Sunday, November 20, 2011

ஒஸ்தி மாமே!! பவர்ஸ்டார் டாப்பு!!எனக்கொரு பழக்கம் இருக்கு..எதிலேயுமே ஒஸ்தியா இருக்கணும்னு.பதிவு போட்டால் தினசரி போடணும்னு நெனைப்பேன்.பதிவு போடாவிட்டால் கூட தினசரி போட கூடாதுன்னு நெனைப்பேன்.அதே மாதிரி தானுங்க சாப்பிடனும்னா டெய்லி சாப்பிடுவேன்.இல்லாவிட்டால் நாளுக்கு மூணு வேளை சாப்பிடுவேன்.எங்க இருந்து இந்த கெட்ட பழக்கம் வந்திச்சுன்னே தெரியல எனக்கு.

ஆனா இந்த பழக்கம் வேற யாருக்கும் உதாரணமா ஒரு தெலுங்கு பயலுக்கு இருந்திச்சின்னா நான் தொலைஞ்சேன்..பயலு ரீமேக் பண்ணி சாப்பிடாம இருக்கானு சொல்லுவாங்க.அதுதான் இல்ல ஒரு பீட்டர் பய இப்பிடி இருந்தான்'னாலும் எனக்கு தான் கஷ்டம்க.வெளிநாட்டுகாரன் habbit 'டை காப்பி பண்ணி ரீலு விடுரான்னு சொல்லுவாங்க.ஆந்திராகாரனுக்கு பசிச்சா எனக்கு பசிக்ககூடாதா பாஸ்?பசிச்சா அவனும் அம்மா பசிக்குதுன்னு தானே கத்துவான்?பீட்டரா இருந்தா மம்மி ஹங்ரி அப்பிடீன்னு ஷௌட்(shout ) பண்ணுவான்.
அத விடுங்க

இந்த கதையை உங்களுக்கு வழங்குவது ஒஸ்தி எலிப்பொறி கம்பனி ப்ரைவேட் லிமிட்டட்!!நமக்கு பாகிஸ்தானில் கிளைகள் கிடையாது!

ஒரு நாளு எனக்கு செம பசி வந்திரிச்சு.என்னடா இது அதிசயமா இருக்கே,(ஏன்'னா நமக்கு பசி வாறதின்னா அது ஒரு சம்பவம்'க)என்ன காரணம்னு தேடி பாத்தாக்க அதுக்கு காரணம் ஒரு எலி'ன்னு தெரிய வந்திச்சு.எலி எனக்கு பசிய தூண்டி விட்டிட்டு இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்க்கு ஓடி போயிரிச்சு.இது தான் சமயம்னு தமிழ்நாட்டு எலி ப்ளேக் நோயை பரப்ப பாக்கிஸ்தானுக்கு போயிரிச்சு தொலைச்சான் ஒசாமா பின்லாடன் அப்பிடீன்னு பத்திரிகை மீடியா எல்லாம் பரபரப்பு நியூஸ் விடுறாங்க.இந்த பரபரப்பில பால் விலை ஏற்றமோ கனிமொழி சிறை ஏற்றமோ ஜுஜுபி மேட்டராச்சுன்னா இந்த எலியோட பவர பாருங்க!


இப்போ உலக எலிப்படை சங்கத்தில அந்த எலி தான் மாஸ் ஹீரோ!!ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே இது தான் இப்போ அவரு நடந்தாலும் சரி இருந்தாலும் சரி பேக் ரவுண்ட் மியூசிக்கு!

எதையுமே பாத்தீங்கன்னா சும்மா காய விட கூடாதுங்க.காய விட்ட அது பெருசாகி பழுத்து பழமாயிடும்.அப்புறம் எலி வந்து கடிச்சு நாசமாக்கிடும் பாருங்க.இதே மாதிரி தான் என் ப்ளாக்'க்கும்!கொஞ்ச நாள் காய விட்டதால என்னைய "இளைப்பாறிய பதிவர்" லிஸ்ட்டில சேர்த்திட்டாங்க.விட்டிடுவனா?போட்டேன் பாருங்க ஒரு பதிவு..

அது மட்டுமில்ல எதோ பாரிஸ் தமிழ் சிறந்த படைப்புகளுக்கு பல பரிசுக குடுக்க போறதா கேள்விப்பட்டேன்..நல்ல உள்ளங்கள் யாராச்சும் இந்த பதிவை ரெக்கமென்ட் பண்ணிவிடுங்க.எப்படியும் முதல் பரிசு எனக்குன்னு ஆல்ரெடி முடிவாயிரிச்சாம்.உங்களுக்கும் ஒரு பங்கு தாரேன்!
-----------------------------------------------------------------------------------

அழகிய தமிழ்மகன் இவரை பாரு
அதிரடி ஸ்டயிலில் பவர் ஸ்டார்'ரு!
கொடைகளில் இவனுக்கு சவால் யாரு?
படை பலம் நிரம்பிய பவர் ஸ்டார்'ரு!!
குழந்தையின் உள்ளம் சிறுத்தையின் கண்கள் பாரு...
தடைகளை எல்லாம் உடைப்பவரே ஸ்டாரு!!


நம்ம தலைவர் லத்திகா புகழ் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் லத்திகா பாடல் ஒன்று.அஜித் விஜய் எல்லாம் எந்த மூலைக்கு..தலைவர் மாஸ் தான் இனி நம்ம வேலைக்கு!!தலைவர் புகழ் நாளுக்கு நாள் நிச்சயமாக அதிகரிப்பதோடு மட்டுமல்லாது விசிறிகளும் அதிகரித்தே வருகிறார்கள் என்பதுடன் அடுத்த படமான 'ஆனந்த தொல்லை" படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது!இதனால் அடுத்த படம் நிச்சயமாக ஐநூறு நாட்கள் ஒடுமேன்பதில் எந்த ஐயமுமில்லை!

------------------------------------------------------------------------------------


இது தான் சாரு நிவேதிதா'வின் புதிய நாவலான எக்சைல்'இன் அட்டை படம்!இந்த படத்தின் கருப்பொருள் கொஞ்சம் வில்லங்கமானது..விளங்கினவர்கள் புத்திசாலிகள்.ஒண்ணுமே புரியாவிடில் கமெண்ட்டில் கேளுங்க சொல்றேன்!

------------------------------------------------------------------------------------------------------------------
"அநாகரீகமாக எழுதுபவர்களும் இத்தகைய சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். சுவற்றில், தியேட்டரில் கழிவறைகளில் இப்படிப்பட்ட கிறுக்கல்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய கிறுக்கல்களை இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் போட அவர்கள் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்."
பெருவாரியான மக்களைச் சென்றடையும் ஒரு சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களைத் திட்டுவதாலோ, குறை சொல்வதாலோ அவர்களின் வெற்றியை நீங்கள் பறித்துவிட முடியாது அப்பிடீன்னு சூர்யா ஒரு பேட்டியில சொல்லி இருக்கார்.


இந்த சன்டிவி வேலாயுதத்தை ரா-ஒன்'க்கு பின்னால் வரிசைப்படுத்தி இருக்கிறது.ரா ஒன் இரண்டாம் இடத்திலும் முதலாம் இடம் சொல்ல தேவை இல்லை.ஜெயா டிவி ரேட்டிங் நான் பார்க்கவில்லை.அதில் வேலாயுதம் முதலாவதாய் வந்து இருக்கும் என்பது நிச்சயம்.எந்த மீடியா தான் இப்போது நடுநிலையாக இயங்குகிறது.அரசியலிலும் சரி வியாபாரத்திலும் சரி தங்களை "ஒஸ்தி"ப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சச்சின் தனது 100வது சதத்தை அடித்தால், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் 100 தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடிப்பார் அடிப்பார்னு எல்லாரும் எதிர்பார்க்க மறுபக்கம் திராவிட் தான் சதம் அடித்துக்கொண்டிருக்கிறார்.பதட்டம் காரணமாய் தான் சச்சினால் சதம் அடிக்க முடியவில்லை என்று கூறப்படும் சமயம் இவர்கள் வேறு தங்க காசு வெள்ளிக் கோப்பைன்னு கிளம்பிட்டாங்க...அடுத்த டெஸ்ட்டிலும் அம்போ தானா!!


மறுபக்கம் இந்திய முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி 1996 உலக கிண்ண அரையிறுதி போட்டியில் சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக குண்டை தூக்கி போட்டிருக்கிறார்.போட்டியில் டாஸ்'இல் வென்றால் முதலில் பேட் செய்வதாக தான் முதலிலேயே முடிவெடுக்கப்பட்டிருந்ததெனவும் ஆனால் போட்டி தினமன்று டாஸ்'இல் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது தனக்கு சந்தேகத்தை தருகிறதென்று கூறி இருக்கிறார்.அத்துடன் டாஸ்'க்கு முன்னரே ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவ்ஜோத் சித்து துடுப்பாட தயாராக pads கட்டி இருந்ததை தான் அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளளார்.இந்த கருத்தை அப்போதைய கேப்டன் அசாருதீன் மற்றும் அணி முகாமையாளர் அஜித் வடேகர் மறுத்துள்ளனர்.அந்த அரை இறுதி போட்டி தான் காம்ளியின் கிரிக்கட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது!


Post Comment

19 comments:

ஆகுலன் said...

எனக்கொரு பழக்கம் இருக்கு..எதிலேயுமே ஒஸ்தியா இருக்கணும்னு.பதிவு போட்டால் தினசரி போடணும்னு நெனைப்பேன்.பதிவு போடாவிட்டால் கூட தினசரி போட கூடாதுன்னு நெனைப்பேன்.அதே மாதிரி தானுங்க சாப்பிடனும்னா டெய்லி சாப்பிடுவேன்.இல்லாவிட்டால் நாளுக்கு மூணு வேளை சாப்பிடுவேன்.எங்க இருந்து இந்த கெட்ட பழக்கம் வந்திச்சுன்னே தெரியல எனக்கு./////

அண்ணே இந்த பழக்கம் இப்படியேபோனா..எல்லாம்(>>>)...சின்னாபின்னமாகிடும்..ஆஆ

ஆகுலன் said...

தொடக்கம் ஒரு மாதிரி தலையை சுத்திநாலும்...பிறகு பிக்கப் பண்நீடன்...

நல்லா இருக்குது...

மைந்தன் சிவா said...

//
ஆகுலன் said...
எனக்கொரு பழக்கம் இருக்கு..எதிலேயுமே ஒஸ்தியா இருக்கணும்னு.பதிவு போட்டால் தினசரி போடணும்னு நெனைப்பேன்.பதிவு போடாவிட்டால் கூட தினசரி போட கூடாதுன்னு நெனைப்பேன்.அதே மாதிரி தானுங்க சாப்பிடனும்னா டெய்லி சாப்பிடுவேன்.இல்லாவிட்டால் நாளுக்கு மூணு வேளை சாப்பிடுவேன்.எங்க இருந்து இந்த கெட்ட பழக்கம் வந்திச்சுன்னே தெரியல எனக்கு./////

அண்ணே இந்த பழக்கம் இப்படியேபோனா..எல்லாம்(>>>)...சின்னாபின்னமாகிடும்..ஆஆ/

உள்குத்து இல்லியே :)

ஆகுலன் said...

மைந்தன் சிவா said...
அண்ணே இந்த பழக்கம் இப்படியேபோனா..எல்லாம்(>>>)...சின்னாபின்னமாகிடும்..ஆஆ/

உள்குத்து இல்லியே :)//


அது சொல்ல மாட்டன்...ஆமா..

தர்ஷன் said...

பார்த்துக் கொண்டேயிருந்தால் நிறையத் தோன்றுகிறது, ஆனால் புரிதல் சரியா என்பதுதான் சந்தேகம். மஞ்சள் நிறப்பகுதி ஒரு பெண்ணின் முலை,சிவப்பு நிறப்பகுதியில் உள்ள கோட்டினாலும் முலைக்கு கீழான வளைவினாலும் காட்டப்படுவது பெண்குறி என நினைக்கிறேன். கோடுகள் இரண்டும் விந்துக்களை ஞாபகப்படுத்துகிறது.

Yoga.S.FR said...

காலை வணக்கம்,சார்! நீண்ட இடை?!வேளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நானும் தான்!என்ன அது சதம் அடிப்பது,சதம் அடிப்பது என்று பல தடவைகள் ரிப்பீட் பண்ணியிருக்கிறீர்கள்.அப்படிஎன்றால் என்னவென்று விளக்க(பல்லை அல்ல)முடியுமா?ஹி!ஹி!ஹி!!!!அப்புறம்,பாரிசில் பரிசு ஏதோ கொடுக்கிறார்கள்,பங்கு தருவதாக சொல்லியிருக்கிறீர்கள்.இங்கேயும் இறைச்சிக் கடைகளில் பங்கு கிடைக்கும்,அது இல்லையே?

Yoga.S.FR said...

அந்தாளுக்கு(சாரு நிவேதிதா)இதே பொழைப்பாப் போச்சு.பத்தாததுக்கு நீங்க வேற புதிர்ப் போட்டி வைக்கிறீங்க!

மைந்தன் சிவா said...

//Yoga.S.FR said...
அந்தாளுக்கு(சாரு நிவேதிதா)இதே பொழைப்பாப் போச்சு.பத்தாததுக்கு நீங்க வேற புதிர்ப் போட்டி வைக்கிறீங்க!///

:)

Yoga.S.FR said...

என்ன வெறும் ஆச்சரியக் குறியுடன் நிறுத்தி விட்டீர்கள்?சாப்பிட்டாச்சா?????

மைந்தன் சிவா said...

//Yoga.S.FR said...
என்ன வெறும் ஆச்சரியக் குறியுடன் நிறுத்தி விட்டீர்கள்?சாப்பிட்டாச்சா??/
ஆமா சார்..நீங்க?

கவி அழகன் said...

காண நாளைக்கு பிறகு சந்தைக்கு வரீங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னது ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடறது மாதிரி நோயா..

எனக்கும் அப்படிதாங்க இருக்குது ரொம்ப நாளா..?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டிப்பாக இந்த தொடரிலே சச்சின் அந்த 100 பொற்காசுகளை வாங்கிடுவாரு பாருங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இடையிலே விளம்பரம் வேற..?

KANA VARO said...

பவர் ஸ்டார் பாட்டு கொலைவெறியா இருக்குதேப்பா!

Yoga.S.FR said...

மைந்தன் சிவா said...

//Yoga.S.FR said...
என்ன வெறும் ஆச்சரியக் குறியுடன் நிறுத்தி விட்டீர்கள்?சாப்பிட்டாச்சா??/
ஆமா சார்..நீங்க?////இப்ப தான் ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கு.சரி,பவர் ஸ்டாரோட அப்புடி என்ன....................................!?சார்,ஆ??????????????

shanmugavel said...

he...he.. siva how are you?

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா வால்பாறை வரதா, ரொம்ப நாளா காணோமே? ஹன்சிகாவோட ஹனிமூனா?

மதுரன் said...

லத்திகா சூப்பர் பாஸ்.. அப்பிடியே பட லிங்கும் இருந்தா குடுங்க பாஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...