Wednesday, December 28, 2011

வடகொரிய தலைவர் இறுதி ஊர்வலம்-சொல்வது என்ன?


அமெரிக்க வல்லரசுக்கு எதிராக கடைசி வரை போராடிய வடகொரிய தலைவர் கிம் ஜாங்'இன் இறுதி ஊர்வலம் இன்று வடகொரிய தலைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.எந்த ஒரு உலக நாடுகளுக்கும்,தலைவர்களுக்கும்,மீடியாக்களுக்கும் அழைப்பு விடுக்காது மிகுந்த அவதானத்தோடு நடைபெற்றுக்கொண்டிருக்க்கும் இந்த இறுதி ஊர்வலமானது உலகுக்கு பலவிடயங்களை எடுத்து கூறிக்கொண்டிருக்கிறது என்பது அதனை பார்க்கும் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

ஒரு தலைவரின் இறுதி ஊர்வலம்...மக்கள் அபிமானம் பெற்ற மனிதரின் இறுதி ஊர்வலம் எந்த வகையில் நடத்தப்படவேண்டுமோ அதனை விட பலமடங்கு மேன்மையாக நடத்திக்காட்டிக்கொண்டிருக்கின்றனர் வடகொரியர்கள்.கிம் ஜாங் இன் மரண இறுதி ஊர்வலம் வடகொரிய தேசிய தொலைகாட்சியிலேயே காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதனை சி என் என் தொலைகாட்சி உலகமெங்கும் ஒளிபரப்புகிறது.

மிகவும் திறமையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இறுதி ஊர்வலம்.அதிகமாய் பொழியும் பனியின் நடுவே லட்சக்கணக்கான வடகொரிய படைவீரர்கள் ஒருபக்கம்,லட்சக்கணக்கான வடகொரிய மக்கள்,ஆதரவாளர்கள் மறுபக்கம் கண்ணீர்வடிக்க அழுகுரல் ஓங்கி ஒழிக்க மக்களின் அபிமானம் பெற்ற தலைவன் ஒருவனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

இன்னமும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர் இந்த இறுதி ஊர்வலம் இப்போது தான் நடைபெறுகிறதா அல்லது ஏலவே நடந்து முடிந்து அதன் காட்சிகள் மட்டும் இப்போது ஒளிபரப்பப்படுகிறதா என்று!எத்தனை தான் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டாலும்,உலகமே எதிர்த்து நின்றாலும் அந்த தலைவருக்காக,தலைவரின் மாட்சியை போற்றி இத்தனை லட்சக்கணக்கான மக்களின் ஒன்றுகூடல் வடகொரியாவின் வன்மையை வல்லரசுகளுக்கு காட்டி இருக்கும் மீண்டும் ஒரு தடவை!!


காலம்சென்ற கிம் ஜாங்,தனது தகப்பனார் 1994 இல் இறந்த போது அவரின் இறுதி ஊர்வலத்தில் கிம் ஜாங் கலந்து கொள்ளவில்லை.பாதுகாப்பு காரணங்களுக்காக என்று கூறப்பட்டது.ஆனால் இன்று கிம் ஜாங் இறப்பு ஊர்வலத்தில் அவரது மூன்றாவது மகனும் எதிர்கால வடகொரிய தலைவருமான கொம் ஜாங் உன் கலந்துகொண்டிருக்கிறார்.

நேரம் கிடைத்தால் பாருங்கள் அந்த வரலாற்று நிகழ்வை!!





Post Comment

23 comments:

K.s.s.Rajh said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி பாஸ் பாக்கின்றேன்

Unknown said...

ஆமாம் பார்த்தேன், எனக்கு பிடித்த தலைவர்களில் ஒருவர், இவரை பற்றி பதிவு எழுதவேண்டும் எங்கு நேரம் கிடைக்கவில்லை

Yoga.S. said...

வணக்கம்,மைந்தரே!இங்கும் தொ.கா.வில் காண்பித்தார்கள் தான். நன்றி!

Unknown said...

பார்த்தேன் நன்றி மாப்ள!

MANO நாஞ்சில் மனோ said...

நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் மக்கா...நல்ல தலைவர்...!!!

நிரூபன் said...

வணக்கம், மைந்து,
விபரப் பகிர்வுகளுடன் கூடியவாறு வீடியோ இணைப்பினைத் தந்திருக்கிறீங்க. பார்க்கிறேன் நண்பா.

சுதா SJ said...

மைந்தன்...... இந்த வீடியோக்கள் நானும் பிராஞ்ச் சேனலில் விரும்பி பார்த்தேன்..... ஆனாலும் சலிக்கவில்லையே... :)
நீங்கள் தந்த லிங்க் எடுத்து வைத்துள்ளேன், நேரம் கிடைக்கும் போது பாக்குறேன்... தேங்க்ஸ்

shanmugavel said...

சிவா,how are you? கிம்ஜாங் மக்கள் மனங்களை வென்றவர்.அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதையே இறுதி ஊர்வலம் காட்டுகிறது.

தர்ஷன் said...

ஏற்கனவே செத்துப் போயிட்டாருன்னு ஒருக்கா சொன்னாங்க, மனுசன் ஏற்கனவே இயங்க முடியாத நிலையில்தான் இருந்தாரு. எனவே நாட்டில் கொள்கை ரீதியில் எந்த மாற்றமும் வராது. இன்றுள்ள இரும்புத்திரை நாடு என உறுதியாக கூறலாம். பலத்தரப்பட்ட கருத்துக்களுக்கிடையே வட கொரியா பற்றி ஒரு தீர்மானமான முடிவுக்கு என்னால் வர இயலவில்லை.
கம்யூனிஸம் என சொல்ல தோணவில்லை வேண்டுமானால் ஸ்டாலினிஸம் கோலோச்சிய தேசமொன்றின் அதிபர் இறந்து விட்டார் எனச் சொல்லலாம்.

காட்டான் said...

அட கிம் ஜாங்கை பற்றி இங்கு கதைப்பதே வேறு மாதிரி..!! ஒக்கே ஓக்கே செத்தவரை பற்றி ஏன் தூற்றுவான்..??

ராஜ நடராஜன் said...

கிம் ஜாங் இல் இறுதி ஊர்வலம் தொலைக்காட்சியில் காணக்கிடைத்தது.மிகவும் அரிதான,அபூர்வமான இறுதி ஊர்வலம் எனலாம்.இங்கேயும் ஒரு தடவை பார்த்திடலாம்.

வடகொரிய நாட்டுக்குள் என்ன நிகழ்கிறது என்பது வெளி உலகுக்கு தெரியாத வண்ணம் திரை போட்டு மூடி இருப்பதால் நேர்,எதிர் விமர்சனங்களை வைக்க இயலாது.ஆனால் nuclear proliferation treaty க்கு எதிராக பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளுக்கு உதவியது,மேற்கத்திய சந்தைகளுக்கு இடம் தராத இறுகிய கம்யூனிசத் தன்மையால் Rogue state என்ற எதிர் தோற்றங்கள் தவிர கலாச்சார வீச்சு,மக்கள் வாழ்க்கை போன்றவைகள் இன்னும் இருளில் மட்டுமே காணப்படுகிறது.

பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

இந்திய வாரிசு அரசியலுக்கே எதிரானவன் நான்.கொம் ஜாங்குக்கும் அதே!

சி.பி.செந்தில்குமார் said...

இறுதி ஊரவலத்தை வைத்து ஒரு பதிவா? பர்வுக்கு நன்றி

M.R said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே


த.ம 12


ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

SPIDEY said...

kim jong is one stupid sadistic psycho. he doesn't deserve this much respect

KANA VARO said...

அரசியல் பதிவர் மைந்தன் வாழ்க!

மாலதி said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி

கார்த்தி said...

இவர் இறந்த போது கதறியழுத மக்களின் காட்சிகளை தொலைக்காட்டசியில் பாத்திருக்கேன்!!

எஸ் சக்திவேல் said...

இது மாபெரும் setup மாதிரித்தான் தெரிகிறது?

ம.தி.சுதா said...

எப்ப அப்பா புதுவருட பதிவு வரும்...

ம.தி.சுதா said...

யோவ் எனக்கே பொல்லோவர்ஸ் கணக்கு காட்டி கருத்து காட்டுறியா.. 111 பொலோவர்சில் வைத்து நான் இட்ட கருத்து நினைவிருக்கா...

அம்பலத்தார் said...

சரியாக கருத்துக்கூற முடியாதபடி இரும்புக் கதவுகளின் உள்ளே இருக்கும் ஒரு தேசம் வட கொரியா

Anonymous said...

எழுதுவதை விட்டுவிட்டீரா நண்பரே...?

Related Posts Plugin for WordPress, Blogger...