Saturday, October 6, 2012

தாண்டவம்'மும் முதலிரவும்....!!

                      

அனுஷ்கா படத்தில கண் சத்திரசிகிச்சை நிபுணராக அதுதாங்க "கண்டாக்டராக" வேலை பார்க்கும் ஒரு கிராமத்து கிளி,ஏன் உசரத்த பார்த்து கொக்குன்னு கூட வைச்சிக்கலாம்.விக்ரம்,இந்தியாவின் "ரா" அமைப்பின் உயரதிகாரியாக கடமையாற்றும் ஒரு முறுக்கேறிய இளைஞர்.இவரும் அதே கிராமத்து கருங்காலி தான்.கிளி,கருங்காலி இருவருக்கும் தங்கள் தங்கள் வேலை மீது அபரீதமான காதல்.ஆனால் பெத்தவங்களுக்கின்னு ஒரு கடமை இருக்கிறதால வீட்டாலையே இருவருக்கும் சம்பந்தம் பேசி முடிச்சுக்கிறாங்க.

கல்யாணம் பிடிக்காத கருங்காலி,வயல் வெளியில மழை பெய்யும் போது, இருந்த ஒரு குடையையும் தனக்கு பிடிக்காது தன்னோட நாய்க்குட்டி நனைஞ்சிட கூடாதின்னு நெனைச்சு நாய்க்கு குடை பிடிக்கிற கிளியை பார்த்ததுமே குஷியாயிடுறார்.ஒரு சமயம் அதே சீனில் நாய்க்குட்டிக்கு குடைபிடிக்காது தனக்கு குடைபிடித்திருந்தால் கருங்காலிக்கு கிளியை பிடித்திருக்காதோ என்னமோ.தன்னை கட்டிக்க போற பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட எதுவுமே கதைக்காமல் தான் மழைக்கு நனைஞ்சிடுவேன்னு வீட்டுக்கு ஓடிப்போறார் கருங்காலி.

கல்யாணம் முடிஞ்சிடுது..தங்கள் தங்கள் துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் இருவரும் முதலிரவு படுக்கையறையில் தான் தன்னோட துணை என்ன வேலை செய்கின்றார் என்று கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.இவ்வளவு படிப்பறிவில் முன்னேறாத பழைய காலத்தில் கூட கல்யாணம் என்று வரும் போது தன் துணை என்ன வேலை என்று தெரிந்த பின் தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பார்கள்.இவர்களாக கேட்காவிட்டாலும் கூட,வீட்டில் யாராவது நிச்சயம் கூறி இருப்பார்கள் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் எவ்வளவு சம்பாதிக்கிறார்,பொண்ணு என்ன செய்கிறது என்றெல்லாம்.டாக்டர் பொண்ணு கூடவா தன்னோட கணவராக வர போறவர் என்ன செய்கின்றார் என்று கேட்காமல் ஜாலியாக மழையில் நனைந்துகொண்டிருக்கும்?

முதலிரவில் கிளி சொல்கிறது,"இப்போ எங்களுக்குள்ளே ஒண்ணும் நடக்க போறதில்லை(அதாவது புலி மானை வேட்டையாடுவது/கருங்காலி கிளியை அடித்து கொல்வது),முதலில பார்த்து,பழகி,நட்பாகி,காதல் மலர்ந்து,அதற்க்கு பின்னர் தான் இந்த வேட்டையாடு விளையாடு எல்லாமே".இதை தான் கருங்காலி கூட எதிர்பார்த்திருந்ததால் "ஓகே,அப்புறம் என்ன வா மூடிக்கிட்டு படுக்கலாம்"னு இருவரும் கொறட்டை விடுகிறார்கள்..! இருவரும் ஒரே எண்ணங்களுடன் படுக்கையறைக்கு வந்ததால் குழப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை.இப்போ கருங்காலிக்கு அந்த நினைப்பு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்?நெசமாலுமே அவன் கருங்காலியாய் இருந்திருந்தால்,கிளி இவ்வளவு கதைக்கும் வரையில் பார்த்துக்கொண்டா இருந்திருப்பான்?விடியும் போது கோழிக்கால் சூப் வைத்து குடித்திருக்கமாட்டான்?

                                 

கிராமம் என்பதால் காலையில் நெற்றி குங்குமத்தை அழித்து விட்டு,சேலையை கசக்கி விட்டு(ஏன்யா சேலையை வைத்து என்ன தான் செய்வார்களோ!)உள்ளே களோபரம் நடந்த மாதிரியே நடிக்கவும்,கருங்காலி வெளியே வந்து நீட்டி நிமிர்ந்து முறிவு எடுக்கவும், அப்பாடா மாப்பிள்ளை பொண்ணை சந்தோசமாக(!!) தான் வைத்திருக்கிறார் அப்பிடின்னு கிராமத்து உறவுகள் முடிவு செய்துகொண்டன!எப்படா இவனுக கதவை திறப்பாங்கள்,என்ன என்ன எபெக்ட்டு கொடுக்கிறாங்கன்னு பாக்கிறதுக்காகவே விடிஞ்சதில இருந்து முதலிரவு அறை வாயிலை குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிக்கொண்டே இருந்திருப்பார்கள் போல!

எல்லாம் முடிந்து டெல்லிக்கு போறாங்க.தங்களது வேலையை கவனிக்கிறாங்க.இரவு வந்து கண்ணை மூடிவிட்டு தூங்குகிறார்கள்.எதுவுமே நடக்கலைன்னு இப்பவே நீங்க அவசரப்பட கூடாதுங்க.அவங்க இன்னும் ப்ரெண்ட்ஸ் கூட ஆகவில்லை.இனி நட்பாகி,காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி....இன்னும் ஒரு ரெண்டு வருஷமாவது நீங்க வெயிட் பண்ணனும்.(முன்பின் தெரியாதவர்கள் திருமணம் செய்கையில் பரஸ்பர அறிமுகத்துக்கு சிறிது காலம் எடுப்பது சிறந்ததே.ஆனால் இப்படியா?)கட்டேல போற கருங்காலி பய,டாக்டரம்மா சொல்ற எல்லாத்துக்குமே மண்டைய மண்டைய ஆட்டுது."நட்பாகி காதலாகி"ன்னு ஸ்டேட்மென்ட் விடுற டாக்டரம்மா,தனக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமுமே இல்லாத மாதிரி தானும் தன்பாடுமாய் இருப்பாங்க.கருங்காலி தான் ஏதும் "பர்போம்" பண்ணி அம்மணிய இம்ப்ரெஸ் பண்ணனுமாம் கல்யாணம் முடிந்த பிறகு கூட!

அவ்ளோ விவரமான கிளி தான்,தன் கணவர் ஆபத்தான வேலையொன்றை நோக்கி இங்கிலாந்து செல்ல,அவருக்கு தெரியாமலேயே இங்கிலாந்து செல்கிறது.வழமையான தமிழ் சினிமா ஹீரோயின் நியமப்படி,ஹீரோ ஆபத்தில் இருக்கும் போது,ஹீரோயின் ஏதும் விளக்கெண்ணை தனமான வேலை ஏதும் செய்து வில்லன்களிடம் மாட்டி ஹீரோவை இன்னமும் சிக்கலில் ஆழ்த்திவிட வேண்டும் என்பதற்க்கமைய கல்யாணம் கட்டி எதுவித கில்மாவும் காணாத நிலையில் கூட,கிளி கிளம்பி செல்கிறது.ஒரு வேளை படித்த கிளி என்பதால் வெளிநாட்டில் ஹனிமூன் வைச்சிக்கலாம்னு ஜோசிச்சிதோ என்னமோ.

அப்புறம் என்ன,கிளி கருங்காலிக்கு எவ்வித சுகத்தை கொடுக்காமலும்,கருங்காலி கிளியிடம் எதனையும் பெற்றுக்கொள்ளாமலும் விடவே கடுப்பான இயக்குனர் கிளியை பாம் வைத்து கொன்றுவிடுகிறார். 

                      
--------------------------
இப்படியான ஆண்,பெண்கள் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று கூறிவிட முடியாது.தங்கள் இலட்சியமே கண்ணாக இருக்கின்றவர்கள் கல்யாணத்தை விரும்புவதில்லை.தங்களுக்கு வர போகின்றவர்கள் பற்றி கவலை கொள்வதில்லை.வீட்டில் "உறவுகள்" பற்றி கண்டுகொள்வதில்லை.வேலை,வேலை,இலட்சியம் என்று வாழ்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.ஆனால் இப்படியானவர்கள் ஆயிரத்தில் ஒருவர் என்று கூட வரையறுக்க முடியாது.அவ்வளவு சொற்பமானோர் தான் இப்படி இருக்கின்றனர்.அது போக அப்படியான இருவர் ஒரு திருமணத்தில் சேர்வது என்பது லட்ச திருமணத்தில் ஒன்றாக தான் இருக்க முடியும்.

அவ்வாறு இருக்கையில்,இப்படியான இலட்சிய புருஷர்கள்(!!)பொண்ணுகள் கல்யாணம் செய்துகொள்கையில் அவர்களுடைய துணை கட்டாயம் பாதிப்புக்குள்ளாக போகின்றது என்பது நிதர்சனம்.பாதிக்கப்படுவது ஆணாக இருந்தால்,அதன் விளைவு கற்பழிப்பாகவோ அல்லது விவாகரத்தாகவோ இல்லை தப்பான உறவுகளுக்கு அடிமையாவதாகவோ முடியும் அதே சமயத்தில் பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் அது சிலசமயம் விவாகரத்திலோ அல்லது தப்பான உறவிலோ தான் போய் முடியும்.

இவ்வளவு கேவலமான சிச்சுவேசனை படத்தில் எவ்வித லாஜிக்கும் இல்லாமல் காட்டியிருந்த இயக்குனர் எ.எல் விஜய்'ஐ அப்டேட் ஆகாத இயக்குனர் என்பதா,இல்லை ரசிகர்களை முட்டாளாக்கும் இயக்குனர் என்பதா,இல்லை தமிழ் சினிமாவின் கொடுப்பினை அவ்வளவு தான் என்று நொந்து கொள்வதா என்று தெரியவில்லை.படம் "பார்க்கலாம்"அளவுக்கு இருந்தாலும் கூட,படத்தில் இது மாதிரியான ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்.விக்ரம் தெரிவு செய்யும் ஒவ்வொரு இயக்குனர்களும்,விக்ரமை அடுத்த பிரபு,கார்த்திக்,சரத்குமார் மாதிரி சினிமாவை விட்டு தூக்கி வீச போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.ஒரு நல்ல நடிகனின் கேரியர் நாசமாய் போகிறது,விக்கிரமின் இயக்குனர் தெரிவால்-இயக்குனரின் கதை தெரிவால்.....!!
-----------------------------


இறுதியாக:
"கங்னம் ஸ்டைல்"உலகெங்கும் இப்போ சக்கை போடு போடுகிறது.T20 போட்டிகளில் கெயில் ஆடி இன்னமும் அதன் புகழை உயர்த்திவிட்டார்.இது பற்றி பேஸ்புக்கில் கடந்த மாதம் பதிந்திருந்தேன்.அந்த கங்னம் PSY 'இன் மேடை நிகழ்ச்சி இது உங்களுக்காக.பாடலின் மூலம் வெளிப்படும் மாஸ் இது..பார்க்கையிலேயே உடல்முடிகள் சிலிர்த்து நிக்கின்றன!பார்க்காதவர்கள் கண்டு களியுங்கள்..ஒரிஜினல் வீடியோ இப்போது நானூறு மில்லியன் பார்வைகளை பெறப்போகிறது இன்னமும் சில நாட்களில்.அது சார்ந்த பிற காணொளிகள் எல்லாம் சேர்த்தால் ஒரு 600 மில்லியன் ஹிட்ஸ் யூடியூபில்!!இலங்கை,இந்தியாவில் இது ஹிட் ஆக அடுத்த மாதம் ஆகலாம் என்று கூறி இருந்தேன்.இப்போது தான் ஒவ்வொருவராக இதனால் கவரப்பட்டு ஷேர் செய்வது தெரிகிறது.இதைவிட கொலைவெறி தான் சூப்பர் ஹிட் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை(!!!).

அன்புடன்...


Post Comment

9 comments:

Unknown said...

இவ்வளவு கேவலமான சிச்சுவேசனை படத்தில் எவ்வித லாஜிக்கும் இல்லாமல் காட்டியிருந்த இயக்குனர் எ.எல் விஜய்'ஐ அப்டேட் ஆகாத இயக்குனர் என்பதா,இல்லை ரசிகர்களை முட்டாளாக்கும் இயக்குனர் என்பதா,இல்லை தமிழ் சினிமாவின் கொடுப்பினை அவ்வளவு தான் என்று நொந்து கொள்வதா என்று தெரியவில்லை///

பாஸ் அவரு கொஞ்ச நாலா ஆங்கில படங்கள் ஏதும் முழுசா பக்களையாம் அதான் கொஞ்சம் மிஸ் ஆகிட்டு.

Prem S said...

மௌன ராகம் மோகன் ரேவதியை பார்த்த ஞாபகத்தில் இயக்குனர் எடுத்திருப்பார் போல

K.s.s.Rajh said...

////ஓகே,அப்புறம் என்ன வா மூடிக்கிட்டு படுக்கலாம்"னு இருவரும் கொறட்டை விடுகிறார்கள்.////

என்ன பாஸ் கெட்டவார்த்தை எல்லாம் பேசுறீங்க

K.s.s.Rajh said...

////(ஏன்யா சேலையை வைத்து என்ன தான் செய்வார்களோ!)////

அப்படி கேள் மாப்பிள கேள்வியை லாஜிக் படி பார்த்தா முதலிரவில் சேலையை கழட்டிவிடனுமே பிறகு எப்படி சேலை கசங்கும் இதை கேட்டா சொல்லுறாய்ங்க உனக்கு கல்யாணம் ஆகும் போது தெரியும் என்று.

சே ஒரு டவுட்டை கிளியர் பண்ண முடியலை#வாலிப வாழ்கை விரசம் மிக்கது

Unknown said...

தாண்டவம்.... எதிர்பார்த்த அளவு மனதை தாண்டவில்லை... நல்ல விமர்சனம்

பி.அமல்ராஜ் said...

நல்ல விமர்சனம்! பார்ப்போம் என்று ஆவலாய் இருந்தேன்.. போட்டிக்கிச்சா... விஜய் நல்ல இயக்குனர் பட்டியலில்தானே இருந்தார்! என்னாச்சு அவருக்கு????
"கங்னம் ஸ்டைல்" பற்றி நாளை ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன்.. நீங்களே ஆரம்பிச்சு வச்சிட்டீங்க.. நான் தொடருறேன் பாஸ் உங்க சலாமோடு!

Yoga.S. said...

நல்லாத்தான் குடுக்குறாங்கைய்யா டீட்டேயிலு!!!!!!!!!!!!!!

KANA VARO said...

கொஞ்சம் கூட தாண்டவம் படத்துக்கு பொருந்தாதத அனுச்காவின் படத்தை போட்டதுக்கு கண்டனங்கள்

Unknown said...

படம் பார்த்தபோது அனேகமாக அனைவரும் முதலிரவு சீன் எண்டா கொஞ்சம் நிமிர்ந்து ஒக்காந்து இருப்பாங்க!!!
ஆனா இந்த படத்ல விகரம் போலவே நம்ம பசங்களும் தூங்கிட்டாங்க!!!
அழகான பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...