பதிவு போட கொஞ்ச நாள் gap 'பு விழுந்து போச்சு..
மனத்தாங்கல்கள் மனவருத்தங்கள் என்று இன்று மட்டும்..
எனது பல்கலைக்கழக இரண்டு மாணவர்கள்
அருளீஸ்வரன் நர்சுதன்(3 ஆம் வருடம்)
ரவிதாசன் அன்புதாசன் (இரண்டாம் வருடம்)
colombo வெள்ளவத்தை கடலுடன் சங்கமமாகி உயிர் நீத்து விட்டார்கள்..
ஒன்றாக படித்த பழகிய நண்பர்கள்..
பிரிவு தாங்கவில்லை..
பெற்றோர்கள் எவளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து இருப்பார்கள்..
அதை நாமும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
மது அருந்துவதை எதிர்க்கவில்லை நான்
ஆனால் வீட்டிலோ அல்லது மதுச்சாலைகளிலோ அருந்துங்கள்..
அதை விட்டு கடற்கரையில் தேவை தானா?
எத்தனை பேரை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்கள்...
இறந்தவர்கள் மீதான வெறுப்பில் கூறவில்லை
இனி இருப்பவர்களாவது திருந்தட்டுமே என்று தான்...
அவர்களது ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
அதை விட இலங்கை ஊடகங்கள் நிலைமையோ கவலைக்கிடம்..
உண்மையான செய்தியோடு தங்களது பிட்டு'களையும் சேர்த்து செய்தியை வெளியிட்டது தான்..போன ஆறு மாணவர்களும் குளிக்க சென்றதாகவும் அதில் நான்கு பேரை
கடற்படை காப்பாற்றியது என்றும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன..
ஆனால் உண்மை யாதெனில் ஒரு மாணவர் கடலில் இறங்கியபோது கடல் இழுத்துச்செல்ல மற்றையவர் காப்பாற்ற சென்று இறுதியில் இருவருமே மரணமடைந்தனர் என்பது தான் உண்மை.
காப்பாற்ற கூவியழைத்தும் யாரும் உதவவில்லை என்பது தான் நிஜம்.
என்னது எதுவோ,கவலையடையக்கூடிய சம்பவமாய் அமைந்துவிட்டது.
அன்னாரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
8 comments:
:(
கொடுமைதான்! வருத்தமாக இருக்கிறது. கடலில் சும்மாவே இறங்குவது ஆபத்து ! காப்பாற்ற இறங்கினாலும் மரணம்தான்.
கொடுமை....திருந்துங்கள் நண்பர்களே!!
ஆழ்ந்த அனுதாபங்கள்...
/////////மது அருந்துவதை எதிர்க்கவில்லை நான்
ஆனால் வீட்டிலோ அல்லது மதுச்சாலைகளிலோ அருந்துங்கள்..
அதை விட்டு கடற்கரையில் தேவை தானா?
எத்தனை பேரை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்கள்...
இறந்தவர்கள் மீதான வெறுப்பில் கூறவில்லை
இனி இருப்பவர்களாவது திருந்தட்டுமே என்று தான்...
////////////////
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு அனைவரும் திருந்தாவிட்டாலும் இந்தப் பதிவை வாசிக்கும் சிலர் உணர்ந்தால் இந்த பதிவிற்கு வெற்றியே . பகிர்வுக்கு நன்றி தோழரே
ஆழ்ந்த அனுதாபங்கள்
:"(
ஆழ்ந்த அனுதாபங்கள்
கேட்கிறேன் என்று குறை நினைக்கக் கூடாது... பல்கலைக்கழக மாணவருக்குள் புகைத்தல், மது என்பது ஒரு கட்டாயப் பொருட்களா... நான் பலரை பார்த்திருக்கிறேன் (ஒரு சிலர் விதிவிலக்கு) ஏன் இப்படி சமூகத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்களே இப்படியானால் மற்றவரை யார் திருத்துவது... மது ஒரு தேவையற்ற வீண் செலவுப் பொருளாகும்...
Post a Comment