Tuesday, October 12, 2010

என் பொருட்டு நீ கண்ணடித்தால்..!!



உன் கண்கள்
வரைந்த
சுவரோவியத்தினுள்
சுவாசமாய் இருப்பவன்..

உன் கண்கள்
பேசிய
ஆயிரமாம் கவிதைளுக்கு
எதுகையாய் எடுபட்டவன் ..

உன் கண்கள்
திரும்பிய
திசையெங்கும்
திகட்டாமல் நோக்குபவன்..

உன் கண்கள்
அயர்ந்த
வேளைகளில்
இமையாக மாறியவன்..

உன் கண்கள்
நனைந்த
பொழுதுகளில்
கைக்குட்டையானவன்..!
உன் கண்கள்
கண்ட
பொருட்களை
பொக்கிசமாக்கியவன்..
உன் கண் கூடாய்
மௌன மொழி
சம்மதம் தான்
ஏங்குகிறேன்..
மொழி பேசும்
கண்கள் -மறு
மொழி பேச மறுப்பதேன்..?
என் பொருட்டு நீ
கண்ணடித்தால்......

13 comments:

  1. உன் கண்கள்
    வரைந்த
    சுவரோவியத்தினுள்
    சுவாசமாய் இருப்பவன//
    அருமை வரிகள்..

    ReplyDelete
  2. நல்ல இருக்கு...ஒரு கண்ணுக்கா இம்பூட்டு பண்ணிறீங்க??

    ReplyDelete
  3. உன் கண்ணுக்குள் கண்னாய் இருப்பவன்
    உன் காண்ணிலே கண்னாய் இருப்பவன்
    சுவாரிசியமான கண்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ////உன் கண்கள்
    திரும்பிய
    திசையெங்கும்
    திகட்டாமல் நோக்குபவன்..////
    அருமையாக இருக்கிறது....

    ReplyDelete
  5. அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  6. Anonymous said...
    உன் கண்கள்
    வரைந்த
    சுவரோவியத்தினுள்
    சுவாசமாய் இருப்பவன//
    அருமை வரிகள்.//
    நன்றிகள் நண்பா

    ReplyDelete
  7. rasigan said...
    நல்ல இருக்கு...ஒரு கண்ணுக்கா இம்பூட்டு பண்ணிறீங்க?//
    ஆமாங்க..என்னங்க பண்ண சொல்றீங்க!!

    ReplyDelete
  8. யாதவன் said...
    உன் கண்ணுக்குள் கண்னாய் இருப்பவன்
    உன் காண்ணிலே கண்னாய் இருப்பவன்
    சுவாரிசியமான கண்
    வாழ்த்துக்கள்//
    ஹஹா நன்றி பாஸ்

    ReplyDelete
  9. ம.தி.சுதா said...
    ////உன் கண்கள்
    திரும்பிய
    திசையெங்கும்
    திகட்டாமல் நோக்குபவன்..////
    அருமையாக இருக்கிறது..//
    நன்றி மதி...

    ReplyDelete
  10. jorge said...
    அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பா./
    நன்றி ஜோர்ஜ்

    ReplyDelete
  11. அருமை...

    ReplyDelete
  12. //உன் கண்கள்
    நனைந்த
    பொழுதுகளில்
    கைக்குட்டையானவன்..!//

    மனதை தொடும் வரிகள் ! கவிஞருக்கு என் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!