Sunday, December 16, 2012

சமந்தாவின் "நீதானே என் பொன்வசந்தம்"..!

           


எனக்கொரு தயாரிப்பாளர் கிடைத்து ஒரு இயக்குனர் ஆகியிருந்தால்....என்று ஆரம்பித்து எத்தனையோ காதல் படங்கள் வெள்ளிவிழா காண்பது போல கனவுகள் கண்டிருக்கிறேன்.ஒரு இரண்டரை மணிநேரம் ரசிகர்களை சலிக்காமல் தியேட்டர் இருக்கையில் கட்டிப்போடுவது என்ன அவ்வளவு பெரிய விடயமா என்று எனக்கு மட்டுமல்ல பலருக்கு இவ்வாறான சிந்தனை இருந்திருக்க கூடும்.ஆமாம் அது மிக கடினமான பணி தான் என்பதை கெளதம் மேனன் நிரூபித்திருக்கிறார்.மின்னலே,வாரணம் ஆயிரம்,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற அழகிய காதல் கதைகளை தந்த கௌதமின் மற்றுமொரு காதல் படைப்பு தான் நீதானே என் பொன்வசந்தம்!

சிறு வயதிலேயே ஒன்றாக பழகிவரும் ஜீவா,சமந்தா இருவர்களுக்கிடையிலும் அவர்களது இளமை வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியில் ஏற்படும் சந்திப்புகள்-பிரிவுகள்,காதல்,ஏக்கம்,துன்ப இன்பங்கள்,ஈகோக்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் பற்றியது தான் படத்தின் கதை.காதலர்கள் தமக்கிடையில் வளர்த்துக்கொள்ளும் ஈகோக்கள்,சரியான புரிந்துணர்வு இல்லாமை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முனைந்திருக்கிறார் கெளதம்.

படத்தின் மைனஸ்கள்

1.மெதுவான-நீண்ட இழுவை காட்சிகள் 
படத்தின் முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் பார்ப்போரை சீக்கிரமாக முடித்துவிடு,அல்லது போவர்ட்(Forward) பண்ணி விடு என்று முனக வைத்திருந்தது.அந்தளவுக்கு இழுவையாக இருந்தன.கவுதம் படங்கள் என்றாலே வசனங்கள் மிக மெல்லிய குரலில் தான் நடிகர்களிடமிருந்து வெளிப்படும்.

முதலே ஊகிக்க வைக்க முடிந்த காட்சிகள்..இடைவேளை வரும் காட்சியில் சரி அடுத்து இடைவேளை தான் என்று காட்சி தொடங்கிய போதே தெரிந்திருக்கும்.ஆனால் அதையே சில நிமிடங்களுக்கு இழுத்திருப்பார்.இப்படியான காட்சிகள் பல படம் முழுவதும் கொட்டாவி விட வைத்தது.கெளதம் படங்கள் படத்துடன் ஓட்டவைத்துவிடுவன.அந்த மாஜிக் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் தவறவிடப்பட்டிருந்தது.

2.இளையராஜா இசை 
கௌதமின் பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசை என்றால் மறுக்க முடியாது.கௌதமின் காதல் காட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து இசையால் மயக்கிவிடுவார் ஹாரிஸ்.ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் கெளதம் தனக்கு தானே எடுத்துக்கொண்ட ரிஸ்க் தான் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தது.இளையராஜாவின் பீரியட் முடிவடைந்துவிட்டது என்று தெரிந்தும் எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவருடன் சேர்ந்துகொண்டார் கெளதம்.விளைவு படத்தில் தெளிவாக தெரிந்தது. 

சற்றே சில காட்சிகளில் கெளதம் சறுக்கும்போது ஹாரிஸ் தனது பின்னணி இசையால் அந்த சறுக்கல்களை மூடி மறைத்துவிடுவார்.vtv'யில் ரஹ்மானும்,மின்னலே,வாரணம் ஆயிரத்தில் ஹாரிஸும் என்ன செய்தார்கள் என்று சொல்ல தேவையில்லை. ஆனால் இளையராஜா அந்த சறுக்கல்களை ஊதிப் பெருதாக்கி காட்டியிருக்கிறார்.படத்தின் பெரும்பாலான இடங்களில் பாடல்களோ,பின்னணி இசையோ கவரவே இல்லை.படத்தின் "மிகப்பெரிய மைனஸ்" இசை தான் என்று அடித்து கூறலாம்.அதுவும் படத்தின் முக்கிய காட்சிகளில் இளையராஜா பாடும் இரைச்சல்கள் "ஐயோ வேண்டாம்"ராகம்.

இரண்டாம் பாதியில் பாடலுக்கு படமா இல்லை படத்துக்கு பாடலா எனுமளவுக்கு பாடல்கள் வந்தவண்ணம் இருந்தன.ஏலவே பெரிதாக கவராத பாடல்கள் படத்தில் தொடர்ந்து வரும்போது ஏற்படும் அவஸ்தை அப்பப்பா..பெரும்பாலானோர் படம்பார்க்க வந்த போது தான் முதன்முதலாக பல பாடல்களை கேட்டிருந்தனர்.இது கெளதம் படங்களில் இதுவே முதன்முறையாக இருந்திருக்கும்!

3.சந்தானம்-நகைச்சுவை 
சந்தானம் வந்த காட்சிகள் சிறு கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது உண்மை தான்.ஆனால் முழுக்க முழுக்க காதல் படம் என்று முடிவாகிவிட்ட பின்னர்  செருகப்பட்ட நகைச்சுவைகள் அவசியம் தானா என்று கெளதம் ஜோசித்திருக்கலாம்.காரணம் காதல் காட்சிகள்,காதல் வசனங்கள் பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை,கூடவே இருந்துகொண்டு சந்தானம் கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் குலைத்துவிடுகின்றன.

சந்தானத்துக்கென்று தனி காமெடி ட்ராக் வேறு.விண்ணைத்தாண்டி வருவாயாவில் சில காட்சிகளை உல்ட்டா பண்ணி எடுக்கப்பட்டிருந்தது.இப்படியான சந்தானத்தின் சில காட்சிகளையும்,வேறு சில மொக்கை சீன்களையும் கத்தரித்து படத்தை ட்ரிம் ஆக்கியிருந்தால் படம் பார்ப்போரை கொட்டாவி விடவைத்திருக்காது.


படத்தின் ப்ளஸ்கள் 

1. சமந்தா 
எங்கே சமந்தா பற்றி காணவில்லை என்போருக்கு! படம் முழுக்க சமந்தா தான்.அல்லது சமந்தாவை முன்னிலைப்படுத்தியே படம் பண்ணியிருக்கிறார் கெளதம் என்றும் கூறலாம்.அழகோ அழகு அப்படி ஒரு அழகு.தராசின் இருபக்கமும் சமனாக வீற்றிருந்த காஜல்-சமந்தா போட்டியில் சமந்தா வெற்றிபெற்றுவிடுகிறார்.

ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா "ஜெஸ்சி"அளவுக்கு பலரை கவர்ந்திருக்காது என்பது உண்மை;காரணம் சமந்தாவின் பாத்திரம் அப்படி.ஜீவாவுக்காக ஏங்கும் ஆனால் ஈகோ கொண்ட பாத்திரம்.இதே ஜீவா சமந்தாவுக்கு ஏங்கும் வகையிலும்,சமந்தா கண்டுக்காத மாதிரியும் படம் வந்திருந்தால் சமந்தா நிச்சயம் ஜெஸ்சியை தாண்டி மனங்களில் இடம்பிடித்திருப்பாள். 

2. படத்தின் இறுதி ஒருமணிநேரம் 
எனக்கு படத்தின் இரண்டாம் பாதி பிடித்திருந்தது.அதிலும் இறுதி ஒரு மணிநேரம் ஜீவா,சமந்தாவுடன் ஒன்றிவிட்டேன்.அதுவும் இறுதி அரை மணிநேரம் மிக  அழுகையை தவிர்க்க போராடினேன் என்னுமளவுக்கு கவர்ந்திருந்தது. காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் தேடிவரும் துணையும்,அதனை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லவிடாமல் தடுக்கும் ஈகோவும் மாறி மாறி வந்து உணர்ச்சிவெள்ளமாக்கி விட்டிருந்தது.

அதுவும் அடுத்தநாள் காலை திருமணத்தை வைத்துக்கொண்டு முதல்நாள் இரவு சமந்தா ஜீவா இருவரும் தமது காதல் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான இடங்களை போய் பார்க்கும் சந்தர்ப்பங்களில் "அட நாய்களே யாராச்சும் ஒருவராவது ஈகோவை விட்டு மனசை திறந்து பேசி தொலைங்கடா" என்று ஏங்க வைத்தது.
-------------------------------------
கெளதம் மேனன் படங்களுக்கு எப்பவுமே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.நடுநிசி நாய்கள் வாங்கிக்கட்டியதாலும், விண்ணைத்தாண்டி வருவாயா'க்கு அடுத்து வரும் காதல் படம் என்பதாலும் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.காபி ஷாப்'பில் காபி சாப்பிடும் ஜீவா-சமந்தா படங்களை பலர் தத்தமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவாக்கிவிட்டிருக்க மறுபக்கம் சமந்தா சமந்தா என்று பையன்கள் ஜொள்ளுவிட்டுக்கொண்டு இருந்தார்கள்.பெண்களில் பலருக்கு ஜீவா பிடித்த நாயகனாகி இருந்தார்.ரஹ்மான்-ராஜா ரசிகர்கள் மீண்டும் ஒருதடவை முட்டிக்கொள்ள பாடல்கள் சந்தர்ப்பம் கொடுத்திருந்தது என அனைத்து தரப்பும் இப்படத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நடந்தது?"நீதானே என் பொன்வசந்தம் " படு மொக்கை படமாகவோ அல்லது சுப்பர் ஹிட் காதல் படமாகவோ வந்திருக்க வேண்டியது.ஆனால் கெளதம் இரண்டுக்கும் இடையில் கொண்டுவந்து முடித்திருக்கிறார்.முதல் பாதி போன்றே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால் படம் படு மொக்கையாகவும்,இரண்டாம் பாதி போன்று முதல் பாதி அமைந்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகவும் அடித்திருக்க வாய்ப்பிருந்தது.. தவறவிட்டுவிட்டார் கெளதம் மேனன்.படம் படு மொக்கையாக வந்திருந்தால் கூட கவலை வந்திருக்காது,இப்படி முடிந்துவிட்டதே நடுவில் என்று தான் கவலை. 

சமந்தா அழுது புலம்பி வெளிக்காட்டிய கவலைகளை அழாமல் வெளிக்கொணர்வதில் ஒரு ஆணாக வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவா. சமந்தாவுக்கும் நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தது படத்தில்.படம் முழுவதுமே இவர்களை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது.அவர்களை தவிர என்றால் சந்தானமும்,சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண் கேரக்டர் தான் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.

ஹாரிஸ்/ரஹ்மான் இருந்திருந்தால் அவர்கள் படத்தை நிச்சயம் இதைவிட ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்று நிச்சயமாக கூறலாம்.அத்துடன் கௌதமும் டப்பா காலி போல தெரிகிறது.மீண்டும் மீண்டும் பழைய படங்களை ஞாபகப்படுத்தும் காட்சிகள்.சாய்ந்து சாய்ந்து, என்னோடு வாவா மற்றும் இடையிடையே ஒலிக்கும் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

அங்காங்கே சில முத்த காட்சிகளும் உண்டு ஆங்கில பட சிச்சுவேசனில்..!

இது படத்தை பற்றிய "எனது"பார்வை மட்டுமே.எனக்கு பிடித்த விடயங்கள் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.பிடிக்காத விடயங்கள் பிடித்து போயிருக்கலாம்.சிலருக்கு இரண்டாம் பாதி பிடிக்கவில்லை ஆனால் எனக்கு நன்றாக பிடித்திருந்தது.


கட்டாயம் பாருங்கள் என்று சொல்வதை விட ஒருதடவை பார்க்கலாம் என்று சொல்லலாம்.காதல் பீலிங்கில் இருப்பவர்கள்,காதலிக்க இருப்பவர்கள், எப்பவாச்சும் ஒரு உறவுக்குள் நுழைய இருப்பவர்கள் "கட்டாயமாக" பரிந்துரைக்கிறேன். படம் படு குப்பை என்கின்ற ரீதியில் விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.முழுதாக பார்க்காமல் விட்டுவிடலாம் என்று மறுத்துவிட கூடிய படமல்ல இது.

கெளதம் இனிமேலும் ராஜாவை தெரிவுசெய்வார் என்று தோன்றவே இல்லை.அத்துடன் மற்றைய இயக்குனர்களும் இதனை முன்னுதாரணமாக கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.கெளதம் மேனன் அடுத்த படைப்பையாவது சிறப்பாக கொடுப்பார் என நம்புவோம்.மறுபடி சூர்யா,ஹாரிஸை நோக்கி தான் போகவேண்டும்.

படத்துக்கு எனது மார்க் - 60


Post Comment

6 comments:

கார்த்திக் சரவணன் said...

விமர்சனம் அருமை... நன்றி...

Prem S said...

ஒவ்வொன்றையும் தெளிவாக அலசி உள்ளீர்கள் சமந்தா அழகு தான்

sajirathan said...

சமந்தாவை முன்னிலைப்படுத்தியே படம் பண்ணியிருக்கிறார் கெளதம் என்றும் கூறலாம்//// ithuthan unmai...... amyway good review.. congralation!

ஜேகே said...

Yeah .. it was a full and full Samantha show and boy she was awesome in the movie. The screenplay, story and the hero(Anything except Samantha and the songs as an album) were the letdowns. I ofcourse love the songs but BGM and picturisation (Saainthu Saainthu an exception) looked terrible to me. Subjective though.

காரிகன் said...

இந்த படத்தைப்பற்றி வந்த விமர்சனங்களிலேயே நீங்கள் எழுதி இருக்கும் இந்த பதிவுதான் ஒரு உண்மையை சொல்கிறது. அதாவது நீதானே என் பொன்வசந்தம் படத்தின் சறுக்கலுக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் இசை. இதை மற்றவர்கள் மேம்போக்காக அடிகோடிட்டு எழுதி இருந்தாலும் நீங்கள் அதை படார் என உடைத்து சொன்னதற்காக பாராட்டுக்கள். இளையராஜா தான் இசை அமைக்கும் படங்களில் பாடுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது என்பதை அவரின் உச்சகட்ட எண்பதுகளிலேயே பலர் வெளியிட்ட விமர்சனம்.அதை அவர் இன்னும் செய்துகொண்டிருப்பதுதான் வேதனை.இந்த படம் வரும் முன் இளையராஜாவின் இசை பற்றி எழுந்த ஆராவாரங்கள் தற்போது கரைந்து போய்விட்டன. இளையராஜா காலாவதி ஆகி இரண்டு தலைமுறைகள் போய்,ஐ பேட்,ஐ போன் தலைமுறைக்கு இவர் எப்படி ஒரு பொருத்தமான இசையை கொடுக்க முடியும்? கூகிள் அன்டார்டிகா என்று இளைஞர் கூட்டம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கையில் தந்தானா என்று பழைய டப்பாவை உருட்டினால் யார் கேட்பது?

Yoga.S. said...

இதுக்கே,60-ஆ?

Related Posts Plugin for WordPress, Blogger...