Friday, August 31, 2012

முகமூடி...!

                       

"கல்யாணம் கட்டி ரெண்டு வருஷமாகுது,எப்பவாச்சும் சினிமா ரெஸ்டாரென்ட் எண்டு வெளியில  கூட்டிக்கொண்டு போயிருக்கிறீங்களா?"மனைவி ஆரணி மதிய சாப்பாட்டுக்கு அடுப்படியில் மரக்கறி நறுக்கிக்கொண்டிருக்கும் போது கத்தியது ஞாயிறு பேப்பர் பாத்துக்கொண்டிருந்த பார்த்தீபன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

கிழமையில் ஆறு நாள் வேலை.வீட்டில நிக்கிறது என்னமோ ஒரு நாள் தான்.அது கூட அந்த வேலை இந்த வேலைன்னு முடிஞ்ச கிழமைக்கான பாக்கி வேலைகளை செய்து முடிப்பதுக்கே பத்துவதில்லை.இதுக்குள்ள எங்க வெளியில போறது.போறதா இருந்தா எப்பிடியும் ஒரு மூணு நாலு மணித்தியாலமாவது ஒதுக்கோணும்..இவள் அலங்காரம் முடித்து வெளிக்கிட ஒரு மணித்தியாலம்.விடுமுறை நாளில் அரைவாசி அதிலேயே போயிடும்னு அவனும் இவ்வளவு காலமும் விளக்கம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

படித்து முடிய பெற்றோரால் பேசி செய்து வைக்கப்பட்ட திருமணம்.எல்லாம் ஒரு கனவு போல.ஆயிரம் காலத்து பயிரை நடுவதற்கு ஒரு மாதம் கூட எடுக்கவில்லை.கல்யாணம் முடிந்து ஒரு மாசம் அங்கே இங்கே சுத்தினது தான்.அப்புறமாய் முழு நேரத்தையும் வேலை அனுமதியின்றியே தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள,வீட்டுக்கென்று ஏது நேரம்.அந்த சுத்தி திரிஞ்ச முதல் ஒருமாத முயற்சியின் பலனாய் ஒரு ஆண் குழந்தை,இப்போ எட்டு மாசம்.எங்கயாச்சும் போறதெண்டு முடிவுபண்ணினா அவனை வேறு கூட்டிக்கொண்டு போகவேணும்,திடீர் திடீர்னு நேர காலம் தெரியாமல் அழவெளிக்கிட்டிடுவான்.வீட்டில விட்டிட்டும் போக முடியாது.தனிக்குடித்தனம் தான் வேணும்னு கல்யாணம் கட்டி முதல் நாட்கொண்டு வேற வீட்டில தான் இருக்கிறது.

             

இப்பிடி ஆரணி எப்போதெல்லாம் இந்த பிரச்னையை கையிலெடுக்கிறாளோ அப்போதெல்லாம் கடவுள் புண்ணியத்தில் ஒவ்வொரு காரணங்கள் பார்த்தீபன் மூளையில் உருவாகிவிடும்."எவ்வளவு காலத்துக்கு தான் பிசி பிசி'னு சொல்லி காலத்தை கடத்தபோறேன்.."கல்யாணம் கட்டி புதுசில,புது இன்பங்களை அனுபவிக்கேக்க வந்து தொலைக்காத ஞாபகங்கள் இப்போ ஓய்வாக சாய்மனை கதிரையில் உட்கார்ந்து பத்திரிகை படிக்கையில் வந்து போகின்றன.மூன்று வருட காதல்.பெத்தவங்களுக்கோ,கட்டிக்கிட்டவளுக்கோ தெரியாது,தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை.எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த அந்த நேசம்,பாசம்,ஊடல் கூடல்கள் வேறுயாருக்கு தெரிந்துவிடபோகிறது.அவளோடு கள்ளமாய் கைகோர்த்து திரிந்த மனது ஆரணியோடு கைகோர்த்து திரிய சம்மதிப்பதில்லை.விரித்தே வைத்திருந்த ஞாயிறு நாளிதளின் எந்தவொரு செய்தியும் இன்னமும் அவன் தலைக்குள் ஏறவில்லை.

தன்னில் எவ்வித தப்பும் கிடையாது என்று பார்த்தீக்கு அப்பவே தெரிந்து இருந்தாலும் கூட மனதளவில் ஏதோவொரு நெருடலை அடிக்கடி தந்துகொண்டேயிருந்தது.மூன்று வருடமாய் உள்ளூர காதலித்த காதலி வெறும் இரண்டே வாரங்களில்...
எப்படி இந்த பெண்களால் மட்டும் அது எத்தனை வருடம் பழகி இருந்தாலும் திடீரெண்டு முடித்துக்கொள்ள முடிகிறது?பொய்யான பழக்கமா அது?பொய்யான காதலா?இப்போ நான் வாழ்றது பொய்யான வாழ்க்கையா?ஆரணிக்கு துரோகம் செய்யிறேனா?எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.ஆனால் ஜோசனை மட்டும் முடிந்தபாடில்லை.

"ஒண்டும் வேண்டாம் வந்து இந்த மீனையாசும் வெட்டி தாறீங்களா?" ஆரணியின் அடுப்படி குரல் ரஹ்மானின் உச்சஸ்தாயி பாடல்களை விட ஓங்கியே ஒலித்தது."இல்லடா கண்ணு ஏதும் புதுசா படங்கள் வந்திருக்கான்னு பாக்கிறேன்.பின்னேரம் போய் பாத்திட்டு அப்பிடியே இரவு சாப்பாட்டையும் முடிச்சிட்டு வரலாமேன்னு இருக்கேன்.என்ன சொல்றாய்?"

நறுக்கிப்போட்ட வெங்காயங்கள் தாச்சி எண்ணையில் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்க துள்ளியபடி வந்த ஆரணி பார்த்தியை கட்டியணைத்தபடி காதைக்கடித்தாள் "ஜீவா நடிச்ச முகமூடி படம் வந்திருக்காம்,அது பாக்க போவோமென்?"

Post Comment

17 comments:

anuthinan said...

பதிவர்கள் இப்போது சொந்த அனுபவங்களையே சுவாரசியமாக பதிவாக தருகிறார்கள்!இதுவும் அந்தவகையில் போல? சூப்பர் அப்பு :P

எப்பூடி.. said...

ஆரணிக்கும் ஒரு முகமூடி இருக்கும் பாஸ்; நீங்க கதை சொன்னது பார்த்தீபன் Point Of View ல என்பதால் பார்த்தீபன் சிக்கிகிட்டான்; மத்தப்படி ஆம்பிளை, பொம்பிளை என பேதமில்லாமல் எல்லாருமே ஏதாவதொரு விடயத்துக்கு முகமூடி அணிந்துகிட்டுத்தான் வாழறாங்க; வாழ வேண்டிய கட்டாயம்; ஏனா எல்லாரும் எல்லோரையும் புரிந்துக்கிற அளவிற்கு மனிதன் இன்னும் இயந்திரத்தனமாக ஆகவில்லை!!!

Unknown said...

அப்போ இன்னிக்கு முகமூடி பார்க்கப் போறீங்க போல. :)

Unknown said...

/Anuthinan Suthanthiranathan said...
பதிவர்கள் இப்போ சொந்த அனுபவங்களையே சுவாரசியமாக பதிவாக தருகிறார்கள்!இதுவும் அந்தவகையில் போல? சூப்பர் அப்பு :ப//

ஹிஹி அந்த பதிவர்கள் மட்டும் கையில சிக்கினா...

Unknown said...

/எப்பூடி.. said...
ஆரணிக்கும் ஒரு முகமூடி இருக்கும் பாஸ்; நீங்க கதை சொன்னது பார்த்தீபன் Point Of View ல என்பதால் பார்த்தீபன் சிக்கிகிட்டான்; மத்தப்படி ஆம்பிளை, பொம்பிளை என பேதமில்லாமல் எல்லாருமே ஏதாவதொரு விடயத்துக்கு முகமூடி அணிந்துகிட்டுத்தான் வாழறாங்க; வாழ வேண்டிய கட்டாயம்; ஏனா எல்லாரும் எல்லோரையும் புரிந்துக்கிற அளவிற்கு மனிதன் இன்னும் இயந்திரத்தனமாக ஆகவில்லை!!!//

உண்மை தான்.ஆரணிக்கும் இருக்க கூடும்..!இருக்கும்!!

Unknown said...

வீட்டு விசயத்தையே விமர்சனமாக்கியவரே நீவீர் வாழ்க...

பி.அமல்ராஜ் said...

வாவ்... சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் நகர்கிறது கதை கிட்டத்தட்ட கெளதம் மேனனின் படம் போல... இடையிடையே வரும் சில வசன கோர்ப்புக்கள் கதையை சுவாரஸ்யத்தின் இன்னுமொரு படிக்கே கொண்டு போகிறது.. ஆமா, முகமூடி வந்துட்டா?? இத சொல்லுறதுக்கு ஒரு கதை, ஒரு பதிவு... ஹி ஹி ஹி..

Unknown said...

//ஹாலிவுட் ரசிகன் said...
அப்போ இன்னிக்கு முகமூடி பார்க்கப் போறீங்க போல. :)//
இன்னிக்கு இங்கே விடுமுறை.படம் நாளைக்கு தான் baas :)

Unknown said...

//விக்கியுலகம் said...
வீட்டு விசயத்தையே விமர்சனமாக்கியவரே நீவீர் வாழ்க...//

ஏது வீட்டு விசயமா?நேக்கு இன்னும் கல்யாணமே ஆகிலியாக்கும் :)

இந்திரா said...

பார்த்துட்டு விமர்சனம் போடுங்க.

Yoga.S. said...

ஏமாத்திட்டாராமாம்!கெக்..கெக்... கே...................(சிரிப்பு)

Yoga.S. said...

விக்கியுலகம் said...
வீட்டு விசயத்தையே விமர்சனமாக்கியவரே நீவீர் வாழ்க...////யார் வீட்டு விஷயத்தையோ விமர்சனமாக்கியவரே....... அப்புடீன்னு வரணும்!

Anonymous said...

அப்போ இதுவும் முகமூடி சம்பந்தப்பட்ட பதிவு கெடையாதா? நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய..

”தளிர் சுரேஷ்” said...

முகமூடி விமர்சனம்னு வந்தேன்! இது சொந்தகதையால்ல இருக்கு!

இன்று என் தளத்தில்
ருத்திராட்சம் சில தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

MARI The Great said...

விமர்சனத்தை எதிர்பார்த்து வந்த எல்லாருக்கும் பல்பு (என்னையும் சேத்து) :D :D

Athisaya said...

வணக்கம் சொந்தமே!!!அட போங்கப்பா..பைணன்க பொண்ணுக தாத்தாக்கள் பாட்டிகள் எல்லாருமே முகமூடியோட தான் ஊர்ல சுத்திட்டு இருக்காங்க.....!ஸ்பெஷலா ஒரு கண'னாடி தான் கண்டுபிக்கணும்.

கதை அருமை பாஸ்.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

படவிமர்சனமெண்டெல்லோ வந்தன்.கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மைந்து !

Related Posts Plugin for WordPress, Blogger...