Thursday, June 17, 2010

பல்கலை வந்து பார்!!

பல்கலைக்கழகம் வந்து பார்..
உன்னை சுற்றி ஒரு கூடம் சேரும்
அதில் நீ ஒரு அங்கத்தவன் ஆவாய்..
தனிமை உனக்கு இனி கசக்கும்..
பொதுமை உனக்கு இனிக்கும்..
பெண்மை உன்னை இழுக்கும்..
பல்கலை தான் இனி உறைவிடமாகும்..!!

பத்து மணி உனக்கு அதிகாலையாகும்..
இஷ்டம் போல் மனம் படுக்கையில் புரளும்..
படிப்போம் வாட என்ன்றால்
வாட படுப்போம் என்பாய்..
படுப்போம் வாட என்றால்
already கட்டிலில் என்பாய்..!!

எட்டுக்கு lecture'ஐ வைத்தவன்-உடல்
வேகட்டும் கட்டையில் என்பாய்..!
வெந்த புண் வேலை பாய்ச்ச
night'இலே meeting'உம் என்பாய்.!

படிப்பு என்ற சொல்லே எந்தன்
அகராதியில் இல்லை என்பாய்..
படிப்பவனை கண்டால் அவன் எங்கள்
batch'இலே இல்லை என்பாய்..!!

Colombo'லே மழை அரிதென்பாய்
Lecture'கு நீ போவது போலே..
போனதற்கு புண்ணியம் தேட
ஒம்போது பேருக்கு sign'ம் அடிப்பாய்!!

semester paas என்றால்
தண்ணி அடிப்பாய்..
fail என்றால் தண்ணியில் மிதப்பாய்..!!
Attendance காணதென்று
appeal'கும் போய் நீ வருவாய்!!

பல்கலை வந்து தான் பார்- யான்
பட்டதை பட்டு தான் பார்..
வாழ்கையில் புதியதோர் திருப்பம்
உனக்கு பல்கலை வளவினுள் தெரியும் !!!

1 comment:

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!