
எந்திரன் படத்தில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சிருந்தா என்னாகி இருக்கும்??
அவர் தானே பாடல்,மியூசிக் எல்லாமே...
தனக்கு பாடல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு சிறிய கற்பனை..
பாடிப்பாருங்கள் எந்திரன் பாடலோடு ஒப்பிட்டு!!
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் காறித் துப்பும்
இவன் சிறுவன் தாண்டிய உயரம் கொண்டவன்
ஆடு ஆடு தாடி நக்கும்
நீ அழகே TR அழகே
TR என்பவன் எதற்கும் அஞ்சான்!!
அறிவேன் அறிவேன் நானே 1000 அறிவேன்
உன் போல் ரசிகன் கிடைத்தால் சும்மா விடுமா!
திரைக்கதை...என்னோடு
டைரக்சன் ....என்னோடு
நான் பாட்டுக்கும் மியூசிக் போட்டேன் ஹிட்டு ஆகலையே...
***********************************************************************************
டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா
இரும்பிலே முளைக்கும் இருதயம்
மேற்கிலே முதல் சூரிய உதயம்!!
T R "உ உன்னோடு
ஐசு நீ என்னோடு
தாடி தான் என்னோடு
ப்ளேடு உன் கண்ணோடு
சினிமாவே காணாக் காதல்
மச்சினி உன்னோடு...!!
டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா

**********************************************************
MLA சீட்'டுகள் தமிழ் நாட்டில் எத்தனை..
திமுக அதிமுக கட்சிகள் தான் மொத்தம் எத்தனை..
அம்மாவை பிரிந்தால்..
யாவோடு சேரும் சிந்தனை...ஐயோ...
TR TR ஒரே ஹீரோ
அழகின் மொத்தம் நானா....??
நான் வளர்ந்தும் வளராத பையனா..
இல்லை மூளை வளர்ச்சியில் பையனா
இல்லை எதுகை மோனைக்கு பிறந்த பயபுள்ளயா..
அழகின் மொத்தம் நானா...
**************************************************************
பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
தாமில் சினிமாவின் விடியலோ TR
பே-ர-ர-சுவின் தந்தையோ TR
எந்தன் லீலையின் பிள்ளையோ சிம்பு
சிம்பு வம்பு சிம்பு வம்பு வம்பு சிம்பு!!
கொஞ்சம் அனுபவிச்சிருந்தா உங்க கருத்துகள்,ஓட்டுகளை விட்டுச்செல்லுங்கள்!!
