுவும் இவருக்கு பிரச்சினை வலியை தரக்குடியது. அஞ்சநேய மங்காத்தா போன்ற படங்களில் சில பாடல்கள் பாருங்கள் ரொம்ப சின்ன movement ஆடி இருப்பார். அவர் சட்டை எல்லா வேர்த்து நனைந்து போய் இருக்கும். அவர் வேகமான சண்டை நடன காட்சிகளுக்கு தனது பங்களிப்பினை தர முடியாத நிலையினில் இருந்து வருகிறார். இதனால்தான் இவரால் ரசிகர்களை தாண்டி பெரிய வரவேற்ப்பை பெற முடியவில்லை. இவ்வளவு பலவீனமான போட்டி விஜய்க்கு மற்றும் அவர் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகி விட்டது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது படங்களில் நக்கல் நையாண்டி வசனங்களை திணித்து தனது ரசிகர்களை குஷி படுத்தினார். இப்படி போய்கொண்டிருக்கும் போது வந்த வினை எரிச்சல் யாருன்னா? சூர்யா. வேல் இந்த படத்தின் வெற்றி சூர்யாவை முன்னணிக்கு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த படத்துடன் ரிலீசான அழகிய தமிழ் மகன் தோல்வி அடைந்தது . இந்த தோல்விக்கு விஜயின் மொக்கையான நடிப்பும் ஒரு காரணம் (ரசிகர்கள் விஜயை வில்லனாக பார்க்க விரும்பவில்லை -சும்மா கப்சா ). சூர்யா இவ்வளவு பெரியா போட்டியாளராக மாறுவார் என்று விஜயோ விஜய் ரசிகர்களோ எதிர்பார்க்கவில்லை. இப்போது விஜய் ரசிகர்களின் ஒரே எரிச்சல் யார் என்றால் அது சூர்யாதான். இதன் பிறகு வந்த வேட்டைக்காரன் சுறா வில்லு குருவி எல்லாம் சொதப்பி விட . மாறாக கார்த்தி நான்கு படம் தொடர்ந்து ஹிட் ரெண்டு படங்கள் commercial ஹிட் . இடையே தனுஷ் வேறு பொல்லாதவன் யாரடி மோகினி . படிக்காதவன் (இது b &c இல் ஹிட் தான் ) என்று வெற்றி கொடுக்க .
விஜய், அஜித் மாதிரி மற்ற போட்டியாளர்கள் இல்லையே என்ற கவலையில் .
யோசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் எடுத்த முடிவுதான் நண்பன் துப்பாக்கி காவலன் எல்லாம். நல்ல முடிவு . இது போன்ற படங்களை அவர் தரட்டும் . அஜித் நிலைக்கு காரணம் அவர் உடல் நிலை மட்டுமே. அவர் நினைத்தாலும் தொப்பையை குறைக்கும் exercise செய்ய முடியாது. அது கடவுள் செயல்.போட்டி மாறி விட்டது.அவ்ளோதான்.

Unknown said...

டியர் அனோனிமஸ்,
இவ்ளோ விசயம் கூறி இருக்கிறீங்களே..உங்க பெயரோட போட்டிருக்கலாமே?பெரும்பாலானவை நியாயமான கருத்துக்கள் தானே?பின்னர் ஏனிந்த வேஷம்?

இந்த எழுத்து நடை மிகப்பரீட்சியமானது போல் இருக்கிறது.. :P

saravanakumar said...

Ajith itself acctepted the in an interview that he cant maintain his body because he is taking steroid tablets..

In my view Ajith is in always safe zone in cine industry. He can go up at any time if he wills.. He is apart from competition..

Also Surya has many fans next to Vijay. Last but not least.. if there is a next super star position it will be goes to VIJAY or SURYA.. and its the last super star crown..

"ராஜா" said...

//அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!

கடந்த இருபது வருடங்களாகவே உங்களை போன்ற விஜய் ரசிகர்களின் ஆசை இதுவாகத்தான் இருக்கிறது ... பாவம் அது நிறைவேறத்தான் மாட்டேங்கிது ..

பத்து வருடங்களுக்கு முன்பாக பிரசாந்த் அஜித் இடத்தை பிடித்து விட்டார் என்று விஜய் ரசிகர்கள் கத்தி கொண்டிருந்தார்கள் , அடுத்து விக்ரம் அஜித் இடத்தை பிடித்து விட்டார் என்று கூவி கொண்டிருந்தார்கள் , அதற்கடுத்து விஷால் வந்துவிட்டார் என்று குறைத்தார்கள் , இப்பொழுது சூரியா ,

ஆம் விஜய் சூரியாவுடந்தான் போட்டி போடா வேண்டும் , விஜயின் மொத்த பேமிலி மார்கெட்டையும் சூரியா லவட்டி கொண்டு போய்விட்டார் , இருக்கும் கொஞ்சநஞ்ச மார்கெட்டுக்கும் அவர் தம்பி கார்த்தி வில்லனாக வந்து நிற்கிறார் , தல இந்த மார்கெட்டை எப்பொழுதும் நம்பியதில்லை அதான் தல ரசிகர்கள் சூரியாவின் வளர்ச்சியை பார்த்து வயிறேரிந்ததில்லை...

இந்த மார்கெட் ஒருகாலத்தில் ஜெமினிக்கும் அடுத்து ஜெய் சங்கருக்கும் , சுதாகருக்கும் , மைக் மோகனுக்கும் , கார்த்திக்குக்கும் , அஜித்துக்கும் ,மாதவனுக்கும் , இப்பொழுது சூரியாவுக்கும் என்று மாற்றி மாற்றி வந்து கொண்டேதான் இருக்கும் , இப்பொழுது அது விஜய் கையில் இருந்து நழுவி சூரியாவின் கைக்கு சென்று விட்ட வயிற்றெரிச்சலின் வெற்று புலம்பலே இந்த பதிவில் தெரிகிறது ..


"ராஜா" said...

அப்பறம் பாஸ் தலையை காப்பாற்ற அவரின் ரசிகர்கள் நாங்கள் இருக்கோம் , நீங்க "சூரியா கார்த்தியிடம்" இருந்து உங்கள் தளபதியை எப்படி காப்பாற்றுவது என்று கவலைபடுங்கள் தலையை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாமே ,,,

Anonymous said...

எனக்கு ஸ்ரீலங்கா பொண்ணுகளோட taste தெரியாது.
ஆனா சென்னையில் சென்னை பொண்ணுக விஜய் fan என்று சொன்னா காட்டன் என்று முடிவு செய்துவிடுவார்கள்.
city guy ஆக இருக்க வேண்டும் என்றா சூர்யா fan என்று சொல்ல வேண்டும்.

"ராஜா" said...

// Safe Zone'இல் இருந்துகொண்டு படம் பண்ணும் சூர்யாவை அஜித் சிறிது காலம் பொலோ செய்யலாம்.

he is not a copy cat to do copy others...

//ஆக கடந்த ஆறு வருடங்களில் வெறும் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்திருக்கும் அஜித் ஏதோ ஒரு தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை சிற்றறிவு உள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியும்!

ok "as your wish" we all agree that he gives only one hit for last six years, but still when his film name (not his film) releases it gives global trend on fb , twitter etc.. even a man with out knowledge can understand nobody else can achieve this..

//தல எப்படி இருந்தாலும் ரசிப்போம் என்கிறீர்களா?நீங்கள் தான் 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!

காவலன் போன்ற படங்களைஎல்லாம் சூப்பர் என்று சொல்லும் ரசிகர்கள் தலைக்கு இல்லை கிரீடம் போன்ற படங்களையே தல சொதப்பிட்டேயே என்று சொல்லி விட்டு அடுத்த படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் தான் அவரின் பெரிய பலமே ... இந்த வரி நண்பன் காவலனை சூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொண்டு திரியும் விஜய் ரசிகர்களுக்குத்தான் பொருந்தும் ..
தல ரசிகர்களுக்கு தலையை பற்றியும் , அவருக்குரசிகர்களை பற்றியும் நன்கு தெரியும் நடுவுல வந்து நீங்க உங்க சந்தோசத்துக்கு எங்களுக்கு சாம்பிராணி புகை போடாதீங்க பாஸ்

Anonymous said...

Anonymous Anonymous said...

இந்த மாதிரி ஒரு பதிவைத்தான் நான் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தேன். நன்றி.
நீங்கள் சொல்வது உண்மைதான்.........../////////

WELL SAID :)

செங்கோவி said...

அஜித் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் மனிதர். தனது சுயலாபம்/பில்டப்புக்காக ரசிகர்களை தவறாக உபயோகிக்கக்கூடாது எனும் கொள்கையுள்ள நேர்மையாளர்.ஆனால் கதை தேர்வில் சொதப்புகிறார் என்பது உண்மையே.

பதிவர் விஜய் ரசிகரா இல்லையா என்ற ஆராய்ச்சியை விட, பதிவில் இருக்கும் நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்வதே சரி.

scenecreator said...

செம பதிவு சிவா.ஆனாலும் அஜீத் ரசிகர்கள் இது பாரபட்சமானது என்றே சொல்வார்கள்.உங்கள் குடும்பத்தை கூட திட்டுவார்கள்.ஜாக்கிரதை.(வாங்கிய அனுபவம்).
என் கருத்து : சூர்யா முதல் ஹிட் நந்தா (2002) கொடுக்கும் முன்பே விஜய் பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை,லவ் டுடே,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி என 5 மெகா ஹிட் படங்களும் நேருக்கு நேர்,நினைத்தேன் வந்தாய் ,பிரியமானவளே,ப்ரெண்ட்ஸ் இன்னும் சில சுமார் ரக படங்கள் கொடுத்துள்ளார்.சூர்யா ஹிட் கொடுக்க தொடங்கும் முன்பே விஜய் ஒரு வெற்றிகரமான நடிகர் தான்.நடுவில் சூர்யாகாக்க காக்க,பிதாமகன்,கஜினி என ஹிட் கொடுக்கும்போது கூட திருமலை,கில்லி,திருபாச்சி,என ஹிட்கள் கொடுத்து தான் வந்துள்ளார்.என்ன 2007-2010 முக்கியமான வருடங்கள் ஆகிவிட்டது.சூர்யா அயன்,வாரணம் ஆயிரம் (இந்த படம் ஹிட்டா?),சிங்கம் என ஹிட்கள் கொடுக்கும்போது விஜய் குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா என சொதப்பிவிட்டார்.அவ்வளவே.அதனால் சூர்யா முந்திவிட்டார் என்பதை ஏற்கமுடியுமா? தனுஷ் படம் ஹிட்டாகி பலவருடம் ஆகிவிட்டது .கடைசி 7 படம் பிளாப் ..சிவா கார்த்திகேயன் 3 ஹிட் வரிசையாய் கொடுத்து வருகிறார்.அதனால் தனுஷை விட அவர் பெரிய ஸ்டார் என்று சொல்லிவிடலாமா? சிவகார்த்திகேயன் நடிக்க வரும்போதே தனுஷ் ஒரு ஹிட் நடிகர்.

அஜீத் ரசிகர்கள் இங்கே இடும் பின்னூட்டங்களே அவரை பின்னே இழுத்து செல்லும் சக்கரங்களாகி போகிறார்கள்.நீங்கள் நல்ல விஷயங்களாய் அவருக்கு சொல்வதற்கு கூட அர்ச்சனை வாங்க போகிறீர்கள்.நல்ல பதிவு.

Unknown said...

scenecreator said...
செம பதிவு சிவா.ஆனாலும் அஜீத் ரசிகர்கள் இது பாரபட்சமானது என்றே சொல்வார்கள்.உங்கள் குடும்பத்தை கூட திட்டுவார்கள்.ஜாக்கிரதை.(வாங்கிய அனுபவம்).//

ட்விட்டரில் நடத்திவிட்டார்கள்.இதை எல்லாம் பார்த்தால் ஒண்டும் செய்ய முடியாது!

பாலா said...

வணக்கம் நண்பரே, என்னடா இன்னும் யாரும் எழுத ஆரம்பிக்கவில்லையே என்று நினைத்தேன்.

நீங்கள் சொல்வது போல தொடர்ந்து வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தால் இந்நேரம் அஜீத் என்பவர் காணாமல் போயிருப்பார். ஆனால் நடப்பதோ வேறு. ராஜா சொன்னது போல நிரந்தர ஃபேமிலி ஆடியன்ஸ் என்பது எம்‌ஜி‌ஆர் ரஜினி போன்ற ஒன்றிரண்டு பேருக்கே அமையும். மற்றபடி எல்லாம் மாறக்கூடியது. ஆகவேதான் மாதவன் கூட ஒரு காலத்தில் பெரும் புகழ் பெற்றார். இப்போது அந்த வரிசையில் நடிகர் சிவகுமார் அவர்களின் வாரிசுகள்.

இதனால் கலக்கம் அடைவது அஜீத் ரசிகர்கள் அல்ல. விஜய் ரசிகர்கள்தான். உடற்கூறு பற்றி சொல்வதானால் எல்லோருக்குமே ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு மைனஸ் இருக்கும். சொல்லப்போனால், அஜித்தை டான்ஸ் கிளாஸ் செல்லலாம் என்று கூட அட்வைஸ் செய்வீர்கள் போலிருக்கிறதே?

"ராஜா" said...

@scenecreator
//சூர்யா முதல் ஹிட் நந்தா (2002) கொடுக்கும் முன்பே விஜய் பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை,லவ் டுடே,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி என 5 மெகா ஹிட் படங்களும் நேருக்கு நேர்,நினைத்தேன் வந்தாய் ,பிரியமானவளே,ப்ரெண்ட்ஸ் இன்னும் சில சுமார் ரக படங்கள் கொடுத்துள்ளார்.சூர்யா ஹிட் கொடுக்க தொடங்கும் முன்பே விஜய் ஒரு வெற்றிகரமான நடிகர் தான்.நடுவில் சூர்யாகாக்க காக்க,பிதாமகன்,கஜினி என ஹிட் கொடுக்கும்போது கூட திருமலை,கில்லி,திருபாச்சி,என ஹிட்கள் கொடுத்து தான் வந்துள்ளார்.என்ன 2007-2010 முக்கியமான வருடங்கள் ஆகிவிட்டது.சூர்யா அயன்,வாரணம் ஆயிரம் (இந்த படம் ஹிட்டா?),சிங்கம் என ஹிட்கள் கொடுக்கும்போது விஜய் குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா என சொதப்பிவிட்டார்.அவ்வளவே.அதனால் சூர்யா முந்திவிட்டார் என்பதை ஏற்கமுடியுமா? தனுஷ் படம் ஹிட்டாகி பலவருடம் ஆகிவிட்டது .கடைசி 7 படம் பிளாப் ..சிவா கார்த்திகேயன் 3 ஹிட் வரிசையாய் கொடுத்து வருகிறார்.அதனால் தனுஷை விட அவர் பெரிய ஸ்டார் என்று சொல்லிவிடலாமா?

சேம் சைடு கோல் போட்டுடீங்களே பாஸ் ... நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் நீங்கள் காதலுக்கு மரியாதையில் பெண்களின் இதயத்தில் இடம் பிடித்ததற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே ஆசையில் அதை சாதித்தவர் தல ...நீங்கள் போக்கிரியில் "ஆக்சன் அவதாரம்????????!!!" எடுப்பதற்கு பல மாமாங்கம் முன்னரே அமர்களத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்தவர் தல ... நீங்கள் இன்னும் மாஸ் அவதாரம் எடுக்கவே இல்லை , தல மங்காத்தாவில் அதையும் முடித்து விட்டார் ...

உங்க கமெண்ட் இந்த கமெண்ட் ரெண்டையும் வைத்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துக்கோங்க ... எனக்கு கை வலிக்குது ...

பாலா said...

இந்த விஜய் ரசிகர்களிடம் உள்ள கேட்ட பழக்கமே இதுதான். இப்போ அஜித்துக்கு அட்வைஸ், அடுத்து விஜய் வாழ்க்கை வரலாறு, அடுத்து விஜய் சாதனைகள், விஜய்யின் அரசியல் பிரவேசம் என்று காட்டு காட்டென்று காட்டுவீர்கள், ஆப்போது விஜய் பல மொக்கைகளை கொடுத்து ஆரம்பித்த இடத்துக்கே வந்திருப்பார், மீண்டும் ஒரு ரவுண்ட் ஆரம்பிக்கும். இது பல காலமாக நடப்பது. பிரியமுடன் படம் வெளிவந்த காலத்தில் இருந்தே நடக்கிறது.

உங்கள் பதிவில் அஜீத் என்ன செய்யவேண்டும் என்பதை விட சூர்யாவை பற்றிய பயமும் கடுப்பும் அதிகமாக இருக்கிறது. சூர்யா ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் இன்னும் கொஞ்சநாள் போன பிறகே தெரியும்.

//அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!

இந்த வரிகளில் இருக்கும் ஆழ்மனது ஆசை தெரிகிறது. முதலிலேயே சொன்ன மாதிரி இந்த காரணங்களால் அஜீத் ஓரம் கட்டப்பட்டால், அவர் என்றோ காணாமல் போயிருப்பார்.

// 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!

இதையே நாங்கள் சொன்னால் மட்டும் கடுப்பாகி விடுகிறீர்கள். இப்போது மறுபடியும் அடுத்த சூப்பர் ஸ்டார், அடித்த எம்‌ஜி‌ஆர், தளபதி தலைவர் ஆகும் காலம் நெருங்கி வருகிறது என்ற பேச்சுக்கள் பெருகி வருகின்றன. ஆகவே அந்த வாக்கியத்தை நீங்களும் ஒரு முறை படித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

அதே போல ஒரே ஒரு கேள்வி, ஏகன், பில்லா டைப் படங்களில் அஜீத் எத்தனை படங்கள் நடித்துவிட்டர், நான்கைந்துதானே? ராஜா கேட்ட அதே கேள்வியை நானும் கேட்கிறேன்,

உங்கள் கணக்குப்படி இத்தனை தோல்விகள், இவ்வளவு கால இடைவெளியில் படம் செய்தாலும், அஜீத் பட ஸ்டில், டீசர், பெயர் வெளியிடும் போது கூட அது பரபரப்பாக பேசப்படுகிறதே எப்படி?

//அஜித் தொப்பையை குறைக்கலாம்.உப்பிப்போயிருக்கும் முகத்தை சரி பண்ணலாம்,ஊதிப் போயிருக்கும் உடம்பை நினைத்தால் குறைக்கலாம்.

இந்த வரிகளில் இருக்கும் மறைமுக கிண்டல் உங்கள் நோக்கத்தை காட்டிவிடுகிறது. அடுத்ததாக "சூர்யா என்ன செய்யலாம்?" என்று ஒரு பதிவு எழுதுங்கள். அதில் சூர்யா காம்ப்ளான் குடிக்கலாம் என்று கூட எழுதுங்கள்.

தொலைக்காட்சிகள் படத்தின் உரிமையை வாங்குவதில் உள்ள அரசியலை பற்றி நான் பேச விரும்பவில்லை.

கடைசியாக ஒன்றே ஒன்று

//ட்விட்டரில் நடத்திவிட்டார்கள்.இதை எல்லாம் பார்த்தால் ஒண்டும் செய்ய முடியாது!

இந்த கருத்துரையை பார்த்தால் என்னவோ இந்த கட்டுரை எழுதியதே தான் திட்டு வாங்கினாலும், அஜீத் என்பவருக்கு அறிவுரை வழங்கியே தீருவேன் என்று அடம் பிடிப்பதை போல இருக்கிறதே?

கொஞ்ச நாளைக்கு முன்னால் நீங்களே ஒரு பதிவில் கூறி இருக்கும் வார்த்தைகள்

//எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும் ஒரு காலத்தில்.விஜய்யின் அந்த காலம் சுறா திரைப்படத்துடன் முடிந்துவிட்டது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.
பிடித்தால் விஜய் படம் பாருங்கள்.இல்லை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வேலையை பாருங்கள்..ரத்தத்தின் ரத்தங்களே எங்கள் உடன் பிறப்புகளே!!!

இது திருவாளர் விஜய் அவர்களைப்பற்றி எழுதும்போது மட்டும்தான் பொருந்துமோ?

(முடிந்த அளவுக்கு நாகரீகமாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் )

"ராஜா" said...

//செம பதிவு சிவா.ஆனாலும் அஜீத் ரசிகர்கள் இது பாரபட்சமானது என்றே சொல்வார்கள்.உங்கள் குடும்பத்தை கூட திட்டுவார்கள்.ஜாக்கிரதை.(வாங்கிய அனுபவம்).//
ட்விட்டரில் நடத்திவிட்டார்கள்.இதை எல்லாம் பார்த்தால் ஒண்டும் செய்ய முடியாது!//

அரிச்சா சொறியலாம் தப்பில்லை .. சொகமா இருக்கும்னு சொரிஞ்சிகிட்டா இப்படிதான் அவஸ்தைபடனும் ...

பாலா said...


//செம பதிவு சிவா.ஆனாலும் அஜீத் ரசிகர்கள் இது பாரபட்சமானது என்றே சொல்வார்கள்.உங்கள் குடும்பத்தை கூட திட்டுவார்கள்.ஜாக்கிரதை.(வாங்கிய அனுபவம்)

அதாவது என்ன சொல்ல வருகிறார் என்றால், விஜய் ரசிகர்கள் எல்லோரும் அப்பாவிகள். அஜீத் ரசிகர்கள் எல்லோரும் அநாகரீகமாக பேசுபவர்கள்.

மேலே உள்ள கருத்தை கூறிய scenecreator அவர்களது வலைத்தளத்தில் நாகரீகமாக நான் தெரிவித்த கருத்துக்களுக்கும், விஜய் குறித்து என் தளத்தில் நான் எழுதி இருக்கும் பதிவு குறித்தும்,scenecreator அவர்கள் எவ்வளவு நாகரீகமாக கருத்து தெரிவிப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். "போடா, வாடா, அவன் இவன்" என்றுதான் எடுத்த எடுப்பிலேயே ஆரம்பிப்பார். அப்படிப்பட்டவர் இவ்வாறு கூறுவதுதான் பெரிய காமெடி.

scenecreator said...

இங்கே எவன் எவன் பத்தி பத்தியா 2,3 முறை கமெண்ட் போடும்போதே தெரியிலயா யாருக்கு பயத்தில் பேதி புடுங்குகிறது என்று?
அட பிஞ்ச செருப்பு இங்கேயுமா? வா வா ,நீ இல்லாம கச்சேரி கலை கட்டவே இல்ல.வந்தது வந்துட்ட வழக்கம் போல விஜய் பேன்ஸ் எல்லோரும் அடிக்கும் முன் ஓடிடுடுவியே அதுபோல் ஓடிடு.

பாலா said...

நான் சொல்லல அண்ணன் நல்லா கருத்தா பேசுவாப்ளன்னு....

"ராஜா" said...

//இங்கே எவன் எவன் பத்தி பத்தியா 2,3 முறை கமெண்ட் போடும்போதே தெரியிலயா யாருக்கு பயத்தில் பேதி புடுங்குகிறது என்று?

கமெண்ட் போட்டவனுக்கே பேதி புடுங்குதுனா வெட்டி தனமா இவ்வளவு பெரிய பதிவை போட்டவனுக்கு என்ன என்னலாம் புடுங்குமோ? என்னமோ போங்க பாஸ் நீங்க போடுறதெல்லாம் சேம் சைட் கோலாவே இருக்கு ...

"ராஜா" said...

//நான் சொல்லல அண்ணன் நல்லா கருத்தா பேசுவாப்ளன்னு....

தளபதியின் தொண்டரா இருந்திட்டு இப்படி கருத்தா பேசாட்டி எப்படி ...

அண்ணே நீங்க இலங்கையானே அப்படியே கள்ளதோணி ஏறி வந்தீங்கன்னா ஏர்வாடி பக்கம்தானே , அங்கையும் முடியலைனா பாண்டி மடத்துல முடிச்சிடலாம் ..

Unknown said...

/@"ராஜா"
அண்ணே நீங்க இலங்கையானே அப்படியே கள்ளதோணி ஏறி வந்தீங்கன்னா ஏர்வாடி பக்கம்தானே , அங்கையும் முடியலைனா பாண்டி மடத்துல முடிச்சிடலாம் ../

எப்பிடி அண்ணே?பில்லா 2வில் தல அஜித் வந்தது போல தானே?அப்பிடி வந்தா டான் ஆகிடுவனே..பரவாலியா?

"ராஜா" said...

// எப்பிடி அண்ணே?பில்லா 2வில் தல அஜித் வந்தது போல தானே?அப்பிடி வந்தா டான் ஆகிடுவனே..பரவாலியா?//

தம்பி இங்க டான் ஆகுறதெல்லாம் ரொம்ப கஷ்டம் , உங்களுக்கு பிஞ்சி மூஞ்சி ... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க வேணும்னா 2017 ல முதலமைச்சர் ஆக ட்ரை பண்ணுங்க ... ஆகிடலாம் , வெந்தது வேகாதது, புண்ணாக்கு விக்கிறவன் , புடலங்காய் விக்கிறவன் , ஆடியோ ரிலீஸ் பங்ஸன்ள நடிகைக்கிட்ட ஜொள்ளு வடிக்கிறவன் , பன்ச் டையலாக் பேசி காதை பஞ்சர் ஆக்குறவன் , அவனோட அப்பன் இவனுங்க எல்லாம் அதுக்கு ஆசைபடும்போது நீங்க ஆசைபடுறதுல தப்பே இல்லை

Unknown said...

எது?அஜித் பற்றி நான் ஒன்றும் சொல்ல வேண்டாமா?!! அப்போ என்ன ********க்கு விஜய் பற்றி நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள்???

http://apkraja.blogspot.com/2011/12/blog-post_19.html


குறிப்பு: வெறுமனே கேன் ஒன்றை காவிக்கொண்டு வந்தவன் அகில உலக டான் ஆக முடியும்னா...ஹஹா செம காமெடி

Easwaran said...

நாரதா இங்கு என்ன நாறுகிறது? வேறு ஒன்றும் இல்லை குருவே பொழுது போகிட்க்க்காக ஆரம்பிக்கப்பட்ட சினிமா இப்போதெல்லம், முழு பொழுதுமாகிவிட்டதால் ஏற்பட்ட போட்டி பொறாமையின் குரல்கள்.....

நாரதா .... இந்நிலை தொடருமானால் பிறகு எப்படி இந்தியா! சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியும்?


அது மிக இலகு குருவே. ஒரு மைக்கும் ஒரு டிவி ப்ரோக்ராமும் கொடுத்த்தால் அமெரிக்கா என்ன, நவகிரகங்களுடன் கூட போட்டி போடுவார்கள் நம்மவர்கள்...... இது நமக்கு புரியுதோ இல்லையோ மற்ற மாநிலங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு .....

தலைவிதிய யாரால மாற்ற முடியும்? கடவுள்தான்.....ஐயையோ கடவுள் இல்ல என்கிற கூட்டம் சண்டைக்கு வரமுன் நம்ம ஓடிடுவோ குருவே.....

தனிமரம் said...

ஓட்டு மொத்ததில் நீங்கள் அஜீத் மீது சேறு பூசினாலும் தளபதியும் பல பாடல்களில் எம்ஜி ஆர் பானியில் வந்து போகும் ஒரு அசைவே அவருக்கு இருக்கும் பின் புலத்தை மீடியா உதவியை நினைவில் வைத்து எழுதினாலும் ஒரு நடிகனாக் தோல்வி வெற்றி கடந்து வந்து போகும் நடிகர் அஜீத் என்பது வரலாறு சார்!

தனிமரம் said...

என்ணடா இன்னும் சண்டை தொடங்கவில்லையே விசில் கூட்டம் என்று பார்த்தேன் சபாஸ் பாஸ் மீண்டும் தொடங்கியாச்சு போல நீங்கள் ஹீஈஈஈ!நாட்டில் இருக்கும் சுழல் மறக்க!ம்ம் சினிமா மட்டும்,தான் வாழ்க்கையா/

Unknown said...

Vijay hit film List:
1.Poove Unakkaga 2.Love Today 3.Kadhalukku Mariyadhai 4.Thulladha Manamum Thullum 5.Khushi 6.Priyamaanavale 7.Friends 8.Thirumalai 9.Ghilli 10.Thirupaachi 11.Pokkiri 12.Nanban 13.Thupakki.
(55 film.la 13 film than hit?)

Ajith Hit film List:
1.Aasai 2.Kadhal Kootai 3.Kadhal mannan 4.Vaali 5.Amarkalam
5.Mugavary 6.Kandukonden Kandukonden 7.Dheena 8.Citizen 9.Poovellam Un Vaasam 10.Villain 11.Varalaru 12.Billa - 2007 13.Mankatha
(Ajith 51 film.la 13 film hit)

Surya Hit film List:
1.Frinds 2.Nandha 3.Kaaka Kaaka 4.Pithamagan 5.Ghajini 6.Vaaranam Aayiram 7.Ayan 8.Singam 9.Singam.2 then Aadhavan(Average)
(Surya 33 film.la 9 film than hit)

So, intha 3.members.la ippa yaru 1.st nu solla mudiyathu. 3.perum AVG.than.
Ippa intha race.la 1st.a porathu 1.Surya 2.Ajith 3.Vijay.

Ennatha surya ippa 1.st.a irunthalum surya.va vida Ajith Vijay.ku than Rasigargal Athigam.

So, i think M.G.R-SIVAJI, RAJINI-KAMAL, THALA-THALAPATHI.

Related Posts Plugin for WordPress, Blogger...