ஒரு ஊர்ல மங்காத்தான்னு ஒரு பாட்டி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பேரப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்த மங்காத்தா பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).
இப்பிடித்தான் ஒரு தடவ "மெட்ராஸ் ஐ" வந்தப்போ பாட்டிக்கு மட்டும் வரல..ஏனென்டா அந்த சமயம் பாட்டி அத்திப்பட்டி கிராமத்தில ஒரு பங்சனுக்கு வடை சுட போயிருச்சு.(பாட்டிட வடை ஒத்து வராமத் தான் அத்திப் பட்டி கிராமமே அழிஞ்சது யாருக்குமே தெரியாது..நீங்க சிட்டிசன்'ல பாத்ததெல்லாம் சுத்தப் பொய்)
பாட்டி ஸ்பெஷல் வடை ஒண்ணு சுடும்.அதிண்ட ஸ்பெஷல் என்னெண்டா சாதா வடையோட ஒரு வாழைப்பழமும் சேர்த்து விக்கிறது தான்.அந்த சாப்பாட்டில மயங்கினான்களோ இல்லையோ தின்னு போட்ட வாழைப்பழ தோல்'ல வழுக்கி விழுந்தவங்க ஏராளம் பேர்!!
அவ்வாறு வழுக்கி விழுந்தவங்களுக்கு பாட்டி வெள்ள நிவாரண நிதியில இருந்து நஷ்ட ஈடு குடுப்பாங்க.
பாட்டிக்கு தினசரி வருமானமே எக்கச்சக்கம்..அதால புருஷன் வேலை செய்யனுமேண்டு தேவை இருக்கல.
அதால தினசரி நாட்டுச் சரக்கு அடிப்பதும் நடு ரோட்'டில படுப்பதும் தான் தலையாய கடமை எண்டு வாழ்ந்து வந்தார்..மங்காத்தா படம் வந்த போது பாட்டியின் ஏரியா ரைட்ஸ் பாட்டி வசம் தான் இருந்தது!மங்காத்தா டா'ன்னு சொல்லி சொல்லி வடையை தூக்கி தூக்கி தாச்சிக்குள் போடும் ஸ்டைலே அழகுதான்!

"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).
உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..
(இவர் தான் மிஸ்டர் சின்னப்பு,One and only husband)
வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.
அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)

(ஆயிப் போன காக்கா)
பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..
ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்.............மறுபடியும் முதல்லேருந்தா!!
குறிப்பு:இந்த வடை சுட்ட கதைக்கும் மங்காத்தா ரிலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!

40 comments:
Post a Comment