Thursday, July 18, 2013

'மரியான்'பட ஹீரோ தனுஷ்ன்னு இன்னிக்கு தானா தெரியும் உனக்கு?



இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள்  அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..!எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..!விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :)

பேஸ்புக் சாட்டில் இருக்கும் சுவாரசியம் எங்கும் இருக்காது..!உதாரணமா சில:


"நீ பேஸ்புக்கில அதிகமா அரசியல் பேசுறே..!"
"சரி குறைச்சுக்கிறேன்..!"

"நீ ஸ்டேடஸ்ல அசிங்கமா பேசுறே"
"சரி திருத்திக்கிறேன்"

"நீ பதினஞ்சு வரில ஓவரா அலட்டுறே.."
'சரி மூடிக்கிறேன்.."

'ட்விட்டர் மாதிரி ஒரு வரில போடுறே நீயி!"
'சரி நீட்டிக்கிறேன்.."

"என்ன நீ போடவே இல்ல இன்னிக்கு?"
'சரி இருங்க போடுறேன்.."

"திரும்ப திரும்ப அசிங்கமா பேசுறே நீயி..!"
நான்: 'ஙே..........  ???'

--------------------

'டேய்,நாலு லைக் விழுதுன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவியாடா?"
'ஏன் பாஸ் என்னாச்சு?

'எங்கட சனம் படுற பாட்டுக்கு உனக்கு சமந்தா-நஸ்ரியா கிளுகிளுப்பு கேக்குதோ?'
"அது வந்து..."

"அவனவன் படாத பாடு படுறான்..நீங்க எடுக்கிறீங்க எனடா?உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா"
'இல்ல பாஸ்..அதில என்ன தப்பு......."

'என்ன தப்பா?என்னவாச்சும் பண்ணி தொலைங்கடா...!"
"வெண்பனியே வெண்பனியே...."
"என்னடா பாட்டு படிக்கிறே?"

" I am watching அலெக்ஸ் பாண்டியன் @ ****** Cinema..!"
"நான் என்னவோ சொல்லிக்கிட்டிருக்கேன்..நீ படம் பாக்கிறியாடா?'

"Big weekend..Going for a Party..Lets Rock guys with ******,*****&****!!"
"பார்ட்டி போப்போறியா?"

"இல்லை பாஸ்,இவ்ளோவும் உங்க Wall'ல நீங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி பகிர்ந்திருந்தது..உங்களுக்கு பிடிக்குமேன்னு....."
---------------------------------------

'ஏங்க இவ்ளோ நாளா சொல்லவே..இல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிரிச்சா?'
(எப்பிடி கண்டுபிடிச்சிருப்பா?எந்த தடையமும் இல்லாம தானே மெயிண்டெயின் பண்ணிக்கிட்டிருக்கேன் பேஸ்புக்கில..)
'இல்லையே,யார் சொன்னது உனக்கு?'

'இப்பிடி அப்பட்டமா பொய் சொல்லாதீங்க..உங்கள எல்லாம் நம்பி பழகினேன் பாரு..என்ன சொல்லனும்.."
"ஏய் லூசா உனக்கு? என்னாச்சு இப்போ? ஏன் இப்பிடி கத்துறே?"
"இப்ப தான் உங்க கவர் போட்டோ பாத்தேன்..உங்க கல்யாணப்படம் போட்டிருந்திச்சு.."

"ஹெஹெ..அடி சிறுக்கி மவளே..அது இன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஜீ.வி,சைந்தவி போட்டோடி..நான்லாம் ஆன்லைன்ல ஆயிரம் பொண்ணுக இருந்தாலும்,உன்கூட மட்டும் தான் கடலை போடுவேன் தெரியுமாடி..என்னப்போயி..."

'சாரிங்க..நீங்க நல்லவர்னு எனக்கு எப்பவோ தெரியும்..நான் சும்மா கலாய்ச்சு பாத்தேன்..ஹிஹி"

-----------------------------------------
'நீங்க யாரு?உங்கள பத்தி சொல்லுங்களேன்?"
'அது தான் ப்ரொபைல்ல போட்டிருக்கேனே!?"

'சரி சும்மா சொல்லுங்களேன்..?"
'நான் தான் மரியான் பட ஹீரோ"

'அப்பிடியா??
'ஆமா..ஏன்?"

"நம்பவே முடியலைங்க..எவ்ளோ பெரிய படம்.."
'ஆமா.."

'ரஹ்மான் வேற மியூசிக்.."
'ஆமா ஆமா.."

"நான் தனுஷ் தானே ஹீரோன்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்..நீங்களா ஹீரோ???'
"அட ஆமாங்க நான் தான்..!"

'எப்பிடிங்க படிச்சிக்கிட்டே நடிக்கவும் செய்யுறீங்க??'
'இப்போ கூட நீயி ஒரிஜினல் எக்கவுண்ட்ல வந்து மொக்கை போட்டுகிட்டு பேக் ஐடிலயும் வந்து மொக்கை போடுறாய்ன்னா..உன் ப்ரெண்ட்'க்கு இதொண்ணும் பெரிய விசயமே இல்லைங்க..!"

'ஹிஹி மச்சான் கண்டுபிடிச்சிட்டியா :P ?" 
--------------------------------------



என்னோட கடந்த இருவார பேஸ்புக் நிலைத்தகவல்கள் சில: @மைந்தன் சிவா

'போன மாசம் 25ஆம் தேதி வந்திச்சுடா..இந்த மாசம் தான் மூணு நாளு லேட்டு 28ஆம் தேதி தான் வந்திருக்கு..!'வீதியால் செல்லும் அனைவருக்கும் கேட்க்கும் தொனியில் போனில் யாருக்கோ சொல்லிக் கொண்டு சென்றாள்.ஒரு 28வயது இருக்கும்.ஒரு பொறுப்பு வேண்டாம்?

என்ன கொடுமையடா இது என்று பார்த்தால்,அவள் எனக்கு முன்னாடியே சென்றுகொண்டிருந்ததால் அவளின் கதை தொடர்ச்சி கேட்டுக்கொண்டே இருந்தது..!

'டேட் பிந்தி வர்றது சரி இல்லைடா..வீட்டு வாடகை கூட 24 ஆம் தேதி கட்டணும்..சம்பளம்னா 25ஆம் தேதிக்கு கரெக்ட்டா வந்திடணுமா இல்லையா சொல்லு?"
-----------------------------------------------
'ஒருபக்கம் பற்றீஸ்'க்கும் கொழுக்கட்டைக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிக்கொண்டிருக்க,மறுபக்கம்கொழுக்கட்டைக்கும் மோதகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உருவமில்லா ஒரு உருண்டையை செய்து படைக்கும் அம்மாமார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர்.!

எப்படியிருந்தாலும் அது திங்கிற ஐட்டம் தானே என்று 'தின்பவர்கள் கூட்டம்"மட்டும் என்றுமே மாறாமல் 
‪#‎ஆடிப்பிறப்பு‬ '
----------------------------------------------
'இன்றைய "சுடர்விடும்" பத்திரிகை ஒன்றில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி இருக்கும் தலைப்புகள் இவை:

-'விக்கினேஸ்வரனை நியமித்தால் தமிழரசு கட்சி தனி அணியாக குதிக்க முடிவு"
-"தமிழரசுக்கட்சி யாழ்கிளை விக்கி-ன்க்கு எதிர்ப்பு"
-"மாவையே முதலமைச்சர் வேட்பாளர்-திருமலையில் தமிழரசுக்கட்சி அதிரடி"
-"அரசியல் அனுபவம் என்னிடமில்லை-மாவையிடம் அது நிறையவே உண்டு--ஒப்புக்கொண்டார் விக்கினேஸ்வரன்"
-"மாவை தான் வேண்டும்-மக்கள் குரல்"

'மாவையை முதலமைச்சர் வேட்பாளராக நீ நிறுத்துகிறாய்.Dot"என்கின்ற அதிகார தோரணையில் 'மாவை தான் முழுத்தகுதியானவர்-விக்கி எவ்விதத்திலும் தகுதியற்றவர்"என்று அந்த பத்திரிகை கூட்டமைப்பை வற்புறுத்தியிருப்பது போல்தான் தெரிகிறது.பெரும்பாலான மக்களின் குரலாக அது இருக்கலாம்.இன்று விக்கினேஸ்வரன் தான் முதன்மை வேட்பாளர் என்று கூட்டமைப்பு அறிவித்திருக்கும் இந்த தருணத்தில் நாளையில் இருந்து இப்பத்திரிகையின் செய்திகள் எப்படியாக இருக்கும் என்று நினைக்கையில் உண்மையிலேயே மிகக்கவலையாக இருக்கிறது!வரலாற்றுக் கடமை என்பது எம்தலை மீது எழுதப்பட்டது.எப்போதும் கூடவே இருந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கும்.

முடிவு யார் எடுத்தது,பின்ணணியில் யார் இருந்தனர்,இதன் மறைமுக நோக்கம் என்ன என்று விவாதிக்கலாம்,எதிர்த்து நிற்கலாம்,ஆனால் எனி அது சல்லிக்காசுக்கு உதவப்போவதில்லை.எடுத்த முடிவை வெற்றியாக்குவது தான் இப்போது அனைவரினதும் கடமை.அதிலும், அடிமட்டம் வரை செய்தியை கொண்டு சேர்ப்பதில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது.இதில்,தமிழரசு கட்சி சார்பில் யாழில் சுயேட்சை வேறு களம் இறங்குகிறதாம்.உறுதியானவன் பிரிந்தால் உதிரிக் கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்..! ‪#‎வடமாகாணசபைதேர்தல்‬'

----------------------------------------------------------
சிறுவயதில்,மின்சாரம் இல்லாமல் ஊரே இருண்டு கிடக்கையில் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு ஓடும் நிலாவையும், நட்சத்திரங்களையும்,எப்போதாவது மிக தொலைவில் சிவப்பு நிறத்தில் மின்னி மின்னிச்செல்லும் வானூர்திகளையும் பார்த்துக்கொண்டு 'ஒரு நாட்டிலே..ஒரு ஊரிலே...ஒரு வீட்டிலே.."என்று தினசரி ஒரே கதையை பதினெட்டு விதமாக அப்பா சொல்லக் கேட்டுக்கொண்டு இருந்த நாட்களை எண்ணிக்கொண்டு ஏக்கத்தில் வெளியே எட்டிப் பார்க்கிறேன்..ஆறுதலுக்கு கூட ஒரு நட்சத்திரத்தை காணமுடியவில்லை.இரவு மழை வரும் போல் தெரிகிறது..!
-------------------------------------------------------------
விகடனில் '16வயதினிலே'தான் இதுவரைஅதிக மதிப்பெண் வாங்கிய திரைப்படம்...என்று ஏதோ கேள்வியில் 'கோடம்பாக்கத்தில் முடங்கியிருந்த சினிமாவை கிராமத்தை நோக்கி அழைத்து சென்றது நான் தான்..அதற்காக தான் அத்தனை மார்க் கிடைத்தது.அதனை யாரும் புது இயக்குனர்கள் முறியடித்தால்,மீண்டும் படம் எடுத்து அதனை நான் முறியடிப்பேன்" என்று தனக்கேயுரிய பாணியில் பாரதிராஜா கூறியிருந்தார்.

இதை கூறியது அன்று"16 வயதினிலே,முதல் மரியாதை"போன்ற படங்களை எடுத்த பாரதிராஜா கிடையாது",இன்று "அன்னக்கொடியும் கொடிவீரனும்"எடுத்த பாரதிராஜா தான்.அதிகபட்சமாக கார்த்திகாவை மேலாடை இன்றி ஓடவைத்தது தான் இவரின் சமீபத்திய சாதனை..!வெறும் வீம்புகளை விட்டுவிட்டு இருக்கின்ற புகழுடன் ஓய்வுபெற்றாலே பெரிய விசயம் இவர்களெல்லாம்!
------------------------------------------------------------
முன்னமெல்லாம் வீட்டு மரத்திலயே பழுத்த பெரிய சைஸ் பலாப்பழத்தை பெரிய கத்தியால் ஒரே போடாய் போட்டு,பிளந்து (பிதாமகனில் விக்ரம்-சூர்யா பிளப்பார்களே அப்பிடி!)கையில் எண்ணையை தடவிக்கொண்டு ஒவ்வொரு பக்கமாய் பிரிச்சு மேயுறதில இருக்கிற இன்பம் 'யாழ்ப்பாணத்து பலாப்பழம்"ன்னு சொல்லி அயல்வீட்டுக்காரர் கொடுக்கும் அஞ்சு சுளை கொண்ட பீசில்(ரெண்டு அழுகிவேறு கிடைக்கும் சிலசமயம்) கிடைப்பதில்லை..!!— feeling lost.
--------------------------------------------------
முடி வெட்டும்போது நம்ம தலைய அந்தப்பக்கம் இந்தப்பக்கம் மேல கீழேன்னு திருப்பும் அழுத்தம்,வேகத்திலிருந்து முடிவெட்டுபவர் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்..!

சில சமயங்களில் ஒரு பக்கம் கோணலாக தலையை திருப்பிவிட்டு,தன் வேலையை பார்க்க போய்விடும் சில சலூன்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!எல்லாம் பய பாதியில் எந்திரிச்சு ஓடிடமாட்டாங்கிற தைரியம் தான்!சில பேரு வெட்டும்போது இடையில மூக்கு கடிச்சா கூட சொறிஞ்சிக்க விடமாட்டாங்கையா!ரோதனை..!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
======================================================================

            


ட்விட்டர் ட்வீட்ஸ் சில.. @மைந்தன் சிவா

+இணையத்தில் பேக் ஐடியில் பிரபலமாகிவிட்டு,வீதியால் நடந்து செல்கையில் யாராவது நம்மளை நோட்டமிடுகிறார்களான்னு கவனிப்பவன் தான் உண்மையான பிரபலம்!

+மழையின் போது டி.ஷர்ட் நனைந்து கிளுகிளுப்பாக தெரியவேண்டும் என்பதற்காகவே சில பெண்கள் குடையிருந்தும் நனைகிறார்கள்..!

+மணிரத்தினம் காலத்தால் முந்தியவர்..!டிவிட்டர் வருமுன்பே ஒரு சொல்,ஒரு வரியில் தான் தளபதியில் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்..!

+தேடிவரும் பிரச்சனைகளை நொடிப்பொழுதில் அகற்றிவிட ஒரு 'ஹிஹி'சிரிப்பே போதுமானது..!பைத்தியக்காரன்னு சொல்றானா?சொல்லட்டும்!யாருக்கு நஷ்டம்!

+எப்போது இன்னொரு தரப்பை கழுவி ஊற்ற தயாராகிவிட்டோமோ,அப்போதே எந்த கழுவி ஊற்றுதலையும் சகித்துக்கொள்ள நாம் தயாராகிவிடவேண்டும்!

+ஓவியம் என்பது எனக்குள் வளராத கலை ஒன்று! பத்துவயதில் கீறிய கடல்கரை காட்சியை தான் இன்னமும் கீறிக்கொண்டிருக்கிறேன்,அதைவிட கேவலமாக..!

+பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தபின் தங்கள் வயோதிக வாழ்க்கைக்கான பொருளாதார ஆதாரத்தை பல பெற்றோர்களால் கண்டுகொள்ளமுடிவதில்லை!

+விக்ரம் ஒரு படம் நடிக்கும்,பாலா&ஷங்கர் ஒரு படம் இயக்கும் காலத்தில்,அஜித் சூர்யா விஜய் முறையே 2,3,4 படங்களை ரிலீஸ் செய்துவிடுகிறார்கள்..!

+காதலியிடம் காரியம் சாதிக்கவேண்டுமெனில்“நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும்..!

+அரச அலுவலகங்களுக்கு போய் காரியம் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முதல்வனும் இந்தியனும் கட்டாயம் ஞாபகம் வந்துதொலைவார்கள்!

+சந்தோஷமா இருக்கையில் பேஸ்புக்கும் கோபமாய் இருக்கையில் ட்விட்டரும்!கோபத்தை இரண்டுவரிகளில் திட்டிமுடிக்கவும்,சந்தோஷத்தை நீடித்து பகிரவும்..!

+ஹிட் படத்தில் கூட 1009 ஓட்டைகளை கண்டுபிடித்து தாங்கள் பெரிய புடுங்கிகள் என நிரூபிக்க சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்!

+முதலிரவில் பால் எடுத்துச்செல்லும் மகத்துவம் என்ன என்பதை யோசிக்கிறேன்.ஒன்றும் பிடிபடுவதாக இல்லை!ஏன் ஒரு டீ,காபி கூடாது? :P

+ஒரு பொண்ணு வீதியில் குனிந்து தனது மார்பை,மாராப்பை பார்க்கிறாளாயின்,அவளை க்ராஸ் பண்ணி போனவன் அதை உற்றுபார்த்துவிட்டு சென்றிருக்கவேண்டும்!

+எப்போது ஒருவன்'நான் நன்றாக எழுதுகிறேன்'என்று இறுமாப்புடன் வாசிப்பை நிறுத்துகிறானோ,அன்றிலிருந்தே அவன் எழுத்தின் தரம் தேய ஆரம்பித்துவிடுகிறது!

+ப்ரியாமணிகுள்ளே ஒரு ஆம்பிளை கேரக்டரும்,ஷாருக் கானுக்குள்ளே ஒரு பொண்ணு கேரக்டரும் ஸ்லீப்பர் செல்லா இருக்காங்க..!

+படம் பார்க்கும்போதே நூறு ட்வீட்டு ட்வீட்டுபவர்கள் எப்படி முழுதாக உள்வாங்கி படத்தை பார்ப்பார்கள் என்று புரியவில்லை.மொக்கைபடங்கள் விதிவிலக்கு!

+மனிதர்களை சுதந்திரம் மிக்கவர்களாக உணரவைப்பதில் நைட்டிகளும் லுங்கிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன...!!

+உச்சகட்டத்தில் நயன்தாராவின் சம்பளம்-செய்தி #செய்தி எழுதியவர் நயன்தாரா பெயரைக்கேட்டாலே 'உச்சம்'அடைந்துவிடுகிறார் போலும்!

+தேங்காய் வீட்டின்மேலே விழாமல் இருக்க வலை போடுவது கேரளா! அதுவே பக்கத்திவீட்டுக்காரன் தலையில் விழ மரம் வளர்ப்பது நம்ம ஊரு! :P

+எப்படியும் நாங்கள் தெரிந்து கொடுக்கும் புடவையை ஏதும் காரணம் சொல்லி மனைவி மறுத்துவிடுவாள் என்பதால் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள் கணவர்கள்!

+எழுதனும்ன்னு வற்புறுத்தி வரவழைக்கப்படும் எந்த எழுத்தும் வாசகனை கவர்வதில்லை..!

+யோசிப்பு என்பதை ''ஜோ'சிப்பு என்று எழுதும் வழக்கம் எத்தனை பேரிடம்?'யோசியமா' இல்லை 'ஜோசியமா' என்ற குழப்பம் எத்தனை பேருக்குண்டு?இந்த குழப்பத்துக்கும் 'ஜோ'க்கும் என்ன சம்பந்தம்?'ஜோ' என்பது 'யோ'வை விட கொஞ்சம் கவர்ச்சியான எழுத்து என்று தோன்றுவது என்ன மாதிரியான நோய்க்கூறு?புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களின் எங்காவது 'ஷ்"/'ஷ" எழுத்து வருமாறு பார்த்துக்கொள்பவர்களுக்கும் இதற்கும் ஏதும் மரபணுத் தொடர்புகள் இருக்குமா??

ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது..இன்னும் சில வருடங்களின்,தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதத்தெரிந்தவனை எல்லாம் எழுத்தாளனாக மதிக்கத்தொடங்கிவிடுவார்கள்..!!- ட்விட்லோங்கர்

Post Comment

Tuesday, July 9, 2013

தனுஷின் "அம்பிகாபதி"-விமர்சனம் மட்டுமல்ல..!


'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சல்மான்கான்,ஹிர்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே நம்பி கால்வைத்திருக்கிறார் தனுஷ்.ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகரை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதற்க்கு பாக்ஸ்ஆபீஸ் நிலவரமே சான்று பகர்கிறது. சூர்யா,விக்ரம்,மாதவன் போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்று-அவரின் நடிப்பு..!

'பம்பாய்' போன்று எங்கே இன்னுமொரு இந்து-முஸ்லீம் கதையா என்று யோசித்திருந்த போதும், கதை ஒரு மாதிரியாக திசை மாறி வேறு இடம் நோக்கி செல்கிறது.புரோகிதர் மகன் தனுஷ்க்கும் முஸ்லிம் குடும்பத்து பெண் சோனம் கபூருக்கும் சிறுவயதிலேயே பிடித்துவிடுகிறது.ஆறு வயசா இருக்கும்போது முதன் முதலில் சோனம் கபூரை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனது பதினஞ்சு வயசில லவ்வ சொல்கிறார்.தனுஷ்க்கு ஏராளமான அடிகள் கொடுத்தபின் பின்னாடி சோனம் கபூருக்கு பிடித்துவிடுகிறது.ஆனால் அவன் இந்து என்று தெரிந்ததும் அதனை மறுக்கிறார் சோனம் கபூர்.பிரச்சனை பெரிதாக,சோனம்கபூரை வேறொரு ஊருக்கு படிக்க அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். இங்கு தனுஷ் இவள் நினைப்பில் வாட,அங்கு சென்ற சோனம் கபூர் காலேஜ் சேர்மென் மீது காதல் கொள்கிறார்.அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காணுங்கள்.

முதல் பாதி முழுவதும் காதல்&இசைன்னு கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி சீரியசாக மாறுகிறது.தனுஷ் தனக்கு தேசியவிருது கிடைத்தது சரி தான் என்கின்ற வகையில் நடிப்பை காட்டியிருக்கிறார்.தனுஷின் நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.தமிழில் அதனை தன்னுடைய நடிப்பில் கொண்டுவராத தனுஷ் இந்தியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சோனம் கபூர் கலங்கடிக்கிறார்.இங்கிருந்து தனுஷ் எல்லாம் இந்திக்கு செல்கையில்,அங்கிருந்து சோனம் கபூர் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது.தாடி மழித்த தனுஷ் மற்றும் சோனம்கபூர் இருவரினதும் பாடசாலை கால காட்சிகளை பார்க்கையில் தனுஷ் நடித்த '3'படத்தில் தனுஷ்-ஸ்ருதியை நினைவூட்டி செல்கின்றனர்.அழகான முதல் பாதி காதல் கதையையே படம் முழுவதுமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து (லாஜிக் கேள்விகளுக்கு இடம்கொடுத்து) முதல் பாதியின் அட்டகாசமான கொண்டாட்டத்தை இரண்டாம் பாதியில் சொதப்பிவிட்டது போன்று தான் தெரிந்தது.தனுஷ்-சோனம் கபூர் காதல் காட்சிகள் அருமை.! 

படம் வெளிவரமுன்னமே இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான்.பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்!வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்!பெரிதாக ஆஹா ஓஹோ படமும் இல்லை, மட்டமான படமும் இல்லை.நிச்சயம் பார்க்கக்கூடிய படம் தான் அம்பிகாபதி.முஸ்லிம் பெண் இந்து பையன் மீது காதல் கொள்வதாக படத்தில் காட்டியிருப்பதால் பாகிஸ்தானில் படம் தடை செய்யப்பட்டது மேலதிக கிக்கு.

சோனம் கபூர் நல்லவளா இல்லை கெட்டவளா சுயநலவாதியா என்று பல குழப்பங்கள். பெரும்பாலான கதாநாயகிகள் இலகுவில் ஏற்கத்தயங்கும் நெகட்டிவ் ரோல் போன்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பதாக.படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட,தனுஷ்க்கு இந்தியில் முதல்படத்துக்கு இது போன்ற  வெற்றியே பெரிய விஷயம் தான் என்று பாராட்டத்தோன்றுகிறது!இந்த வருடத்தில் படம்வெளி வந்து இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் 'ராஞ்சனா' நான்காம் இடத்திலிருக்கிறது.

1. Yeh jawaani hai Deewani - 44,87,00,000
2. Race 2 - 20,02,00,000
3. Special 26 - 17,99,00,000
4. Raanjhanaa - 17,75,00,000 approx
5. Aashiqui 2 - 17,35,00,000
6. Kai Po Che - 11,82,00,000
7. Fukrey - 10,51,00,000
8. ABCD - Any Body Can Dance - 10,17,00,000

மார்க் 62/100
--------------------------------------------------------------------------------------------

'தமிழருவி 2013'


பல்கலைக்கழகங்களின் ஏதாவது விழாக்கள் என்றால் சற்றே அலேர்ஜி எனக்கு.காரணம் நான் சென்ற பல்கலைக்கழகம் நடாத்திய எந்த விழாக்களும் அடிபிடி சண்டை,கட்சி மோதல்,பழிவாங்கும் நிகழ்வுகளாகவே முடிந்திருந்த ன.அது சமயம் சார்ந்த விழாவானாலும் சரி கலை இலக்கிய விழாக்களானாலும் சரி முடிவு ஒன்றாகத்தான் இருந்தது.கொழும்பிலே சிறப்பாக தமிழ் விழாக்களை நடாத்தும் பல்கலைக்கழகமாக நான் கணித்தது கொழும்பு பல்கலைக்கழகம் தான்.மொரட்டுவ,பேராதனிய பல்கலை கழகங்களும் பெரிய குறையில்லாமல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொரட்டுவ பல்கலைக் கழகம் நடாத்திய 'தமிழருவி 2013'என்கின்ற கலை இலக்கிய விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.


மூன்று மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும்,மங்கல விளக்கேறி,தமிழ் வாழ்த்து,வரவேற்புரைகள் முடிய ஒரு நான்கு மணி போல சென்றால் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.நிறைந்த கூட்டம் ராமகிருஷ்ண மண்டபத்தில்.பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள்.பின்வரிசைகளில் தான் இடம் கிடைத்து செட்டில் ஆனேன்.சரியான ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று ஒரு இழவும் புரிந்திருக்கவில்லை.காட்சிகளை தான் பார்க்க முடிந்தது.நடன நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன.நாட்டிய நாடகமும்,வரலாற்று நாடகமும் நன்றாக இருந்ததாக முன்வரிசையில் இருந்தவர்கள் கூறக்கேட்டேன்.ஹாரியின் திரைகக்தை வேகத்தை பார்த்தும்,அதன் சப்தத்தை காது கிழிய கேட்ட இந்த தலைமுறைக்கு ஒழுங்கான ஒலி,ஒளியமைப்பில்லாத,மேடையமைப்பு நெறியாள்கை இல்லாத,இதிகாச வரலாற்று விடயங்களை எடுத்துரைக்கும்,மெதுவாக நகரும் காட்சிகளை கொண்ட நாடகங்கள் மீதான மோகம்,விருப்பு முற்றாக இல்லாது போய்க்கொண்டிருப்பதை காணமுடிந்தது.

'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன/தோல்வியடைந்திருக்கின்றன' என்கின்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை பார்ப்பது தான் நிகழ்ச்சிக்கு சென்றதன் நோக்கமாக இருந்தாலும்,மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு ஏழு மணி தாண்டியும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் அறிகுறி தென்படாததால்,வீடு திரும்பிவிட்டேன்.இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துதல் பெரிய வரவேற்கத்தக்க விடயம்.அதையே அதிகபட்சமாக ஒரு நான்கு மணி நேரத்தில் நடாத்தி முடிப்பது இன்னமும் வரவேற்கத்தக்க விடயம்.நிகழ்வில் முகம் தெரியாமல் பழகிய ஏராளமான நண்பர்களை சந்திக்க முடிந்தது.இனிய ஞாயிறு!எப்படியும் பட்டிமன்றத்தின் முடிவு 'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று தான் அமைந்திருக்க வேண்டும். காரணம் கண் முன் தகுந்த தலைமைகள் எவருமே தெரிகிறார்களில்லை!
---------------------------------------------------------------------------------------

"விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி"




எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இருக்கும் பேஸ்புக் வாசகர்வட்டம் எந்தளவுக்கு பிரபலமோ,அதற்கு இணையாக பிரபலமாகியிருப்பது அவரின் விமர்சகர் வட்டம்.சகலவிதமான விடயங்களும் கிழித்து தொங்கப்போடும் சம்பவங்களும் அங்கு நடைபெறும்.இவ்வட்டத்தின் உருவாக்கத்துக்கு பின்னதாக சாருவின் எழுத்து,நடத்தையில் மட்டுமன்றி,வாசகர் வட்ட செயல்பாடுகள் அராஜகங்களில் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டதை இருசம்பவங்களையும் கூர்ந்து அவ்தானித்து வருபவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வாசகர் வட்ட அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல்,பயனுள்ள வேலைகளையும் செய்யலாமே என்கின்ற அடிப்படையில்,சிறுகதை போட்டியொன்றை நடாத்துகின்றனர் அவர்கள்.விருப்பமானோர் பங்குபற்றலாம். பரிசுகள் உண்டு.போட்டி சம்பந்தமான தகவல்கள் இவை:

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

நண்பர்களே,நமது வட்டம் சார்பாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

-----------------------------------------------------------------------------------------
ட்விட்டரில் நான்..!

ட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால்  பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா.."ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடா?ஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா?"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு  நல்லதுன்னா எதுவுமே......?!
என்னுடைய ட்விட்டர் ஐடி : "மைந்தன் சிவா"

இந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..!கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:

-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும்.! ஒன்னத்தையும் காணோம்!! வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்!#சிங்கம்2

-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோ!But'பாத்து சேத்து சீவிட போறீங்க"&"கப்பல் தரை தட்டுது" செம!#சிங்கம்2

-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..!#சிங்கம்2

-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க?#சிங்கம்2

-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்!இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல!#சிங்கம்2

-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம்! பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா?#சிங்கம்2

-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..!#சிங்கம்2

-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன்! செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3

-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க!#சிங்கம்2

-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!#சிங்கம்2

-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுக!சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்!#சிங்கம்2

-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா?#சிங்கம்2

-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது! #சிங்கம்2

-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்!#சிங்கம்2

-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது..! ஐ ஜஸ்ட் லவ் இட்!#சிங்கம்2

-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்!#சிங்கம்2

-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போல!சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்!#சிங்கம்2
-----------------------------------------------------------------------------------------

டிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,

Post Comment

Thursday, July 4, 2013

"சிங்கம் 2"-விமர்சனம்!உண்மையிலேயே செம வேட்டை..!!

                       

படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.சிங்கம் படத்துக்கான விளம்பரங்கள், ப்ரொமோஷன் நிகழ்சிகள் என்று கடந்த ஒரு மாதமாகவே அனைத்து டிவி சேனல்கள் ஒரு பக்கம் என்றால்,சூர்யாவின் நடிப்பு,இயக்குனர் ஹாரியின் இயக்கம்,மற்றும் இதன் முதல் பாகத்தின் பிரமாண்டமான வெற்றி என்பன மறுபக்கம்  படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறிவிட்டிருந்தன.

சிங்கம் 1'இன் இறுதியில் பொலீஸ் வேலையிலிருந்து விலகி மளிகை கடை வைப்பதாக சொல்லிவிட்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கும் விவகாரத்தை கவனிக்க விஜயகுமார் துரைசிங்கத்தை அனுப்பி வைத்திருப்பார்.அதன் தொடர்ச்சியாக தான் சிங்கம் 2 வந்திருக்கிறது.தூத்துக் குடியில் ஒரு கல்லூரியில் என்சிசி ஆபீசராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கிறதா என்பதை நோட்டம்விட்டு வரும் துரைசிங்கத்துக்கு அது ஆயுத கடத்தல் இல்லை,ஹெரோயின் கடத்தல் என்பது தெரியவருகிறது.சகாயம்,தங்கராஜ்(சங்கமம் ரகுமான்),பாய் என்கின்ற மூன்று தாதாக்கள் தூத்துக்குடியில் இயங்க,இவர்களுக்கெல்லாம் தலையாக 'டானி"இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார் சிங்கம்.'ஆபரேஷன் D"என்கின்ற பெயரில்,இடையே வரும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து இந்த போதை மருந்து கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக பிடித்து அழிக்கும் முயற்சியில் துரைசிங்கம் பாய்ந்து வேட்டையாடும் படலம் தான் சிங்கம் 2'..!முழுக்கதையையும் சொல்லிவிட்டால் விறுவிறுப்பிருக்காது.காரணம் தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.அதனால் பெரும்பாலான சுவாரசியங்களை சஸ்பென்ஸ்லேயே விட்டுவிடுகிறேன்.

                   

படம் சொல்லி 'ஹிட்'அடித்திருக்கிறது.படத்தின் ஹீரோக்கள் இருவர்,ஒருவர் இயக்குனர் ஹாரி,இன்னொருவர் சூர்யா!வேகமான திரைக்கதை, பார்வையாளனை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் 'இது எப்படி சாத்தியம்" என்று கேட்க வைக்காத லாஜிக்குடன் கூடிய காட்சிகள் என்று படத்தின் வேகமான ஓட்டத்துடன் ஒட்டி இருக்கவைத்துவிடுகிறார் ஹாரி.மசாலா படம் தானே,எதை வேண்டுமானாலும் காட்டிவிடலாம் என்பதை விடுத்து திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து மற்றைய மசாலா பட இயக்குனர்களுக்கு ஹாரி ஒரு 'குட்டு'போட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்!ஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் நடிப்பு பிரமாதம்!ஆக்க்ஷன் காட்சிகளில் தூள் பரத்துகிறார்.பாடல் காட்சிகளில் துள்ளலான நடனம்,அதுக்கேற்ற நடிப்பு,கோபம் என்று சூர்யாவுக்கே பொருந்திய கதாபாத்திரமாகிவிட்டது சிங்கம்!

என்சிசி ஆபீசர் வேலையை களைந்துவிட்டு பொலீஸ் டியூட்டிக்கு பொலீஸ் ட்ரெஸ்'சை மறுபடி மாட்டிக்கொண்டு சிங்கம் வேட்டைக்கு கிளம்புகையில் நம்மை அறியாமலேயே க்ளாப்ஸ் வாங்கிவிடுகிறார் சிங்கம்!ஹாரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை கூட்டம்னு இருந்தாலும்,படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய வைக்காத கதையின் வேகம்,ட்விஸ்ட்டுகள்,சீட் நுனிக்கே இழுத்துவரும் விறுவிறுப்பு... அது தான் சிங்கம் 2....!

சிங்கம் 1'இல் சிங்கத்தின் நாயகியாக வந்த அனுஷ்காவுக்கு போட்டியாக ஹன்சிகா பாடசாலை மாணவியாக வந்து சிங்கத்தின் மேல் காதல் கொள்கிறார்.நன்றாக மெலிந்திருக்கிறார்.அப்படியே அனுஷ்காவை அழகில் ஓரம்கட்டிவிடுகிறார்.விஜயகுமார், விவேக்ராதாரவி,மனோரமா,நாசர் என்று பழைய கூட்டணி இதிலும் தொடர்கிறது.கூடவே சந்தானத்தின் வருகை நகைச்சுவைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.விவேக்கை விட சந்தானம் அதிகமாய் ஸ்கோர் பண்ணுகிறார்.இரட்டை அர்த்த காமெடிகளுக்கு தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது!சூர்யா ஒரு பக்கம் மாஸ்னா,சந்தானம் மறுபக்கம் மாஸ்!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், பெரிதாக ஸ்கோர் பண்ணியிருக்கவில்லை.ஆனால் படத்துடன் சேர்த்து பார்க்கையில் பாடல்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது.எல்லாம் ஹாரி மேஜிக்!ஓபினிங் சாங்'இல் அஞ்சலி வந்து ஆடிச்செல்கிறார்.ஹன்சிகாவின் காதல் பாடலான'புரியவில்லை இது புரியவில்லை'பாடல்  நன்றாக இருந்தது. பாடல் காட்சிகளில் விஜய் போன்று 'முட்டி மூமெண்ட்ஸ்"போடுமளவுக்கு மெருகேறியிருக்கிறார் சூர்யா!

படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.தமிழனுக்கு கெடுதல் விளைவித்த சிங்களவனை அழைத்து அடித்து கொன்று பழிதீர்த்திருக்கிறார்கள் என்றார் பக்கதிலிருந்த ஒருவர். கூடவே 'இந்து சமுத்திரத்த ஆளுவது இந்தியா' தாண்டா அப்பிடின்னு ஒரு பஞ்ச் வரும் படத்தில்.அது கூட இப்போதிருக்கும் சீனா-இந்தியாவின் இந்து சமுத்திர போட்டியில் இந்தியா தான் 'தலை'அப்பிடின்னு சீன அரசுடன் நல்லுறவாடும் இலங்கைக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என்றும் அதே நண்பர் கமெண்ட் அடித்தார்.சிரித்து மகிழ்ந்தேன்.

படத்தில் குறைகள் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமே இல்லை. வழக்கமாகவே ஹாரி படங்களில் சத்தம்,வன்முறை அதிகமாக இருக்கும். க்ளைமேக்ஸ்'இல் மசாலா படத்துக்கே உரிய  ஒரு சில லாஜிக் பிழைகள் தென்படலாம்.அதை தவிர வேறு குறைகள் தெரியவில்லை. உலகம் முழுவதுமாக  2400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன சிங்கம்-2,அடுத்த இரண்டு வாரத்துக்கு போட்டியில்லாமல் சக்கைபோடு போடப்போகிறது.காரணம் அடுத்த பெரிய படமான மரியான் 19ஆம் தேதி தான் வெளிவருகிறது.அதனால் சிங்கம் 1'ஐ போல சிங்கம் 2'உம் மெகா ஹிட் அடிக்கும் போல்தான் தெரிகிறது!
என்னுடைய மார்க் 73/100

(Brit tamil இணையத்துக்காக எழுதியது)
--------------------------------------------
படம் வருமுன்னரே ஒரு விமர்சனம் எழுதி சிங்கம்-2'ஐ கலாய்த்து ஓட்டியிருந்தேன்.அதுக்கு நேர் எதிர்மாறு படம்.முதல் விமர்சனம் படிக்க:

"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...