Thursday, June 27, 2013

"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!


படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்ப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே படத்தின் ட்ரெயிலரில் சூர்யா அனைத்து சேனல்களிலும் மணிக்கு மூன்று முறை வந்து 'யார்லே..எலே வாங்கலே..." அப்பிடின்னு அரிவாவ கையில வைச்சு மிரட்டி அப்பாவி ஜனங்களை தியேட்டருக்கு வான்னு மிரட்டியிருந்தார்.எங்க போகாமல் விட்டால் வெட்டிவிட்டிடுவாரோன்னு பயந்து நானும் போயிட்டேன்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

ஆரம்பமே அமர்க்களம் தான்.ஒரு காலேஜுக்குள் புகுந்து ரவுடிக்கும்பல் ஒன்று அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறது.பொண்ணுங்க மேல கைவைக்கிறதும்,எதிர்த்து கேக்கிறவங்கள அடிச்சு நொறுக்கிறதுமா இருக்கும்போது,இத பாத்து பொறுக்கமுடியாத அஞ்சலி துரைசிங்கம் ஐயாவுக்கு(அதாங்க சிங்கம் பார்ட் 2) போன் போட்டு சொல்றாங்க.சர்ர்னு ஒரு பொலீஸ் ஜீப்ல வந்து இறங்கிறார் சூர்யா.அப்பிறம் என்ன? ஓட ஓட அடி..இடைக்கிட,உசரம் பத்தாம போக,பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார்...அதுக்கு 'பாஞ்சு அடிச்சா பதினஞ்சு டன் வெயிட்டா..'''அப்பிடின்னு ஒரு பஞ்ச் சொல்லி சமாளிச்சிக்கிறார்.பைட்டு சீன் முடிஞ்ச சந்தோசத்தில காலேஜ் பொண்ணுங்க கூட ஆட்டம் போடுறார்.அஞ்சலி சேர்ந்து ஆடுறாங்க.இத தூத்துக்குடில படமாக்கியிருக்காங்க.எல்லாரும் இவர் புகழ் பாடுறாங்க.'இட்ஸ் சிங்கம் டான்ஸ்"அப்பிடின்னு காலேஜ்ல ஆட்டம்போடுறாங்க.

சென்னை ரவுடிஸ் எல்லாரையும் ஆல்ரெடி போட்டு தள்ளினதால,இம்முறை கொஞ்சம் பெரிய ரவுடீஸ் கொண்டுவர வேண்டியது அவசியம் எண்டதால,கதைய கொஞ்சம் அரசியலோட சம்பந்தப்படுத்தி,ஆப்ரிக்கா வரைக்கும் கொண்டு போயிருக்கிறார் ஹாரி.கதை ஆப்ரிக்காவுக்கு போகுது இடைவேளைக்கு அப்புறமா தான்.'ஐ ஆம் வெயிட்டிங்க்' அப்பிடின்னு துப்பாக்கில விஜய் பஞ்சு வைச்ச மாதிரி 'வாங்கலே......" அப்பிடின்னு ஆப்ரிக்க தீவிரவாதிகளுக்கு அடித்தொண்டையில சவால் விடுறார் ஈஸ்வரசிங்கம்.

சிங்கம் முதல் பாகத்திலேயே அனுஷ்கா மேட்டர்,கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு வந்திட்டதால,இந்த பார்ட் 2'ல புதுசா ஹன்சிகாவ இறக்கியிருக்காங்க.ஹன்சிகா கொஞ்சம் மெலிஞ்சு காலேஜ் பொண்ணா வர்ராங்க.அனுஷ்கா இடைவேளைக்கு முன்னாடி கொஞ்ச சீன்லயும், இடைவேளைக்கு அப்புறமா க்ளைமாக்ஸ்லயும் ஒருதடவை வர்றாங்க.அதை தவிர படம் முழுக்க ஹன்சிகா தான் ஆட்சி பண்றாங்க.அனுஷ்காவுடன் பாடல் காட்சிகளில் துள்ளி துள்ளி நடிச்ச சூர்யா ஹன்சிகா எண்டதால,தரையிலயே நின்னு நடிக்கிறாப்லே.ஹன்சிகாவோ, அனுஷ்காவோ,ரெண்டு பேருமே சூர்யாவோட அம்மா மாதிரி தான் இருக்காங்கப்பா..!


நம்மகூட ஜாலியா இருந்த பய இப்போ குளுகுளு ஹன்சிகாவ கண்டவுடன அந்த பக்கம் தாவிடிச்சே அப்பிடின்னு பீலிங்ல இருந்த அனுஷ்காவுக்கு ஒரு டெமோ குடுத்து விளக்குறார் சூர்யா.அத கேட்டிட்டு,வழமையான மோட்டு ஹீரோயின் மாதிரி 'உங்கள புரிஞ்சுக்கிட்டேங்க..ஐ லவ் யு சோ மச்" அப்பிடின்னு உருகுறாங்க அனுஷ்கா..அட இதில்லாம் எதுக்குன்னு கேக்கிறீங்களா?அடுத்த பாட்டு போடுறதுக்கான சிச்சுவேசனாம்!!

இடைவேளைக்கு அப்பிறமா ஆப்ரிக்கா போகனும்கிறதால அந்த இடத்தில ஹாரி ஒரு பஞ்ச் வைக்கிறார்..'ஊரு விட்டு ஊரு..நாடு விட்டு நாடு...கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு தாக்கிற சிங்கம் டா' அப்பிடின்னு.ஒவ்வொரு பஞ்சும் பறந்து பறந்து கையால ஓங்கி எதிலயாவது அடிச்சு தான் சொல்றார் சூர்யா.ஏன்னா,அப்போதான் நங்கூரம் மாதிரி நச்சின்னு மனசில பதியுமாம்.

கண்டம் விட்டு கண்டம் தேடி போற ஈஸ்வர சிங்கம் அயன் படத்தில கருப்பனுக கூட டீல் வைச்சிக்கிற மாதிரி டீல் வைச்சு மெயின் வில்லனான முகேஷ் ரிஷி'யயும்,தென்னாபிரிக்க நடிகர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார்.க்ளைமாக்ஸ் பைட் நைஜீரியால நடக்குது.

இசை தேவிஸ்ரீ பிரசாத்.பெரிதாக வேலையில்லை இவருக்கு.சிங்கம் ஒன்ரின் பாடல்களுக்கு எக்ஸ்ராவா ரெண்டு ஸ்வரத்த போட்டு பாட்டை ரிலீஸ் பண்ணியிருக்காப்லே!'காதல் வந்தாலே காலிரண்டும் தன்னாலே'பாடலை போலவே ஒரு பாடல் அதே போல செட் போட்டு அதே போல குனிஞ்சு குனிஞ்சு ஆடியிருக்காப்லே சூர்யா!"கன்னுக்குள்ள கண்ண வைச்சு என்ன சுடாதை"எண்ட டூயட் தான் அது.

விவேக்கு முதல் பாகத்தில எரிமலை எப்படி பொறுக்கும்னு ஆட்டுப்புழுக்கைய ஆத்தில கரைச்சு பர்போம்மன்ஸ் காட்டியிருந்ததால,இந்தவாட்டி ப்ரொமோசன் குடுத்து இன்ஸு ஆக்கியிருக்காங்க,அதாம்பா இன்ஸ்பெக்டர்.நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் பாயும்போது தமிழ் நாட்டில சிங்கத்துக்கு உதவி பண்றது நம்ம எரிமலை தான்! 

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு"காத்திருந்து கண்ணி வைச்சவன பிடிச்சிருக்கேன்..ஒரு பய தப்பமுடியாது"அப்பிடின்னு சொல்லும்போதாச்சும் 'இது தப்பாச்சே" அப்பிடின்னு எந்திரிச்சு ஓடியிருக்கனும்..முதல் பாகத்தில தமிழ் நாட்டு எதிரிகளையும்,இரண்டாம் பாகத்தில சர்வதேச எதிரிகளையும் போட்டு பந்தாடியிருக்கிறதால,மூணாவது பாகத்தில ஏலியன்ஸ் கூட பைட்டு வைக்கலாம்னு ஹாரியும் சூரியாவும் ப்ளான் போட்டிருக்காங்கப்பா.அதுக்கு ஒரு ட்ரெய்லர் விட்டு அதில "ஊரு விட்டு ஊரு,நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம்,கெரகம் விட்டு கெரகம் பாஞ்சு தாக்கும் அப்பலோ சிங்கம்டா" அப்பிடின்னு பஞ்ச் வைப்பாரு.'வாங்கலே.." அப்பிடின்னு வாண்டட்டா ஏலியன்ஸ இங்க கூப்பிடுவாரு..அதுக்கு முன்னாடி நாம வேற கெரகம் ஒன்னுக்கு போயிடணும்பா..! 

'போங்கலே................!"


Post Comment

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நச்-ன்னு இருக்கு - ஹரி நினைச்சதை அங்கங்கே புட்டு புட்டு வச்சதற்கு...!

முதலுக்கு வாழ்த்துக்கள்...

தினகரன் said...

மின்னல் வீரர் மைந்தன் ;-)

கார்த்திக் சரவணன் said...

அதுக்குள்ள விமர்சனமா?

”தளிர் சுரேஷ்” said...

கலக்கலான விமர்சனம்! நன்றி!

Unknown said...

வணக்கம்,மைந்தரே!நலமா?///ஹி!ஹி!!ஹீ!!!நல்லாருக்கு.உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!

Easwaran said...

ஐயா நீங்க ஒரு விஜய் ரசிகன்னு நீங்க கொடுத்த விமர்சனத்திலே தெரியவருது ராஜா, ஏனெனில் ரொம்பவே கிண்டல்தான் விமர்சனம் உள்ளது

Unknown said...

/

Easwaran said...

ஐயா நீங்க ஒரு விஜய் ரசிகன்னு நீங்க கொடுத்த விமர்சனத்திலே தெரியவருது ராஜா, ஏனெனில் ரொம்பவே கிண்டல்தான் விமர்சனம் உள்ளது
//

ஏம்பா,இது ஒரு கலாய்த்தல் பதிவு...அத வைச்சு இது விஜய் பேன் அஜித் பேன் உஷா பேன்னு சொல்லிக்கிட்டு..நல்லா இருந்தா ரசியுங்க பாஸ்..இல்லைனா...இல்லைனாக்கூட ரசியுங்க வேற வழி இல்லை ;)

Unknown said...

/ ஸ்கூல் பையன் said...

அதுக்குள்ள விமர்சனமா?//

படம் வரலை பாஸ்...இது ஒரு ஜாலி விமர்சனம் :)

Unknown said...

/Subramaniam Yogarasa said...

வணக்கம்,மைந்தரே!நலமா?///ஹி!ஹி!!ஹீ!!!நல்லாருக்கு.உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!//

அடிக்கடி இத சொல்றாங்களே...நேர்மைன்னா என்ன பாஸ்? ;)

Unknown said...

/

Anonymous தினகரன் said...

மின்னல் வீரர் மைந்தன் ;-)//

மாயாவி பேன் போல நீங்க ;)

priyan said...

அருமையான விமர்சனம்,ஆழ்ந்த சிந்தனை,நானும் ட்ரைலர் பார்த்தேன் ,ஒரே ஒரு குறை தமிழ் சினிமாவில் இன்னொரு நடிகர் ஒருவர் இருக்கிறார், அவர் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்நேரம் ஊரே சேர்ந்து களாய்த்திருக்கும் , சூரியா என்பதால் நீங்கள் ஒருவர் மட்டுமே கலாய்க்கும்படி ஆகிவிட்டது.

மற்றபடி சூரியாவை போலீஸ் கெட் அப்பில் பார்க்கும் போது வடிவேலு ஏதோ ஒரு படத்தில் ஒரு லாரி டிரைவரை பார்த்து நீயெல்லாம் டிரைவரா என்று பேசும் வசனம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது,

Unknown said...

Very interesting! As usual ^_^

Sajee said...

உங்களுக்கு இது தேவை இல்லாத வேலை .. வேறு வேலை இருந்தா பாருங்கண்ணா !

sornamithran said...

படத்துல எத்தனை சுமோ பறக்குது?

Related Posts Plugin for WordPress, Blogger...