Wednesday, August 4, 2010

ஏன் இந்த காதலோ நேற்று இல்லை!!


"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!


இன்று உனக்கு புரியவில்லை
புன்னகைக்கின்றாய்..
புரிகின்ற பருவத்தில்
உன் புன்னகைக்கு
புரிதல் இல்லாமல்
புதையப்போகிறேனோ தெரியவில்லை!!


உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத உத்தம்-காமம்!


ஒன்றாக இருப்பதால்
உங்களுக்குள் சண்டையா??
சட்டையும் தலை கிளிப்பும்
ஒன்றாயினும்
தண்ணிப்போத்தல் நிறம்
மட்டும் ஏனோ மாற்றம்?
சில சமயம்
வாயும் வயிறும் வேறோ!!

பிடித்திருந்தால் மறக்காமல் கடமையை செய்யுங்கள் நண்பர்களே!!கீழே குத்தவும்!

1 comment:

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!