அனைவருக்கும் பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..
எனது வலைத்தளத்தின் பெயர் கவியுலகம்'ஆக கடந்த வருடம் இருந்தது..
ஆரம்பத்தில் நான் கவிதைகள் மட்டும் எழுதிவரும் போது அந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது.
ஆனால் டிசம்பர் மாதம் முதல் நான் கவிதை,விளையாட்டு,சினிமா,மொக்கை என அனைத்து விடயங்களையும் எழுதத்தொடங்கிவிட்ட பின்பு,வலைத்தளத்தின் பெயர் பெரிதாகப் பொருத்தமில்லை என எனது நண்பர்கள் பலரும்
வழங்கிய ஆலோசனைக்கமைய பெயரை மாற்றத் தீர்மானித்தேன்..
ஆனா பாருங்க நானா ரூம் போட்டு ஒரு கிழமையா ஜோசிச்சுப் பார்த்தும் எந்தப் பெயரும் உருப்படியா வரவில்லை..(எப்படித்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்கப் போறனோ தெரியல..ம்ம்)
ஆக,பேஸ்புக்'ல டிசெம்பர் 31 ஸ்டேடஸ் ஒண்டு போட்டேன் இவ்வாறு.,
"எண்ட ப்ளாக்'ட பெயர மாத்தலாம்ன்னு இருக்கேன்..நல்ல பெயர் சொல்றவங்களுக்கு ஒரு புரியாணி பார்சல் வழங்கப்படும்!"
உடன உசாரான நம்ம பயலுக,மாறி மாறி பெயர் சொன்னாங்க..
அந்தப் பெயருகளை தாறன்,பாருங்க..எப்பிடி கொலை வெறியோட இருக்காங்க
எண்டு!
அதில அரைவாசிப் பேருங்க சாப்பாட்டுக் கடைக்கு பெயர் கேட்ட மாதிரியே பெயர் சொன்னானுங்க..
அதிலயும் நம்ம அனலிஸ்ட் கன்கோன் இருக்காரே..எவளவு பசில இருந்திருக்கார் பாருங்க..யாராச்சும் பார்ட்டி வைக்கிற எண்டு சொல்லி ஏமாத்திட்டாங்க போல..(வதீஸ்'ஓ?பவனோ?)ஒரே கொத்துரொட்டி,பணியாரம் எண்டு தான்...
மிகுதிப் பேர்கள் அலறல்கள்,ஓலங்கள்,முனகல்கள் எண்டு!!எவளவு காண்டா இருக்காங்க பாருங்க..
எனக்கும் பெயர் வரேல..வந்தபெயருக்குள்ள ஒண்ட தெரிவுசெய்வமெண்டு பார்த்து அண்ணல் வள்ளல் பெருந்தகை சுபாங்கன் அவர்கள் முன்மொழிந்த "மைந்தன் மனதில்"என்ற பெயரை தெரிவுசெய்துள்ளேன்..
அதனால ஒரு புரியாணி பார்சல் அவருக்கே வழங்கப்படுகிறது..
ஆறுதல் பரிசாக நண்பர் ஜெய்லானிக்கு ஒரு ஆப்பம்'மும்(ஆப்பக்கடை பெயர் தந்ததற்காக),கன்கொன்'ற்கு ஒரு பணியாரமும்,சம்பந்தமே இல்லாமல் சுடுசோறு போட்டதற்காக மதி சுதாவிட்கு ஒரு பானை சுடாத சோறும் வழங்கப்படும் என இத்தால் அறிவிக்கிறேன்..வாங்க பழகலாம் எண்டு பிரியமுடன் அழைத்த "பிரியமுடன் தேவ்' அவர்களுடன் ஒரு நாள் பழகவும் தீர்மானித்துள்ளேன்..ஹிஹி எனி ஒப்ஜெச்சன்??
மதி சுதாவுக்கான சுடு சோறு..வித் கறி
எனவே புதிய பெயருடனான எனது வலைத்தளத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்..
நன்றி நண்பெர்ஸ்...