Wednesday, November 10, 2010

"இத கொஞ்சம் தச்சுக் கொடப்பா"


பஸ் ஸ்டாண்டு..
ஒதுக்குப்புர
ஓரத்தில்
சாக்கு விரித்தமர்ந்து
பாலிஷ் டப்பா
ஊசி நூல் பிரஷ்ஷுமாய்
கையில்...

புல் டைம் பார்ட் டைம்
இரண்டுக்குமாய்
ஒரே தொழில்..
8 -5 உழைப்போருக்கு
முன் தொடங்கி
பின் முடிப்பவன்...
பரட்டைத்தலை காயாதிருக்க
கிழியுண்ட பெரிய குடை!!

ஒரு சில பாலிஷ்ஷோடு
நேற்றைய மீதி
தையல் போட்டு
பத்துமணி வெயில்
காலைச் சுட
தீய்ந்த பாண்
துண்டை உண்ண
ஓரமாய் ஒதுங்கும் போது..
"இத கொஞ்சம் தச்சுக்
கொடப்பா"
குரல் கேட்கப்
பசியும் போயிற்று...!!


கருத்துக்கள் பின்நூட்டல்களாய்...
விருப்புகள் ஒட்டுகளாய்...!!

4 comments:

  1. மிகவும் இயல்பாய் உள்ளது.

    ReplyDelete
  2. அருமை அண்ணா

    ReplyDelete
  3. வழமைபோல் சுப்பர்

    ReplyDelete
  4. அருமையான வரிகள் சகோதரம்....

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!