Sunday, June 3, 2012

கொள்ளையடிக்கும் செலீனா கோமேஸ்-ஒரு கனவுக்கன்னி!!


                                      


கண்ணை கொள்ளை கொள்ளும் ஒரு இளம் சிட்டு...பதின்ம வயதுகளில் தனது அழகின் உச்சத்தால் பலர் இச்சையை கவர்ந்த ஒரு அழகி..இல்லை பேரழகி..செலீனா கோமெஸ்(Selena Marie Gomez )! ஜூலை மாதம் இருபத்தி இரண்டாம் தேதி 1992 ஆம் ஆண்டு அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள Grand Prairie என்னும் இடத்தில் மேடை நடிகையான Amanda Dawn "Mandy" Teefey 'க்கும் Ricardo Joel Gomez 'க்கும் மகளாக பிறந்தார். செலீனாவின் தந்தை ஒரு மெக்சிக்கன் அமெரிக்கனாகவும் தாயார் இத்தாலியை பூர்வீகமாகவும் கொண்டவர்..செலீனா ஐந்தே வயதாகி இருக்கையில் அவளது பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.தாயாரின் கவனிப்பில் வளர்ந்த செலீனாக்கு அவளது பதின்னான்காம் வயதில் இன்னொரு அப்பா கிடைத்தார்.ஆம் மேடை நடிகையான அவளது அம்மா இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டார்.


சிறு வயதில் இருந்தே தாயார் நாடகங்களுக்கு தயார் பண்ணுவதையும் ,நடிப்பதையும் பார்த்து வளர்ந்த செலீனாவுக்குள்ளும் ஒரு நடிகை வளர்ந்திருந்தாள்.இதை செலீனாவே பல நேர்காணல்களில் கூறி இருக்கிறாள்.செலீனா தனது நடிப்பு வாழ்க்கையை தனது ஏழாவது வயதிலேயே ஆரம்பித்தாள்.முதலாவது பாத்திரம் Barney & Friends என்கின்ற ஒரு தொலைகாட்சி நாடகத்தில் அமைந்தது.இந்த நாடகம் ஒன்று முதல் எட்டு வயது வரையான சிறுவர்களை மையமாக கொண்டு நடாத்தப்பட்டது.அதற்க்கு பின்னர் Spy Kids 3-D: Game Over ,Walker, Texas Ranger: Trial By Fire போன்ற தொலைகாட்சி நாடகங்களிலும் சிறு சிறு வேடமேற்று நடித்திருந்தால் செலீனா. 2004 ஆம் ஆண்டு புகழ் பெற்ற டிஸ்னி சேனலால் செலீனாவின் திறமை கண்டுபிடிக்கப்பட்டு அந்த சேனலுக்காக பல நாடகங்களில் தோன்றி நடித்தார்.

2007 ஆரம்பத்தில் டிஸ்னி சேனலின் தொடர் நாடகமான Wizards of Waverly Place 'இல் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றாக நடித்தார்.அந்த காட்சி 5 .9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து பெரிய ஹிட் நிகழ்ச்சியானது.அதிலிருந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்கினார் செலீனா.இந்த டிவி ஷோ'க்காக நான்கு பாடல்களை ரெக்கோர்ட் செய்தார் செலீனா.அவற்றில் ஒன்று பாடல் Wizards of Waverly Place என்கின்ற அந்த டிவி ஷோ'வின் ஆரம்ப பாடலாக மாறியது.

2008'இல் "Cruella de Vil" என்கின்ற திரைப்படத்துக்கு தீம் பாடலை உருவாக்கினார்.மேலும் இதே ஆண்டில் தனது பதினாறாவது பிறந்த தினத்தை கொண்டாடும் முன்பு,"Tinker Bell "("Fly to Your Heart"போல மேலும் பல படங்களுக்கு இசை அமைத்தார் செலீனா.. இதே ஆண்டில் தான் "Hollywood Records"என்கின்ற டிஸ்னி கம்பனியுடன் இசை ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார்.சிறு குழந்தைகள் செலீனாவின் இசைக்கு அடிமையாகின.போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை "Eight Hot Kid Stars To Watch" என்கின்ற பட்டியலில் செலீனாவை ஐந்தாவதாக வரிசைப்படுத்தி பெருமைப்படுத்தியதுமல்லாமல் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட இளம் நட்சத்திரம் என்று அடையாளப்படுத்தியது.


2009 'இல் செலீனா தனது சொந்த மியூசிக் பான்ட் ஒன்றை உருவாக்கினார்.செலெனா கோமஸ் & தி சீன் என்ற ராக் இசைக்குழு கோமஸ் வாய்பாட்டு, எத்தன ராபர்ட் கிடார் வாசிப்பு, ஜோய் கிளெமென்ட் பின்னணி குரல், கிரேக் கார்மன் டிரம் (அயல் நாட்டு மத்தளம்), மற்றும் டேன் போர்றேஸ்ட் விசைப்பலகை ஆகிய இசைக் கலைஞர்கள் அடங்கிய இசைக்குழுவாகும்அந்த பான்ட்'இன் முதல் ஆல்பமான "Teen pop "ஐ "Hollywood Records"ஐ 2009 இல் வெளியிட்டது. 


செலீனாவின் முதல் படமான "Ramona & Beezus "2010 ஆம் ஆண்டு வெளிவந்து பல நல்ல விமர்சனங்களை பெற்றது.September 17, 2010 இல் தனது ம்யூசிக் பான்ட் மூலம் இரண்டாவது ஆல்பமான " A Year Without Rain "ஐ வெளியிட்டார்.அது 66 ,000 பிரதிகளை விற்று சாதனை படைத்தது என்றால், அவரது மூன்றாவது ஆல்பமான "When the Sun Goes Down " 78 ,000 பிரதிகளை விற்றதோடு மட்டுமல்லாது ஆல்பங்களின் ரேட்டிங் பட்டியலான  Billboard chartஇல் மூன்றாம் இடத்தை பிடித்தது.இப்படி இருக்கையில் இந்த வருட ஆரம்பத்தில் தனது பேஸ்புக்கில் 'சிறிது காலம் நான் இசையை விட்டு பிரிந்திருக்க போகிறேன்,இந்த வருடன் முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்த போகிறேன்.எதிர்காலத்தில் யாரோடு வேண்டும் என்றாலும் எனது இசை அமையலாம்" என்று கூறி இருந்தார். 

ஆகஸ்ட், 2009 ஆம் ஆண்டில் செலீனா, தனது 17வது வயதில், யுனிசெப்பின் இளமையான விளம்பர தூதர் என்று தற்போது வரை பெயரெடுத்துள்ளார். இவர் தனது முதல் அதிகாரபூர்வ களப்பணி தூதுவராக, செப்டம்பர் 4, 2009 ஆம் ஆண்டில், ஒரு வார பயணமாக கனாவிற்கு, மிக மோசமாக பாதிப்படைந்த குழந்தைகளின் முக்கிய தேவைகளான சுத்தமான குடிநீர், உணவு, கல்வி மற்றும் உடலாரோக்கியத்திற்கு கைகொடுத்திட சாட்சியமாக சென்றார்.சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடத்தைகளை ஊக்கப்படுத்தும் அமைப்பான டிஸ்னி'ஸ் ஃபிரெண்ட்ஸ் ஃபார் சேன்ஞ்சில் இணைந்திருந்தார், அத்துடன் டிஸ்னி சேனலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பொதுச்சேவை அறிவிப்புகள் நிகழ்ச்சியிலும் செலீனா தோன்றினார்.

 

செலீனாவின் சில சுவாரசிய குறிப்புகள்: *செலீனா ஒரு சுத்தமான மோதிரத்தில் "உண்மை காதல் காத்திருக்கும் (True love waits)" என்று செதுக்கி தனது பனிரெண்டாவது வயது முதல் அணிந்திருக்கிறார்.

*வீட்டில் செலீனாவை சுற்றி எப்பவும் செல்லப்பிராணிகளாக ஐந்து நாய்க்குட்டிகள் காணப்படும்.

*செலீனா நடித்த "பார்னீ அண்ட் பிரண்ட்சின்" பகுதி 7,ஐ சில காலம் நிறுத்தி வைத்தார்கள். இதன் காரணமாக, கோமஸ் நடித்த பகுதிகள் அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை ஒளிபரப்பாக வில்லை. இதன் காரணமாக அவர் பார்னீ அண்ட் பிரண்ட்சை தனது ஐந்தாம் வகுப்பில் மேற்கொண்டாரா அல்லது தனது ஒன்றாம் வகுப்பில் மேற்கொண்டாரா என்பதைப் பற்றி மெல்லிய வாதங்களும் / குழப்பங்களும் எழுந்தன.

*பிரபல பாடகியான செலீனாவின் பெயரையே பெற்றோர் இந்த குட்டி செலீனாக்கும் வைத்தனர்.இவளும் பாடகியாகி விட்டாள்!

*செலீனாவின் அடுத்த வெளிவர இருக்கும் ஆல்பம் ஒன்றுக்கு பிரிட்டனி ஸ்பேர்ஸ் (Britney Spears)மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார்!

*இப்போது "ஜஸ்டின் பீபர்" இன் காதலியாக இருக்கிறார் செலீனா.இதற்காக பல மரண அச்சுறுத்தல்களை எதிரிகொண்டார் செலீனா ஜஸ்டின் பீபரின் ரசிகர்களால்.ஆனால் ஜஸ்டின் பீபர் செலீனாவை விட இரு வயது இளையவர் என்பதும் "ஓரினசெயர்க்கையாளர்"(Gay ) என பல்வேறு தரப்பினரால் நக்கல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 


குறிப்பு:
இந்த பதிவை எழுத வைத்தது செலீனா கோமெஸ் மீதான ஒருவித ஈர்ப்பு என்றால் மறுப்பதற்கில்லை.திறமையும் அழகும் ஓரிடத்தே கொண்ட பெண்கள் மிக குறைவு.அந்த வகையில் செலீனா அழகால் கிறங்க வைக்கிறார்,திறமையால் ரசிக்க வைக்கிறார்.இந்த பதிவின் பின்னர் இன்னும் பலர் செலீனாவின் விசிறிகள் ஆவார்கள் என்பது வெளிப்படை :P


செலீனா கோமெஸ் பற்றி google 'இல் தேடினால் விக்கிப்பீடியாவை தவிர்த்து எந்த லிங்க்'கும் உங்களுக்கு கிடைக்காது.இன்றிலிருந்து என்னோடைய இந்த பதிவு கிடைக்கும் என்பதில் ஒரு சந்தோசம்...ஹிஹி ஜொள்ளிலும் ஒரு ஷொட்டு!!


Post Comment

10 comments:

மைந்தன் சிவா said...

யாராச்சும் இன்ட்லில இணைச்சிடுங்கப்பா ப்ளீஸ்.

மருதமூரான். said...

Selena என்ற பெயருக்குள்ளேயே கவர்ச்சியும் அழகும் உண்டு. ஏற்கனவே இதேபெயரில் படமொன்று வந்து வரவேற்பைப் பெற்றது.

Selena- ஜஸ்ரின் பீபர் சம்பந்தப்பட்ட வீடீயோக்கள்- புகைப்படங்கள் வெளியாகிய தருணங்களில் அவ்வளவு அல்லோலகல்லோலப்பட்டது.

ஆங்கில பாடல்கள் மீதான ஆர்வம் தற்போது இந்த இரண்டு சிறு ஜோடிகளினால் இன்னமும் தொடர்கிறது.

Yoga.S. said...

வணக்கம்,மைந்தரே!நீ ஈஈஈஈஈஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர்,ஒரு நீ ஈஈஈஈஈஈஈஈ ண்ட பதிவு.அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.(அந்த இணைக்கிற வேலை எனக்குத் தெரியாதுப்பா!)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தல இன்டிலி ல இணைத்துவிட்டேன்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பாப்பா பத்தி நிறைய தெரிந்து வசுருகிங்க

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

தனிமரம் said...

ஜொல்லுக்கு அப்ப புது பார்ட்டி கிடைத்து விட்டது! ஹீஈஈஇ

தனிமரம் said...

பல தகவல் தேடித்தந்து விட்டீங்க தேவையின் போது நேர வரலாம் மைந்தனிடம்!

கிஷோகர் IN பக்கங்கள் said...

நண்பா சொல்றேன் எண்டு கோவிக்கப்படாது, செலீனாவின் "லவ் யூ லைக் எ லவ் சோங்" பாடலாகட்டும் சரி அல்லது "ஹூ சேய்ஸ்" பாடலையாகட்டும் சரி எனது ஃபோனில் ரிபீட் அடித்து கேட்கும் எனக்கு செலீனாவின் முகத்தை அரை நிமிடங்களுக்கு மேல் பார்க்கப் பிடிப்பதில்லை. கருங்குளவி குத்தியது போன்று புடைத்து இருக்கும் அந்த உதடுகள் தான் காரணமோ என்னவோ? ( ஆனால் அந்த உதடுகள் முத்தத்துக்கு ஏங்குவன போல் உள்ள‌தாக எனது நண்பன் சொல்லுவான், என்ன ரசனையோ என்று நினைத்துக்கொள்வேன் # எனக்குத்தான் ரசனை இல்லையோ?) என்னைக்கேட்டால் அந்த குரலில் இருக்கும் வசீகரம் முகத்திலோ உடலிலோ இல்லை என்பேன். ஒரு பாடகியாக செலினாவின் ரசிகன் நான், நடிகையா அல்ல.

*மாப்ள நான் அடிக்கடி வெள்ளவத்தை வருவேன், மேலே சொன்னதை மனதில் வைத்து பொரட்டி எடுத்துவிடாதீர்கள், தேவையானால் சொல்லுங்கள் என்னை நானே ரெண்டு குட்டு குட்டிக்கொள்கிறேன்.

Anonymous said...

ur blog in VIKATAN this week(22-6-12) issue in vikatan varavetparai section. Congrats...........

Related Posts Plugin for WordPress, Blogger...