Thursday, July 22, 2010

கல்நெஞ்ச மறுமொழி??



காதல் என்னை தீண்டும் போதும்
காற்று மெல்ல வருடும் போதும்
பெண்மை என்னை இழுக்கும் போதும்
கவிதை தானடி உறைவிடமாகும்!

கண்ணுக்குள்ளே கதிர்வீச்சு
உன் கண்கள் கண்டால்
மனதில்
தெருக்கூத்து!
கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை நீ
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை!
என் மூச்சாகி நின்றவளே!


காலமெல்லாம் காத்திருப்பேன் என
மனம் கூறும் உறுதிமொழி
மன்மத்தின் திடத்தை
கலைக்க வருமா
கல்நெஞ்ச மறுமொழி??
புயல் அடித்த பின்பும்
தென்றலின் சுவாசம் நுகரலாம்..
உன் பதில் பார்த்து நானும்
எப்பாதை நகரலாம்??

3 comments:

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!