Sunday, June 10, 2012

காதலில் சொதப்பலாம் வாங்க !!


காதல் திருமணங்கள் எப்போதும் ஏதாவது ஒரு வகையான பிரச்னையை எதிர்நோக்குவது தவிர்க்கமுடியாதது.பிரச்சனைகள் இல்லாத காதல் திருமணம் என்பது சுவாரசியம் அற்றதும் கூட!!எழுந்து வரும் பிரச்சனைகளை குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் இணைந்து எதிர்கொண்டு சமாளிப்பது கட்டாயமாகின்றது.ஓகே,இப்போ கதைக்கு வருகிறேன்.

அண்மையில் என்னோடு கடந்த வருடம் வேலை பார்த்த சகோதர மொழி பெண்ணொருவருடன் அண்மையில் கதைத்தேன்.கடந்த வருடம், வேலை பார்க்கும் போது இந்த வருட ஆரம்பத்தில் தனது திருமணம் என்று கூறி இருந்தார்.அப்போதே ஆறு வருடமாக காதலித்துக்கொண்டிருந்தார்.இருவருமே அழகு.தந்தையிடம் அனுமதி பெற வேண்டும்.அடுத்த வருடம் திருமண அழைப்பிதழ் அனுப்புகிறேன் என்று கூறி எனது நிறுவனத்தை விட்டு விலகி சென்றிருந்தார்.

என்னடா இன்னமும் திருமண அழைப்பு வரவில்லையே என்று இந்த சில மாதங்களாக நானும் எதிர்பார்த்திருந்த போது தான் அண்மையில் அந்த பெண்ணுடன் கதைக்க முடிந்தது."எங்கே, திருமணம் முடிந்துவிட்டதா" என்று கேட்டேன்.இல்லை என்றாள். ஏன் என்ன நடந்தது என்று கேட்டேன்.இன்னமும் அப்பாவிடம் சொல்லவில்லை.சொல்ல பயமாக இருக்கிறதாம்.அப்போ இந்த வருடம் கல்யாணம் என்று கூறிவிட்டு இன்னமும் அப்பாவிடம் கூறவில்லையா,பேசாமல் கொழும்புக்கு வெளிக்கிட்டு வாங்கோ பதிவு திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன்.அவள் கெட்ட வார்த்தைகளால் திட்டாத குறை.


"எனக்கு என்ட அப்பா தான் முக்கியம்,.அவர் ஓம் என்று சொன்னால் தான் கட்டுவேன்.ஆனால் சொல்ல பயமாக இருக்கிறது, அவர் கடைசி வரைக்கும் சம்மதிக்கமாட்டார்" என்றாள்.

அப்போ கடைசி வரைக்கும் சம்மதிக்க மாட்டார் என்றால் உனக்கு கல்யாணமே நடக்காதேடி என்று கேட்க,
பரவாயில்லை கடைசி வரைக்கும் கட்டாமலே இருந்துவிடுகிறேன் எனக்கு அப்பா தான் முக்கியம் என்று அடம்பிடித்தாள்.

அப்போ உன்னை நம்பி இருக்கிற,உன்னோட தனது வாழ்க்கை அமையணும் என்று உன்னை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்துக்கொண்டிருக்கும் அந்த பையன் என்ன செய்வது ?அவன் வேறு பெண்ணை கட்ட சொல்கிறாயா அல்லது அவனும் கல்யாணம் கட்டாமலே காலம் முழுவதும் இருக்க சொல்கிறாயா என்று கேட்டேன்.

"வேணுமென்றால் அவனது தொலைபேசி இலக்கம் தருகிறேன்;நீயே கதைத்து பார் எனக்கு தெரியாது" என்றாள்.

அதுவரை பொறுமையாக இருந்த மனசு பொங்க ஆரம்பித்து வெடித்துவிட்டது எனக்கு.

பின்ன என்ன ******************* நீங்க எல்லாம் காதலிக்க வெளிக்கிட்டனீங்க.அப்பா தான் முக்கியமென்றால் வீட்டோட இருக்க வேண்டியது தானே அப்பாவ கட்டிக்கொண்டு என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.கடைசி வரைக்கும் நான் சொன்னது புரியாமலேயே கிளம்பி சென்றுவிட்டாள் அந்த நண்பி!

எந்த ஒரு பெண்ணும் தனது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்களாக தனது தந்தையையும் கணவனையும் தான் கூறுவார்கள்.அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் தந்தை-கணவன் வகிக்கும் பங்குக்கு வராவிட்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த உறவுகளும் சில பெண்களின் வாழ்வில் உறுதுணையாக இருந்திருக்கலாம்,.இருக்கலாம்.பொதுவாக ஒரு பெண் தனது தந்தையை ஒத்த மனப்பாங்கு,நடத்தையை கொண்ட ஆண் ஒருவனை கண்டால் இயல்பான ஒரு ஈர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது.

தனது துணையை தேடும் போதும் கூட தனது தந்தையிடம் காணப்படும் நல்ல பண்புகளை கொண்ட ஒரு ஆணை தான் பெண் கற்பனை செய்து வைத்திருப்பாள்.அதே போன்று பெரும்பாலான வீடுகளில்,அம்மாக்கள் ஆண் பிள்ளைகள் மீதும்,அப்பாக்கள் பெண் பிள்ளைகள் மீதும் ஒரு அதிகப்படியான அன்பை வெளிக்காட்டுவதை காணலாம்.இது இயற்க்கை.


ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்,அதுவும் உண்மையான காதல் என்றால் அவளை திருமணம் செய்ய வேண்டும்,அவளுடன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்க்கு அடிப்படையாக இருக்கும்.நீண்ட கால பந்தத்தை எதிர்நோக்கி அதனோடு பின்னிப்பிணைந்த பல எதிர்பார்ப்புகள் தான் அந்த காதல் என்ற பந்தம் மூலமாக ஆரம்பிக்கிறது.

பெண்ணுக்கு தந்தை எத்தனையோ உதவிகளை செய்திருக்க கூடும்.அதிகப்படியான பாசத்தை கொட்டியிருக்க கூடும்.ஆனால் அந்த பெண் காதல் என்று வந்துவிட்டால்,ஒரு கட்டத்தில் சுயமாக ஒரு முடிவெடுப்பது அவசியமாகிறது.பாசமான தந்தை என்றால் தந்து மகளின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதில் நிச்சயம் அக்கறை இருக்கத்தான் செய்யும்.அதை புரிந்துகொண்டு அதற்க்கேற்றால் போல் பேசிப்பார்ப்பது அவசியம்.கடைசி தருணத்தில் கூட துணிவு வராதவர்கள் காதலிப்பதில் பயனில்லை.இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரலாம் என்று முதலே தெரிந்து கொண்டு தானே காதலிக்க தொடங்குகிறீர்கள்.
-----------------
தந்தை மீது பாசம் வைப்பது தவறு என்று கூறவில்லை.ஒரு பொண்ணுக்கு தன் வாழ்வில் பல கட்டங்களில் தந்தையின் அரவணைப்பு தேவைப்படுகிறது.ஒரு மகள் பல வழிகளில் தந்தையின் அரவணைப்பை எதிர்பார்க்கிறாள்.




1 .தந்தையின் பாதுகாப்பு மகளுக்கு தேவைப்படுகிறது.


மகளுக்கு தந்தையின் பாதுகாப்பு என்பது பல வழிகளில் உருவாக்கம் பெறலாம்.பெண்கள் சிறு பராயமாக இருக்கும் போது உடல் சார்ந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் வளரும் போது மகளின் தன்னம்பிக்கை,அறிவு வளர்ச்சியில் தந்தை உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது. ஒரு தந்தையின் வழிகாட்டல் ஏன் அவசியமாகிறது என்பதற்கு அடுத்து நான் தரப்போகும் தரவுகளே பதில் கூறும்.

-14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 % 'க்கும் அதிகமான பெண்கள், தந்து காதலன் கோபப்படுவான் என்கின்ற பயத்தில் அவசியமற்ற/தேவையில்லாத செக்சுவல் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.
-அண்ணளவாக 12 %'மான இளம் பெண்கள் வற்புறுத்தி கட்டாயத்தின் பெயரில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுத்தப்படுகிறனர்.
-35 வீதமான கல்லூரி,காலேஜ் பெண்கள் இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலத்துக்கு ஏதாவது ஒரு கவலை,நம்பிக்கையற்ற தன்மைகளினால் அவதியுறுகிறனர்.
- 11 வீதமான பெண்கள் தற்கொலை பற்றி சிந்தித்தோ,அல்லது முயற்சித்தோ இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Group of beautiful girls drinking wine by yekophotostudio - Stock Photo

இந்த மாதிரியான எண்ணிக்கைக்குள் தனது மகளும் வராமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தந்தைக்கும் அவசிய கடமையாகிறது.தந்தையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்ற பெண்கள் தற்கொலை முயற்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது என்கிறது மேல் கூறிய ஆய்வு.

2 . தந்தை தன் மீது பாசம் கொண்டிருக்கிறார் என்று அறிய பெண் விரும்புகிறாள்.

தந்தை ஒருவரின் மகள் மீதான அன்பு மகளை நல்வழிப்படுத்துகிறது. ஒரு திறமையான தந்தை தனது சிறிய மகள் சிறிய பல பிரச்சனைகளில் சிக்குப்படுவதை தவிர்க்க வைப்பதன் மூலம் வளரும் போது மகளின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உறுதுணையாக அமைகிறார்.மேலும்,

-தந்தையின் அன்பும் ஆதரவும் அணைவணைப்பும் ஒரு மகளின் மனநிலையை, சுயதிறனியல்களை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகிறது.
தந்தையின் அன்பை பெறும் மகள் வெகு சீக்கிரம் இன்னொரு ஆணின் அன்பை எதிர்பாக்க ஆரம்பிக்கும் வேகம் குறைகிறது.
இந்த மாதிரியான மகள்கள் பதின்மவயது கர்ப்பங்கள், செக்சுவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக குறைவாகவே காணப்படுகிறது.
இன்னொரு உறவுக்குள்(அது சாதாரண/செக்சுவல்) நுழைவதை தீர்மானிப்பதில் தந்தை/தந்தையுடன் தொடர்புடைய விடயங்கள் ரொம்பவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று 76 வீதமான பெண்கள் கூறுகிறனர்.



தனது மகளுக்கான எல்லைகள் வரைமுறைகளை வைத்து தந்தை வளர்ப்பதன் மூலம், தனது காதலுக்காக, காதலனை சந்திப்பதற்காக என்று எதிர்கால வாழ்க்கை தொடர்பான தீர்மானங்களை மிகவும் சிந்தித்து கவனமாக, மிகவும் பெறுமதியுள்ளதாக மகள்கள் எடுத்துக்கொள்கிறனர் என்று கூறப்படுகிறது. தன் மீதான நம்பிக்கை பெறுமதிகள் இதன் மூலம் குறித்த மகளுக்கு அதிகரிக்கிறது. இதனால் தன் மீது அதீத கவனமும் பெறுமதியும் எடுத்துக்கொள்ளும் எந்த மகளும் ஆபத்துக்குரிய செக்சுவல் நடவடிக்கைகளிலோ.,போதைவஸ்துக்கள், மதுபான பாவனைகளிலோ ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து கொள்கிறது. தனக்கு தானே ஒரு எல்லைகளை வகுத்து செயல்ப்பட இந்த தந்தையின் மகள் மீதான செல்வாக்கு அவசியமாகிறது.

3 . தந்தையின் ஈடுபாடு அவசியம்


தந்தை வெறுமனே அன்பு செலுத்துகிறேன் என்று கூறுவதோடு மட்டுமல்லாது ஈடுபாட்டுடன் கூடிய ஒரு அரவணைப்பையே ஒரு மகள் தந்தையிடம் இருந்து எதிர்பார்க்கிறாள். குறிப்பிட்ட சில நேரம் தந்தை தன்னோடு இருப்பது அவசியமென ஒரு மகள் சிந்திக்கிறாள். மகளின் திறமைகளை பற்றி பேசுவதும், மகிழ்ச்சியான தருணங்களில் அதை பகிருவதும் சோகமான சந்தர்ப்பங்களில் பங்கெடுப்பதும் தந்தையின் கடமையாகிறது. மகள் "விரும்பும்" நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்துதல் வேண்டும். மகளுடன் செலவழிக்கும் ஒவ்வொரு கணப்பொழுதும் அவளின் எதிர்காலத்தை திறம்பட தீர்மானிக்கும் நிமிடங்களாகின்றன. இப்போது முதலிடும் ஒவ்வொரு நிமிடங்களும் பிற்காலத்தில் நிச்சயம் ஒரு நன்மையை குறிப்பிட்ட தந்தைக்கு கிடைக்க செய்யும் என்பது நிதர்சனம்.
----------

சரி என்ன தான்செய்தாலும் தந்தை சம்மதிக்கமாட்டார் என்றால் அடுத்த கட்டத்தை சிந்திக்க வேண்டும்.இல்லை எனக்கு அப்பா தான் முக்கியம் சம்மதிக்காவிடில் பரவாயில்லை கடைசி வரைக்கும் அவரோடு இருந்து விடுகிறேன் அல்லது அவர் காட்டும் மாப்பிள்ளையையே கட்டிக்கிறேன் என்று காதலித்த பின்னர் முடிவெடுக்கும் பெண்கள் தயவு செய்து என் முன்னால் வாருங்கள்.ஜெயில் சென்றாலும் பரவாயில்லை என்று சுட்டுத்தள்ளிவிடுகிறேன்.




உன்னையே நம்பி ஒருத்தன் இருக்கிறான் என்று சிந்திக்காமல் எப்போதும் தனது நலனையே சிந்திக்கும் சுயநலவாதிகளுக்கு காதல் என்கின்ற பந்தம் தேவையற்றது.அனைத்து பெண்களும் இவ்வாறு தான் என்று கூறவில்லை.ஆனால் இத்தகைய மடத்தனமான பெண்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது நிச்சயமான உண்மை.

காதலில் ஏமாற்றுபவர்கள் பெண்கள் தான் என்று ஆண்கள் அதிகளவு கோஷம் இடுவதற்கு இப்படியான பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.உங்களால் காதலுக்கோ, காதலிப்பவனுக்கோ அவமானம் இல்லை.முதலில் உங்களை மாதிரி பெண்கள் இருப்பது பெண்கள் சமுகத்துக்கு தான் அவமானம்.திருந்துங்கள் பெண்களே.

நீங்கள் மேஜர் என்று குறிப்பிட்டு பதினெட்டு வயதை ஓட்டு போடும் வயதாக நிர்ணயித்தமைக்கு காரணம்,அந்த வயதுக்கு பின்னர் ஒரு பெண்ணோ ஆணோ சுயமான முடிவுகளை எடுக்க மனம் பக்குவமடைந்து விடும் என்பதனாலேயே.அரசாங்கத்துக்கே தெரிகின்ற விடயம் உங்களுக்கு தெரியாமல் போகுமா?தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சில முக்கிய முடிவுகளை எடுத்து தான் ஆகவேண்டும்.அல்லது எந்தவித "வாழ்க்கை சிக்கல்களுக்குள்"ள்ளும் சிக்கிவிடாத மாதிரி உங்கள் வாழ்க்கையை பார்த்துக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

காதல் என்னும் சொல் காதலிப்பவர்களாலேயே வர்ணம் பூசி அழகாக்கப்படுகிறது;அவர்களாலேயே கறுப்பு சாயம் பூசி சாகடிக்க்கவும்படுகிறது!!



Post Comment

14 comments:

Athisaya said...

வணக்கம்..!நியாயமான ஆதங்கம் தான்.என்னிடம் கேட்டால் கூறுவேன்.காதல் வயப்பட்டு துணையிடம் சம்மதம் சொல்வதற்கு முன்பே அதன் சாத்தியத்தன்மை,பிரச்சனைகள் யாவற்றையும் அறிவுபுPர்வமாக சிந்திக்க வேண்டும்.அறிவை பின்னிறுத்தி உணர்விற்கு முன்னிடம் கொடுத்தால் சிக்கல்.
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.சந்திப்போம்

Prem S said...

பல புள்ளி விபரங்களுடன் கலக்கல் கட்டுரை

சிவக்குமார் said...

நடுநிலையான பதிவு. சிறந்த புள்ளிவிவரங்களுடனான அலசல். அவர் உண்மையிலேயே மகளை அந்தளவுக்கு நேசிப்பவராக இருந்தால் திருமணத்திற்கு சம்மதிப்பார். இது போன்ற சென்டிமென்ட் உள்ளவர்கள் காதலிக்காமல் இருப்பது நலம். தமது தந்தையின் மீது அவ்வளவு மரியாதை வைத்திருப்பவர் காதலித்ததே தவறுதானே ? தவறில்லையெனில் சொல்லாமலிருப்பது மட்டும் சரியாகுமா ?

Unknown said...

//தமிழானவன் said...
நடுநிலையான பதிவு. சிறந்த புள்ளிவிவரங்களுடனான அலசல். அவர் உண்மையிலேயே மகளை அந்தளவுக்கு நேசிப்பவராக இருந்தால் திருமணத்திற்கு சம்மதிப்பார். இது போன்ற சென்டிமென்ட் உள்ளவர்கள் காதலிக்காமல் இருப்பது நலம். தமது தந்தையின் மீது அவ்வளவு மரியாதை வைத்திருப்பவர் காதலித்ததே தவறுதானே ? தவறில்லையெனில் சொல்லாமலிருப்பது மட்டும் சரியாகுமா ?///
தங்களுக்கு ஒரு வரைமுறை வகுத்துவிட்டு அதன் படி நடக்கிறார்கள்,அது சரியோ தப்போ என்று சுய பரிசோதனை செய்யாமல்!

Unknown said...

This comment has been removed by the author.

ராஜ் said...

ரொம்ப நல்ல அலசல்...
நடுநிலையோடு எழுதி உள்ளேர்கள்...
கூழுக்கும் ஆசை மீசைக்கும் அசை என்பது தான் பல பெண்களின் நிலைப்பாடாக உள்ளது..

Yoga.S. said...

வணக்கம்,மைந்தரே!நீஈஈஈ ண்ட பதிவு!நியாயமான பகிர்வு!அப்ப பின்ன என்ன -------------------------- சரியான கேள்வி!பொங்குங்க,திருந்தட்டும்!

kaathalukkaka.com said...

மைந்தன் நீங்க இவ்வளவும் எழுதி எப்பிடியையா குடும்பத்தையும் கொண்டு நடத்துறீங்க.....உண்மையிலே நீங்க ரொம்ப கெட்டிக்காரர் தான்...பதிவு சூப்பர்....இன்னொரு சின்ன விஷயம் நட்பு...வீட்ல ஒத்துக்க மாட்டாங்க எண்டு பொண்ணுங்க காதலை மறுக்க சொல்லுற ஒரு காரணத்தை நம்ம பசங்க ஏத்துக்க மாட்டாங்க....அது அப்ப பாத்துக்கலாம் நீ இப்ப ஒகே சொல்லு எண்டு வசனம் பேசுவாங்க....அது தானே நம்ம வீக்நேசு...#என்னோட சொந்த அனுபவமும் கலந்திருக்கு...

தர்ஷன் said...

அப்பான்னா பரவாயில்ல மாமாவுக்கு பிடிக்கலன்னு எல்லாம் விட்டுட்டு போறாங்க ஓய்

Mathuran said...

//"எனக்கு என்ட அப்பா தான் முக்கியம்,.அவர் ஓம் என்று சொன்னால் தான் கட்டுவேன்.ஆனால் சொல்ல பயமாக இருக்கிறது, அவர் கடைசி வரைக்கும் சம்மதிக்கமாட்டார்" என்றாள்.//

இதுதான் பாஸ் நம்மளுக்குள்ள இருக்கிற முக்கிய பிரச்சினை.. அப்பா முக்கியம் என்றா என்ன ம#$%^#%$ காதலிச்சாவாம். பெற்றோர்களும் பிள்ளைகள் விடயத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்வது சரியல்ல. என்னை பொறுத்தவரை திருமண விடயத்தை முற்றுமுழுதாக பிள்ளைகள் கையில் ஒப்படைத்துவிட்டு தாம் வழிகாட்டிகளாக ஒதுங்கியிருப்பதே சிறந்தது. இது பற்றி விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்கும்போது பார்ப்போம்

Mathuran said...

ஆனால் மைந்தன் இந்த பிரச்சினை பெண்களுக்கு மாத்திரமல்ல. ஆண்களிடமும் இருக்கிறது. ஆரம்பத்தில் எதிர்ப்பால் ஈர்ப்பு வேகத்தில் முடிவு எடுக்க முடிகிறதில்லை... காலப்போக்கில் அந்த வேகம் குறையும்போது தம்மை சூழ்ந்துள்ள பிரச்சினைகள் அவர்கள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கிறது.

Mathuran said...

காதலில் அதிகம் ஏமாற்றுபவர்கள் பெண்கள் என்ற கருத்தை தற்போது என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த விடயத்தில் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. எமது சமூக அமைப்பு முறையின் இறுக்கத்தால் பெண்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலேயே போய்விடுகிறது..

உதாரணத்துக்கு ஆண் ஒருவன் பெண்ணிடம் ஏமாந்தால் நாளை திருமணம் செய்தாலும் தன் மனைவி முன்னிலையிலே சொல்லலாம், என்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்று. ஆனால் ஒரு பெண் ஏமாந்தால் அந்த விசயம் அவள் மனதுக்குள்ளேயே புதைக்கப்பட்டுவிடும். வெளியில் யாரிடமும் சொல்லமுடியாது.

மேலே குறிப்பிட்ட ஆணுக்கு சமூகம் சொல்லும் அடைமொழி அவன் முந்தித்தான் பெட்டைக்கு பின்னால சுத்தினவன், இப்ப திருந்திட்டான்...

ஆனால் அதே பெண்ணுக்கு சமூகம் வழங்கும் பட்டம். ஆட்டக்காரி, ஆடித்திரிஞ்சவள் etc.. etc

இதுபோல நிறைய பிரச்சினைகள்.. சொல்லிக்கொண்டே போகலாம்.. இதுபோன்ற காரணங்களால் பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுவது வெளியே சொல்லப்படுவதில்லை......

Anonymous said...

நலமா?
ரொம்ப நாள் கழித்து சந்திக்கிறோம்...
நீங்கள் இப்படியெல்லாம் சீரியஸா எழுதுவீங்கன்னு எனக்கு தெரியாது...
பிடித்தது சிவா...

தனிமரம் said...

சிந்திக்க வேண்டிய பெண்கள் நிலையைச் சொல்லும் பதிவு சிவா! சிலர் விடும் தவறு பாதிக்கப்படுவது தந்தைதானே!ம்ம்

Related Posts Plugin for WordPress, Blogger...