Sunday, July 15, 2012

பில்லா 2 - சக்ரி'யின் கொலைவெறியாட்டம்!


எந்திரனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி,ட்ரெய்லர் முதல் கொண்டு ஸ்டில்ஸ் வரைக்கும் சமூக வலைத்தளங்களில் பட்டை கிளப்பி,அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது பில்லா 2 .கடந்த வியாழன் இரவே இலங்கையில் முதல் காட்சி போடப்பட்டாலும் நேற்றே எனக்கு பார்க்க முடிந்தது.முன்பதிவுகள் கூட சில வாரங்களுக்கு முடிந்துவிட்டிருந்தது(உண்மையோ அல்லது அதுவும் மார்க்கேட்டிங்கோ தெரியவில்லை). இவ்வளவு எதிர்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பதிவின் இறுதியில் பார்க்க தேவை இல்லை.ஏலவே படம் பற்றிய பல விமர்சனங்கள் வந்துவிட்டதால் சஸ்பென்ஸ் வைத்து ஒழித்து விளையாட விரும்பவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும்-சக்ரி டோலேட்டி'யின் படைப்புக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுவதால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது என்றே கூறலாம்.


பில்லா 1 இல் டானாக வந்த தல,எப்படி டான் ஆனார் என்பது பற்றிய ப்ளாஷ் பேக் தான் பில்லா 2 .எனவே படத்தின் கதை பற்றி கூறுவதை விடுத்து வேறு விடயங்களை பார்க்கலாம்.நேற்று பேஸ்புக்கில்,

"டேவிட் பில்லாவாக அஜித் தனது பங்கை திறம்பட செய்தே இருக்கிறார்.ஆனால் அஜித்துக்கும் சேர்த்து மொத்தமாக இயக்குனர் "சக்ரி டொலேட்டி" கிடைத்த அனைத்து இடங்களிலும் கோட்டை விட்டிருக்கிறார்.அஜித் மட்டும் இல்லாவிட்டால் படம் பஸ்பமாயி இருக்கும்.பொன்னான வாய்ப்பை இப்படி இயக்குனர் வீணடித்திருப்பார் என்று நினைத்திருக்கவில்லை.விமர்சனம் எழுதணுமான்னு ஜோசிக்கிறேன்.
#பில்லா 2 அல்ல..இது டேவிட் பில்லா! "

என்று பகிர்ந்திருந்தேன் படம் பார்த்துவிட்டு."தல"க்காக மட்டும் படம் பார்ப்பவர்களுக்கு பில்லா 2 நிறைவான திருப்தியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.டேவிட் பில்லாவாக அஜித் தனது பங்கை செய்வனே செய்திருக்கிறார்.அழகாக இருக்கிறார்.சேர்ட்'டிலும் சரி கோர்ட் போட்டாலும் சரி ஏன் லுங்கியில் கூட அழகாய் இருக்கிறார்.ஸ்டைலாய் நடக்கிறார்.கோபப்படுகிறார்..அறச்சீற்றம் கொள்கிறார்.படத்தில் தல'யின் வாயால் வரும் வசனங்கள் அனைத்துமே பன்ச் மாதிரி ஷார்ட்'டாய் இருக்கிறது.திரையை ஆக்கிரமிக்கிறார்.தேவை இல்லாத இடங்களில் பன்ச்'ஐ தவிர்த்திருக்கலாம்.அகதியாக வந்து விசாரிக்கப்படும் போது பன்ச் தேவையா ஐயா?தூக்கி எலும்பை எண்ணி இருக்கமாட்டார்கள்?


இயக்குனருக்கு மூன்றாவது படம் இது,தமிழில் இரண்டாவது.ஒருவருடத்துக்கு மேலாக படத்தை கையாண்ட இயக்குனர் பொன்னான வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.உன்னைப்போல் ஒருவனில் ஷார்ப்பாக இருந்த காட்சிகள் பில்லாவில் மிஸ்ஸிங்.படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை திரில்லிங் ஆகவே கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.ஆனால் மசாலா படம் போலல்லாது கொஞ்சமாவது லாஜிக்கை கவனித்திருக்கலாம் இயக்குனர்.

உள்ளூர் உளுந்துவடை டானில் இருந்து இன்டர்நசனல் டான் வரைக்கும் பாதுகாப்பு என்பது கொஞ்சத்துக்கும் இல்லாமல் தான் வலம்வருகின்றனர்.அதிகபட்சமாக இரண்டு பேர் பாதுகாப்பு.எந்த ஒரு உள்ளூர் டானையும் சுலபமாக சென்று அவருடன் தோளுக்கு மேல் தோள் போட்டு கதைக்க கூடிய நிலை.இப்படி என்றால் நானுமே டான் ஆகிடுவனே சக்ரி!மசாலா படங்களில் ஒன்று சொதப்பினாலும் மற்றைய அம்சம் காப்பாற்றி விடும் ஒரு அளவுக்கேனும்.நகைச்சுவை அல்லது பாடல்கள் என்று படத்தை கொஞ்சமாவது ஓட வைக்கும்.ஆனால் டான் கதையை தெரிவு செய்துவிட்டு,கதை மீது அபரீத நம்பிக்கையால் படத்துக்கு நகைச்சுவையே தேவை இல்லை என்று முடிவு செய்த பின்னரும் கூட படத்தின் கதையில் இவ்வளவு ஓட்டைகள் இருக்குமானால் அது கதையாசிரியர்,இயக்குனரின் தவறே!

சாதாரண அகதியை சர்வதேச டான் ஆக்கிவிட வேண்டும் அதுவும் இரண்டு மணி நேரங்களில் என்பதாலோ என்னவோ,தல கைவைக்கும் எல்லாமே வெற்றி வெற்றி தான்.இவர் எதிர்க்கும் டான் எல்லாம் அதிகபட்சமாக ஒரு துப்பாக்கியும் ஒரு கத்தியும் தான் வைத்திருப்பார்.அடியாட்கள் அனைவரும் கோர்ட் சூட் போட மறந்திருக்க மாட்டார்கள் ஆனால் கைவசம் ஒரு ஆயுதம் கூட இருக்காது சண்டைக்கு.பில்லா 3 வந்தால் கராத்தே குங்க்பூ தான் சண்டை முறைமைகளாக இருக்கும் போல!ஒரு பிஸ்னெஸ் திறம்பட நடாத்தி கொடுத்தவுடனேயே தல டானுக்கு வலது கை ஆகிவிடுவார்.தல மீது அப்படி நம்பிக்கை இருக்கும் டானுக்கு.


இயக்குனர்,தல கூட தனது ரசிகர்களுக்காக,இளைஞர்களுக்காக மட்டுமே படம் எடுத்த மாதிரி தெரிகிறது.படம்பார்க்க வருபவர்களில் பெண்கள்,குழந்தைகள் என்ற வகையினரும் இருக்கின்றார்கள் என்று மறந்துவிட்டனர்,அந்தளவுக்கு வன்முறைகள் படத்தில்.கழுத்தறுப்பு காட்சிகள்,கத்தி குத்துக்கள் என்று பார்க்க போகும் ஆண்களையே பீதியாக்கும் வகையிலான கொலைகள்.படத்தின் ஒவ்வொரு பிரேம்'இலும் கட்டாயம் ஒரு கொலை நிச்சயம் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் யாரு கொல்லப்பட போகின்றார்கள் என்று மனம் முன்னமே ஊகிக்க தொடங்கிவிட்டது.

ஹீரோ தன்பாட்டில் கொலை கணக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்.போலீஸ்காரரை கூட கொல்கின்றார்.முகாமிலிருந்து கூட தேடவில்லை.போலீஸ் டிப்பார்ட்மென்டே 'இவரை டான் ஆக்க இயக்குனர் முயற்சிக்கிறார் விட்டுவிடுவோம்"என்று மெளனமாக இருந்துவிட்டனர் போலும்.இன்டர்நசனல் டான்'ஐ அவரது இடத்துக்கே சென்று அழிக்கிறார்..எப்படி?தானும் இன்னும் இருவருடனும் ஒரு துப்பாக்கியுடனும்!உன்னை போல் ஒருவனில் கமல் தனியாளாக நின்று வேலையை முடித்து நம்ப கூடியதாய் இருந்தது.ஆனால் இது? நாட்டின் சி எம் கூட ஒரு ஜீப் பாதுகாப்புடன் தான் செல்கின்றார்.நம்ம ஊரில் அமைச்சரின் பாதுகாவலருக்கே இரண்டு வண்டி பாதுகாப்பு இருக்குமையா!


அஜித்'ஐ தவிர மிகுதி அனைத்து கேரக்டருமே வெறும் "ஜஸ்ட்"என்கின்ற மாதிரி தான் படைக்கப்பட்டிருக்கிறது.ரஹ்மான்,ஸ்ரீமன்,அஜித் அக்கா,அவர் மகள் ஓமனக்குட்டி என்று வரிசை நீளுகிறது.ஓமனக்குட்டி நடிப்புக்கு சரிப்பட்டு வரமாட்டார் போல தான் தெரிகிறது.படத்தை பார்ப்பவர்களுக்கு மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.அத்தனைக்கும் சஸ்பென்ஸ் வைத்து இயக்குனர் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.அஜித் படத்தில் என்ன இரும்பு மனிதனா?மரண அடிவிழுந்தாலும்,கூடவே வயிற்றில் சதக் என கத்தியால் குத்திவிட்ட பின்னரும் கூட சர்வ சாதாரணமாக சண்டை பிடிப்பார்.எதிரியை கொன்றுவிட்டு சாதாரணமாக ஒன்றுமே நடக்காத மாதிரி நடந்து செல்வார்.

படத்தின் பின்னணி இசை கலக்கல்.ஒவ்வொரு சீனுக்கும் திரிலிங்கை, பயத்தை கொடுப்பதில் பின்னணி இசைக்கு முக்கிய பங்கிருக்கிறது.யுவனின் இசையுலகின் சறுக்கல் பயணம் இந்த பில்லா பாடல்களுடன் தொடங்குகிறது.ஈழத்தமிழர் என்று மீண்டும் வியாபாரத்துக்காய் ஊறுகாய் ஆகி இருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.இனியாவது ஈழத்தமிழர்  என்று யாராவது கூறியால் உங்களை வைத்து காசு பாக்கபோகின்றார்கள் என்று ஒரு தெளிவு வரவேண்டும்.

படம் சரியாக போகாவிட்டால் ஒருவகையில் எனக்கு சந்தோசமே.விஜய்க்கு எப்படி குருவி,வில்லு,சுறா என்று ஒரே மாதிரியான கதைகளை தெரிவு செய்யப்போய் தன்னை தானே சுட்டுக்கொண்டு இப்போ ரசனைக்கு விருந்தளிக்க கூடிய வகையில் விதம் விதமான படங்களை தருகிறாரோ,அது போலே அஜித்துக்கும் இந்தப்படம் சரியாக போகாவிட்டால் தான் இந்த கோர்ட் சூட் கலாசாரத்திலிருந்து வெளியில் வந்து வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பார்.இப்படமும் பெரிய வெற்றி என்றால் அடுத்து அஜித்தை வைத்து இயக்கம் விஷ்ணுவரதன் கூட மற்றுமொரு கோர்ட் சூட் கதையுடனேயே கிளம்பி இருப்பார் என்பது நிதர்சனம்.இப்போவாவது வேறுபட்ட கதை களத்தை தெரிவு செய்யட்டும்.தலை கதையில் தலையிட வேண்டும்.இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.


என்ன விஜய் தோற்றுக்கொண்டு இருந்த போது தொடர் வெற்றிகளை தரும் சூர்யாக்கு தல"யும் ரசிகர்களும் சவால் செய்யுமளவுக்கு இருந்தனர் பில்லா,மங்காத்தா என்று வெற்றிகளால்.இப்போ அடுத்ததாக வரும் விஜய்யின் துப்பாக்கியும் மண்ணைகவ்வுமாக இருந்தால் அடுத்த வருடம் வரைக்கும் அஜித் விஜய்யை ஓவர்டேக் செய்து சூர்யாதான் முதல் நாயகனாக வலம்வர கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது . 

BODY OF LIES படத்தில் இருந்து சுடப்பட்டிருக்கும் காட்சி இந்த வீடியோவில் 3-வது நிமிடத்தில் இருந்து இறுதிவரையில் இருப்பதுதான் என்று சக பதிவர் உண்மைத்தமிழன் பகிர்ந்திருந்தார்..பார்த்தால் ஆம் அப்படியே சுட்டு இருக்கின்றார்!அத்துடன் scareface நான் பார்க்கவில்லை.அதிலிருந்தும் காட்சிகள் சுடப்பட்டனவாம் என்கின்றார்கள்.விடுங்கப்பா யார் தான் இப்போ சுடாத பழம்?


எனக்கே இவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும் போது அடுத்த ப்ளக்புஸ்ட்டர் படமாக எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தான் படம் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இவ்வளவு வன்முறைகளை யாரும் குடும்பமாக போய் இருந்து பார்க்க போவதில்லை.ஓவர் பில்ட் அப் படத்துக்கு அவசியமா என்றால்,அவசியம் தான் என்றே கூறுவேன்.எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாவிட்டால் பெரிய தாக்கம் வரப்போவதில்லை ஆனால் அந்த எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு படம் வெளிவந்து முதலிரண்டு வாரங்களில் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள் இலாபம் பார்க்க முடியுமானால் அந்த பில்ட் அப் தேவையே!

நண்பர் ஒருவர் கூறியது போல,
தல படத்துல இத்தனை பேரை சுட்டதுக்கு பதிலா, அந்த சக்ரி டொலட்டியை சுட்டிருக்கலாம்...
#ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது...#பில்லா - II

Post Comment

11 comments:

rajamelaiyur said...

நல்ல ஆழமான பார்வை ... ஆனால் சில நண்பர்கள் ( அஜித் ரசிகர்கள் இல்லை ) படம் நன்றாக இருக்கு , ஆங்கில பட அளவுக்கு சண்டைக்காட்சிகள் இருக்கு என சொல்கிறார்கள் . எது உண்மை ?

Unknown said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல ஆழமான பார்வை ... ஆனால் சில நண்பர்கள் ( அஜித் ரசிகர்கள் இல்லை ) படம் நன்றாக இருக்கு , ஆங்கில பட அளவுக்கு சண்டைக்காட்சிகள் இருக்கு என சொல்கிறார்கள் . எது உண்மை ?//

ஆங்கில அளவுக்கு இருக்கு உண்மைதான் பாஸ்.அதை பற்றி தப்பாக சொல்லவில்லையே?

ஜேகே said...

//எந்திரனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி//

தல .. இது கொஞ்சம் ஓவரா இல்லையா? மற்றவர்களை பற்றி தெரியேல்ல .. எனக்கு எந்திரனுக்கு பிறக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், மன்மதன் அம்பு! அடுத்தது மந்திரபுன்னகை .. இரண்டுமே முதல் நாள் தியேட்டர்ல போய் பார்த்தன். முதலாவது கமல்! ரெண்டாவது கருபழனியப்பன். அவரோட பிரிவோம் சந்திப்போம் பார்த்து அனுபவித்தவர், அவர் படத்துக்கு முதல் நாளே போய் படுத்து கிடப்பான்! அது முக்கியமில்ல.. ஆளாளுக்கு எதிர்பார்ப்பு வேற வேற..

ஒரு சின்ன டவுட் .. படம் வெற்றியென்றால் அது அஜித்! .. தோத்தா சக்ரியா? ஆக இயக்குனர் கோட்டை விட்டா அஜீத்தும் இல்ல, விஜயும் இல்ல ... அது ரசிகர்களுக்கு இன்னமும் தெரியாமல் இருப்பதால் தான் நடிகர்களும் உணர்கிறார்கள் இல்லை!

விமர்சனம் நச்.

ராஜ் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...

Unknown said...

///அஜித்துக்கும் இந்தப்படம் சரியாக போகாவிட்டால் தான் இந்த கோர்ட் சூட் கலாசாரத்திலிருந்து வெளியில் வந்து வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பார்///

எனக்கு நம்பிக்கை இல்ல தல ரிசல்ட் பத்திக் கவலைப்படுறதா தெரியல! எதைப் பற்றியும் கண்டுக்காம அடுத்தபடத்துல நடி(ட)க்கப் போயிடுது!!! :-)

Unknown said...

//ஜேகே said...
//எந்திரனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி//

தல .. இது கொஞ்சம் ஓவரா இல்லையா? மற்றவர்களை பற்றி தெரியேல்ல .. எனக்கு எந்திரனுக்கு பிறக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், மன்மதன் அம்பு! அடுத்தது மந்திரபுன்னகை .. இரண்டுமே முதல் நாள் தியேட்டர்ல போய் பார்த்தன். முதலாவது கமல்! ரெண்டாவது கருபழனியப்பன். அவரோட பிரிவோம் சந்திப்போம் பார்த்து அனுபவித்தவர், அவர் படத்துக்கு முதல் நாளே போய் படுத்து கிடப்பான்! அது முக்கியமில்ல.. ஆளாளுக்கு எதிர்பார்ப்பு வேற வேற..

ஒரு சின்ன டவுட் .. படம் வெற்றியென்றால் அது அஜித்! .. தோத்தா சக்ரியா? ஆக இயக்குனர் கோட்டை விட்டா அஜீத்தும் இல்ல, விஜயும் இல்ல ... அது ரசிகர்களுக்கு இன்னமும் தெரியாமல் இருப்பதால் தான் நடிகர்களும் உணர்கிறார்கள் இல்லை!

விமர்சனம் நச்.//

நான் இயக்குனரை சாடியதர்க்காக பல காரணங்கள் இருக்கின்றன.தல செய்த ஒரே தப்பு கதையில் தலையிடாமை.

Unknown said...

//ராஜ் said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...//
நன்றி தல

Unknown said...

/ஜீ... said...
///அஜித்துக்கும் இந்தப்படம் சரியாக போகாவிட்டால் தான் இந்த கோர்ட் சூட் கலாசாரத்திலிருந்து வெளியில் வந்து வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பார்///

எனக்கு நம்பிக்கை இல்ல தல ரிசல்ட் பத்திக் கவலைப்படுறதா தெரியல! எதைப் பற்றியும் கண்டுக்காம அடுத்தபடத்துல நடி(ட)க்கப் போயிடுது!!! :-)//

விஜய் மாதிரி ஆகணும்னா நாம என்ன பண்றது baas.

CS. Mohan Kumar said...

Very good review. Last punch was super.

கிஷோகர் said...

உண்மைதான் ! சக்ரியை மிதிக்க நான் முதல் ஆளாய் ரெடி! ஆனாலும் தலைக்காக இன்னொரு முறை பில்லா - 2 பாக்கவும் ரெடி தான்!

வெற்றிவேல் said...

ரொம்ப நாலா என் ஹர்ட் டிசஸ்க்ள பில்லா 2 இருக்கு ஆனா பார்க்கணும்னு தோணலையே...

Related Posts Plugin for WordPress, Blogger...