Tuesday, August 2, 2011

நான் அடிச்சால் தாங்கமாட்டாய்!!

எனக்கு கோபமே வராதுன்னு நான் அடிக்கடி பொய் சொல்லி இருக்கேன் நெருங்கிய பலரிடம்..ஆனால் உண்மையில் சில பல விசயங்களுக்கு நான் கோபப்படுவேன்..அதில் முக்கியமானது நேரம்..ஆமாம் நேரம் சரியாக கடைப்பிடிக்காவிடில் நல்ல கோபம் வரும் எனக்கு..எனது பாடசாலை "Panctuality" அதுதாங்க நேரம் தவறாமையை சீராக கற்பித்ததாலோ என்னமோ ஒரு நேரத்தை கூறிவிட்டு நேரம் தாமதமாய் வருபவர்களை எனக்கு கண்ணில் காட்ட கூடாது..அவ்வளவு கோபம்வரும்.


இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயங்களில் கோபம் வருவது சகஜம்.எனக்கு கோபமே வராதுன்னு யாராச்சும் சொல்பவர்களாய் இருந்தால் அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்களாகவோ அல்லது பூமியின் அதிசய பிறவிகளாகவோ இருப்பார்!

அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.

கோபம் பசியை போன்றது..சாதி மத பேதமின்றி அனைவருக்கும் வரும்."என்னடா நீ அடிக்கடி எல்லாத்துக்கும் கோபப்படுறியாமே' அப்பிடி நீங்க கேட்டு பாருங்க கோபமே வராதவரிடம்..அன்று தெரியும் அவருக்கும் கோபம் வரும் என்று..ஹிஹி எல்லாம் ஒரு விஷப் பரீட்சை தான்!சிலருடைய கோபம் வரையறைக்குள் கட்டுக்குள் இருக்கும்.சிலரது கோபம் அணு ஆயுதம் போல பரவி வெடிக்கும் ஆற்றலை கொண்டது!
கோபம் இரு வகைப்படும் பெரும்பாலும்.ஒன்று உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம்..மற்றயது வெளிப்படையான கோபம்.வெளிப்படையான கோபம் பல ரச நாடகங்களை நடத்தும்.இதே உள்கோபம்,சில வேலை நம் உயர் அதிகாரிகளிடமோ அல்லது சீனியர்களிடமோ ஏற்படும்.அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளுக்கே புகைந்து கருகும்.

இந்த வீடியோவை பாருங்கள்..உங்களில் என்ன தவறு இருக்கிறதென்று புரியும்!

அமைதியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அமைதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபத்தால் எந்த ஒரு நன்மையும் விளைந்ததாக சரித்திரமில்லை. அன்பாய் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் சரித்திரமில்லை

மொத்தத்தில் கோபம் என்னும் கொலை வாள் வெட்டிச்சாய்த்த வாழ்க்கைகள் ஏராளம் ஏராளம்.எண்ணிலடங்காதவை.கோபமும் மன்னிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றன என்பர்.நான் சொல்வது மட்டுமே சரி,மற்றையவர்கள் சொல்வது தவறானவை என்பதே பெரும்பாலான கோபங்களின் அடிப்படையாக அமைகின்றன.சுய நலமே கோபத்தின் அடி நாதம்.அனைவரும் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொண்டால் கோபங்கள் துளிரிலேயே கருகிவிடும்.அதற்காக மற்றவர்கள் மன்னிக்க இருக்கிறார்கள் என்று வீணே கோபப்படாதீர்கள்..
அப்புறம் கந்தசாமி,அந்நியனிடம் புகார் அளித்துவிடுவேன் நானே!!

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!

படிச்சிட்டு ஓட்டு போடாம போனா நான் கோபமாயிடுவேன்..ஹிஹி கருத்து சொல்லாவிட்டால் கொலை தான்!!
ஜோக் இணையத்தில் சுட்டது.ஹிஹி

Post Comment

43 comments:

ஆகுலன் said...

எனக்குதான் வடை..

Unknown said...

தமிழ்மணத்தில் யாராச்சும் இணையுங்கப்பா!

Unknown said...

ஆகுலன் said...
எனக்குதான் வடை..

August 2, 2011 11:38 பம்//

சாப்பிடுங்க கோபப்படாம ஹிஹி

ஆகுலன் said...

நான் தமிழ் மணம் பாவிப்பது இல்லை....

உண்மைதான்.....நானும் சரியா கொபபடுவேன்...இப்பொழுது எல்லாம் குறைத்து விட்டேன்.....

உந்த வீடியோ எங்க புடிசீங்க....

தளத்தின் பெயரும் எனது பெயரும்...........

Chitra said...

:-) ...Keep smiling...

செங்கோவி said...

ரைட்டு..

KANA VARO said...

மைந்தன் சிவா said...
தமிழ்மணத்தில் யாராச்சும் இணையுங்கப்பா!//

வர வர இவன் ரொம்ப கரைச்சல் குடுக்குறான்.

KANA VARO said...

நான் அடிச்சால் தாங்கமாட்டாய்!!//

தலைப்பில ஒரு உள் குத்தும் இல்லையே! நம்பி கமெண்ட் அடிக்கிறன். எமாத்திடாதை..

KANA VARO said...

மனுசரேண்டா கோபம் வரோணும். என்னை போல சிலதுகளுக்கு தான் சுரணை இல்ல. எவ்வளவு அடிச்சாலும் வேண்டுவம்,

KANA VARO said...

சீரியஸா பதிவு எழுதுறாய். வீட்ட ஏதும் பிரச்சனையோ!

சுதா SJ said...

பாஸ் உங்களின் ஸ்டையிலில் இருந்து விலகிய பதிவு பாஸ்

பிரமாதாம் இப்படியும் நிறைய எழுதுங்க பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா டூப்பர் டூப்பர் தமாஷ்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

கிளிக்கு கொழுப்புதான் ஹி ஹி.....

கவி அழகன் said...

அருமை வாழ்த்துக்கள்

Anonymous said...

வழக்கத்திலிருந்து மாறுபட்ட பதிவு...
...பகிர்விற்கு நன்றி..சகோ..

007 said...

அருமை !!!!!!!!!!..............:)

கூடல் பாலா said...

மாப்ள ...நான் என்ன சொல்லப் போறேங்கிறது உங்களுக்கே தெரியும் ....அப்புறம் ஏன் டைம வேஸ்ட் பண்ணணும்....ஹி ...ஹி

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

உணவு உலகம் said...

கே:அந்த கிளி சிவாவைப் பார்த்தால் என்ன சொல்லியிருக்கும்?
ப:நல்லா கோபப்பட சொல்லீருக்கும்.

Unknown said...

அது மைந்தன் வளர்க்குற கிளி போல! :-)

கேரளாக்காரன் said...

Kovapadaatti ellarum thala mela okkanthukkuvaanga boss. Eppavume konjam kovama face vachukkanunu Madurai attack pandy annan sollirukkarpavume konjam kovama face vachukkanunu Madurai attack pandy annan sollirukkar

Unknown said...

மைந்தன் சீரியஸா பதிவெழுத ஆரம்பிச்சுட்டாரா?

அய்யய்யோ காந்திய சுட்டுட்டாங்களா?

அப்போ...ஹன்சியோட வாழ்க்கை?

ARV Loshan said...

நல்லா இருக்கு.. சொன்ன விஷயங்கள் சரி தான்..
கோபம் என்பது மழை மாதிரி இருக்கவேண்டும்..
எந்த நேரமும் வந்தாலும் அவதி.. வரவே வராமல் போனாலும் கஷ்டம்.
வரவேண்டிய நேரத்தில் வரவேண்டும்.. அளவோடு..

ஜோக் ரசித்தேன்...

தலைப்பு உங்க தலைவர் வழியோ? ;)

M.R said...

நான் சொல்வது மட்டுமே சரி,மற்றையவர்கள் சொல்வது தவறானவை என்பதே பெரும்பாலான கோபங்களின் அடிப்படையாக அமைகின்றன.

கூடவே நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது போன்றவை கோபம பிறக்க காரணமாக அமைகிறது .

நிரூபன் said...

நான் அடிச்சால் தாங்கமாட்டாய்!!//

அவ்....மச்சி, நீயாரையும் குறிப்பிட்டு இந்தப் பதிவினை எழுதலைத் தானே.

நிரூபன் said...

நேரம்..ஆமாம் நேரம் சரியாக கடைப்பிடிக்காவிடில் நல்ல கோபம் வரும் எனக்கு..எனது பாடசாலை "Panctuality" அதுதாங்க நேரம் தவறாமையை சீராக கற்பித்ததாலோ என்னமோ ஒரு நேரத்தை கூறிவிட்டு நேரம் தாமதமாய் வருபவர்களை எனக்கு கண்ணில் காட்ட கூடாது..அவ்வளவு கோபம்வரும்.//

மச்சி, நான் கூட லேட்டா வந்திருக்கேன், நீங்க என் மீது கோபப்பட மாட்டீங்க தானேன்.

நிரூபன் said...

எனக்கு கோபமே வராதுன்னு யாராச்சும் சொல்பவர்களாய் இருந்தால் அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்களாகவோ அல்லது பூமியின் அதிசய பிறவிகளாகவோ இருப்பார்!//

உங்களுக்கும், ஓட்ட வடைக்கும் அப்பப்ப என்னைக் கடிக்கா விட்டால் சாப்பிட்டது செரிக்காது போலிருக்கே.

நிரூபன் said...

மச்சி, இந்தப் படத்திலை நீங்கள் முதலாவதாக இணைத்துள்ள ரெலிபோன் பேசும் பெண்ணின் படமானது, இப் பதிவின் மூலம் எனக்குள் ஒரு சில கருத்துக்களைத் தூண்டியிருக்கிறது.

ரெலிபோனின் மூலம் ஏற்படுத்தப்படும் கதிர்வீச்சும் ஒரு வகையில் அளவு கடந்த கோபத்திற்கும், மண்டைக் குத்து அல்லது மூளைக் குத்திற்கும் காரணமாகின்றது.
பட செலெக்சன் சூப்பர்,

நிரூபன் said...

கோபம் பற்றிய காத்திரமான இடுகை மச்சி,
உண்மையில் மனதினை ஒரு நிலைப்படுத்தி, பதட்டமேதுமின்றி இருந்தால் கோபமானது நம்மை விட்டு அகன்று விடும் என்பதனை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

என் பாராட்டுக்கள்.

Anonymous said...

நமக்கெல்லாம் கோபம் வராது பாஸ் ஹிஹி ..

Anonymous said...

ஆமா, அப்புறம் அந்த பொண்ணு கிளியை என்ன செய்திருப்பாள்...

kobiraj said...

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!அருமை வாழ்த்துக்கள் கலக்குங்க தல

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு.....

shanmugavel said...

சிவா வரவர விஷயம் கூடிட்டே போகுது.கலக்குங்க!

காட்டான் said...

மாப்பிள நீ அடிச்சா மட்டுமில்ல நான் அடிச்சாலும் நீ தாங்க மாட்ட..!? பின்ன காட்டான் இருக்கிறான்றதையே நீ மறந்து போனாயே...!!!!!

காட்டான் குழ போட்டான்....

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi

மாலதி said...

அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.//பாராட்டுக்கள்.

கோகுல் said...

கோபப்படாமல் ரௌத்திரம் மட்டும் பழகுவோம்

K.s.s.Rajh said...

கோபம் மனிதனுக்கு கிடைத்த சாபம் அதனால் அவன் பாவம் ஏ டண்டணக்கா டணக்குணக்கா....கோபத்தில் இருந்து எப்போது கிடைக்கும் மனிதனுக்கு விடிவு அதனால் வந்தது உங்களுக்கு ஒரு பதிவு.டண்டணக்கா டணக்குணக்கா.....

உங்கள் பதிவு நல்லா இருக்கு பாஸ்

சென்னை பித்தன் said...

வரவேண்டிய நேரத்தில் கோபம் வரவேண்டும்.அநாவசியக் கோபம் தவிர்க்கப்பட வேண்டும்.

Anonymous said...

kopam varummmmmmmmmmmmmmmmm ana vararthu he he :) :)

மாய உலகம் said...

அமைதி ஆனந்தம்...கோபம் கோமாளித்தனம்... பகிர்வு அருமை

கார்த்தி said...

நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் கோபப்படாதவர்கள் கோபம் கொளு்ளும்போது அது மதிப்புத்தான்!!
சார் இப்ப கொஞ்சம் வேற வேலயில பிசியா இருக்கிறதால ஓழுங்கா உடனுக்குடன் பதிவுகளுக்கு வரமுடியல. மீண்டும் எல்லாம் ஒழுங்காகும் எண்டு நம்புறன்

Related Posts Plugin for WordPress, Blogger...