Saturday, July 27, 2013

"பட்டத்து யானை"-ஒலக சினிமாவுக்கான உந்துதல்..!


"படம் படு மொக்கை.தியேட்டர் பக்கம் போயிராதிங்க பட்டத்து யானை ஏறி மிதிச்சிக்கிட்டிருக்கு..அது நம்மள நோக்கித்தான் வருது"அப்பிடின்னு சமூக நலன்விரும்பிகள் பலர் பேஸ்புக்,ட்விட்டர் என்று கூவிக்கூவி தியேட்டர் பக்கம் ஒதுங்குபவர்களை தடுத்துக்கொண்டிருந்தனர்.'ஹஹா அந்தப் பெரிய அலெக்ஸ் பாண்டியனையே பார்த்த நமக்கு இது எம்மாத்திரம் என்று தியேட்டர்பக்கம் ஒதுங்கினேன்.

ஆரம்பமே அதகளம்!முன்னாடி நடிக நடிகையர் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க பின்னாடி ஒரு இருபது பைக்ல ரவுடீஸ் யாரையோ தேடிக்கிட்டு கொலை வெறியோட பறந்துகிட்டிருந்தாங்க.அடடே எதிர்பார்க்காத ஆரம்பமிது என்று ஆரம்பத்திலேயே க்ளாப்ஸ் வாங்கினார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

ஹீரோ சந்தானத்த பெரிய ஓட்டல் முதலாளியா ஆக்கி அவருக்கு கல்யாணம் செஞ்சு அவர் பிள்ளையை தூக்கி கொஞ்சனும் என்கின்ற மாபெரும் குறிக்கோளோட செக்கண்ட் ஹீரோ விஷாலும் அவரோட நான்கு நண்பர்களும் சமையல் வேலைக்கு சேர்றாங்க.முன்னாடியே சொன்ன பைக் ரவுடீஸ் கூட தகறாரு ஏற்பட,மூட்டை முடிச்சுகளோட ஆறு பேரும் திருச்சி கெளம்பி போய்டறாங்க.

சமயத்தில டீக்கடைல டீ குடிச்சிட்டு விஷால் நீட்டின 500 ரூபாய்க்கு சில்லறை இல்லைனு டீ மாஸ்டர் சொல்ல,ஒரு பூக்கடை அம்மாகிட்ட போயி சில்லறை கேட்கிறார்.அதுக்கு அந்த அம்மா,பூ வாங்கிகிங்க மாத்தி தர்றேன்னு சொல்ல 'எனக்கெதுக்கம்மா பூ..யாராச்சும் அழகான பொண்ணுவந்தா மாட்டிவிடுங்க' ன்னு சொல்லிட்டு போயிடறார் நம்ம ஹீரோ.என்ன என்ன?ஆமா நீங்க நெனைச்சதே தான்! அந்த பூவ மாட்டிக்கிட்டு வர்றது நம்ம அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா தான்!அத பாத்து இவர் பொங்கிறார்..அடடே!!

ஹீரோ சந்தானத்துக்கு நீளமான ரோலு படத்தில.பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார்..அரிவா வைச்சு உர்ர்னு பார்க்கும் வில்லங்கமான வில்லன்ககிட்ட,ஏன் மெயின் வில்லன்கிட்டயே கேப்பு விடாம பேசி கழுத்தறுக்கிறார்.இது தான் இப்போதய ட்ரெண்டாம்..காமெடியாம்..! அடடே..!!

அவசரத்துக்கு ப்ளட்டு தேவைன்னா கூட இவங்ககிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.தொடப்பங்கட்டைய விட கொஞ்சம் பருத்த உடம்பு நம்ம அடச்சா (அந்த கழுத எனக்கு எதுக்கு!)...உங்க ஐஸ்வர்யாவுக்கு!நாலு பாட்டு சீனு, அரைப்பக்க வசனம்,ஒரு கிளிசரின் அழுகை அவ்ளோதான் அவங்க ஸ்கோப்பு படத்தில!கடைசி பாட்டில தொடப்பங்கட்டைக்கு துண்டு மாட்டினது போல ஒரு ஜான் ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஆடுறாங்க...சகிக்கல.சத்தியமா கூட ஆடின பொண்ணுகள தான் நான் பாத்தேன்..!

                          

சிவனேன்னு தன்னோட தொழிலை பாக்கிற இந்த வில்லனுக எல்லாம் ஏன் டாட்டா சுமோல ரோடில போகும்போது,அதுவும் யெல்லோ க்ராசிங்க்ல க்ராஸ் பண்ற பொண்ணோட இடுப்ப பாத்து மூட் கெளம்பி ஹீரோவ வாண்டட்டா தங்களோட லைப்க்குள்ள இழுக்கிறானுகன்னு இன்னமும் தான் எனக்கு புரியல.அவனுக கண்ணுவைக்கும் பொண்ணுக எல்லாம் ஏதோ ஒரு ஹீரோக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு இன்னுமாடா உங்களுக்கு தெரியல??

சந்தானத்த கூட்டு சேர்த்து மொக்கையா ஒரு அரை மணி நேரத்த ஓட்டிட்டு,அப்புறம் ஊர்ல இருக்கிற ரெண்டு மூணு மெயின் வில்லனுகள ஹீரோவோட கோர்த்து விட்டிட்டு,நாலு பாட்டு மூணு காமெடி ரெண்டு பைட்டுன்னு படத்த முடிச்சிட்டா இப்போ இருக்கிற கேனை ரசிகருக,மசாலா மொக்கையனுக,சந்தானம் வெறியனுக எல்லாம் தியேட்டர் வந்து பார்த்து படத்தை ஹிட் ஆக்கிடுவானுகன்னு தான் ஒவ்வொரு ஹீரோவும்,ஒவ்வொரு டைரெக்டரும் கணக்குப்போட்டு வைச்சிருக்கானுக.

விஷாலோட பைட்ட பத்தி சொல்லியே ஆகணும்.இடைவேளைக்கு முன்னாடி ஒரு கட்டி முடிக்காத பாலத்தோட எண்டிங்க்ல வில்லன் கூட்டத்த சந்திக்கிறார் ஹீரோ.கூடவே பொண்ணு ஐஸ்வர்யாவும் இருக்காங்க.ஏகப்பட்ட வில்லனுக வேற.கொஞ்சம் தள்ளி பெரிய பள்ளம்.அந்த பக்கம் ட்ரெய்ன் வேற ஓடிக்கிட்டிருக்க,அடடா ஹீரோ ஜம்ப் பண்ணி பாலத்தோட அந்தப்பக்கம் போய்டுவாரோ இல்லை அதையும் தாண்டி ஓடிக்கிட்டிருக்கிற ட்ரெய்ன் மேல தாவிடுவாரோன்னு என்னோட மாஸ் மசால மைண்டு கற்பனை பண்ணிக்கிட்டிருக்க,ஹீரோ அசால்ட்டா கையில இருந்த ரெண்டு அலுமினிய அகப்பையால அத்தனை வில்லனுகளையும் அடிச்சு சாச்சாப்லே!மெரண்டு போயி உக்காந்தவனுக தான்..ஒரு பய இண்டர்வல் விட்டபோது உச்சா பண்ணவே போகலைன்னா பாருங்களேன்..!ஆமாங்க ஆல்ரெடி போயிட்டானுவ இருந்த இடத்திலயே..!!

மனோபாலாவை தவிர கோடம்பாக்கத்தில் இருக்கிற அத்தனை காமெடியனுகளையும் ஒவ்வொரு பிட்டு பிட்டு சீன்ல வரவைச்சு தூள் பரத்தி இருக்கிறார் பூபதி பாண்டியன்.அவ்ளோ பேரை வைச்சும் காமெடி கிச்சு கிச்சு அளவு தான்!சந்தானம் அடிக்கடி வேஷ்டிய தூக்கி கட்டும்போது அண்ட்ராயர் தெரியும் சமயத்ல எல்லாம் பொண்ணுக விட்டத்த பாக்கிறாளுவ.

ஏம்பா நீங்கள்லாம் படத்தை எடுக்கிறது மட்டும் தான் பண்ணுவீங்களா?அதுக்கு முன்னாடி கதை கேக்கிறது,திரைக்கதை எழுதுறது,படம் எடுத்த பின்னாடி நல்லா வந்திருக்கான்னு நீங்களே போட்டு பாக்கிறதுன்னு கொஞ்ச வேலைகள பண்ணாமலே படத்த ரிலீஸு பண்ணினா நாம என்னடா பண்றது?

ஆனா ஒண்ணு,இவனுக விருதகிரி,அலெக்ஸ் பாண்டியன் என்று வரிசையா எடுக்கிறதால ஒரே ஒண்ணு மட்டும் நடக்குது.படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும்,அத ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்டா எடுத்துகிட்டு விசிலடிச்சு கைதட்டி ரசிச்சு பொழுதுபோக்க ஒரு கூட்டம் அவங்களுக்கு தெரியாமலே உருவாகிக்கிட்டிருக்கு!அன்பிலீவெபிள் பைட் சீன் வரும்போதெல்லாம் 'வாவ்'ன்னு எந்திரிச்சு நின்னு கைதட்டுறாங்கப்பா..!தமிழ் சினிமா எங்கயோ போய்க்கிட்டிருக்குப்பா!தமன் இசையாம்.ஒரே ஒரு பாட்டு தான் கொஞ்சம் ரசிக்க முடிஞ்சது.டி எஸ் பிய போட்டிருந்தா இந்த கொம்போவுக்கு செமயா இருந்திருக்கும் கூட்டணி.ஜஸ்ட்டு மிஸ்ஸு!பூபதி பாண்டியனே இப்பிடின்னா,இவருக்கு ஆசிஸ்டெண்டா இருக்கிரவனுக எல்லாம் படம் பண்ண வந்தானுகன்னா ஒலக சினிமாவ ஒரே ஷாட்ல தாண்டிருவாங்க போல இருக்கே..!

மார்க்: 38/100பைனல் கிக்கு: தியேட்டர் காரனுகளுக்கே மேட்டர் புரிஞ்சிடிச்சு போல.. இன்னிக்கே பட்டத்து யானை போஸ்டர்களுக்கு மேல 'தலைவா" போஸ்டர் அடிச்சு ஒட்டுறானுக.ஏம்பா இன்னிக்கு படம் வந்து ரெண்டாவது நாளப்பா..!!

Post Comment

7 comments:

ராமகிருஷ்ணன் said...

படத்தை பார்த்து எனக்கு கண்ணுல தண்ணி வந்திருச்சு. பணம்200ரூபாய் அநியாயமா செலவு ஆயிருச்சேனு . இனி மேல் எந்த படத்துக்கும் முதல் நாள் படத்துக்கு போக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன் உங்களைய மாதிரி பெரிய மனுசங்க விமர்சனம் படிச்சுட்டுதான் இனி படத்துக்கு போகணும்

Unknown said...

/ராமகிருஷ்ணன் /

நமக்கு 300ரூபா அம்பேல்..! எந்திரிச்சு வர முடியல 300 கொடுத்த பின்னாடி..என்னா அடி!

Unknown said...

காப்பாற்றியதற்க்கு நன்றி .ஆனால் என் மகன் அழைத்து சென்றே ஆகவேண்டும் என்று அடம் .என்ன செய்ய ?விதி வலிது

Unknown said...

மொத்தத்துல பட்டத்து யானை,'பட்டம்' போல பறந்துடும் னு சொல்லுறீங்க,ஓ.கே,ஓ.கே!!!

Unknown said...

padam pathi eluthurathu ungs urima ayhukku ippidi elutha kudathu boos ok......

Unknown said...

padam pathi eluthurathu ungs urima ayhukku ippidi elutha kudathu boos ok......

செங்கோவி said...

//அவனுக கண்ணுவைக்கும் பொண்ணுக எல்லாம் ஏதோ ஒரு ஹீரோக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு இன்னுமாடா உங்களுக்கு தெரியல??//

அப்படி நல்லா, நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேளுங்க சிவா!...சூப்பர்.

Related Posts Plugin for WordPress, Blogger...