Saturday, September 15, 2012

பவர் ஸ்டார் கைது - வெளிவரும் பல உண்மைகள்!





பவர் ஸ்டார் ஸ்ரீனிவான் தமிழக போலீசால் கைது என்று நேற்றுக்காலை அலுவலகத்தில் இருந்த சமயத்தில் தான் அந்த செய்தி இடியென வந்து இறங்கியது!உடனே என் மனதில் தோன்றியது என்னமோ இன்று சமூகவலைத்தளங்களில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்பதே!அந்தளவு சுவாரசியத்துக்கு பெயர் போனவர் நம்ம பவர் ஸ்டார்.அவரின் கைது பற்றி வந்த செய்தி இது தான்:
"அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.இதையடுத்து சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்."

போலீஸ்  இவ்வாறு கூறியிருந்தாலும் ரசிகர்கள் இந்த கைதின் பின்னணியில் மூன்று முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள்.அது மட்டுமல்லாமல் பவருக்கு ஆதரவாக பல குரல்கள் பேஸ்புக் ட்விட்டர் என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டன.ரசிகர்கள் கூறிய முக்கிய மூன்று காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

                     

1 .சூப்பர் ஸ்டார் ரஜனி+கமல்
தானாக படம் தயாரித்து நடித்து வந்த பவர் ஸ்டார்க்கு இப்போ வேறு இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் குவிந்தவண்ணமுள்ளன.சந்தானத்தின் தயாரிப்பில் "கண்ணா லட்டு திங்க ஆசையா" எனும் படத்தில் சந்தானத்துடன் நடிக்கும் பவர்,ஷங்கரின் அடுத்த படமான "ஐ" படத்திலும் ஒரு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.ஏலவே கமல் மற்றும் ரஜனி தான் ஷங்கர் படங்களில் நடித்திருக்கின்றனர்.ஷங்கரின் கதைகள் பெரும்பாலும் இவர்களை வைத்தே உருவாக்கப்படும்.

இவர்கள் நடிக்க மறுப்பின் வேறு நடிகர்களை நோக்கி செல்வார் ஷங்கர்.அதே ஷங்கர் படத்தில் பவர் ஸ்டாரின் முகம் வரப்போகின்றதை  அறிந்த தினத்திலிருந்து ரஜனிக்கும் கமலுக்கும் நித்திரை இல்லையாம்.காரணம் அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள்.பவர் ஸ்டார் கூட அம்பது வயது தான்.தங்களது வயதில் இண்டஸ்ட்ரியில் இருப்போரை தங்களுக்கு போட்டியாக கருதுபவது நடிகர்களின் வழமை.அந்த வகையில் பவர் ஸ்டாரின் வளர்ச்சியை பிடிக்காமல் கமல் ரஜனி இணைந்து இந்த காரியத்தை செய்திருக்கலாமோ என்று ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.
2.ஜெயலலிதா-கருணாநிதி கூட்டு சதி
சினிமா துறையில் இருப்பவர்கள் தமிழக அரசியலிலும் செல்வாக்கு செலுத்துவது காலம் காலமாக நடந்துவரும் விடயம்.எம் ஜி ஆர்,ஜெயலலிதா,கருணாநிதி கூட சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.இதை விட கார்த்திக்,சரத்குமார் என்று சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்றவர்கள் பட்டியல் ரொம்ப பெரியது.அத்துடன் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இப்போ அண்மைக்காலமாக குடைச்சல் கொடுக்கும் விஜயகாந்த் கூட சினிமாவில் இருந்து அரசியல் சென்றவர் தான்.அவர் நடித்த நரசிம்மா,வல்லரசு,கஜேந்திரா,விருத்தகிரி என்று அவர் நடித்த ஆக்சன் படங்களை வைத்து விஜயகாந்தை நக்கலடித்த சமூகம் தான் அரசியல் என்றவுடன் அவரை ஆதரித்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் பவர் ஸ்டார் ரூபத்திலும் வரலாம் என்று ஜெயாவும் கருணாநிதியும் அஞ்சியிருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவித்திருந்தன.அரசியல்வாதிகள் தங்கள் எதிர் கட்சிகளை எவ்வளவு காலை வாரி விட்டு வசை பாடினாலும்,புதிதாக ஒருவன் அரசியலுக்கு வருவதை எப்போதுமே விரும்பியதில்லை.அந்தவகையில் கருணாநிதி தான் ஜெயாவுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்கலாம் என்று கூட சந்தேகிக்கப்படுகின்றது.காரணம் ஜெயாவுக்கு ஏற்கனவே கருணாநிதியை தர தரவென கைது செய்த முன் அனுபவம் இருப்பதால் ஜெயாவே இதற்க்கு ரொம்ப பொருத்தமானவர் என்று கருணாநிதி தரப்பிலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாமாம்!

3 .டீசல் விலையேற்றம்  
இலங்கையில் இந்த விளையாட்டுக்கள் ரொம்பவே பிரசித்தம்!ஏதும் ஒரு கொண்டாட்டம் நடந்தால் அந்த சம்பவத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை இரவோடு இரவாக அதிகரித்துவிடுவார்கள்.இந்த ராஜதந்திரத்தை இப்போ இந்திய அரசும் பயன்படுத்த தொடங்கிவிட்டதாக தான் தெரிகிறது.டீசல் விலையை ஐந்து ரூபாயால் அதிகரித்ததுடன் மட்டுமல்லாது சமையல் எரிவாயுவின் விலையையும் அதிகரித்து அனைத்து வீடுகளிலும் குழப்பத்தை உண்டுபண்ணிய இந்திய மத்திய அரசு ஏதும் களோபரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கையில் மக்களது கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்ப உலகப்புகழ் பெற்ற பவர் ஸ்டாரை காஸ் விலையேற்றத்துக்கு பதிலாக பொய் கேசில் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றும் கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன. 

              

இதை விட சாம் அண்டர்சன் கூட இந்த கைதின் பின்னணியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.ஆனால் எதனையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் உறுதியாக கூறமுடியாது.

கொஞ்சம் சீரியாசா பார்ப்போம் :

சினிமா துறைக்குள் காலடி வைத்தவர்கள் அனைவருமே எதோ ஒரு வகையில் புகழ்,பணம் என்பவற்றுக்காய் ஆசைப்பட்டு வந்தவர்கள் தான்.நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இயக்குனர் ஆக கூடிய திறமை நிறையவே இருக்கு என்றோ அல்லது வேறு சினிமா சம்பந்தப்பட்ட திறமைகள் இருக்கு என்று திரையுலகுக்கு வந்த எவராயினும் "புகழ்" என்கின்ற மாயைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொள்கின்றமை காலம் காலமாய் நடந்து வருகின்ற விடயம் தான்.இந்த புகழ்,புகழ்ச்சி பிடிக்காதவர்கள் என யார் இருந்துவிட போகின்றார்கள்?இதற்காக அரசியல்வாதிகள் தொடக்கம் பிரபலங்கள் பெரும்பாலானோரும் பின் கதவு வழியாகவும்,புகழுக்காக செய்யப்படுவதில்ல என்கின்ற போர்வையிலுமாய் திறம்பட தங்கள் புகழ் பரப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                   

இந்த வகையில் புகழுக்கு ஆசைப்பட்டு சினிமாத்துறைக்குள் காலடி வைத்தவர் தான் டாக்டர் ஸ்ரீனிவாசன்.புகழுக்காக தான் நான் சினிமாவுக்கு வந்தேன்.டாக்டர் துறையில் அவ்வளவு புகழ் பிரபல்யம் கிடைக்காது.ஏன் வேறு எந்த துறையிலும் சினிமாவில் கிடைக்கும் புகழ்,பிரபல்யம் பத்து வீதத்துக்கேனும் கிடைக்காது என்று அவராகவே எத்தனையோ பேட்டிகளில் கூறி இருக்கின்றார்.தான் மீடியாக்கள் மூலம் பிரபலமாக தொடங்கியதிலிருந்து எதையுமே அவர் மறைத்ததில்லை.வெளிப்படையாகவே அத்தனை "புகழ் பரப்பு" வேலைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.இதனை வேறுவிதமாக வெள்ளாந்தி-வெளிப்படையாக நடந்துகொள்ளுதல் என்று கூட குறிப்பிடலாம்.காரணம் அவர் செய்யும் அத்தனை காரியமும் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.தானே செலவழித்து படம் எடுக்கின்றார்,தானே தியேட்டருக்கு காசு கொடுத்து படத்தை ஓட்டுவிக்கின்றார் என்பதெல்லாம் அவரின் அந்த வெளிப்படையான நடவடிக்கையால் தான் வெளியே தெரியவந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

இத்தனை பணவசதி படைத்தவன் மற்றையவர்களை போல ரகசியமாக தனது புகழ் பரப்பு வேலைகளை செய்திருக்கலாம்.ஒரு தியேட்டரை சொந்தமாக வாங்கி தனது படத்தை ஓட்டுவித்திருக்கலாம்.எதற்கு இன்னொருவனுக்கு பணம் கொடுத்து,அதுவும் அனைவருக்கும் தெரிய இப்படி ஒரு படத்தை ஓட்டவேண்டும்?இவன் ஒரு பைத்தியக்காரன் என்று வெளிப்படையாக பார்ப்போர் இலகுவாக கூறிவிடுவார்கள்.ஆனால் இவ்வளவு பணம் இருந்தும் சில விடயங்களை எப்படி நாசூக்காக செய்வது என்கின்ற ராஜதந்திர விடயங்களிலான அனுபவமீன்மை,அல்லது அப்படிப்பட்ட நபர்கள் அவரை சூழ இல்லாமை போன்ற விடயங்கள் கூட இவர் மீது இப்படி அவதூறு பரவுவதற்கு காரணமாய் இருக்கலாம்.அல்லது வெளிப்படையாகவே இதனை செய்கின்றேன் என்று திறந்த உள்ளத்தோடு இவற்றை செய்கின்றாரா...ஒன்றுமே புரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் தான் "நீயா நானா" நிகழ்ச்சியில் கோபிநாத்தால் அவமானப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் பலர் கோபிநாத் மீது வசைபாடியது நினைவிருக்கலாம்.என்னமோ எனக்கு அந்த நிகழ்ச்சியில் கூட கோபிநாத் ஒரு மனிதரை விருந்தினராக அழைத்துவிட்டு எப்படி கேள்விகள் கேட்கவேண்டும் என்று தெரியாமல் கேட்டிருந்தாலும் கூட எச்சந்தர்ப்பத்திலும் தன்னோட நிதானத்தை தவறவிடாது சிரித்த முகத்துடனேயே அத்தனை நொள்ளை கேள்விகளுக்கும் பதில் கூறியதை பார்த்த எனக்கு பவர் ஸ்டார் மீது பரிதாபம் தான் ஏற்பட்டது.இவ்வளவு வெள்ளாந்தியாக இருக்கிறாரே என்று தான் தோன்றியதை தவிர புகழுக்காக அலைகிறான் என்று அச்சந்தர்ப்பத்தில் ஏனோ தோன்றவில்லை.ஆரம்பத்தில் நாங்க கூட,ஏன் இப்போது கூட எங்களது சமூகவலைத்தள கிளுகிளுப்புக்காகவே பவர் ஸ்டாரை பயன்படுத்தி வருகின்றோம் என்பதை நான் கூறித்தான் தெரியவேண்டிய அவசியம் கிடையாது.


இவரைப்பற்றிய செய்திகளால் நகைச்சுவைகளால் எத்தனை பேர் இதுவரையில் வாய் விட்டு சிரித்திருப்பீர்கள்?அல்லது இதை வாசிக்கும் நீங்கள் ஒருதடவையேனும் பவர் ஸ்டாரை வைத்து ஓட்டி இருக்கமாட்டீர்கள்?ஒருத்தனை சிரிக்க வைப்பவன் சிலபேரின் பார்வையில் கோமாளியாக தெரியலாம்.ஆனால் என்னை பொருத்தவரைக்கும் நகைச்சுவை என்பது அனைவருக்கும் அமைந்ததல்ல.சில பேருக்கு மட்டுமே அந்த கொடை வாய்த்திருக்கிறது.மற்றவனை சிரிக்கவைப்பவன் உண்மையில் தெய்வமே!சம்பந்தமே இல்லாமல் உங்களை வருத்த,தொல்லைகள் தர உங்களை சுற்றி ஆயிரம் பேர் இருக்கலாம்.ஆனால் உங்களை சிரிக்க வைப்பதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று எண்ணி பாருங்கள்.சிலருக்கு எண்ணுவதற்கு கூட யாரும் இருக்கமாட்டார்கள்.அதனால் தான் சிரிக்க வைப்பவன் தெய்வம் என்றேன்!ஏதும் தப்பு இருக்கின்றதா?




Post Comment

22 comments:

கார்த்தி said...

கடசியா என்ன சொல்ல வாறீங்க தலீவா ? :p

நெற்கொழுதாசன் said...

சில பேருக்கு மட்டுமே அந்த கொடை வாய்த்திருக்கிறது.மற்றவனை சிரிக்கவைப்பவன் உண்மையில் தெய்வமே!சம்பந்தமே இல்லாமல் உங்களை வருத்த,தொல்லைகள் தர உங்களை சுற்றி ஆயிரம் பேர் இருக்கலாம்.ஆனால் உங்களை சிரிக்க வைப்பதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று எண்ணி பாருங்கள்.

பச்சென்று பசையா ஒட்டிக்கிட்டது வார்த்தை ..............

Prem S said...

//இந்த நிலைமை எதிர்காலத்தில் பவர் ஸ்டார் ரூபத்திலும் வரலாம் என்று ஜெயாவும் கருணாநிதியும் அஞ்சியிருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவித்திருந்தன//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு பாஸ்

Yoga.S. said...

வணக்கம் மைந்தரே!இந்தப் பவர் ஸ்டார் கைதை புதியதோர் கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள்.உண்மையில் இந்த வலைத் தளங்களில் ஹிட்சுக்காகவோ/வெறும் ஏதுக்குமாகவோ "அவரை"சிலர் ஓட்டியது உண்மை தான்!!!!////சிரிக்க வைப்பவன் தெய்வம் என்றேன்!ஏதும் தப்பு இருக்கின்றதா?////தப்பே இல்லை தம்பி!

Yoga.S. said...

கார்த்தி said...
கடசியா என்ன சொல்ல வாறீங்க தலீவா ? ////மொதல்ல இருந்தே சொன்னது தான்!!!!!!ஹ!ஹ!ஹா!!!!!

Unknown said...

@Yoga.S. said...
கார்த்தி said...
கடசியா என்ன சொல்ல வாறீங்க தலீவா ? ////மொதல்ல இருந்தே சொன்னது தான்!!!!!!ஹ!ஹ!ஹா!!!!!///


ஹிஹி அதானே எவ்ளோ சொல்லியும் சொன்னா கேக்றாங்களா பாருங்க :)

Unknown said...

வாவ்! வாரேவா! சூப்பர் பாஸ்!

அடங்கோ கடைசில என்னையும் புலம்ப வச்சிட்டாங்களே!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!

செங்கோவி said...

ha..ha..still laughing..!

எப்பூடி.. said...

தமது தோல்விப் படங்களையும் 150 நாள்,200 நாள் என ஓட்டி ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த தங்கள் முகத்தை தனது லத்திகாவை 300 நாள் ஓட்டி கேவலப்படுத்திய கடுப்பில் ஏன் விஜய் தரப்பு இதை செய்திருக்க கூடாது!!

சுதா SJ said...

எனக்கு என்னவோ விஜய் மேல்தான் டவுட்டா இருக்கு :)) எங்கே பவர் சங்கர் படத்தோட தன்னை முந்திருவாரோ என்ற பயத்தில் அப்பா துணையுடன் அம்மா ஆட்சி சலுகையுடன் எங்கள் பவரை உள்ளே தள்ளி இருக்கார் போல் :(( ஹீ ஹீ

சுதா SJ said...

ஆனாலும் மைந்தா இந்த அக்கப்பேறு உங்களுக்கு ஓவரப்பா .... ஆவ்வ்வ்வ்

என்னமா யோசிக்கிறாங்க :p

சுதா SJ said...
This comment has been removed by the author.
சுதா SJ said...
This comment has been removed by the author.
சுதா SJ said...
This comment has been removed by the author.
சுதா SJ said...
This comment has been removed by the author.
சுதா SJ said...
This comment has been removed by the author.
Unknown said...

yov yen ya vayasana aal ah ippadi ootura? Vanja pugalchi aani nu eavan thaan tamil la kandu pidichano? Series nu sollitu bayagara comedy pannita. And kadaise vartha aiyo yappa mudiyala da sami. Yov indha sami aavan illa naan thaan.

kk said...

நீங்கள் பவரைப்பற்றி இறுதியில் சீரியஸ்ஸாக கூறிய விடயங்கள் உண்மையாக இருந்தாலும்...பவர் ரசிகன் என்ற முறையில் அதை வன்மையாக கண்டிக்கின்றேன்....ஆவ்வ்வ்வ்வ்வ்....தலிவர் வால்க...பொலீஸ் அராஜகம் ஒலிக

”தளிர் சுரேஷ்” said...

காமெடியாகவும் சீரியஸாகவும் நல்ல அலசல்! உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்! பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!

தனிமரம் said...

அரசியல் ,சினிமா கூட்டுச் சதியோ மைந்தா!ஹீ நல்ல சிரிப்பு வெடி!

வெற்றிவேல் said...

டுவிட்டர், பேஸ்புக்கில் மட்டும் வந்தவர் இன்று பிளாக்கிலும் வந்துவிட்டார்.ஹ ஹா ஹாஆ ஹஹாஹா

Unknown said...

அருமையான தகவல் நன்றி சகோ

Related Posts Plugin for WordPress, Blogger...