Monday, June 3, 2013

'சித்தார்த்- சமந்தா'காதலும் நம்மவர்களின் சோகமும்..!

பசங்களுக்கு சமந்தா மீதும்,பொண்ணுகளுக்கு சித்தார்த் மீதும் அளவு கடந்த ஒருதலைக்காதல் இருந்துவந்தது.அதானால் தான் இந்த சித்தார்த்-சமந்தா சேர்க்கை ஊரில் அத்தனை இளசுகள் மனசை உலுக்கியிருந்தது.சமந்தா ஒரு படி மேலே போய்,கல்யாணம் கட்டிய கனவான்களையே பேஸ்புக்கில் புலம்ப விட்டு வீட்டுக்காரம்மா கையால் உதை வாங்கி கொடுத்தார்.(இப்போதெல்லாம் வீட்டுக்காரம்மாக்கள் கையால் அடிப்பதே காலால் உதைப்பது போல் இருப்பதாக 'கட்டிளம்'கணவர்மார்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்..!)அந்தளவுக்கு சமந்தா மீது உசிராக இருந்தனர் அனைவரும்.அதைவிட முக்கிய காரணம்,சமந்தா குதிரை மீது ஏறிக்கொண்டால்,சில வருடங்கள் பிரச்சனையில்லாமல் சவாரி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தமை தான்.எப்படியும் திரிஷா,ஜோதிகா விட்டுச்சென்ற இடத்தை குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்காவது சமந்தா நிலைத்து நின்று ஜொள்ளுவதற்கு துணைபுரிவார் என்கின்ற நம்பிக்கை.

எப்போது சித்தார்த் கூட சமந்தா காதல் என்று செய்தி வந்ததோ,அன்று புகையத்தொடங்கிய பலரின் வயிறு,முடிந்த விஜய் அவார்ட்ஸில் பொங்கி புஸ்வாணமாகி போய்விட்டது.சித்தார்த் ஏற்கனவே திருமணம் முடித்தவன்-விவாகரத்தானவன் என்று முடிந்தவரை காதலை பிரிக்க ஆளுக்காள் முயன்றும் அது சரிவராமல் போகவே சமந்தா ரசிகர் மன்றம் மெது மெதுவாக குலைய தொடங்கியது!எப்படி சூர்யா-ஜோதிகா ஜோடி அச்சமயம் சூட்டை கிளப்பியதோ,அதனைவிட மேலாக இந்த ஜோடி பரபரப்பை கிளறியிருக்கிறது.அண்மையில் சித்தார்த்-சமந்தா ஜோடியாய் நடித்த 'ஜபர்தஸ்த்' திரைப்படம் பெரு வெற்றி பெற,அந்த ரொமான்ஸை நிஜத்திலும் தொடர்வதற்காக தங்கள் காதல் செய்தியை பப்ளிக்கில் வெளியிட்டிருக்கின்றனர்.


விஜய் அவார்ட்ஸ் ஒளிபரப்பும் போது,சித்தார்த்-சமந்தா வரும் சமயம் நான் டிவி பார்க்காமல்  இருந்துவிட்டேன்.காரணம் நானும் ஒரு சமந்தாவின் தீவிர வெறியன்.கிளம்பிவந்து பேஸ்புக்கில் கடுப்பை கொட்டியிருந்தேன்: 

'பசங்களோட கனவுக்கன்னி சமந்தா போயிரிச்சு ஐ ஜாலி'ன்னு பொண்ணுக இப்போ செம ஹாப்பியா இருப்பாங்க.ஆனால் பசங்க சித்தார்த் மேட்டர் ஓவர்னு சாந்தமா இருக்காங்களா பாருங்க?இவளுக தான் ரெண்டாவது மூணாவதாவும் போக தயாரா இருக்காளுகளே!சமந்தா மாதிரி ஒரு பொண்ணும்,இதே மாதிரி ஒரு மேடையும்,சித்தார்த் மாதிரி பர்சனாலிட்டியும் ஒருதடவை தந்து பாருங்கள்..அப்போ தெரியும் நம்ம திறமை!வெறித்தனமா பண்ணுவம்லே வெறித்தனமா..!ஆல்ரெடி பிரிப்பேர் பண்ணி வைச்சிருக்கம்..நாமளும் சொல்லுவம்லே!

'என்கிட்ட எதும்மா உன்னய ஹெவியா லைக் பண்ண வைச்சது?முத்துப்போன்ற எனது சிரிப்பா?அல்லது முரட்டு தோள் உடம்பா?இல்ல நாட்டியமாடும் என்னோட நடையா..இல்லை நவரசத்தை காட்டும் என்னோட முகமா...பாக்கட்ல இருக்கிற என்னோட பணமா....?சொல்லும்மா சொல்லு! கடத்திட்டு வந்து மேடையில வைச்சு இப்பிடியெல்லாம் லவ் டார்ச்சர் கொடுக்கக்கூடாது..!நீ இப்பிடி வெறித்தனமா என்ன லவ் பண்ணும்போது உன்ன விட்டு எங்கம்மா போகப்போறன் என் செல்லமே...!!எங்க மாமா மேல ஒருதடவ உப்புமூட்டை ஏறு?'சியேர்ஸ் கைஸ்...சமந்தா இல்லைனா சமத்தா இன்னொன்னு வரும்லே!

சரி அதிருக்கட்டும்.நேற்று தான் அந்த காணொளி பார்க்க கிடைத்தது யூடியூப்பில். நிஜமாவே சொக்கிவிட்டேன்.ஆம்,சித்தார்த்தின் பர்போமன்ஸ் கலக்கல்! தான் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என்று நிரூபித்துவிட்டார் சித்தார்த்.ப்ரியா ஆனந்த்,ஸ்ருதி என்ன,எந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய 'ஸ்வீட் பாய்'யை பிடிக்காது! என்னம்மா பாடினான்யா!'பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்...காணாத கண்களை கண்களை காண வந்தாள்...என்று ஆரம்பித்து ஏராளமான காதல் பாடல்களை கலந்துகட்டி நிஜமாகவே ஒரு பாடகர் பாடுவது போல அவ்வளவு அழகாக,சமந்தா மேல் இருந்த 'பீல்'லை கொட்டி உணர்ச்சி பொங்க பாடுவதை பார்த்துக்கொண்டிருந்த அந்த் சந்தர்ப்பத்திலேயே என்னை சமந்தாவுக்கான 'காம்பெட்டிஸன்'னிலிருந்து ஓரம் கட்டியிருந்தார்..இல்லை இல்லை நானாக ஒதுங்கிக்கொண்டேன்!திரையில் ஒரு பாதியில் சித்தார்த் பாடுவதையும்,மறு பாதியில் சமந்தா வெட்கப்படுவதையும் காட்டுகையில் ஏற்பட்ட உணர்ச்சிகளை விபரிக்க முடியாது..! அது கோபமா..இல்லை சந்தோஷமா..இல்லை கடுப்பா..இல்லை உற்சாகமா..இல்லை கவலையா..அழுகையா... இவை அனைத்தையும் கலந்தடித்த பீலிங் அது!

ஏன் இத்தனை பெண்கள் சித்தார்த் பின்னால் இருக்கிறார்கள் என்பதையும்,ஏன் சமந்தா இத்தனை இளசுகள் மனதில் குடியிருக்கிரார் என்பதையும் அந்த ஒரு பத்து நிமிட காணொளி தெளிவாக விளக்கிவிடும்!தனுஷ்,த்ரிஷா என்று வந்திருந்த அனைவரும் உருகிக்கொண்டிருந்தனர்..கமலோ,அடடா இவன் என்னைவிட காதல் மன்னனாக இருப்பானோ என்று மனதுக்குள் நினைத்திருப்பார்.இல்லை ஒரு படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்து ஒரு முத்தம் கொடுப்பதை இழந்துவிட்டேனே என்று கவலையில் வாடியிருப்பார்!

இறுதியில் ஒரு சிறிய இடைவெளி விட்டுவிட்டு,கும்கி பட பாடல் 'ஐயையயோ....ஆனந்தமே....' என்று உச்ச ஸ்தாயியில் ஆரம்பிக்கும் போது நானே உருகிவிடுகிறேன்..பாவம் இந்த பெண்கள் எம்மாத்திரம்!உங்களுடன் போட்டியிட முடியாது சித்தார்த்..நீங்கள் நிஜமாலுமே ஹீரோ தான்.சமந்தா எனும் அழகு தேவதையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்..இந்த திருமண வாழ்க்கையையாவது அழகாக கொண்டு நடாத்துங்கள்..சமந்தாவுக்கு எத்தனை உள்ளங்களில் எத்தனை விதங்களில் கனவு கோட்டைகளை,கனவு வாழ்க்கையை உருவாக்கி பாத்திருக்கிறோம்..அதைனை விட சிறப்பான ஒன்றை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..!இரு விழி உனது..இமைகளும் உனது...
கனவுகள் மட்டும்...எனதே எனது....!!

உனது அழகிய வதனமும்,உன் கண்களில் காட்டும் அத்தனை அசைவுகளுக்கும்,உதட்டில் நீ சுழிக்கும் அத்தனை சுழிப்புகளுக்கும்,உன் முகத்தில் அந்த வெட்கமே வந்து வெட்கப்படுமே..அந்த வெட்கங்களுக்கும்...சேலையில் நீ வருகையில் அடித்தள்ளும் அந்த  அழக்குக்கும் நான் அடிமை..!உன்னை கொண்டாடிய பெருமை போதும் எனக்கு..!நீ சமத்தா இருக்கணும் சமந்து குட்டி... 

நெஞ்சை பூபோல் கொய்தவளே.... 
என்னை ஏதோ செய்தவளே...!
உன்னை உருகி உருகி காதலித்த அத்தனை உள்ளங்கள் சார்பில்,

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...